சனி, 30 ஜனவரி, 2010

இந்திய அரசியலும் சட்டமும் - பகுதி 2


கருப்பு சிகப்பு இது திமுக கொடியில் மட்டும் அல்ல நம் இந்தியாவிலும் நெடு நாளாக உள்ள ஒரு நிறம். கருப்பு திராவிடன், சிகப்பு ஆரியன். திராவிடர்கள் தாங்களே இந்தியாவின் உண்மையான குடிமக்கள் என்றும் ஆரியர்கள் வடக்கில் இருந்து வந்த வேற்று நாட்டவன் எனும் கருத்தை நம்பி வந்தனர். இந்தஸ் பள்ளதாக்கு சான்றுகளும் அதையே வழிமொழிந்தது, மகாபாரதத்தில் கிருஸ்ணர் கருப்பு என்பதால் அவர் திராவிடர், திராவிடர்களே இந்தியாவின் மூத்த குடிமக்கள் என திண்ணமாக திராவிடர்கள் நம்பினர்.


ஆனால் உண்மையில் திராவிடர்களும், ஆரியர்களும் கவுகாசியன் எனும் ஒரே இனத்தை சேர்ந்தவர்களே இடத்திற்கேற்ப அவர்களை சுற்றி இருந்த சூழ்நிலைக்கேற்ப்ப அவர்களது நிறம் உருவம் வேறு பட்டு இருந்தது, மொழியும் அதை போலவே வேறுபட்டு இருந்தது.


ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் அத்துனை காலம் ஆட்சி புரிய முக்கிய காரணம் அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சி திறனே. எந்த சிற்றரசர்களையும் ஒன்று சேர விடாமல் கலகம் மூட்டி சுலபமாக ஆட்சி செய்தனர். அதனை விட ஒரு பலமான யுக்தி ஒன்றை கையாண்டனர் அது திராவிடர்கள், ஆரியர்கள் ஆகிய இருவரும் வெவ்வேறு இனமக்கள் என மிக தந்திரமாக இன பகையை வளர்த்து வடக்கிந்தியர்களையும், தெர்கிந்தியர்களையும் பிரித்தே வைத்திருந்தனர். 


1938 ஆம் ஆண்டு ஹிந்தி எல்லா மாநிலங்களிலும் கட்டாய கல்வி ஆக்க படும் என இந்தியாவை ஆண்ட பிரிட்டிஸ் அரசாங்கம் அறிவித்தது. அதை தொடர்ந்து மெட்ராஸ் மாகாணத்தை திரு. ராஜாஜி தலைமையில் ஆட்சி செய்த காங்கிரஸ் செயல்படுத்த முயன்றது. ஆனால் பெரியார் மற்றும் திராவிட கழகம் இதை எதிர்த்தனர். பார்பனர்கள்(பார்பனர்கள் ஆரியர்கள் என திராவிடர்கள் கருதினர்) அதிகம் உள்ள கட்சி ஆதலால் காங்கிரஸ் இச்சட்டத்தை செயல்படுத்த முயன்ற போது திராவிட கழகம் இதை கடுமையாக எதிர்த்ததில் வியப்பொன்றும் இல்லை. 1938-40 ஆம் ஆண்டு வரை நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டாத்தில் தள்ளமுத்து, நடராஜன் ஆகிய இரு போராளிகள் மரணம் அடைந்தனர் மற்றும் 1200க்கு மேற்பட்டவர் கைது செய்யப்பட்டனர்.


இப்போராட்டத்தால் அப்போது காங்கிரஸ் தனது முடிவை கை விட்டது. ஆனாலும் மறுபடி மறுபடி காங்கிரஸ் ஹிந்தியை கல்வி மொழி ஆக்க முயன்ற போதெல்லாம் பெரியாரும், திராவிட கழகமும் அதை தீவரமாக எதிர்த்தனர்.


இவ்வாறாக காட்சிகள் மாறி கொண்டிருந்த போது, 15 ஜூலை 1953 ஆம் வருடம் டால்மியாபுரம் கள்ளகுடி ஆக பெயர்மாற்றம் செய்யக்கோரி கருணாநிதி அவர்களின் தலைமையில் திமுகவினர் டால்மியாபுரத்தில் இருந்த ரயில் வண்டி நிலைய பெயர்பலகையில் இருந்த ஹிந்தி எழுத்தகளை அழித்து, ரயில் தண்டவாளத்தில் படுத்து போராட்டாத்தில் ஈடுபட்டனர். அதில் பல திமுகவினர் உயிரிழந்தனர், கருணாநிதி அவர்கள் கைது செய்யப்பட்டார்.


இந்த நிகழ்ச்சி தமிழக மக்களிடையே பெரிய அபிமானத்தை வளர்த்தது. 13 அக்ட்டோபர் 1957 ஹிந்தி எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த நேருவின் தலைமையில் மொழி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. அதில் முன்பு இருந்த ஹிந்தி எல்லா மாநிலங்களிலும் ஆட்சி மொழியாக இருக்கும் என்பதை ஆட்சி மொழி அந்த அந்த மாநில மொழியாக மாற்றபடலாம் என்பதை எதிர்த்து மாற்றபடும் எனும் வார்த்தை அதில் சேர்க்கபட வேண்டும் என திமுகவினர் போராடினர்.


1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் மாணவர்களின் துணையுடன் மிக தீவரமாக தமிழகத்தில் நடந்தது. இந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் காரணமாக திமுக மக்களின் மத்தியில் ஒரு மாபெரும் சக்தியாக வளர்ந்து நின்றது. அது 1967ஆம் தேர்தலில் ஊர்ஜிதம் ஆயிற்று.


விருதநகர் தொகுதியில் காமராஜருக்கு எதிராக மாணவர்கள் அணி தலைவர் சீனுவாசன் தேர்தலில் நின்றார், வெற்றியும் பெற்றார். 1967ஆம் ஆண்டு தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்றி அமைத்தது. திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்தது.


காங்கிரஸை எதிர்த்து 1967ல் வெற்றி பெற்ற திமுக இப்பொழுது அதனுடனே கூட்டாச்சி அமைத்துள்ளது அரசியல். தொடரும்......

செவ்வாய், 26 ஜனவரி, 2010

குபூஸ், பச்ச ரொட்டி மற்றும் பேலன்ஸ்



மத்திய கிழக்கு நாடுகள்ல இருக்குற எல்லாருக்கும் குபூஸ் பத்தி தெரிஞ்சி இருக்கும், ஒரு அருமையான் மெல்ல முடியாத பாக்கெட்ல விற்கபடும் தேசிய உணவு :-) ஒரு வகையான ரொட்டி. இந்த ரொட்டிய தயிர் சக்கர கூடவோ, இல்ல சிக்கன் பிராங்க் சாசேஜ் குருமா கூடவோ சாப்பிட்டாலும், கடைல 3 திர்ஹாமுக்கு கிடைக்கும் சவர்மா!!!!!!! என்னடா திட்றியானு கேக்காதிங்க சிக்கன் இறைச்சி துருவல், தக்காளி துண்டுகள், முட்டகோஸ் துண்டுகள், கடல சாஸ்னு நினைக்கிறேன் இத எல்லாத்தையும் குபூஸ்ல சுத்தி தரது தான் சவர்மா, உண்மைலே நல்லா இருக்கும்ங்க.

அடுத்து பச்ச ரொட்டி. ரொட்டி தெரியும் அது என்னடா பச்ச ரொட்டினு கேக்கறவங்களுக்கு, இப்ப பாத்திங்கனா பாக்கிஸ்தான் நாட்டு கொடில எந்த நிறம் அதிகம் இருக்கும் பச்ச தானே. அதனால பாக்கிஸ்தானியர்களுக்கு மலையாலிகளும், தமிழர்களும் வச்ச பேரு தான் பச்ச, அப்ப அவங்க சாப்பிடறது, செய்றது, விக்கறது எல்லாம் பச்ச ரொட்டி தான். உடலுக்கு நல்லதுனு சாப்பிட ஆரம்பிச்சது இப்ப வாரத்துல 4 நாள் சாப்பிட வேண்டியாதா போச்சி. கண்டிப்பா ஊருக்கு வாங்கிட்டு போய் எக்சிபிசன் போடணும் ஏன்னா அவ்வளவு பெரிசு. ஒரு பச்ச ரொட்டிய சாப்பிட்டாலே பெருசு இருந்தாலும் பசியின் காரணமாக அப்ப அப்ப 2 போகும் கண்டுக்க படாது. இந்த பச்ச ரொட்டியே 3 வகையா இருக்கு 1) பத்தலாவாலா-கொஞ்சம் மெலிசா இருக்கும் எண்ணெயே இல்லாம நெருப்புல சுட்டு கொடுப்பாங்க 2) மோட்டாவாலா - தடினமா இருக்கும் இதுவும் அதே மாதிரி தான் சுடுவாங்க 3) இது பேரு தெரியல - பெரிய சப்பாத்தி மாதிரி இருக்கும் எல்லாம் கோதும மாவல செயறது தான். எந்த வகையா இருந்தாலும் இதுக்கு ஒரே கண்டிசன் தான் சூடு ஆரறதுக்கு முன்னாடி சாப்பிட்டடணும் இல்லனா வாய மிக்சியாவோ, கிரைண்டராவோ மாத்தற நிலம வந்துடும்.

இப்ப பேலண்ஸ், எட்டிசலாட் பேலண்ஸ், டியூ பேலண்ஸ், பேலண்ஸ் இந்த வார்த்தய எங்க அதிகமா கேக்கலாம்னா ரோலா! ரோலா! சார்ஜா ரோலா பார்க்க சுத்தி தான். வங்காளிகலின் குரல்களால் நிறைந்தது தான் உலகமோ அப்படினு உங்களுக்கு சந்தேகம் வந்துடும். போனுக்கு ஒரே நேரத்துல 25 திர்காமுக்கு ரீசார்ஜ் பண்ண முடியாதவங்களுக்கு ஆபத்தாந்தவர்கள் இந்த பேலண்ஸ் விற்பனையானரகள். இவங்களுக்கு ரெகுலர் கஸ்டமரகள்லாம் உண்டு.

இந்த விசித்திர உலகத்துக்கு வந்து 1 வருடம் 10 நாள் ஆச்சி. நாம முதல்முறையா வந்தப்ப சார்ஜால மழ பேஞ்சிது. நல்லவன் வந்துடான்ல. ரோலாள வந்து இறங்கனவுடனே கேட்ட குரல் இந்த பேலண்ஸ் தான்.

முதல்ல பாக்கரப்ப எல்லாம் விசித்திரமா இருந்துச்சி, எங்க போனாலும் ரூமுக்கு கரக்ட்டா போய் சேரணும் அப்படிங்கரதில மட்டும் கவனாமா இருந்தேன்.எந்த ஹோட்டல்ல போய் நின்னாலும் மலையாளிகா இருந்தாங்க, ரோலா பார்க்க சுத்தி தெலுங்கரகளும், வங்காளிகளும் நிறஞ்சி இருந்தாங்க. நம்ப ஆளுகலும் அங்க ஒண்ணு இங்க ஒண்ணா இருந்தாங்க.

வேல நிமித்தமா துபாய், சார்ஜா, ராஸ் அல் கைமா, ஹம்ரியா, அபுதாபி, ஜபல் அலி, புஜைரானு எல்லா இடத்தையும் போய் பாத்தாச்சு, தைரியமும் அதிகம் ஆச்சி, சொந்த கார அண்ணன் புண்ணியத்தால ருவைஸையும் எட்டி பாத்தாச்சு, அல் ஐன் மட்டும் இன்னும் பாக்கல கூடிய விரைவுல பாக்கணும்.

ஊர்ல இருக்கவங்க பய துபாய்ல இருக்கான்னு நினைப்பாங்க அவனோட வாழ்க்க ம்ஹ்ம் கேம்ப் இந்த வார்த்தைய நானும் நிறைய கேள்வி பட்டேன். ஆனா ஒரு நாள் அத போய் பாத்தப்ப தான் அதோட நிலம தெரிஞ்சிது. மூணு அடுக்கு கட்டில், காலை நாலு மணிக்கு எழுந்து ராத்திரி 11 மணிக்கு அடுத்த நாளுக்கும் சேர்த்து சமைக்கிற நிலம, ஒரு ஒரு திர்ஹாமையும் கணக்கு போட்டு செலவு பண்ணறது (ஆனா ஊருக்கு பேசரதுக்கு கணக்கு வழக்கே பாக்கறது இல்ல, அத இங்க இருந்து பாத்தா தான் தெரியும்), சில சமயம் துயர செய்தி வரது, அதுக்கு கூட ஊருக்கு போக முடியாம இருக்கரது. டிக்கெட் காச கூட மிச்சம் பிடிச்சி, மிச்சம் பிடிச்சி ஊருக்கு அனுப்பறது. கவரால் (cover all) பேருக்கு ஏத்த மாதிரியே உடம்ப முழுக்க மறைக்கர உடைங்க, வெயில் காலத்துல இங்க சாதாரண உடைய போட்டுக்கிட்டே இருக்க முடியாது ஆனா இந்த சாக்கு துணிய போட்டுக்கிட்டு அவங்க வேல பாக்கறத பாத்தா ஒரு வேல நாம படற கஸ்டம்லா ஒண்ணுமே இல்லனு தோணும்.

இது வாழ்க்கையே இல்லங்க, காசுக்காக வாழ வேண்டியதா இருக்கு. எல்லாத்தையும் உதறிட்டு தனக்காக வாழுற மனோபாவம் என்னைக்கும் தமிழனுக்கு வராது.

தமிழ் காரங்க இங்க ரெண்டு வகைல தான் இருக்காங்க 1) technical kings பெருமைக்கு சொல்லலங்க என்ன தான் மலையாளிங்க அரபு நாடுகள்ல நிரஞ்சி கிடந்தாலும் டெக்னிக்கல்ல தமிழர்கள் தான் நிறஞ்சி இருக்காங்க 2) லேபர் வகையறா இவங்க ஊருல கடன்லா வாங்கி இங்க வந்து குடும்ப பாரத்த சுமக்கற மகத்தான ஜீவன்கள்.

ஊருக்கு போனா அங்க மாப்பிள எனக்கு என்ன வாங்கிட்டு வந்தங்கற வார்த்தைக்கு சிரிச்சிகிட்டே டே உனக்கு இல்லாமயானு ஏதாவது எடுத்து கொடுக்கறது. இன்னும் எழுதிகிட்டே இருக்கலாம்ங்க அவ(எ)ங்களுக்கு தேவை எல்லாம் பாசம் தான்.

எதயோ எழுத ஆரம்பிச்சி எங்கயோ வந்து நின்னுடிச்சி..... மனசுல இருந்தது எல்லாம் வருது போல.

வெள்ளி, 22 ஜனவரி, 2010

இந்திய அரசியலும் சட்டமும் -பகுதி 1


மனிதர்கள் முதலில் உணவுக்கு வேட்டையாடி பிறகு ஒரு இடத்தில் நிரந்தரமாக தங்கி விலங்குகளை மேய்த்து தானியங்களை வளர்த்து ஆடைகளை உடுத்தி என மெல்ல நாகரிகம் பெற ஆரம்பித்தனர்.

இப்படி மெல்ல நாகரிகம் பெற ஆரம்பித்தாலும் மனதில் மிருக குணம் அவ்வபோது எட்டி பார்த்து கொண்டே தான் இருந்தது இன்றளவும் அக்குணம் உண்டு.

ஒரு கூட்டமாக வாழ்ந்தவர்கள் மற்ற கூட்டத்தினரை பகைமை உணர்வோடே கருதி வந்தனர், தங்கள் கூட்டத்தினரை பாதுகாக்க தங்களுக்குள் ஒரு தலைவனை தேர்ந்தடுத்தனர் அல்லது உருவாக்கினர், இவ்வாறாக எல்லா கூட்டதினரும் தங்களுக்குள் தலைவனை தேர்ந்தெடுத்து கொண்டனர். பிற்காலத்தில் இவர்களையே பல கூட்டத்தினர் தெய்வமாக வழிபட தொடங்கினர் நாம் அதற்க்குள் நுழைய வேண்டாம்.

முன்னெச்செரிக்கை, பொருள் மீது ஆசை அல்லது பயத்தின் காரணமாக மற்ற கூட்டத்தை தாக்க துவங்கினர். இப்படியாக பலமும் யுக்தியும் கொண்ட கூட்டதினர் மற்ற கூட்டதிரை அடிமை படுத்தினர் அல்லது இணைத்து கொண்டனர். மற்ற கூட்ட மக்களும் தங்களை வெற்றி கொண்ட தலைவனை பாதுகாப்பு கருதி தலைவனாக ஏற்று கொண்டனர்.

இத்தலைவர்கள் பிற்பாடு மிக்க படைபலத்துடன் சிற்றரசர்களாகவும், அரசர்களாகவும், பேரசர்களாகவும், சக்கிரவர்த்திளாகவும் வளர்ந்தனர் அலக்சேண்டர், அசோகர், ராஜராஜ சோழன் போல. ஆனால் இவர்களது வம்சம் என்றும் வாழையாடி வாழையாக நிலைக்கவில்லை. கால மாற்றம் போல ஆட்சி மாற்றமும் நிகழ்ந்தது. மக்களும் அரசனின் ஆனைகளையும், அவனது பிள்ளைகளை அடுத்த அரசனாக ஏற்று கொண்டு வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறாக நாகரிகத்துடன் ஆதிக்க மனோபாவமும் உலகம் முழுவதும் வளர்ந்து வந்ததது. நீயும் நானும் எதிரி ஆனால் நம் இருவருக்கும் ஒருவன் எதிரி என்றால் நாம் இரண்டு பேரும் இனைந்து அவனை முதலில் ஒழிப்போம் எனும் சித்தாந்ததின்படி பல சிற்றசர்களாலும், குறுநில மன்னர்களாலும் பிளவுற்று இருந்த இந்தியா (இந்தியா என ஒரு தேசம் அதற்கு முன் முழுமையாக என்றும் இருந்ததில்லை) ஒருங்கினைந்தது ஒரு பொது எதிரி வெள்ளையனை வெளியேற்ற பாடுபட்டது.

இந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளும் தனி நபர்களும் ஈடுபட்டிருந்தாலும், காங்கரஸ் எனும் கூட்டமைப்பே பலரை ஒருங்கிணைத்து பலத்துட்டன் போராடியது(விடுதலை என்பதை விட அந்நியனை வெளியேற்றவே இப்போரட்டங்கள் நிகழ்ந்தது - போராட்டம் நிகழ்ந்தது என நான் மிக எளிதாக தட்டச்சு செய்துவிட்டேன் ஆனால் அது கடினமனது என ஒரு வேலை எனது சுயசுதந்திரம் அல்லது எனது சுற்றத்தாருடைய சுதந்திரத்திற்க்கு பாடுபடும் போது அனுபவிக்க நேரிடலாம் ஆதலால் போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற அமைப்பினர்னும் தனிநபர்களும் எந்த விதத்திலும் காங்கிரஸ் கூட்டமைப்புக்கு குறைந்தவர்கள் அல்ல ). இப்படி இருப்பினும் காங்ரஸின் புகழும் அதன் தலைவர்களின் உழைப்பும் நாட்டு மக்களடிம் வெகுவாக பரவி இருந்தது. ஆகையால் மக்கள் காங்கிரஸின் பின்னால் திரண்டு போராடி 15ஆம் தேதி ஆகஸ்டு மாதம் 1947 அந்நியனை வெளியேற்றினர்.

அதன் பின் ஆங்கிலேயர்களின் வெஸ்ட்மிணிஸ்டர் ஆட்சி முறையையே இந்திய அரசியலில் பின்பற்ற ஆரம்பித்தனர். பிரதம மந்திரியும், ஜனாதிபதியுமே நாட்டின் முக்கியமான ஆட்சியளார்களக உள்ளனர். ஏகமனதாக காங்ரஸே நேருவின் தலைமையில் முதல் ஆட்சியை ஆரம்பித்தது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பலர் காங்கிரஸின் பின்னால் திரண்டு இருந்ததால் 1978 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்தது. இடது சாரிகள், பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரு கட்சிகளும் காங்கிரஸ்ற்கு மாற்றாக அவ்வபோது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.

தமிழ் நாட்டிலும் அந்நிலையே நிலவியது, ஜஸ்டிஸ் கட்சியை பெயர் மாற்றம் செய்து திராவிட கட்சி என பெரியாரால் 1944 நிறுவபட்டது, ஆனால் அது ஒரு அரசியல் கட்சியாக இல்லாமால் தனி திராவிட நாடு வேணுமென போராடியது. ஆனாலும் பிற்பாடு அக்கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக சி.என். அண்ணாதுரை அவர்கள் தனியே பிரிந்து திராவிட முன்னேற்ற கழகம்(DMK) கட்சியை ஆரம்பித்தார். காங்கிரஸின் பெருவாரியான ஆதிக்கத்தால் அரசியலில் நுழையாமல் இருந்த திமுக 1956 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தது.

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

பாஸ்போர்ட் - தொலைந்ததும் கிடைத்ததும்


கதைகள் சுவாரசியம் ஆனது என நம் எல்லோர்க்கும் தெரியும் உண்மை சம்பவம் கதை போல நிகழ்ந்தால் இன்னும் அக்கதை சுவாரசியம் ஆகிறது எனது ஒரு சிறிய கதை போல....

அது 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நாள். சென்னை மாநகரம் தீபாவளி பண்டிக்கைக்கு தயார் ஆகி கொண்டிருந்தது நான் என் ஆபிஸல இருந்து பர்மிசன் வாங்கிட்டு ஊருக்கு போக அமைந்தகரல இருந்து தயாராகி கிட்டு இருந்தேன். சரி அத்த பையன் ஒரு கால் பந்து கேட்டானு அவனுக்கு ஒரு பந்து வாங்கி கிட்டு ஒரு கூட்டமான கோயம்பேடு பஸ்ல ஏறி போனேன்.

நான் எப்ப பாஸ்போர்ட்க்கு அப்ளை பண்ணேனா(என்னடா இவன் கதைல பாஸ்போர்ட் பத்தி சொல்ல ஆரம்பிச்சிட்டானேனு நினைக்காதீங்க இது ரொம்ப முக்கியம்) ம்ம் 2006ஆம் வருசம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல, அதுக்கு வந்துது பாருங்க என்கொய்ரி எங்க ஊர்ல ஒரு என்கொய்ரி வந்ததது அதுக்கபுறம் என்ன ஆச்சினே தெரியல ஆச்சி ஒரு வருசம் நானும் சென்னை சாஸ்திரி பவனுக்கு நடையா நடந்தேன், ம்ம்ம் ஒண்ணும் வேலைக்கு ஆகல எண்கொய்ரில கேட்டா இன்னும் உங்க ஃபைல் இங்க வரவேல்லனு சொல்லிட்டாங்க.

கடசியா கீழ்பென்னாத்தூர் போலீஸ் ஸ்டேசன்ல இருந்து ஒரு போன் பாஸ்போர்ட் எண்கொய்ரி வந்து இருக்கு வாங்கனு அப்பாடானு போனேன் என் காலேஜ் போனஃபைட் சர்டிபிக்கேட் யூஸ் பண்ண பலன் ஒரு வருசத்துக்கு மேல ஆச்சி எண்கொய்ரி வர சரி இப்பவாவது பாஸ்போர்ட் கிடைக்க போகுதேனு சந்தோசமா இருந்தேன் அதுக்குள்ள சட்டீஸ்கர்ல ஒரு வேல கிடச்சி அங்க போய்ட்டேன் அங்க இருந்து ஒரே மாசத்துல வந்துட்டேன் அது வேற கத.

சரி பாஸ்போர்ட் இப்ப வரும் அப்ப வரும்னு பாத்தா ம்ம் ஒண்ணும் வரல திரும்ப திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துல போய் திரும்பவும் ஃபைல் நம்பர கொடுத்து அத கொஞ்சம் பாஸ்போர்ட் ஆபிஸ்க்கு அனுப்புங்கனு சொல்லிட்டு வந்தேன்.

கடசியா பாஸ்போர்ட்டும் வந்துது கொய்யால அப்பா பேர்ல ஒரு ஸ்பெலிங் மிஸ்டேகோடு என்ன கொடும சார். இது என்னடா இது வம்பா போச்சேன்னு திரும்ப நட சாஸ்த்திரி பவனுக்கு அங்க போய் கேட்டா உங்க மேல தான் தப்பு நீங்க தான் அப்பா பேர தப்பா கொடுத்துட்டீங்கனு ஒரே போடா போட்டுட்டாங்க அட பாவிகளா நான் எழுத்தனது எனக்கு தெரியாதா சரி அப்ளிக்கேசன நகல் எடுக்காதது என் தப்பு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.

அப்புறம் என்ன பண்ணறது அந்த பாஸ்போர்ட்ட கேன்சல் பண்ணு அதுக்கு வேற தண்டத்துக்கு எவ்வளவோ கட்னேன் அது நியாபகம் இல்ல. எங்க அப்பாவோட பிறப்பு சான்றிதழ்லாம் தேடி எடுத்து அத வச்சி தக்கால்ல புது பாஸ்போர்ட் அப்ளை பண்ணேன்.

இது கரக்ட்டா அப்ளை பண்ணதால 2008 ஆம் ஆண்டு 10ஆம் மாசம் ஊஊஊஊஊஃப் பாஸ்போர்ட் கிடச்சிது அதுல திரும்ப ECNR ஸ்டேட்டஸ் இல்ல 12th மார்க் லிஸ்ட் எடுத்துக்கிட்டு அதுக்கு ஒரு நட நல்ல வேல அது ஒண்ணும் பிராப்ளம் இல்ல நல்லா கேட்டுக்கோங்க சாமிகளா ஒரு பாஸ்போர்ட் எடுக்க ஏறத்தாழ 3 வருசம் அலஞ்சேன்
”.

இப்ப கதைக்கு வருவோம் கோயம்பேட்ல போய் பஸ் ஏறலாம்னு பாத்தா இருக்குது பாருங்க ஒரு கூட்டம் ரொம்ப தான் ஓவரா இருந்தது. கைல ஒண்ணும் பெரிய லக்கேஜ்லா இல்ல ஒரு பேக் மட்டும் அதுக்குள்ள ஒரு புது பேண்ட் சேர்ட், ஒரு கால்பந்து என்னோட அழுக்கு துணி கொஞ்சம் அப்புறம் பாஸ்போர்ட். ஒரு வழியா ஒரு பஸ்ல மூணு பேர் உட்கார சீட்ல நடுமித்ல இடம் கிடச்சுது. அந்த சீட் டைருக்கு மேல இருக்குர சீட் ஒரு கால் மேட்ல ஒரு கால் சேத்துல கதையா வச்சிக்கிட்டு ம்ம்ம் அப்படியே கள்ளகுறிச்சிக்கு பிராயணம் ஆனேன் அது சேலம் போர பஸ்.

சாய்ந்தரத்துல இருந்தே நல்ல பசி சீக்கரம் ஊருக்கே போய் சாப்பிட்டுகிளாம்னு பாத்தா ம்ம் வேளைக்கே ஆகாது போல கண்டபடி அங்க அங்க நின்னு போச்சு, கடசியா விக்ரவாண்டி தாண்டி இருக்க ஒரு ஹோட்டல்ல வண்டிய போட்டாங்க அப்பாடானு பக்கத்துல இருக்கவர்கிட்ட பேக்க பாத்துக்க சொல்லிட்டு ஹாயா சாப்பிட போனேன் சாப்பாடு ஒண்ணும் சூப்பர் இல்ல மொக்கையா தான் இருந்துது. கைய கழுவிட்டு வந்து காசு கொடுக்க பில் கவுண்டர் வந்தா பஸ் நின்ன இடம் பேன்னு இருக்கு.

என் பக்கத்துல உட்காந்தவர் ரொம்ப நல்லவரா இருக்கணும் பேக்க மட்டும் நல்லா பாத்துகிட்டார் போல என்னை மறந்துட்டார்.

பில் கவுண்டர்ல கேட்டா பஸ் எடுத்து 10 நிமிசம் ஆச்சினு சொல்றாங்க எனக்கு என்ன மாதிரி பீலிங்கனே தெரியல ஒரு மாதிரியா இருந்தது, ஒரு ஆம்னி பஸ் நின்னுக்கிட்டு இருந்தது. ட்ரைவர் அண்ணாச்சி வாங்க தம்பி வண்டிய பிடிக்க முடியுதானு பாக்கலாம்னு சொன்னார் (அண்ணாச்சி எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்) பாக்கற பஸ் எல்லாம் சிவப்பு பெய்ண்ட் அடிச்சி நான் வந்த பஸ்சாவே கண்ணுக்கு தெரியுது.

அண்ணாச்சியும் முடிஞ்ச வரைக்கும் பஸ்ஸ விழுப்புரம் பஸ் ஸ்டேண்ட் வரைக்கு விரட்னாம். ஹ்ஹ்ம் நான் வந்த பஸ் கிடைக்கவேல்ல சரினு அவருக்கு ஒரு நன்றிய போட்டுட்டு அங்க இருக்க நேர காப்பாளர கேட்ட கூட்டமா இருக்கரதால ஒரு பஸ்ஸும் உள்ள வரலனு சொல்லிட்டார், எனக்கு புஸ்னு ஆய்டிச்சி.

சரி விதியேனு எங்கப்பாவுக்கு போன் போட்டு கள்ளகுறிச்சிக்கு வழியா சேலம் போற விழுப்புரம் மாவட்ட பஸ் எல்லாத்தலையும் பேக் இருக்கான்னு பாக்க சொல்லிட்டு நான் அடுத்து வந்த ஒரு பஸ்ல ஏறி பேனட்லே உட்க்காந்து முன்னாடி போகுற எல்லா பஸையும் கொட்ட கொட்ட பாத்துகிட்டு போனேன். கரக்ட்டா உளுந்தூர்பேட்டைக்கு முன்னாடி இருக்குற ரயில்வே கிராஸ்ங்க மூடிட்டாங்க அதனால எல்லா வண்டியும் ஹால்ட்.

நானும் கீழ இறங்கி சேறு சகதியெல்லாம் மிதிச்சிக்கிட்டே நான் வந்த பஸ்ஸ தேடினேன் ம்ஹ்ம் கிடைக்கல சரி இந்த பஸ்ஸையும் விட்டுட போறோம்னு திரும்ப வந்து ஏற்னா வண்டி கிளம்பிச்சிடிச்சி.

அங்க இருந்து கள்ளகுறிச்சி போற வரைக்கும் எங்க அப்பா அந்த பேக்க எடுத்து இருப்பாரானு ஒரே சந்தேகம் பேனட்ல இருந்து இறங்கவே இல்லையே நான் இருந்த நிலமைக்கு சூடுலாம் ஒண்ணுமே தெரியல :).

ஒரு வழியா கள்ளகுறிச்சி போய் இறங்குனேன்.

அங்கயும் புஸ்ஸு தான் 2 பஸ் போச்சாம் ரெண்டுத்தலையும் பேக் இல்லனு சொல்லிட்டார்.

என்ன பண்ரது அப்படியே பின்னாடி வந்த அடுத்த சேலம் பஸ்ல ஏறு. எனக்கு அந்த பேக் கண்டிப்பா கிடைக்கும்னு பெரிய நம்பிக்கைலா இல்ல ஆனா முயற்சி பண்ணி பாக்கலாம்னு ஏறிட்டேன். மனசுக்குள்ள ஒரு வேல பேக்க வேற யாராவது எடுத்து இருப்பாங்களா எடுத்தாலும் பாஸ்போர்ட்ட மட்டும் ஆவது திருப்பி அனுப்பிடுவாங்களா. அப்படி பேக் கிடைக்களானா போலீஸ்ல எப்படி கம்ப்ளைண்ட் பண்ணரது. அப்படியே கம்ப்ளைண்ட் பண்ணறதுனா எந்த ஸ்டேசன்ல பண்ணனும் அப்படி இப்படினு ஒரே சிந்தனை தான்.

ஒரு வழியா சேலம் பஸ் ஸ்டேண்ட் போய் சேர்ந்தேன் அங்க போனா நான் வந்த பஸ் எங்க இருக்குனு தெரியல. கண்ண கட்டி காட்ல விட்ட மாதிரி இருந்துது. சரினு ஒரு நேர காப்பாளர்ட்ட போய் விழுப்புரம் மாவட்ட பஸ்லா அங்க நிக்கும்னு கேட்டேன் அவரும் ஒரு பக்கமா கைய காட்னார். அங்க போய் பாத்தா ஒரு பத்து பஸ் சிவப்பு கலர்ல நிக்குது. எனக்கு நான் ஏற்ன வண்டி நம்பரும் தெரியல.

யோசிச்சி பாத்ததுல ட்ரைவர் சீட்டுக்கு பின்னாடி இருக்கிர கம்பில இத்தன உயருத்துக்கு மேல இருக்கரவங்களுக்கு முழு கட்டணம் அப்படிங்கற போர்ட்ல ஒரு ரோஸ் சிடிக்கர் ஒட்டி இருந்ததா நியாபகம். ஒரு 3 பஸ் ஏறி இறங்கி நாலாவது பஸ்ல பாத்தா அப்பாடி நான் ஏறுன பஸ்ஸ கண்டுபுடிச்சிட்டேன்.

நான் உட்காந்து வந்த சீட்ல போய் பேக்க தேடுனா!!! எனக்கு பக்னு இருந்துது பேக்க காணல..

அப்பனு பாத்து கண்டக்ட்டர் பஸ்ல ஏறி என்ன வேணும்னு கேட்டார். பேக்க மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னதும். என்ன கலர்? அப்படினு அவரும் ஒரு எண்கொய்ரி வச்சார். சிமெண்ட் கலர் பேக்கனு சொன்னதும் பேணட் பக்கத்துல போய் என் பைய எடுத்து கொடுத்தார்.

ஒரு பெரு மூச்சி விட்டுகிட்டே பேக்க வாங்கி பாஸ்போர்ட் இருக்கான்னு பாத்தா இருந்துது. அவருக்கு ஒரு பெரிய கும்புடு போட்டுகிட்டு வேற பஸ் ஏறி ஊர் போய் சேர்ந்தேன்.

யோசிச்சி பாத்தா அன்னைக்கு ராத்திரி முழுக்க என் பாஸ்போர்ட்ட துரத்தரத தவிர எனக்கு வேற ஆப்சன் இல்லனு தோணுது.

இப்படிலாம் நான் கஸ்ட்டப்பட்டு தொரத்தன பாஸ்போர்ட்டால எனக்கு நிச்சயம் பெரிய உபகாரம் இருக்கு. அது என்னனா அதால தான் என்னால துபாய் வர முடிஞ்சிது (மெக்கானிக்கல் இன்ஞியனரிங் முடிச்சிட்டு இங்க தான் வந்தாகனும் சம்பாரிக்க), துபாய் வந்ததால இந்த பதிவ எழுத முடிஞ்சுது.

இப்படி தாங்க என் பாஸ்போர்ட் தொலஞ்சிது கிடச்சிது......