வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

இந்தியாவும் எண்ணையும்

இந்தியா ஆயில் வைத்திருக்கும் சதவீதம் 0.5%. ஆனால் சீனாவிர்கு அடுத்தபடியக ஆயில் தேவை அதிகம் உள்ள நாடு. நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் ஆயில் தேவை அதே சமயம் அதிகரித்து கொண்டிருக்கும் அதன் விலை இந்தியவையே பணயம் வைக்கும் ஆபத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. இப்போது 70% ஆயிலை 65* டாலர் ஒரு பேரலுக்கு என்று இறக்குமதி செய்து கொண்டிருக்கும் இந்தியா 2012யில் 85% ஆக தனது ஆயில் இறக்குமதியை உயர்த்தும் என கணக்கிடபட்டிருக்கிறது, ஆனால் 2015ஆம் ஆண்டின் போது ஒரு பேரல் ஆயிலின் விலை 385* டாலராக உயரும் என எதிர் பார்க்க படுகிறது. கவனத்தில் கொள்க இப்போது உள்ளது போல் 6 மடங்கிற்கு மேல் அதிகம்.

இந்திய அரசாங்கம் மானியம் பல கொடுத்தும் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை எதிர்த்து போரட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இன்று விலையை கட்டுக்குள் வைத்திருந்தாலும் இது நிச்சியம் நீடிக்காது. ஏனெனில் இந்தியா தனது ஆயில் கையிருப்பை 2015ஆம் ஆண்டின் வாக்கில் இழந்து விடும் அபாயத்தில் உள்ளது. அதன் பிறகு 100% நாம் அந்ந்யர்களின் தயவை எதிர் பார்க்கும் கட்டாயத்திற்க்கு தள்ள படுவோம். அவர்கள் சொல்வது தான் விலை. எந்த கட்சியும் ஒன்றும் செய்ய இயலாது. மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்ரிக்க நாடுகள், கனடா, ரஸ்யா, அமெரிக்கா மற்றும் சில தென் அமெரிக்கா நாடுகளே ஆயில் கையிருப்பு உள்ள நாடுகள்.



OPEC எனப்படும் ஆயில் ஏற்றுமதி கூட்டமைப்பு நாடுகளே அதிகம் நமக்கு எண்ணையை ஏற்றுமதி செய்கிறது. இந்த கூட்டமைபின் போக்கு விசித்திரமானது. அது எண்ணையின் விலையை எப்போது வேண்டுமானாலும் ஏற்றி கொள்ளும் யாரும் கேள்வி கேக்க முடியாது, ஏனெனில் நாம் கேள்வி கேட்டு அது முருக்கி கொண்டால் நம் நாடு எண்ணை இல்லாமல் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகலாம். அதனால் நாம் மற்ற நாடுகளிடம் எண்ணை இறக்குமதி செய்யலாம் எனில் அது நமது எற்றும் நேச நாடான ரஸ்யா மற்றும் சில ஆப்ப்ரிக்க நாடுகள் தான். ஆனால் ரஸ்யாவிடமோ 5% எண்னை கைய்யிருப்பே உள்ளது அதுவும் 2020 ஆம் ஆண்டு தீர்ந்து விடும் என கணக்கிடப்பட்டிருக்கிரது. மற்றும் உள்ள ஆப்ரிக்க நாடுகளிலும் 2025ஆம் ஆண்டின் வாக்கில் எண்ணை தீர்ந்து விடும். வேறு வழியில்லாமல் OPECயிடம் நாம் கையேந்தும் நிலைமைக்கு தள்ள படுவோம் மிக மோசமாக.

அமெரிக்கா தனது எண்ணை தேவையை கட்டுக்குள் வைத்திருக்க தன் படைகளை ஈராக்கில் நிருவி விட்டது, போதாதற்க்கு 25% உலகின் எண்ணை கையிருப்பை வைத்திருக்கும் சவுதி அரேபியாவில் SAUDI ARAMCO எனும் நிருவனத்தில் கூட்டு வைத்துள்ளது. ஆனால் உள் நாட்டிலே பல குழப்பங்கள் கொண்டுள்ள நம் நாட்டின் அரசாங்கத்திடம் இத்தகைய நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது, சில ஆப்ரிக்க, ஆசிய நாடுகளிடம் சில புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா வைத்திருந்தாலும் அது எதிர் காலத்தில் எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்பது கேள்வி குறியே.





சரி இழவு பணத்தை கொடுத்து ஒழிக்களாம் எனில் நாம் கொடுக்கும் பணம் மத்திய கிழக்கு நாடுகளின் உற்பத்தி செலவு மற்றும் அவர்களுக்கான தேவையை விட மிக மிக மிக மிக அதிகம். இதனால் அதிகம் இருக்கும் பணம் பெருவாரியாக‌ தீவரவாத இயக்கங்களுக்கு சென்று சேர்கிறது, அதுவும் அதிகம் நம் நாட்டிற்க்கு பங்கம் விளைவிக்க. இது நம் கண்ணை நாமே குத்தி கொள்வது போல, என்ன கொஞ்சம் வித்தியாசமாக அடுத்தவன் தலையை சுற்றி குத்தி கொள்கிரோம் அவ்வளவே



இதனை சவால்கள் இருக்க, நாம் எதிர் காலத்தில் இதனை எவ்வாறு சமாளிக்க போகிறோம் எனும் போது ஜெயந்தா சென் எனும் பொருளாதார பேராசிரியர் சில யோசனைகளை முன் வைக்கிறார் அவை
1) எண்ணை ஏற்றுமதி கூட்டமைப்பு நாடுகளை போல எண்ணையை இறக்குமதி செய்யும் பெருவாரியான‌ நாடுகளும் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும், OPEC நாடுகள் ஏற்றுமதி விலையை நிர்ணயம் செய்வது போல, இறக்குமதி நாடுகளும் ஒரு விலை உடன்படிக்கை செய்து அந்த விலைக்கு மேலாக கொடுக்க கூடாது, இந்த இறக்குமதி நாடுகள் எண்ணையை இறக்குமதி செய்யவில்லை எனில் OPEC நாடுகள் வேறு எங்கும் விற்பனை செய்ய இயலாது ஆகையால் இறக்குமதி நாடுகள் சொல்லும் விலையை OPEC நாடுகள் ஏற்கவில்லை என்றாலும் பேரம் பேசி இப்போது உள்ள விலையை விட குறைக்க நிச்சயம் முடியும். இதனால் நம் நாட்டின் பணம் பெருவாரியாக வெளி செல்வதை தடுக்க இயலும்.
2) இரண்டாவாதாக இறக்குமதி நாடுகள் இறக்குமதிக்கேற்ப்ப வரி இட்டு அதை உபயயோகிப்பவர் கட்டுமாறு செய்யலாம் இதனால் விலை உயர்வு ஏற்ப்பட்டாலும், தேவை குறையும் இதனால் நாம் இறக்குமதியையும் குறைக்கலாம், நாட்டின் பணம் வெளி செல்வதும் குறையும்.

மேற்ப்படி சொல்லப்பட்டுள்ள யோசனைகளை செயல் படுத்த வேண்டுமெனில் நாம் மற்ற எண்ணை இறக்குமதி நாடுகளுடன் நட்புணர்வோடு இருக்க வேண்டும். ஆனால் மற்ற நாடுகளின் வெளியுறவு கொள்கை நம் நாட்டிற்கு ஒத்து வருமா என்று எண்ணும் போது கேள்வி குறியே எழுகிறது?. அப்படியே ஒரு ஒப்பந்தம் உருவனாலும் அது எத்தனை நாள் தாங்கும் என தெரியாது ஏனெனில் 54 வருடம் கழித்து உல்கின் ஒட்டுமத்த எண்ணையும் தீர வாய்ப்புள்ளது, அந்த 54 ஆம் வருடம் நெருங்கும் தருவாயில் எண்ணை வள நாடுகள் தங்கள் வருவாய் அத்துடன் முடிந்து விடும் என்பதை உண்ர்ந்து விலையை கற்ப்பனை செய்ய முடியாத அளவிற்க்கு உயர்த்த கூடும், அப்போது இறக்குமதி நாடுகளின் விலையை ஒத்து கொள்ளுமா என்பது சந்தேகமே.

இதிலிருந்து நமக்கு ஒன்று தெளிவாக தெரிகிறது. நாம் எண்ணையில் தன்னிறைவு அடைய வேண்டும் அல்லது மாற்று எரிபொருள் கண்டுப்பிடிக்க வேண்டும். நாம் நிச்சயம் தன்னிறைவு அடைய இயலாது, இரண்டாவது வழியே நம் நாட்டிற்கு சிறந்தது. நாம் நம்முடைய வாகனத்தை உயிர்ப்பிக்கும் இது அவசியமான பயண‌மா என்று ஒரு முறை கேட்டு கொண்டால் குறைந்தபட்சம் நம்மால் முடிந்த சேவையாக பெட்ரோலை சிறிதலவாவது சேமிக்க முடியும் நமது சந்ததிக்காக.

கொச்சினில் எண்ணை கையிருப்பு உள்ளது என ஆசியா நெட்டில் செய்தி பார்த்தவுடன் ஒரு நப்பாசையில் இந்தியா எண்ணையில் தன்னிறைவு பெற்று விட்டதா என்று இணையத்தில் தேடியதில் மேற்கண்டவற்றை படித்து இதில் தொகுதுள்ளேன்.


இந்த தொகுப்பு பெரிய பிரளயத்தை உருவாக்காது என்பதை அறிந்தாலும், ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முயற்சியே இது.