வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

அம்மா அப்பா கொரியா



இந்தியா பாகிஸ்தான், இஸ்ரேல் பாலஸ்தீன், அமெரிக்கா கியூபா இப்படி எப்ப வேணா முட்டிக்க ரெடியா இருக்கிற நாடுகள் லிஸ்ட்ல வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் எப்பவும் இடம் உண்டு. இரண்டு நாட்டுக்கும் ஒரே மொழி கலாச்சாரம் இப்படி எல்லாமும் ஒண்ணா இருந்தாலும் பகை மட்டும் தீர்ந்தப்பாடில்ல, கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள ஒரு நம்ப முடியாத ஒற்றுமை இரண்டு மொழியிலையும் தாய் தந்தைய “அம்மா, அப்பா” னு அழுத்தம்த் திருத்தோட சொல்ரது தான். "அம்மாவ இஅம்மா”னு கொஞ்சம் இழுத்து சொல்வாங்க. வடகொரியால சர்வாதிகார கம்யூனிஸ்ட் ராணுவ ஆட்சி நடக்கரதால வடகொரியாவ பத்தி வெளி உலகுத்துக்கு ரொம்ப கொஞ்சமான விசயம் தான் தெரியும், தென்கொரியா எஞ்சாய் த லைஃப் மாமே டைப் உலகத்தில இருக்க சிறந்த பொறியியல் நிறுவனங்கள், சிறந்த மென்ப்பொருட்கள், வாகனங்கள்னு உலக சந்தைய வெகு சீக்கிரமா பிடிக்கிற நாடா இருக்கு. கொரியர்கள் சாப்பிடற கண்றாவியான உணவ மட்டும் கட் பண்ணிட்டு பாத்தா இந்திய கலாச்சாரத்துக்கும் கொரிய கலாச்சாரத்துக்கும் நிறைய நிறைய ஒற்றுமை உண்டு.

இவ்வளவு நீட்ட முழக்கமா எதுக்கும் தென்கொரியாவ பத்தி சொல்லணும் தெரிஞ்சிகணும்? சினிமா! ஆமா தென்கொரிய படங்கள நீங்க பாக்கறது இல்லனா சினிமாங்கற கலை தர ஒரு உன்னத அனுபவத்த நீங்க இழக்குறீங்கனு அர்த்தம். தென்கொரிய இரண்டு விதமான படங்கள தான் எடுக்குது மென்சோக காதல், இல்ல ரத்தம்த்தோய்ந்த சம்பவங்கள அனாயசமா படம் பண்றது. காதல் படங்கள்ல ஒரு அழகான கதாநாயகி (நிச்சயமா கவர்ச்சியான ரொம்ப அழகான பெண்கள் கிடையாது) கள்ளமில்லாத சிரித்த முகத்தோட எப்பவும் இருக்க கதாநாயகி, அவளுக்கு எதாவது ஒரு தீர்க்க முடியாத நோய், நீளமான முடியோட, உயரமா கண்களால மட்டும் நிறைய பேசுற கதாநாயகன் இவ்வளவு தான் மேட்டர் இத வச்சிக்கிட்டு தென்கொரிய படங்கள் காட்டுற மேஜிக் பாத்தா தான் தெரியும். கீழ எனக்கு பிடிச்ச சில கொரிய படங்கள என் ரசனக்கேற்ப்ப வரிசை படுத்துறேன், காண பரிந்துரை செய்றேன்.....

1) தி கிளாசிக் (the classic)
ஒரு படம் பாத்துட்டு இந்த மாதிரி இன்னொரு படம் பாக்க முடியாதானு யோசிக்க வைக்கிற படம். கதை ஒரு பெண் தன்னோட அறைய சுத்தம் செய்றப்ப தன் அம்மாவோட பழைய பெட்டிய ஆராய நேரிடுது அதுல இருக்க கடிதங்கள், டைரி வழியே தன் அம்மாவோட இறந்தகால காதல் வாழ்க்கைல பயணிக்கிற கூடவே நாமும். எங்க இருந்து தான் இப்படி மென்மையா வசனம் எழுதுறாங்கனு படம் நெடுக யோசிட்டே இருந்தேன். நிகழ்க்காலத்துல இந்த பெண்ணும் ஒரு பையன விரும்புறா, இறந்த காலத்துல அவ அம்மா ஒரு சின்ன ஊருக்கு போறா அங்க ஒரு பையன சந்திக்கிறா ரெண்டு பேரும் விரும்புறாங்க கடித பரிமாற்றம் செஞ்சிக்கிறாங்க, ஆனா அவ அம்மா ஏற்கனவே வேற ஒரு பையன் கூட நிச்சயம் பண்ணி இருக்காங்க, நிச்சயம் செய்யப்பட்ட பையனும் அவ அம்மா விரும்புற பையனும் ராணுவ பள்ளில உயிர்த்தோழர்கள் அவ அம்மா கடைசியா யார கல்யாணம் செஞ்சிக்கிட்டா இப்ப நிகழ்க்காலத்துல இவ காதலிக்கிற பையன் யாரு இவங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தாங்களா அப்படிங்கறத தான் முடிவு. படம் பேருக்கேத்த மாதிரியே ஒவ்வொரு காட்சியும் கிளாஸ் பிண்ணனி ரசனையோட காட்சிமாற்றம், இசை, வசனம்னு படம் பாக்குறத சிறந்த அனுபவமாக்கிற ஒரு திரைப்படம், பாத்துட்டு சொல்லுங்க.

2) எ மொமண்ட் டு ரிமெம்பர் (a moment to remember)


உங்க கண்ணீர எப்படியும் வெளில கொண்டு வரேன்னு முடிவோட படம் பண்ணி இருப்பார் போல இயக்குனர். ஒரு சோககாதல் படம். காதலிச்சவன் கூட ஊர விட்டு ஓடிப் போகலாம்னு ரயில்வே ஸ்டேசன் வந்து அங்க காதலன் வராம கைவிடப்பட்ட நாயகி பின்ன மனசு மாறி வீட்டுக்கு போறா அதுக்கு நடுவுல நாயகன் எண்ட்ரி, பின்ன எதேச்சையாவும், வேணுமுனேவும் ரெண்டு பேரும் சந்திக்க காதல் எண்ட்ரி, எப்படியோ இரண்டு வீட்டுலயும் சம்மதம் வாங்கி திருமணம் நடக்குற வரைக்கும் சுமுகமா போய்ட்டு இருக்க கதை, கல்யாணத்துக்கு அப்புறம் வேறயா ஆகுது. வயசானவங்களுக்கு வர அல்மெய்சர் நோய் இந்த இளவயசுலயே நாயகிக்கு. நாளாக நாளாக தற்சமயம் நடக்குர சம்பங்கள ஆட்கள மறக்க ஆரம்பிக்கிறா. நாயகியோட அப்பா அம்மா நாயகன் கிட்ட உன்னால அவள பாத்துக்கு முடியாது எங்ககூட அனுப்பிடு சொல்றத கேக்காம கூடவே வச்சிக்கிறான், ஒரு கட்டத்துல நாயகனோட பேரே நாயகிக்கி மறந்து போய் அவன தன்னோட பழைய காதலன் பேரிட்டு கூப்பிடும் போது, அடகொன்னியால படத்த அழுதிட்டு தான் பாக்கணும்ப்போலனு ஆகிடுது, நாயகன் குறைந்தப்பட்சம் அவள அவங்க ரெண்டு பேரும் சந்திச்சிக்கிட்ட முதன் தருணத்தையாவது அவள உணர வைக்கிணும்னு போராடுறது அப்புறம் அது என்ன ஆச்சிங்கறது தான் முடிவு. இந்த படத்த கதைக்காக மட்டும் பாக்க பரிந்துரை செய்யல படத்தோட காட்சிமைப்புகள், உணர்வுகள இயல்பா உணர்த்துரதுங்கற அம்சங்கள் நிறைய.

3) மை சாசி கேர்ள் (my sassy girl)


இதுவும் ஒரு காதல் படம் தான், படத்தோட கரு சோகம் தான் ஆனா படம் நெடுக நகைச்சுவை தான். குடிச்சிட்டு ரயில்வே ஸ்டேசன்ல தள்ளாடுற நாயகிய காப்பாத்த போய் வம்புல மாட்டிக்கிற நாயகன். அப்புறம் அவளையே விரும்ப ஆரம்பிக்க அதுக்கு அந்த நாயகி இவன சம்பந்தம் சம்பந்திமில்லாதத பண்ண சொல்ரா இவனுக்கா அவ பிடிச்சி சொல்ராளா இல்ல சும்மா அலைக்கழிக்கிறாளானு தெரியல, இதுக்கு நடுவும் அவன் அத்தை வேற இவன தன் இறந்துப்போன பையன் மாதிரியே இருக்கான்னு இவன ஒரு பொண்ணு கூட சந்திச்சி அவள கல்யாணம் பண்ணிக்கிக்க சொல்றா. ஆனா இவன் நாயகி பின்னாடியே சுத்துறான். ஒரு கட்டத்துல இரண்டு பேரும் கொஞ்சம் நாள் பிரிஞ்சிருந்து அதுக்கப்புறமும் காதல் இருந்தா ஒண்ணு சேர பாக்களாம்னு முடிவு பண்ணி ஒரு மலையுச்சில இருக்க ஒரு ஒற்றை மரத்துக்கு கீழ ஒரு கடிக்காரத்த புதச்சி வைக்கிறாங்க 2 வருசம் கழிச்சி அதே நாள் அதே நேரத்துல திரும்ப சந்திச்சிக்கணும்ங்கற ஒப்பந்தத்தோட. அந்த 2 வருசத்தல அவங்க காதல் என்னாச்சி, அந்த மரம் என்ன ஆச்சி, அவன் அத்தை சொன்ன பொண்ணு என்ன ஆனாங்கறது தான் முடிவு.

நான் எந்த படத்தையும் எந்த வருசம் வெளியிடப்பட்டது, இயக்குனர் யாரு, நடிகர்கள் யாருனு சொல்ல விரும்பல, படம் தர அந்த நல்ல அனுபவத்த நீங்களும் அனுபவக்கிணும்கிற எண்ணதுல இத பகிர்ந்துக்கிட்டேன் மீதி படங்கள அடுத்த பதிவுல பகிர்ந்துக்கிறேன்.........