புதன், 20 அக்டோபர், 2010

கானல்நீர்

வானம் பார்த்து வியந்தேன், அலுமினிய பறவையின் ஓட்டத்தை......
            என்று இந்த பறக்கும் பறவையில் பறப்பேன் என்று, ஒரு காகிதத்தில் என்  பெயர்.....
பறக்கும் நாள் முடிவானது, மகிழ்ந்தேன் , பரவசித்தேன்...
         விமானத்தின் ஓட்டம் நின்றது, பாலைவன காற்று வரவேற்றது....
கட்டங்களின், கார்களின் பளபளப்பு சலிப்படைந்து வயலின் பச்சையை         கண்கள் தேடிற்று....
          கைப்பேசியும், மடிகணினியும் தோழர்கள் ஆயின, என் நேசம் கவர்ந்தவர்களின் ஒளிப்படம் கண்டு கண்கள் பனித்தது.....
            ஊண் உண்டு உடல் வளர்த்தேன், அன்பர்களின் தொலைதூர குரல் கேட்டு உயிர் உணர்ந்தேன்......
             பணத்தின் பெரும்கனவு, மனதின் பெரும் ஏக்கம் நிராசையானது பாசம்......
ஒரு மென்சோக கவிதை போல வெயிலின் உக்கரத்திலும் மூடுபனியுடன் ஒரு    வாழ்க்கை......
             நண்பர்களை வழியனுப்பும் தொணியில் ஊரின் வாசத்தை கானல்நீர் வழியா சிறிது பெற்றேன்....
             சமாதானம் அடைந்தேன் இதோ இன்னும் சில மாதங்கள், சில தினங்கள் என் காலத்தை கொன்றேன்......
             என் மனம் தேற்ற என்னை தேற்றினேன், உறுதியாய் இரு என வெளிபுறத்திர்க்கு மட்டும்.....
              ஆயிரம் மக்கள் சூழ தீவாய்யிருந்தேன், நீந்தி கொண்டே இருக்கிறேன் கரை தென்படும் எனும் நம்பிக்கையில்....
              

வெள்ளி, 15 அக்டோபர், 2010

ஒரு வசந்த காலம்....5


(இந்த பதிவ படிக்கறதுக்கு முன்னாடி என்னோட முந்தய பதிவுகள் ஒரு வசந்த காலம்....1, 2, 3, 4யும் படிச்சிடுங்க நண்பர்களே)


நம்ப மனசு சில விசயங்கள இது நல்லது, இது கெட்டது, இவங்க நல்லவங்க, இவங்க கெட்டவங்க இப்படியெல்லாம் எப்படி பாகுபடுத்துது, காலம்காலமா நமக்கு முன்னாடி வாழ்ந்தவங்க பலத்தரப்பட்ட சூழ்நிலைகளை கடந்து வந்தப்ப உண்டான அனுபவம் அவங்க மூளை மடிப்புகள்ள வளர்ந்து அது இன்னைக்கு நம்ப தலைளையும் வந்து உட்காந்திருக்கு....அது சமயங்கள்ல சரியா ரொம்ப சரியா நமக்கு முடிவுகள எடுக்க உதவுது, நாம என்ன தான் நாம சுயமா சிந்திக்கிறோம்ன்னு நினச்சிக்கிட்டாலும், நமக்கு முன்னாடி வாழ்ந்தவங்களோட செயல்கள தான் பிரதிப்பலிச்சிக்கிட்டு இருக்கோம் நிச்சயமா...

“டேய்ய்ய்ய்ய்ய்ய்”னு சிவா அந்த ரெண்டு பேரயும் பாத்து கத்துனது உங்களுக்கு சினிமாத்தனமா தெரிஞ்சா நிச்சயம் அப்படி இல்ல......மூளையால கட்டுப்படுத்தப்படுற உடல மனசு கட்டுப்படுத்த ஆரம்பிச்சிடுனா உங்ளோட செயல்பாடுகள் உங்க மூளையோட கட்டுப்பாட்டுள்ள இருக்காது..வலி, உணர்ச்சி எல்லாம் மாறிடும்...மறஞ்சிடும். சிவா இப்ப அந்த நிலைல இருந்தான். அவன் ரொம்ப ரொம்பரொம்ப நேசிக்கிற மாலினிய ஒருத்தன் அடிச்சவுடனே அடிச்சவன தண்டிக்கணுங்கற உணர்வ தவிர அவன் மனசுல, உடலுள வேற எண்ணம் இல்ல.....டேய்னு கத்திக்கிட்டே கட்டில்ல இருந்து இறங்கனவன் அப்படியே சரிஞ்சிட்டான்..அவனோட உடஞ்ச கால் அவன நிராயுதபாணி ஆக்கிடிச்சி.

சிவா கத்துனது கேட்டு திரும்புன ராமலிங்கம் அவன் கீழ விழுந்தத பாத்து மூர்த்திக்கிட்ட “யாரு மூர்த்தி இவன் தமாசு பண்ணிக்கிட்டு”னு சொல்லிட்டு, அழுதுக்கிட்டு இருந்த மாலினிய பாத்து “த எனக்கு நாளைக்குள்ள பணத்த செட்டில் பண்ணு இல்ல இருக்குற வீட்ட எழுதி கொடு, எங்கயாவது தப்பிகளாம்னு பாத்த..நீ சின்ன பொண்ணு உடம்பு தாங்காது....மூர்த்தி வா போகலாம்”னு வெளில போய்ட்டான் மூர்த்தி பின் தொடர.

மாலினி அழுதுக்கிட்டே சிவாவ நீ  இருக்கேணு நம்பினேனே என்ன அடிச்சவன சும்மா பாத்துக்கிட்டு தானே இருந்தங்கற மாதிரி பாத்துக்கிட்டு மெல்ல ரூம்ம விட்டு போக எத்தணிக்க....அய்யோ மாலினி என்ன அப்படி பாக்காத......உன்ன நான் காப்பாத்துல ஆனா கண்டிப்பா அவன் அதுக்காக தண்டிக்கப்படுவான் நீ என்ன விட்டு போய்டாதனு மனசுல நினைக்கிறப்பவே....

சிவாவோட அம்மா நேரா மாலினிக்கிட்ட போய் “அழுவாத கண்ணு, நாளைக்குள்ள காச எப்படியாவது ரெடி பண்ணி கொடுத்திடலாம், நாசமா போறவன், காசுக்காக இப்படியா அடிக்கறது, அவன இதுக்கு அனுப்பிப்பான்”னு சமாதானப்படுத்தினாலும் மாலினி சிவாவ நீ அவ்வளவு தானா புடிச்சி இருந்தா பின்னாடியே வருவ ஆனா எனக்கு ஒண்ணுனா இப்படி சும்மா பாத்துக்கிட்டு தான் இருப்பியாங்கற மாதிரி பாத்துக்கிட்டே இருக்க....சிவாவால அவள கண்ணுக்கு கண்ணா பாக்க முடியல...

ராமலிங்கத்த எப்படியாவது தண்டிச்சா தான் நான் மாலினிய நேசிக்கறது உண்மையாகும்ங்கற மாதிரி அவனோட மனசு அவன நம்ப வச்சிது...

எப்பவுமே ஜெய்ச்சிக்கிட்டு இருக்கவங்களுக்கு ஒரு பெரிய மிக பெரிய பலகீனம் இருக்கு, முதல் தடவ தோத்தாங்கனா நிதானம் இழந்துடுவாங்க, தப்பாதப்பா யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க, திரும்ப தோத்துடுவோம்மோங்ற பயம் அவங்கள அலைக்கழிக்க ஆரம்பிச்சிடும். இப்ப நான் எப்பவும் ஜெய்ச்சிச்சிகிட்டு இருக்க ராமலிங்கத்த தண்டிச்சாகணும். மனித மனசு ரொம்ப நொறுங்கும் தன்னோட தன்மானம் மதிக்கப்படாத போது. அதுவும் ராமலிங்கம் தன்னை பாத்து தமாசு பண்றான்னு மாலினி முன்னாடி இளக்காரமா சொன்னது என்னோட தன்மானத்த ரொம்ப நொருக்கிடிச்சி....ராமலிங்கம் இதுக்கு அனுப்பவிக்கணும்.

அப்பா சொல்ரத பாத்தா இவனுக்கு செல்வாக்கு இல்லாத இடம் இந்த ஊர்ல இல்ல, போலீஸ், அடியாள், பணம், அரசியல், சட்டம் எல்லாம் சாதகமா இருக்கு இருந்தாலும் இவன ஜெயிச்சி ஆகணும்.....நான் என் காதலுக்கு செய்ற ஒரு நியாயமா அது இருக்கும்....என்ன செய்யலாம், ஊரே பார்த்து பயப்படுற ஒருத்தன் பயப்படுணும். நிச்சயம் வழி இருக்கு, ஆனா அது என்ன......

ராமலிங்கம் எப்பவும் ஜெய்க்கிறவன் அவன் ஒரு முறை அடிப்பட்டா அவன் சிந்தனை மட்டுப்பட ஆரம்பிச்சிடும், அந்த சொற்ப சந்தர்ப்பத்துல அவன திரும்ப அடிக்கணும், அவன் தான் தோற்க போறோம்னு உணரரப்ப வலிக்க வலிக்க அவன் தோற்கடிக்கணும்.

அவன் ரூம்க்கு வந்தப்ப இருந்தே அவன் செஞ்ச ஒரு விசயத்த நல்லா கவனிச்சான். மூர்த்தி ராமலிங்கம் பின்னாடி தயங்கி தயங்கி நின்னாலும் மூர்த்திய ராமலிங்கம் மரியாதையா தான் பேசினான். விசயம் இப்படி இருக்களாம் ராமலிங்கத்துக்கு மூர்த்தி மேல பயம் இருந்தாலும் பயம் தெரிஞ்சா மூர்த்தி தன்ன மதிக்க மாட்டான்னு உணர்ந்து மூர்த்திய எப்படியோ தன்னோட வாயால கட்டுப்படுத்தி வச்சி இருக்கான், மனுசன் எப்படி ஒரு சின்ன அங்குசத்த வச்சி பலம்மிக்க யானை அடுக்குறானோ பயத்தோட அப்படி தான் ராமலிங்கமும் மூர்த்திய அடக்குறான், மூர்த்திய ராமலிங்கத்துக்கு எதிரா திருப்பணும்...அங்குசம் அப்படி ஒண்ணும் பெரிய ஆயுதம் இல்லனு யானைக்கு புரியணும், என்ன பண்ணலாம்.

சிவாவோட மூளை மடிப்புல இருந்த நியூரான் செல்லுல இருந்த முன்னோர்கள் வழங்கின DNAகள் தீவரமா செயல்பட ஆரம்பிச்சிது ஒரு காதலுக்காக....

தொடரும்...