வானம் பார்த்து வியந்தேன், அலுமினிய பறவையின் ஓட்டத்தை......
என்று இந்த பறக்கும் பறவையில் பறப்பேன் என்று, ஒரு காகிதத்தில் என் பெயர்.....
பறக்கும் நாள் முடிவானது, மகிழ்ந்தேன் , பரவசித்தேன்...
விமானத்தின் ஓட்டம் நின்றது, பாலைவன காற்று வரவேற்றது....
கட்டங்களின், கார்களின் பளபளப்பு சலிப்படைந்து வயலின் பச்சையை கண்கள் தேடிற்று....
கைப்பேசியும், மடிகணினியும் தோழர்கள் ஆயின, என் நேசம் கவர்ந்தவர்களின் ஒளிப்படம் கண்டு கண்கள் பனித்தது.....
ஊண் உண்டு உடல் வளர்த்தேன், அன்பர்களின் தொலைதூர குரல் கேட்டு உயிர் உணர்ந்தேன்......
பணத்தின் பெரும்கனவு, மனதின் பெரும் ஏக்கம் நிராசையானது பாசம்......
ஒரு மென்சோக கவிதை போல வெயிலின் உக்கரத்திலும் மூடுபனியுடன் ஒரு வாழ்க்கை......
நண்பர்களை வழியனுப்பும் தொணியில் ஊரின் வாசத்தை கானல்நீர் வழியா சிறிது பெற்றேன்....
சமாதானம் அடைந்தேன் இதோ இன்னும் சில மாதங்கள், சில தினங்கள் என் காலத்தை கொன்றேன்......
என் மனம் தேற்ற என்னை தேற்றினேன், உறுதியாய் இரு என வெளிபுறத்திர்க்கு மட்டும்.....
ஆயிரம் மக்கள் சூழ தீவாய்யிருந்தேன், நீந்தி கொண்டே இருக்கிறேன் கரை தென்படும் எனும் நம்பிக்கையில்....