புதன், 20 அக்டோபர், 2010

கானல்நீர்

வானம் பார்த்து வியந்தேன், அலுமினிய பறவையின் ஓட்டத்தை......
            என்று இந்த பறக்கும் பறவையில் பறப்பேன் என்று, ஒரு காகிதத்தில் என்  பெயர்.....
பறக்கும் நாள் முடிவானது, மகிழ்ந்தேன் , பரவசித்தேன்...
         விமானத்தின் ஓட்டம் நின்றது, பாலைவன காற்று வரவேற்றது....
கட்டங்களின், கார்களின் பளபளப்பு சலிப்படைந்து வயலின் பச்சையை         கண்கள் தேடிற்று....
          கைப்பேசியும், மடிகணினியும் தோழர்கள் ஆயின, என் நேசம் கவர்ந்தவர்களின் ஒளிப்படம் கண்டு கண்கள் பனித்தது.....
            ஊண் உண்டு உடல் வளர்த்தேன், அன்பர்களின் தொலைதூர குரல் கேட்டு உயிர் உணர்ந்தேன்......
             பணத்தின் பெரும்கனவு, மனதின் பெரும் ஏக்கம் நிராசையானது பாசம்......
ஒரு மென்சோக கவிதை போல வெயிலின் உக்கரத்திலும் மூடுபனியுடன் ஒரு    வாழ்க்கை......
             நண்பர்களை வழியனுப்பும் தொணியில் ஊரின் வாசத்தை கானல்நீர் வழியா சிறிது பெற்றேன்....
             சமாதானம் அடைந்தேன் இதோ இன்னும் சில மாதங்கள், சில தினங்கள் என் காலத்தை கொன்றேன்......
             என் மனம் தேற்ற என்னை தேற்றினேன், உறுதியாய் இரு என வெளிபுறத்திர்க்கு மட்டும்.....
              ஆயிரம் மக்கள் சூழ தீவாய்யிருந்தேன், நீந்தி கொண்டே இருக்கிறேன் கரை தென்படும் எனும் நம்பிக்கையில்....
              

7 கருத்துகள்:

geethappriyan சொன்னது…

அட சூப்ப்பரப்பு,நன்று

மதன் சொன்னது…

@கீதப்பிரியன்: நன்றீங்க தல : )

செல்வா சொன்னது…

இன்னிக்கு யாரோ முந்திட்டாங்க ..!!
நான்தான் முதல்ல வரணும்னு நினைச்சேன் ..!
வட போச்சே ..!!

செல்வா சொன்னது…

// பணத்தின் பெரும்கனவு, மனதின் பெரும் ஏக்கம் நிராசையானது பாசம்....//
ஆஹா ., இந்த வரிகளின் வலியை உணர்கிறேன் .!!

செல்வா சொன்னது…

// சமாதானம் அடைந்தேன் இதோ இன்னும் சில மாதங்கள், சில தினங்கள் என் காலத்தை கொன்றேன்....//

சீக்கிரமா வாங்க .., அதான் ஏப்ரல் மாசம் வரேன்னு சொன்னீங்கள்ள.. இனி என்ன ஒரு அஞ்சு மாசம்தான் இருக்கு .

மதன் சொன்னது…

@செல்வா: வருத்தப்படாத செல்வா....எப்பவும் நீ ஒருத்தன் பின்னூட்டம் போடுற இந்த முற ஜஸ்ட்டு மிஸ் ஆய்டிச்சி : )

ம்ம்ம் அப்பப்ப தோணும் இன்னாடா வாழ்க்க இதுனு ஒண்ணும் பண்ண முடியாது கமிட் ஆயாச்சில....

கண்டிப்பா அதுக்கு முன்னாடியே கூட வர முயற்சிப்பேன்...ஏன்னா முடியல : )))

Manoranjan சொன்னது…

ரொம்ப நல்ல இருக்குனா.....