செவ்வாய், 28 டிசம்பர், 2010

சிறு சொர்க்கம்




நம்ம சுத்தி எல்லாம் தப்பு தப்பா இருக்கு இல்ல எல்லாம் ரொம்ப சரியா இருக்கு......ரெண்டையும் தீர்மானிக்கறது நம்ப மனசு தான். நம்ப நாட்டுல சொல்லவே வேணாம் எல்லாத்தையும் அரசியல் தான் தீர்மானிக்குது, இல்ல எல்லாம் அவங்க தான்னு நாமே தீர்மானிச்சிக்கிறோம்....ரெண்டாவது இந்த வீணா போன முட்டாப்பய சினிமாக்காரனுங்க எப்ப பாரு ஏதோ பெருசா வெட்டி முறிச்ச மாதிரியே அவனுங்க போடுற எஃபக்ட் தாங்க முடியாது.....இதுல அவனுங்க புடுங்கற புடுங்குக்கு.....நடிகர் சங்க விழா, இயக்குனர் சங்க குழானு கூத்து வேற.....என்ன பொறுத்த வரைக்கும் சினிமாவுல நடிகைக்கள போக பொருளா தான் வச்சி இருக்காங்க....நாம இல்ல நான் அத தான் பாக்குறேன், இல்ல நாங்களா நடிப்ப ரசிக்கிறோம்னு சொல்றவங்க தயவு செய்ஞ்சி கைய தூக்குங்க, மூணாவது நம்ப வீட்டுக்குள்ள எந்த பர்மிசனும் வாங்காமா தான் பாட்டுக்கு வந்து கடுப்புகள கிளப்புற சீரியல் கம் முட்டா பய பாட்டு போட்டிகள், டேண்ஸ் போட்டிகள், அடங்க அது இன்னாங்கடா ’ஜட்ஜ் உங்க ஸ்கோர்’ இந்த டயலாக்க மாத்த மாட்டிங்களா........முடியல

சரி எழவு இதெல்லாம் தான் நம்ப வாழ்க்கைள நாம சாப்பிடற, தூங்குற, வேல பாக்குற நேரத்த தவிர மீதி நேரத்த சாப்பிடறதா இருக்கு. இந்த விசயங்கள் நிச்சயம் நம்ப சிந்தனைய, செயல்பாடுகள் மாத்திக்கிட்டு இருக்கு நம்மையும் அறியாமல். நான் புத்தர் பேரன், காந்தி சொந்தக்காரன்லா இல்ல ரோட்டுல அழகா ஒரு பொண்ணு போனா வச்ச கண்ணு வாங்காமா பாக்குறவன் தான் இருந்தாலும் சில விடயங்கள் எப்பவும் உறுத்துலா இருந்துக்கிட்டு தான் இருக்கு. நம்ப தமிழ் நாட்டுள எல்லாரும் இங்க இருக்க அரபி மாதிரி சொந்தமா பல காரு பல வீடு வச்சிக்கிட்டு இருக்க முடியாது ஆனா நிச்சயம் நம்ப மனச வச்சி சிறு சிறு சொர்கத்த அமைச்சிக்க முடியும். தேவையெல்லாம் மனமாற்றம், வாழ்க்கைய வேறு கோணத்துல வாழறுதுக்கான ஒரு சிறு முயற்சி. ராஜா 1.5 லட்சம் கோடி அடிச்சாலும், கடசியா 50 பைசா தீக்குட்சில மேட்டர் குளாஸ், எல்லாம் காசையும் தர்மம் பண்ணுங்கனு மொன்னத்தனமா சொல்லள, செலவு செய்ற பணத்த நியாயமா உபயோகமா செய்ய பரிந்துரைக்கிறேன்.

உதாரணம்: ஒரு பீசா 200 ரூபா கொடுத்து வாங்குறீங்க, அதுக்கு உற்ப்பத்தி செலவு அதிக பட்சம் 20 ரூபா ஆகும் அம்புட்டுத்தேன், ஏதாவது இரு குளிர்பானம் விலை 10 ரூபானு வச்சிக்குவோம் உற்பத்தி செலவு 50 பைசாவுக்கு மேல தாண்டுனா அதிகம் ஆகா உற்பத்தி செலவு போக்குவரத்து செலவு, அந்த செலவு இந்த செலவுனு வச்சிக்கிட்டா கூட 70% மேல விக்கறவனுக்கு லாபம், அந்த லாபம்ல பெரிய பகுதி ராயல்டி கொடுத்த ஏதாவது வெளிநாட்டுக்காரனுக்கும், உற்பத்தி செஞ்சி செஞ்சி மேல்த்தட்டு குடிமகன்(எ.கா: மிஸ்டர் மல்லையா) போனவனுக்கும் தான் கிடைக்கும், ஆனா மூலதன பொருட்கள் அதாவது கோதுமை, காய்கறிகள், மாமிசம் இதெல்லாம் விவசாயிகள் அல்லது அன்னைய பொழுத ஓட்டுறவங்களால உண்டாக்க படுது அதுக்கு அவங்களுக்கு ஒண்ணும் மலைய புடுங்கி கொடுக்க மாட்டானுங்க எல்லாம் மார்கெட் ரேட் தான், இது பரவாயில்ல கொக்ககோலாக்குளாம் தண்ணி தாமிரபரணியில இருந்து நேரடி சப்ளை சல்லிகாசுல விவசாயிக்கு விவசாயம் பண்ண தண்ணியில்ல ஆக நீங்க கஸ்டப்பட்டு சம்பாரிக்கிர காசு பணசுழற்சியில இல்லாம (உங்களுக்கும் ரிட்ர்ன் வராது) கடசியா ஏதாவது சுவிஸ் வங்கியில போய் தூங்கும்.

சோ மனமாற்றத்த நம்ப பாக்கெட்ட காலியாக்குற விசயத்துல இருந்து ஆரம்பிச்சா நல்லா இருக்கும் எல்லாரும் கூழ் குடிங்கனு சொல்லள கொடுக்குற காசுக்கு தரமிருந்தா எந்த பொருளுக்கும் கொடுங்க.

மாசம் முழுக்க கஸ்டப்பட்டு சம்பாதிரிக்கிற பணம் திருடு போனா எவ்வளவு வருத்துப்படுவோம் ஆனா அதையே பாலீசா நாட்டுள பலபேர் புடுங்குறானுங்க  உசாருயிருந்துக்கோங்க......அந்த காச நாலு படிக்க காசில்லாம கஸ்டப்படுற புள்ளைக்கு கொடுக்கலாம் இல்ல சில பெரியவங்க பெத்தவங்கள பாத்துக்கக்கூட முடியாத நாதாரிகளால முதியோர் காப்பகத்துல விடப்பட்டவங்களுக்கு கொடுக்களாம், இல்ல லூசுதனமா கல்யாணத்துக்கு தனக்குத்தானே வினையல் போர்டு வச்சிக்கிறதுக்கு பதிலா கல்யாணத்துக்கு வரவங்களுக்கு மரக்கன்று தரலாம்......சிறு சிறு சொர்க்கம் தானா உருவாக ஆரம்பிக்கணும் நம்புறேன், நம்ப மனசு உவந்து கனிந்து செய்ற செயலோட எந்த பொருளும், எந்த இடமும் மகிழ்ச்சிய அதிகம் தந்துடாது.

அடுத்து நான் விஜய் ஃபேன் நீ யாரு விஜயா அஜீத்தானு கேக்குறானுங்க டே அப்படிலா ஒண்ணுமில்லடானா ச்சச்ச உண்மைய சொல்லுங்குறானுங்க, அடிங்க என்னை என்ன எங்க ஊட்ல அவனுங்களுக்கா நேர்ந்து விட்டுக்கிட்டு பெத்தானானுங்க. சும்மா நான் ஃபர்ஸ்ட் சோவே அவன் படத்தப்பாத்தேன் இவன் படத்தப்பாத்தேன்ங்கற ரொம்ப பரவசமான மொன்னதனமான பிட்ட மட்டும் போடாதீங்க.......அதுல ஒரு மசிரு பெருமையும் இல்ல சந்தோசமும் இல்ல. இது நாமா தேடி போறது.

அடுத்து இந்த விசயம் சீரியலக்கூட ஒரு விதத்துல டிவி விசயத்துல ஏத்துக்களாம் ஆனா இந்த நடனப்போட்டிய, பாட்டு போட்டியெல்லாம் சில வீடுகள்ள பாக்குற விதம் இருக்கே அதுலயே அந்த கேணப்பு^(*&*(&ங்க போடுற சீன பாக்க முடியாது, ஜட்ஜ் (இந்த வார்த்தை முதல்ல தூக்கணும்) 10 மார்க்குனா போதும் உடனே ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சிகறது, எவன் பொண்டாட்டிய எவன் கட்டிப்பிடிக்கறது என்னமோ போங்கடா, இந்த கூத்தையெல்லாம் அப்படி இரு சந்தோசமா வச்ச கண்ணு வாங்காம பாக்குறது, அட ஒரு நாள் ரெண்டு நாள் பாக்குளாம்ங்க இதே மொக்கைய சீசன் சீச்னால பாக்குறாங்க எப்படி தான் முடியுதோ புரியல......அப்புறம் பையன் ஒழுங்கா படிக்களுனு அவன போட்டு அடிக்கறது.

நம்பளால இந்தியன் தாத்தா மாதிரியோ இல்ல டுபாக்கூர் கந்தசாமியோ மாதிரிலா ஒண்ணும் பண்ண முடியாது தான். ஆனா நல்ல மனுசங்களா, நியாயமா, மத்தவங்களுக்கு நம்மாள முடிஞ்ச அளவுக்கு உதவி செய்து சிறு சிறு சொர்ககங்கள நிச்சயம் உருவாக்களாம்னு நம்புறேன்......சரியோ தப்போ, இன்பமோ துன்பமோ நம்பக்கிட்ட தான் இருக்கோ....

சிறு சொர்க்கம்.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

எந்திரன் - the iron giant

மு.கு:  இது 160 கோடி செலவு செய்து, அருமை நட்சத்திரம் கக்ஷ்டப்பட்டு நடிச்சி, உலக அழகி கவர்ச்சி காட்டி, ஒரு போங்கு இயக்கத்தில் வெளிவந்து, அதையும் பல நூறு ரூபாய் கொடுத்து பாத்த பல ரசிக பெருமக்கள் (ஹாஹாஹாஹா-யோவ் என்னத்தையா நீங்களா ரசிக்கிறிங்களோ தெரியல, எவனாவது ஒண்ணு நல்லா இருந்தா உடனே ஆமாம் சாமி போடாமா(ரஜினி, விஜயோட இல்ல பொதுவா பல நடிகர்களோட விசிறினு சொல்லிக்கிர அரைவேக்காட்டுத்தனத்த சொல்றேன்) வெளில வாங்க) ஓட வச்ச எந்திரன்ங்கற மொண்ண படத்த பத்தின பதிவு இல்ல.



நியாயமா பேசினா எல்லாரும் படம் பாக்குறோம், சரி எத எதிர்ப்பார்த்து படத்துக்கு போறோம், அது ஆளாளுக்கு மாறுபடற விசயம் ஆனா ஒரு நோக்கம் நேரத்த செலவு (இப்ப பணம் அது வேற விசயம்) செய்யணும், நேரத்த பயனுள்ளதா செலவு செய்யணும்லா எதுவும் மொண்ணையா சொல்ல மாட்டேன். பாக்குற படம் நல்ல(குறிச்சிகோங்க கெட்ட எண்ணங்கள தூண்ட கூடாது) பொழுதுபோக்கா இருக்கணும் அதே சமயம் நம் நல்வுணர்வ தூண்டனும் இல்ல குறைஞ்சப்பட்சம் நம்ப அறிவுக்கு வேல கொடுக்கணும் (மூளைய யோசிக்கணும் வேற ஒண்ணும் இல்ல அப்ப தான் நாம மனுசன் இல்லனா வேற) இது எதுமே இல்லாம இன்னமும் படத்துல 100 பேர ஆட உட்டு பாட்டு வைக்கிறது அதையும் என்னா பிச்சு ஆங் மச்சுபிச்சாம்ல அங்கிட்டு உலக அழகி டேண்ஸ் போடணும்னு எவன் அழுதான்............எப்பா நீங்க எடுக்கறது சைண்ஸ் பிக்சன் படம்டா நியாபகம் வச்சிக்கோங்க.....ஒண்ணும் இல்லங்க படம்ங்கறது இப்படி மசாலாதனமாவே இருந்தா நமக்கு சீக்கரம் புளிச்சிடும்னு தெரிஞ்சி ஏன் ஆதரக்கிறோம்னு புரியல.........எல்லா படமும் அப்படி இருந்தா தான் ஓடும்னு ஏன் நினைக்கிறோம் எல்லாத்துக்கும் ஒரு முதல் இருக்குங்க முதல் அடி அந்த முதல் அடி கோணலா போய்க்கிட்டே இருக்கு.....

the iron giant 1999 வெளியான ஒரு ஆங்கில மொழி அனிமேசன் திரைப்படம். ஆர்பரிக்கிற கடல் மழையும் புயலும் வலுவா இருக்கு, அமெரிக்க கடலோரமா மைன்ங்கற ஊருக்கு பக்கத்துல அந்த படகு கரையை அடைய ரொம்ப சிரமப்படுது. படகோட்டி ரொம்ப கவனமா படக செலுத்திக்கிட்டு இருக்கார், திடீர்னு வானத்துல இருந்து ஒரு ஒளி கீற்று கடல்ல பாயுரத பாத்து ஆச்சிரியப்படுறார். சட்டுனு படகோட்டிக்கு கலங்கரை விளக்கோட வெளிச்சம் தெரியுது அத நோக்கி செலுத்தலாம்னு ஓட்டுனா அது ஒரு பெரிய பொருள் மீது மோதி உடைஞ்சிடுது. என்னானு அண்ணாந்து பாக்குறப்ப இரண்டு ஒளி பொருந்திய கண்களோடு ஒரு இயந்திர மனிதன் தெரிறான்.

காலைல அத அவரோட கூட்டாளிகள்க்கிட்ட அந்த படகோட்டி சொல்ல எல்லாரும் என்னா நைட்டு சரக்கு ஓவாரானு கேலி பண்ணி சிரிக்கிறாங்க.
ஹோகார்த்து மைன்ல அவங்க அம்மா கூட வாழுற ஒரு 9 வயது சிறுவன். எல்லா சிறுவர்கள போல அமானுக்ஷ்ய கதைகளையும் விசயங்களையும் விரும்பறவன். அன்னைக்கு ராத்திரி அம்மா வர தாமதம் ஆகும்கரதால டிவில ஒரு திகில் படத்த பாத்துக்கிட்டு இருக்கப்ப திடீர்னு சிக்னல் கட்டாயிடுது சரி ஆண்டனாவ சரி பண்ணலாம்னு போனா அங்க ஆண்டனாவ காணோம். உடனே தன்னோட பொம்ம துப்பாக்கிய தூக்கிக்கிட்டு காட்டுக்குள்ள தீர செயல் பண்ற மாதிரி போறான். அங்க திடீர்னு ஒரு சத்தம் பின்னாடி திரும்பி பாத்தா 50 அடி உயருத்துல ஒரு இரும்பு இயந்திர மனிதன் (இது 1 டெரா பைட் மெமரி, 10 ஜிபி ரேம்னுலா கேணத்த்னமா கம்ப்யூட்டர் கான்பிகிரேசன தன் மெக்காணிசமா சொல்ர டுபாக்கூர் எந்திரன் இல்ல) அங்க இருக்க டிராண்ஸ்பார்மர் ஸ்டேசனகிட்ட போய் அந்த இருக்க டிராண்ஸ்பார்மர்ல கைய வைக்க அதுக்கு சாக்கடிக்கிது. ஹோகர்த் ஓடி போய் மெயின ஆஃப் பண்ணி அந்த இரும்பு மனிதன காப்பாத்திட்டு வீட்ட நோக்கி ஓடுறான், அந்த களேபரத்துல அவன் பொம்ப துப்பாக்கிய அங்கயே விட்டுடுறான். அவன் அம்மாகிட்ட அவன் பாத்தத சொல்றான் ஆனா அவன் அம்மா வழக்கம் போல ஏதோ காமிக்ஸ படிச்சிட்டு உளறரானு விட்டுடுறாங்க......

அடுத்த நாளும் திரும்ப அங்க போறான். அங்க அந்த இரும்ப மனிதன போட்டோ எடுத்து தன் நண்பர்கள்க்கிட்ட காட்டணும்னு உட்காந்து இருக்கான். திடீர்னு அந்த இரும்பு மனிதன் வெளிபடுறதால பயந்து ஓடுறான் ஆனா அது இவன தடுக்குது ஆனா காயப்படுத்துல. இவன் அதுக்கிட்ட பேச முயலுறான் ஆனா அதுக்கு புரியல செய்கை மூலமா விசயங்கள விளக்குறான். சில ஆங்கில வார்த்தைகளையும் அதற்க்கான அர்த்தத்தையும் விளக்குறான் அதுக்கு கொஞ்சமா புரிய ஆரம்பிக்குது. அதே சமயம் டிராண்ஸ்பார்மர் மர்மமான முறைல தாக்கப்பட்டத்த விசாரிக்க ஒரு அதிகாரி ராணுவத்தால அனுப்பி வைக்க படுறான். அவன் அந்த இயந்திர மனிதன் காட்டுக்குள்ள இருக்கரைதையும், ஹோகர்த்துக்கு அதுக்கூட பழக்கம் இருக்கரதையும் மோப்பம் பிடிக்கிறான்.

அந்த இயந்திர மனிதன் இரும்ப மட்டுமே உண்ணும்ங்கரதால டீன்ங்கற பழைய இரும்பு வியாபாரியோட யார்டுக்கு அத கூட்டிட்டு போய் சாப்பிட சொல்றான் ஹோகாத்து, சத்தம் கேட்டு வெளில வர டீன் அவ்வளவு பெரிய இரும்பு மனிதன பாத்து அதிர்ச்சி அடையறான். ஹோகார்த்து டீன பொறுமையா சமாதனப்படுத்தி அந்த இயந்திர மனிதன் தன்னோட நண்பனும் அது தீங்கு செய்யாத நல்ல இயந்திரனும் சொல்றான், ஒரு மாதிரி சமாதனம் அடையற டீன் அந்த இயந்திர மனிதன் அங்க தங்க சம்மதிக்கிறான்.  ஒரு சமயம் விளையாடுறப்ப இயந்திர மனிதன நோக்கி தன்னோட பொம்ப துப்பாக்கி காட்டி ஹோகார்த்து விளையாட அந்த இயந்திர மனிதன் அது உண்மையான துப்பாக்கினு நினச்சி தற்காப்புக்கு திரும்ப தாக்குது. ஆனா அது தற்காப்புக்கு மட்டும் தான் ஆயுதத்த உபயோக்கிக்கும்னு ஹோகர்த்தும், டீனும் தெரிஞ்சிகிறாங்க.....

அதே சமயம் அந்த அமெரிக்க உளவு அதிகாரி அப்ப நடந்துக்கிட்ட இருந்த பனிப்போர காரணம் காட்டி ரஸ்யா தான் இப்படியான ஒரு இயந்திர மனித அனுப்பி நாச வேலைள ஈடுபட போகுதுனு சொல்லி மைனுக்கு ராணுவத்த வர சொல்றான். ராணுவம் வந்து இயந்திர மனிதன என்ன பண்ணிச்சி, ஹோகர்த்து, அவன் அம்மா, டீன் என்ன ஆனாங்கறது மீதி கத.

இது முழுக்க கற்பனை தான் கொஞ்சம் கூட லாஜிக் இல்ல ஒத்துக்கிறேன். ஆனா கதைய சொன்னவிதம், அதுக்கு உபயோகிச்ச காட்சி அமைப்புகள், குணாதசியங்கள், வசனங்கள், வார்த்தைகள் ”you are who you choose to be" நீ என்னவாக வேண்டும் என்று நீ தீர்மானிக்கிறாய்.......ஒரு எளிமையான ஆனா மனச தொடுற வசனம். இதுல ஒண்ணு கூட இல்லாம எதுக்கு தான் படம் எடுக்குறாங்களோ.

எந்திரன விட 100% தரமான திரைப்படம் காண பரிந்துரை செய்கிறேன்.

திங்கள், 22 நவம்பர், 2010

வெட்டியா இருந்தா என்ன பண்ண தோணும்

இப்படி உன்ன மாதிரி மொன்னையா மொக்க பதிவு எழுத தோணும்ங்கற உங்க மைண்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன். பொதுவா நமக்கு பொழுதுபோக்கு என்ன டிவி பாக்கறதும் லேட்டஸ்ட்டா நெட்ட நோண்டறதும் நமக்கு சாரி எனக்கு பொழப்பாவா ஆய்டிச்சி.....






(மேல புகைபடத்துல இருக்கறவருக்கும் எனக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லங்கோ)

எந்நேரமும் நெட்ல உட்காந்து இருக்குரதால நெட்ல உள்ள சாதகம் பாதகம் பத்தி எனக்கு கொஞ்சம் அனுபவம் உண்டு.....தினப்படி என்ன மெயில் செக் பண்ணுவோம், அடுத்து ஃபேஸ்புக்ல போய் மொக்கையா ஏதாவது ஸ்டேட்டஸ் மெசேஜ் போடறது, நம்ப அழகான!!!! போட்டோவ போடறது, எவனாவது நல்ல வீடியோ அவன் சுவத்துல போட்டு இருந்தா அத க்ஷேர் பண்ணி அதுக்கும் எதாவது மொண்ணையா “டாராயிருக்கு, இந்த மாதிரி நான் பாத்ததே இல்ல, என்ன ஒரு வீடியோ” இப்படி கேப்சன் போட்டுறது, இதயெல்லாம் பண்ணிட்டு எவனாவது கமெண்ட் போடுறானானு பாக்கறது, கமெண்ட் வந்த உடனே அதுக்கு ஒரு கமெண்ட் கூட ஒரு ஸ்மைலினு அடிச்சி விடறது.

அட இது கூட பரவாயில்ல....அப்படியே பொறுமையா ஒரு ஒரு பொண்ணு பேரா போட்டு தேடுறது அதுல எதாவது கண்ணுக்கு லட்சணமா இருந்தா உடனே அதுக்கு ஒரு ஃப்ரிண்ட் ரிக்வஸ்ட் கொடுக்கறது, அந்த பொண்ணு ரிக்வஸ்ட்ட அக்சப்ட் பண்ணிடிச்சினு மெயில் வந்தா உடனே விழுந்தடிச்சி போய் அதோட சுவத்த பாக்கறது, அங்க என்னாடா நா அதோடு பிரண்ட் லிஸ்ட்ல நாம 370 சொச்சம்ல நிக்கறது, அப்ப தான் தெரியுது இதுக்கு யாரு ரிக்வஸ்ட் கொடுத்தாலும் அக்சப்ட் பண்ற கூட்டம்னு பின்ன நம்மையெல்லாம் அக்சப்ட் பண்ண்????. சரி இனிமே பிரண்ட் லிஸ்ட் கம்மியா இருக்கிற பொண்ணா பாத்து ஒரு 15 இல்ல 20 பிரண்ட இருக்கிற பொண்ணா இருந்தா நாம கொஞ்சம் முயற்சி செய்யலாம்னு ரிக்வஸ்ட் கொடுத்து அது அக்செப்ட் பண்ணினா ஆகா பட்சி சிக்கிடிச்சினு நினச்சிக்கிட்டு ரெண்டு நாள் கழிச்சி போய் அதோட சுவத்த பாத்தா.....கொய்யால அதுக்குள்ள எப்படி 400 சொச்சம் பிரண்ட்ஸ ஆட் பண்ணாளோ/////கடசில இவளும் அவளா......

சரி இதெல்லாம் சரிப்பட்டு வராது நாம நேரா மேட்ரிமோனில இறங்கிடுவோமுனு அதுலயும் ரெஜிஸ்டர் பண்றது....ஏற்கனவே எடுத்த போட்டோ குரூப்பா எடுத்த போட்டோ இதையெல்லாம் க்ராப் பண்ணி நம்ப மூஞ்சி பளிச்சினு இருக்குற மாதிரி இருக்க போட்டோவா ஒரு நாலு போட்டோவ போட்டு வச்சிட்டு ரம்யா, திவ்யானு பேரு வகையறாவா ஸேர்ச் பண்ணி அதுல யாரு நல்லா இருக்காங்களோ அவங்களுக்கு இண்ரஸ்ட் ரிக்வஸ்ட் கொடுக்கறது...காசா பணமா ரிக்வஸ்ட் தானேங்கறதால அப்படியே அதயும் தாரளபிரபுவா (இளைய திலகம் இல்லங்க) தெளிச்சி உடறது.....இந்த பொண்ணுங்களுக்கு மனசாட்சியே இல்லங்க ஒண்ணு கூட அக்செப்ட் பண்ணாம எல்லாரும் ரிஜக்ட் பண்றது......

மேல உள்ளதை படிச்சிட்டு ச்ச இவ்வளவு மானம் கெட்டத்தனமாவா இருப்பாங்கனு யாராவது நினச்சிங்கனா இத்தோட நீங்க படிக்கறத நிறுத்திடுங்க இதுக்கு மேல அடல்ட்ஸ் ஒண்லியா இருக்க வாய்ப்பு அதிகம்......

நம்ப மனிச உடம்பு படைக்கப்பட்டு அது வாழுதுனா அதோட சில தேவைகள பூர்த்தி செஞ்சிக்க தான், புலன்களோட குணங்கள் வெவ்வேறு உணர்ச்சிகள நமக்குள்ள கொண்டு வரது தான். இன்னாட என்னனமோ சொல்றனு நினைக்காதிங்க மேட்டருக்கு வரேன்......காமம் தலைக்கேறிடிச்சினா என்ன செய்ய தோணும், ஏதாவது பிட்ட பாக்க தோணும் (உங்களுக்குலா எப்படினு தெரியல எனக்கு அப்பப்ப தோணும்) இந்த ஊர்ல எல்லா பிட்டு சைட்டையும் block பண்ணிட்டானுங்க அதுனால என்ன பண்றது அப்படியே youtube போறது அங்க போய் hot rain songனு போட்டு செர்ச் பண்றது. அங்க வகைவகையா நம்ப குலசெம்மல்கள் ச்ச நடிகைகள் எப்படி எப்படியே டிரெஸ் பண்ணிக்கிட்டு அதுலயும் குறிப்பா புடவையா இருந்தா நல்லது நம்ப அழகு முண்ணனிநடிகரகள கட்டிபிடிச்சி டேண்ஸ் போடறது.....எல்லாம் பாக்கணும்னு தானே இப்படி தாரளமா நடிக்கிறாங்க அப்புறம் நாம பாக்களணா அவங்க வருத்த படமாட்டாங்க....இப்படிலா பாத்து நாம கொஞ்சம் கிளுகிளுப்பாயிடறது......

அப்புறம் திடீர்னு நமக்கு ஞிநோதயம் வரது ச்ச இதெல்லாம் தப்புனு அப்படியே ஒரு ஒரு வலைப்பூவா போய் படிக்கறது.......அப்படியும் டைம்வ பாஸாகலயா ஏதாவது ஒரு பொருள வாங்க போற மாதிரி அத பத்தி மணிக்கணக்கா படிக்கறது....அப்படி நான் பாத்த சில நல்ல இணையங்கள் http://www.photonhead.com/http://www.dpreview.com/ ஒரு கேமிரா வாங்களாமேனு தேடுனப்ப படிச்ச நல்ல வெப்சைட்டுங்க (இங்கயும் சைட்டு தானா...) போட்டோகிராஃபி பத்தி தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம் உள்ளவங்க படிச்சி பாருங்க உபயோகமா இருக்கும்.

இதுக்கு மேல என்ன எழுதறதுனு தெரியல.....

சரி கவித(ஹாஹாஹா) எழுதுறேன்.

இப்போதெல்லாம் லட்சியங்கள் லட்சங்களிலே முடங்கி விடுகிறது.....
     காதல்கள் கேமில் தொடங்கி ரூமில் முடிங்கின்றது (நான் இன்னும் ஒரு காதல் கூட பண்ண அது வேற விசயம்).....
   ஒரு தேநீர் கோப்பையை இரு கைகளில் ஏந்தி உதடு நனைய பருகியபொழுது உன் முகம் பிடித்து உன் உதட்டை  சுவைத்தது என் உதடுகளில் இப்பொழுது இனிக்கிறது.......
    மரக்கிளையிடையே விழுந்த உன் கீற்றொளி ஓர புன்னகை இந்த அரபி பெண்ணின் விழியின் மையின் கருமையை ஊருடுவிகிறது......
     உன் வீடு கடக்கும் பொழுதெல்லாம் (அது ரோட்ல இருந்து ஒரு 300 மீட்டர் தள்ளி இருக்கும்) என் கண்கள் எதை தேடிற்று நீ இருக்க மாட்டாய் என்றரிந்தும் உன் வாசல் கண்டு மகிழ்ந்தது (கிறுக்கு பய மவன்....)
    இன்னும் கொஞ்சம் நேரா, கொஞ்சம் முன்னாடி வாப்பா, நிமிர்ந்து நில்லுப்பா, அட கேமரவ பாருப்பா என்று போட்டோகிராஃபர் ஓராயிரம் முறை கூறிக்கொண்டிருந்தார், பாவம் அவருக்கு என்ன தெரியும் எங்கும் நிறைந்திருக்கும் உன்னை நான் ரசிக்கிறேன் என்று.......

இதுக்கு மேல எழுதினா நாடு தாங்காது வெட்டியா இருந்தா இதுலாதாங்க பண்ண தோணும்//

புதன், 20 அக்டோபர், 2010

கானல்நீர்

வானம் பார்த்து வியந்தேன், அலுமினிய பறவையின் ஓட்டத்தை......
            என்று இந்த பறக்கும் பறவையில் பறப்பேன் என்று, ஒரு காகிதத்தில் என்  பெயர்.....
பறக்கும் நாள் முடிவானது, மகிழ்ந்தேன் , பரவசித்தேன்...
         விமானத்தின் ஓட்டம் நின்றது, பாலைவன காற்று வரவேற்றது....
கட்டங்களின், கார்களின் பளபளப்பு சலிப்படைந்து வயலின் பச்சையை         கண்கள் தேடிற்று....
          கைப்பேசியும், மடிகணினியும் தோழர்கள் ஆயின, என் நேசம் கவர்ந்தவர்களின் ஒளிப்படம் கண்டு கண்கள் பனித்தது.....
            ஊண் உண்டு உடல் வளர்த்தேன், அன்பர்களின் தொலைதூர குரல் கேட்டு உயிர் உணர்ந்தேன்......
             பணத்தின் பெரும்கனவு, மனதின் பெரும் ஏக்கம் நிராசையானது பாசம்......
ஒரு மென்சோக கவிதை போல வெயிலின் உக்கரத்திலும் மூடுபனியுடன் ஒரு    வாழ்க்கை......
             நண்பர்களை வழியனுப்பும் தொணியில் ஊரின் வாசத்தை கானல்நீர் வழியா சிறிது பெற்றேன்....
             சமாதானம் அடைந்தேன் இதோ இன்னும் சில மாதங்கள், சில தினங்கள் என் காலத்தை கொன்றேன்......
             என் மனம் தேற்ற என்னை தேற்றினேன், உறுதியாய் இரு என வெளிபுறத்திர்க்கு மட்டும்.....
              ஆயிரம் மக்கள் சூழ தீவாய்யிருந்தேன், நீந்தி கொண்டே இருக்கிறேன் கரை தென்படும் எனும் நம்பிக்கையில்....
              

வெள்ளி, 15 அக்டோபர், 2010

ஒரு வசந்த காலம்....5


(இந்த பதிவ படிக்கறதுக்கு முன்னாடி என்னோட முந்தய பதிவுகள் ஒரு வசந்த காலம்....1, 2, 3, 4யும் படிச்சிடுங்க நண்பர்களே)


நம்ப மனசு சில விசயங்கள இது நல்லது, இது கெட்டது, இவங்க நல்லவங்க, இவங்க கெட்டவங்க இப்படியெல்லாம் எப்படி பாகுபடுத்துது, காலம்காலமா நமக்கு முன்னாடி வாழ்ந்தவங்க பலத்தரப்பட்ட சூழ்நிலைகளை கடந்து வந்தப்ப உண்டான அனுபவம் அவங்க மூளை மடிப்புகள்ள வளர்ந்து அது இன்னைக்கு நம்ப தலைளையும் வந்து உட்காந்திருக்கு....அது சமயங்கள்ல சரியா ரொம்ப சரியா நமக்கு முடிவுகள எடுக்க உதவுது, நாம என்ன தான் நாம சுயமா சிந்திக்கிறோம்ன்னு நினச்சிக்கிட்டாலும், நமக்கு முன்னாடி வாழ்ந்தவங்களோட செயல்கள தான் பிரதிப்பலிச்சிக்கிட்டு இருக்கோம் நிச்சயமா...

“டேய்ய்ய்ய்ய்ய்ய்”னு சிவா அந்த ரெண்டு பேரயும் பாத்து கத்துனது உங்களுக்கு சினிமாத்தனமா தெரிஞ்சா நிச்சயம் அப்படி இல்ல......மூளையால கட்டுப்படுத்தப்படுற உடல மனசு கட்டுப்படுத்த ஆரம்பிச்சிடுனா உங்ளோட செயல்பாடுகள் உங்க மூளையோட கட்டுப்பாட்டுள்ள இருக்காது..வலி, உணர்ச்சி எல்லாம் மாறிடும்...மறஞ்சிடும். சிவா இப்ப அந்த நிலைல இருந்தான். அவன் ரொம்ப ரொம்பரொம்ப நேசிக்கிற மாலினிய ஒருத்தன் அடிச்சவுடனே அடிச்சவன தண்டிக்கணுங்கற உணர்வ தவிர அவன் மனசுல, உடலுள வேற எண்ணம் இல்ல.....டேய்னு கத்திக்கிட்டே கட்டில்ல இருந்து இறங்கனவன் அப்படியே சரிஞ்சிட்டான்..அவனோட உடஞ்ச கால் அவன நிராயுதபாணி ஆக்கிடிச்சி.

சிவா கத்துனது கேட்டு திரும்புன ராமலிங்கம் அவன் கீழ விழுந்தத பாத்து மூர்த்திக்கிட்ட “யாரு மூர்த்தி இவன் தமாசு பண்ணிக்கிட்டு”னு சொல்லிட்டு, அழுதுக்கிட்டு இருந்த மாலினிய பாத்து “த எனக்கு நாளைக்குள்ள பணத்த செட்டில் பண்ணு இல்ல இருக்குற வீட்ட எழுதி கொடு, எங்கயாவது தப்பிகளாம்னு பாத்த..நீ சின்ன பொண்ணு உடம்பு தாங்காது....மூர்த்தி வா போகலாம்”னு வெளில போய்ட்டான் மூர்த்தி பின் தொடர.

மாலினி அழுதுக்கிட்டே சிவாவ நீ  இருக்கேணு நம்பினேனே என்ன அடிச்சவன சும்மா பாத்துக்கிட்டு தானே இருந்தங்கற மாதிரி பாத்துக்கிட்டு மெல்ல ரூம்ம விட்டு போக எத்தணிக்க....அய்யோ மாலினி என்ன அப்படி பாக்காத......உன்ன நான் காப்பாத்துல ஆனா கண்டிப்பா அவன் அதுக்காக தண்டிக்கப்படுவான் நீ என்ன விட்டு போய்டாதனு மனசுல நினைக்கிறப்பவே....

சிவாவோட அம்மா நேரா மாலினிக்கிட்ட போய் “அழுவாத கண்ணு, நாளைக்குள்ள காச எப்படியாவது ரெடி பண்ணி கொடுத்திடலாம், நாசமா போறவன், காசுக்காக இப்படியா அடிக்கறது, அவன இதுக்கு அனுப்பிப்பான்”னு சமாதானப்படுத்தினாலும் மாலினி சிவாவ நீ அவ்வளவு தானா புடிச்சி இருந்தா பின்னாடியே வருவ ஆனா எனக்கு ஒண்ணுனா இப்படி சும்மா பாத்துக்கிட்டு தான் இருப்பியாங்கற மாதிரி பாத்துக்கிட்டே இருக்க....சிவாவால அவள கண்ணுக்கு கண்ணா பாக்க முடியல...

ராமலிங்கத்த எப்படியாவது தண்டிச்சா தான் நான் மாலினிய நேசிக்கறது உண்மையாகும்ங்கற மாதிரி அவனோட மனசு அவன நம்ப வச்சிது...

எப்பவுமே ஜெய்ச்சிக்கிட்டு இருக்கவங்களுக்கு ஒரு பெரிய மிக பெரிய பலகீனம் இருக்கு, முதல் தடவ தோத்தாங்கனா நிதானம் இழந்துடுவாங்க, தப்பாதப்பா யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க, திரும்ப தோத்துடுவோம்மோங்ற பயம் அவங்கள அலைக்கழிக்க ஆரம்பிச்சிடும். இப்ப நான் எப்பவும் ஜெய்ச்சிச்சிகிட்டு இருக்க ராமலிங்கத்த தண்டிச்சாகணும். மனித மனசு ரொம்ப நொறுங்கும் தன்னோட தன்மானம் மதிக்கப்படாத போது. அதுவும் ராமலிங்கம் தன்னை பாத்து தமாசு பண்றான்னு மாலினி முன்னாடி இளக்காரமா சொன்னது என்னோட தன்மானத்த ரொம்ப நொருக்கிடிச்சி....ராமலிங்கம் இதுக்கு அனுப்பவிக்கணும்.

அப்பா சொல்ரத பாத்தா இவனுக்கு செல்வாக்கு இல்லாத இடம் இந்த ஊர்ல இல்ல, போலீஸ், அடியாள், பணம், அரசியல், சட்டம் எல்லாம் சாதகமா இருக்கு இருந்தாலும் இவன ஜெயிச்சி ஆகணும்.....நான் என் காதலுக்கு செய்ற ஒரு நியாயமா அது இருக்கும்....என்ன செய்யலாம், ஊரே பார்த்து பயப்படுற ஒருத்தன் பயப்படுணும். நிச்சயம் வழி இருக்கு, ஆனா அது என்ன......

ராமலிங்கம் எப்பவும் ஜெய்க்கிறவன் அவன் ஒரு முறை அடிப்பட்டா அவன் சிந்தனை மட்டுப்பட ஆரம்பிச்சிடும், அந்த சொற்ப சந்தர்ப்பத்துல அவன திரும்ப அடிக்கணும், அவன் தான் தோற்க போறோம்னு உணரரப்ப வலிக்க வலிக்க அவன் தோற்கடிக்கணும்.

அவன் ரூம்க்கு வந்தப்ப இருந்தே அவன் செஞ்ச ஒரு விசயத்த நல்லா கவனிச்சான். மூர்த்தி ராமலிங்கம் பின்னாடி தயங்கி தயங்கி நின்னாலும் மூர்த்திய ராமலிங்கம் மரியாதையா தான் பேசினான். விசயம் இப்படி இருக்களாம் ராமலிங்கத்துக்கு மூர்த்தி மேல பயம் இருந்தாலும் பயம் தெரிஞ்சா மூர்த்தி தன்ன மதிக்க மாட்டான்னு உணர்ந்து மூர்த்திய எப்படியோ தன்னோட வாயால கட்டுப்படுத்தி வச்சி இருக்கான், மனுசன் எப்படி ஒரு சின்ன அங்குசத்த வச்சி பலம்மிக்க யானை அடுக்குறானோ பயத்தோட அப்படி தான் ராமலிங்கமும் மூர்த்திய அடக்குறான், மூர்த்திய ராமலிங்கத்துக்கு எதிரா திருப்பணும்...அங்குசம் அப்படி ஒண்ணும் பெரிய ஆயுதம் இல்லனு யானைக்கு புரியணும், என்ன பண்ணலாம்.

சிவாவோட மூளை மடிப்புல இருந்த நியூரான் செல்லுல இருந்த முன்னோர்கள் வழங்கின DNAகள் தீவரமா செயல்பட ஆரம்பிச்சிது ஒரு காதலுக்காக....

தொடரும்...

புதன், 29 செப்டம்பர், 2010

ஒரு வசந்த காலம்...4



(இத படிக்கறதுக்கு முன்னாடி என்னோட முந்தய பதிவுகள் @ஒரு வசந்த காலம்...1, ஒரு வசந்த காலம்...2, ஒரு வசந்த காலம்...3யையும் படிச்சிடுங்க நண்பர்களே)

”ரத்தம் ஒரே நிறம்....சிகப்பு. அவன் ஐரோப்பியனோ, இந்தியனோ, அமெரிக்கனோ யாரா இருந்தாலும் ரத்தம் ஒரே நிறம் தான், அதே மாதிரி காதல்ங்கற உணர்வு எல்லாருக்கும் ஒண்ணு தான்.....” அய்யயோ என்னாச்சு எனக்கு தலைல அடிப்பட்டதால ஏதாவது இப்படி யோசிக்க சொல்லுதோ ச்ச ச்ச இது காதல், ஆமாம் அதான் டெஸ்டஸ்டரோனும், ஈஸ்ட்ரோஜனும் அதிகம் சுரக்க ஆரம்பிச்சிடிச்சி...டே டே என்ன ஆச்சி உனக்கு என்னமோ என்னமோ யோசிக்க்ற.....ஏன் இப்படி யோசிக்கிறேன்....என் தேவத தான் காரணம்...அவ பேர் என்ன......

“டே சிவா, சிவா.....இப்ப தான் கண்ணு முழிச்ச அதுக்குள்ள என்னடா விட்டத்த பாத்து கனவு காணுற...”

”அம்மா!!! நீயா....எப்பமா வந்த, எனக்கு என்னாச்சு கடசியா அடிப்பட்டதோட தான் நியாபகம் இருக்கு அதுக்கு மேல என்னாச்சினே தெரியல..”

“ஏண்டா உனக்கு எப்படி தெரியும்..2 நாளா மயக்குத்துல இருந்தடா, இப்ப தான் கண்ணு முழிச்சிருக்க....ரெண்டு நாளா எல்லாரும் எவ்வளவு பாடுப்பட்டோம், அப்பா வெளில மருந்து வாங்க போய்ருக்காரு, நம்ப சொந்தகாரங்க எல்லாம் வந்து பாத்துட்டு போனாங்க நீ மயக்கத்துல இருந்ததால உனக்கு ஒண்ணும் தெரியல..நல்ல காலம் எல்லாம் சரியாயிடிச்சி....”

“சரிம்மா நான் எப்படி இந்த வந்தேன்..உங்களுக்குலா எப்படி நான் இங்க இருக்கறது தெரியும்???”

“டே மாலினிடா அந்த பொண்ணு தான் உன்ன இங்க கொண்டு வந்து சேர்த்தா...உன் போன்ல வீட்டு நம்பர் இருக்கறத பாத்து கூப்பிட்டுருக்கு....நாங்க வந்து உன்ன பாக்க வரும் போது அந்த பொண்ணு அப்படி தேம்பி தேம்பி அழுதுச்சிடா” இப்படி எங்க அம்மா சொல்லிக்கிட்டு இருக்கும் போதே மாலினி மாலினி என் தேவதை பேரு மாலினி.....என் தேவதை தான் காப்பாத்தி இருக்கா....சிவா மாலினி ஜோடி பொருத்தம் நல்லா தான் இருக்கு...நான் பறக்க ஆரம்பிச்சிட்டேன் இறக்கையே இல்லாம...

“டே..டே..உன்ன தாண்டா திரும்ப கனவா?? என்ன தான் ஆச்சி உனக்கு...”

“அம்மா இப்ப அந்த பொண்ணு எங்கம்மா?”

“நம்ம வீட்ல தாண்டா இருக்கு...நீ கண்ணு முழிக்கிற வரைக்கும் இருந்து பாத்துட்டு தான் போவேன்னு ஒரு நாள் முழுக்க இங்க தான் இருந்துது, அப்புறம் டாக்டர் தான் சிவா சரியாயிட்டார், மயக்கம் தான் இருக்கு அதுவும் ஒரு நாள்ல சரியாயிடும் சொன்னப்புறம் தான் நானும் அப்பாவும் நீ வீட்ல இரும்மா...நாங்க அவன் கண்ணு முழுச்சதும் சொல்றோம் நீ வந்து பாருனு சொன்னோம் அப்ப தாண்டா அந்த பொண்ணு இங்க இருந்து போச்சி...என்னமோ போ அந்த பொண்ணு இருந்த்ததால நீ இப்ப உட்காந்து என்கிட்ட பேசிக்கிட்டு இருக்க....”

“என்னடா சிவா இப்ப எப்படி இருக்கு....தலைல வலி இருக்கா??” அப்பா

“நல்லா இருக்குப்பா.....தலவலிளாம் பரவாயில்ல...முட்டில மட்டும் லைட்டா வலி இருக்கு...”

“காலுள நல்ல ஃப்ரேக்சர்னு டாக்டர் சொன்னாரு......சரி அப்படி என்ன வண்டி ஓட்டுன...இப்படி கண்ணுமண்ணு தெரியாம அடிப்பட்டு கிடக்குற...அந்த பொண்ணு என்னடானா முன்னாடி இருந்த தடுப்ப கவனிக்காம போய் முட்டிட்டார்னு சொல்லுது”

பரவாயில்லயே என் ஆளு என்ன பலவிதத்துல காப்பாத்தி இருக்கே ஆனா இது எப்படி நடந்ததுனு சொன்னா காறித்துப்பிடுவார்னு “இல்லப்பா பஸ்ஸ லெஃப்ட்ல போய் ஓவர்டேக் பண்ணலாம்னு நினச்சேன், அங்க தடுப்ப இருந்தத கவனிக்கல அதான்”னு என்னமோ உளறி வச்சேன்.

“சரி பரவாயில்ல விடு, மாலினிக்கு தான் நாம கடன் பட்டிருக்கோம்..”

மாலினி, மாலினி உன்ன இப்ப பாக்கணுமே நான் என்ன பண்ணுவேன்னு நினைக்கும் போதே...”சரிடா நான் போய் மாலினிய கூட்டிட்டு வரேன், நீ கண்ணு முழிச்ச உடனே பாக்கணும்னு 100 முறை சொல்லி இருக்கும்...நீ ஒழுங்கா இந்த பால குடி ரெண்டு நாளா வெறும் குளுக்கோஸ் தான் உடம்புல ஏறிருக்கு”

########################################################################

"மூர்த்தி இப்ப என்ன தான் சொல்ல வர...நீ சொல்லரதலா நான் கேக்கரதுக்கு இல்ல பணம் வரலனுலா காரணம் சொல்லாத...எனக்கு எப்பவுமே ஒரு முடிவு தான் வேணும், காரணம் வேணாம் எனக்கு பணம் வேணும்...அதுக்கு என்ன பண்ண போற...நான் என்ன பண்ணினா பணம் கிடைக்கும் அத சொல்லு அத விட்டுட்டு சின்னபுள்ள மாதிரி ஏதாவது சொல்லாத...” ராமலிங்கம்

இவன்கிட்ட போய் மாட்டுனோமே சும்மாவே சீறுவான் இப்ப பணம் அந்த பொண்ணுக்கிட்டு இருந்து வசூல் பண்ணாம இவன்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியதா இருக்கேனு நினச்சிக்கிட்டே மூர்த்தி “இல்லனா அந்த பொண்ண ரெண்டு நாளா ஆள காணும், அந்த பொண்ணோட பிரண்டுக்கிட்ட விசாரிச்சப்ப கள்ளகுறிச்சில எதோ அந்த பொண்ணுக்கு தெரிஞ்சவங்களுக்கு உடம்பு சரியில்லனு பாக்க போய்யிருக்காம், இங்க வந்த உடனே பேசி வாங்கிடலாம் இல்ல மிரட்டி கடனுக்கு வீட்ட எழுதி வாங்கிடலாம் ஒண்ணும் பிரச்சின இல்லனா”

”பிரச்சனையா இல்லையானு நீயே முடிவு பண்ணாத...பொண்ணு வந்த பிரச்சன இல்ல, வரலனா என்ன பண்ணுவ...பேசிக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது நானும் கள்ளகுறிச்சிக்கு தான் போக வேண்டி இருக்கு, அந்த பொண்ணயும் பாத்து ஒரு முடிவுக்கு வரலாம், வண்டிய எடு” ராமலிங்கம்

வாய கொடுத்தா வாங்கி கட்டிக்கிட்டே இருக்க வேண்டியது தான் அவன் சொல்றத அப்படியே செஞ்சாவாச்சும் ஒண்ணும் சொல்லாம இருப்பான்னு நினச்சிக்கிட்டே மகிந்திரா பொலிரோவோட 100HP இஞ்சின ஆன் பண்ணினான் மூர்த்தி.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

”டே..டே..இவன் வேற விட்டத்த பாத்து கனவு காண ஆரம்பிச்சிடுறான்....இந்தாடா சிவா இந்த பிரட்ட சாப்பிடுடா, உன்ன எங்கயாவது சாமியார் கிட்ட தாண்டா காட்டணும்..இப்படி பேனு இருக்க”

மனசுக்குள்ள ‘மாலினி வந்தா போதும்மா எல்லாம் சரியாயிடும்’

ஒரு 9 30 மணி போல வசந்த காலத்துல அடிக்கிர வெயில் எப்படி இருக்கும் தெரியுமா....அந்த வெயிலாள உடம்புல மெல்லிய வெப்பம் பரவும்....அதுக்கூட மெலிசா வீசுர இளங்காத்து....அந்த ரம்யிமான சூழ்நிலை இப்ப நான் இருந்த அறையிலயும் பரவ ஆரம்பிச்சது...ஆகா இது எதுக்கோ சிக்னல் ஆச்சே....

வந்துட்டா என் தேவதை...அட ஏன் அழுகறா...என்ன பாக்குறப்ப கண்ணுல இருந்து கண்ணீர் தாரை தாரையா வழியுதே...

“மாலினி ஏன் கண்ணு அழுவற....அட சின்னபுள்ள மாதிரி என்னது இது அவனுக்கு தான் ஒண்ணும் இல்லனு டாக்ட்டர் சொல்லிட்டாரே...அப்படியே இருந்தாலும் நீ என்ன சொந்தமா பந்தமா இப்படி அழுவிறியே புள்ள”னு என் அம்மா அவள சமாதனப்படுத்த என் மனசு கரைய ஆரம்பிச்சிடிச்சி நான் இவளுக்கு என்ன பண்ணினேன்......ஒரு ஒரு மணி நேரம் அவள விடாம பின்தொடர்ந்தத விட...உண்மையிலே காதல் இவ்வளவு சீக்கரம் இவ்வளவு ஆழமா மனசுக்குள்ள நுழையுமா தெரியல...ஆனா என் விசயத்துல இது நடக்குதே...எனக்கு கல்யாணம் ஆச்சா, என் பேரு என் வயசு எதுவும் அவளுக்கு தெரியாதே அப்புறம் எத வச்சி அவ என் மேல அன்பு வச்சா......கொஞ்சம் யோசிச்சி பாக்குறேன்.....எனக்கும் அது ஒண்ணுமே தோணலயே....காதல் வரதுக்குகூட ஒரு பட்டர்ஃப்ளை எஃபக்ட் தேவ படுது....சந்தோசமான நிகழ்வு.

”என் வாழ்க்கைல ரொம்ப நாளுக்கப்புறம் நான் சந்தோசமா இருந்தது நீங்க என்ன பாக்கறதுக்காக கூட வந்தப்ப தான்....ஏன்னுலா எனக்கு தெரியாது எனக்கு... எனக்கு..... உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு, என்னால உங்களுக்கு அடிப்பட்ட உடனே என்னால தாங்கிக்க முடியல.....இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்” மாலினி மெல்லிய கண்ணீரோட தேம்பி தேம்பி இத சொல்ல.

அய்யோ பெண்ணே இவ்வளவு மென்மையா இருக்கியே.....என்ன நீ ஏன் இப்படி உணர்ச்சிய கட்டுப்படுத்தாம என் அப்பா அம்மா முன்னாடி கொட்டுற....நான் என் அம்மாவ பாக்க நான் எதிர்ப்பாத்ததுக்கு ஆப்போசிட் ரியாக்கசன கொடுத்துக்கிட்டு இருந்தாங்க......ரொம்ப சந்தோசமா போய் மாலினிய உச்சி முகர....என் பின்னாடி ராஜா, ஏ.ஆரோட பேக் கிரவுண்ட் மியூசிக் கேக்க ஆரம்பிச்சிது....வாழ்க்கைல என்னால இத விட சந்தோசமா இருக்கவே முடியாது.....

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

”மூர்த்தி நீ போய் அந்த பொண்ணு ஆஸ்பித்திரில எங்க இருக்கானு பாத்துட்டு கூப்பிடு” ராமலிங்கம். ராமலிங்கத்துக்கு எப்பவும் ஒரு பழக்கம் தனக்கு ஒரு விசயம் நடக்கணும்னு முடிவு பண்ணிட்டா அத முடிச்சிட்டு தான் மறி காரியம் பாப்பான்...அது சின்னதா இருந்தாலும் சரி பெருசா இருந்தாலும் சரி...காரியம் முடியணும் அவ்வளவு தான்....பின்விளைவு? அத பின்னால பாத்துக்கலாம்.

*சக்ஷ்டியை நோக்க சரவணபவனார்* டோன் சொல்லுல ஒலிக்க “சொல்லு மூர்த்தி என்ன பேசிட்டியா பொண்ணுக்கிட்ட”

”இல்லனே பேசல ரெண்டாவது ஃப்ளோர் ரூம் நம்பர் 201ல இருக்கா நீங்களே வந்து பேசி முடிச்சிட்டா நல்லா இருக்கும்”னு சொல்லிட்டு ஒரு 70,000க்கு ஏன் இவன் இவ்வளவு அவசரபடுறான்.....இவன புரிஞ்சிக்கவே முடியாது...அவனே வந்து ஏதோ பேசி தொலையுறான்..நம்மல விட்டா சரி.

“சரி வரேன்” ராமலிங்கம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

முதல்முறையா என் தேவதைக்கிட்ட நான் ”மாலினி என்ன பாரு....”னு சொல்லிக்கிட்டு இருக்கும் போதே ரூமுக்குள்ள ரெண்டு பேரு, பாக்கரதுக்கு நல்லவங்களா படல..நுழஞ்சாங்க, எங்கப்பா அவங்கள பயத்தோட பாக்க அதுல

 முதலாமானவன் “மூர்த்தி இந்த பொண்ணா???”

அடுத்தவன் ”ஆமாம்னே இந்த பொண்ணு தான்”

அத கேட்டு முதலாமானவன் நேரா மாலினிக்கிட்ட வந்து ‘ரப்’னு அறைய.....

‘கெட்ட நேரம்’ ஆரம்பிச்சிடிச்சி.

ஒரு வசந்த காலம்....தொடரும்.

வியாழன், 9 செப்டம்பர், 2010

இனிது இனிது....





மு.கு: இது சினிமா பத்தின பதிவு இல்லைங்கோ.........ஏன்னா படத்த பாசிட்டிவா எடுக்குறதா நினச்சிக்கிட்டு ரொம்ப பாஸிட்டிவா எடுத்துட்டாங்க, படம் முழுசுமா எப்ப பாத்தாலும் ஒருத்தர மாத்தி ஒருத்தர் கலாய்கிறாங்க, லவ் பண்றாங்க, சீனியருக்கு லவ் லெட்டர் கொடுக்குறாங்க, ஜாலியா புரபசரையே புரபோஸ் பண்றாங்க, சூப்பரா டிரெஸ் போட்டுக்கிட்டு கிளாஸ தவிர மத்த இடத்தல எல்லாத்தலையும் கும்பல் கும்பலா உட்காந்து பேசிகினே இருக்காங்க, என்ன தான் நண்பர்களோட நிகழ்வ படமாக்க முயற்சி இருந்திருந்தாலும் படம் நிறைய செயற்கைதனமா எனக்கு தெரிஞ்சிது ஏன்னா நான் சிட்டி கல்லூரில படிக்கலனாலும் கண்டிப்பா எந்த கல்லூரிலும் இப்படி நடக்காதுங்கறது திண்ணம்....59ஆவது நிமிசதுக்கு அப்புறம் முழு படத்தையும் ஓட்டியே பாத்துட்டேன்...

படத்துல இருக்க முக்கியமான கேரக்டர் எல்லாரும் மெக்கானிக்கல் இஞ்சினீரியங் டிபார்ட்மண்ட்ங்கற காரணத்தால படம் பாக்க ஆரம்பிச்சேன். அட பாவிகளா எந்த காலேஜ்ல டா மெக்குல அத்தண பொண்ணுங்க தெரிஞ்சிருந்தா அந்த காலேஜ்ல சேர்ந்து இருப்பேன். டிப்பார்ட்ண்ட்ல ஒரு பொண்ணு இருந்திருந்தா கூட அதுக்கே லவ் லெட்டர் கொடுத்து நாலு வருசத்த ஓட்டிருப்பேனே அத விட்டு ஜூனியர் பொண்ணுக்கு லெட்டர் கொடுத்து அசிங்க பட்டிருக்க மாட்டேனே....அது என்னமோ மெக்கானிக்கல் பசங்க எல்லாரும் தீவரவாதி மாதியே தானே எல்லா டிப்பார்மண்ட் பொண்ணுங்களும் பாத்தாங்க....அத மெய்ண்டயென் பண்ணறதா நினச்சிக்கிட்டு மூஞ்ச முறப்பா வச்சிக்கிட்டு உள்ளுக்குள்ள எவளாவது பாக்க மாட்டாளா..பேச மாட்டாளா எப்படி ஏங்கி இருப்போம்னு எங்க பொங்கி போன மனசுக்கு தான் தெரியும்.

அது என்னமோ இ.சி.இ பசங்களும், சி.எஸ்.சி, ஐ.டி பசங்களும் தான் கடல போட குத்தகைக்கு எடுத்த மாதிரி கேண்டீன்ல வருப்பானுங்க, லேப்ல வருப்பானுங்க அங்க வருப்பானுங்க, இங்க வருப்பானுங்க எப்ப பாத்தாலும் வருத்துக்கிட்டே இருப்பானுங்க அங்க புகையாது எல்லாம் எங்க சட்ட பாக்கெட்ல இருந்து தான் புகை வரும்......

அதே மாதிரி யாராவது என்ன படிக்கிரனு கேட்டு நாம “மெக்கனிக்கல்”னு பதில் சொன்னா கேள்வி கேட்டவன் பதில் சொல்ரது “அப்ப எப்ப பாத்தாலும் ஸ்பேனரும் கையுமா தான் இருப்பேன்னு சொல்லு ஹாஹா” காமெடி பண்றாராம், அடபாவிகளா கஸ்டப்பட்டு படிச்சா mechanical engineeringல mechanicங்கற வார்த்த இருக்கறதுக்காக ”அப்ப படிச்சிட்டு mechanic ஆக போறியா”னு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம கொஸ்டீன் போடுறது, ஏங்க அப்ப சிவில் படிச்சா என்னா செங்கலும் கையுமா இருப்பியானு கேப்பீங்களா, இல்ல டிரிபிள் ஈ படிச்சா என்ன கரண்டு கம்பியும் கையுமா இருப்பியானா கேப்பீங்களா, அது என்னமோ தெரியல எங்கள பாத்தா மட்டும் அப்படி கேக்க தோணுது போல...

அதே மாதிரி ஏதோ எங்களையெல்லாம் ஒதுக்கி வச்ச மாதிரியே பாக்கறது, சாஃப்ட்வேர் வேலைக்கு மெக்கானிக்கல், மேனுஃபேக்ச்சுரீங் please dont applyனு போடுறது. சரி எங்களுக்கு அங்க தான் வேல கொடுக்க மாட்டங்கறங்கனு எங்க கோர் இண்டஸ்ட்ரீகு போய் வேலைக்கு சேந்தா 5 ஆயிரம் 6 ஆயிரம் தான் சம்பளம் தரது, சரி பரவாயில்ல அனுபவம் கிடைக்குனு வேல செஞ்சாலும் அப்பப்ப மத்த டிப்பார்ட்மண்ட்ல கூட படிச்சிட்டு மென்பொருள் துறையில வேல பாக்கறவன் வாங்கற சம்பளத்த கம்பேர் பண்ணி பாக்கறப்ப வர காம்ளெக்கஸ கட்டுபடுத்த முடியாது...அப்புறம் கடைசிக்கு ஏதாவது இப்படி வெளிநாட்டுக்கு வந்து தான் ஓரளவுக்கு நல்ல சம்பளதுக்கு வேல பாக்கறது, இஞ்சினியரிங்கே எங்க டிப்பார்ட்மண்ட்ல இருந்து தான் உருவானது ஆனா கடசிக்கு நாங்க தான் லீஸ்ட் வாண்டட் இஞ்சினியர்ஸா இருப்போம் போல......

யாராவது மக்கள் ஆதரவு குரல் கொடுக்க இருக்கீங்களா...........

திங்கள், 6 செப்டம்பர், 2010

மரங்களை வெட்டுங்கள் (???!!!)

முன் குறிப்பு: நண்பன் ஒருவன் இதை அனுப்பி பதிவில் வெளியிடுமாறு சொன்னான், நல்லதா யாரு எழுதனா என்ன நாலு பேருக்கு போய் சேர்ந்து நல்லது நடந்தா சரி தான்

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும்இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறதுஇந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ஆமாம்கண்டிப்பாக வெட்ட வேண்டும் '  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற  முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. 


மண்ணின் வில்லன் 

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும்பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும்'காட்டு கருவேல மரம்தான் அது.  ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே ! ) 

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை  இங்கு தூவியதாக ஒரு கருத்தும் ,  கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான்,இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் )  வெளிநாட்டில்இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல....இப்போதைய  பிரச்சனை....!? ,இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்


இவை எந்த  வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல்போனாலும்நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல  மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக  வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லைஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி  செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!  இப்படி காற்றின்ஈரபதத்தையும்  , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில்தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர்ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே  முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள்இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டிஇருக்கிறது.


உடம்பு முழுதும் விஷம்


இந்த மரத்தின் இலைகாய்விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.  முக்கியமான விஷயம் ஒன்றும்  உள்ளது ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான்.  இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்  அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும்ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான்பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி  நீரை விஷமாக  மாற்றிவிடுகிறது மற்றொரு புறம்  இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராதுதவிர மரத்தில் எந்த பறவைஇனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள்ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற  காற்று மண்டலமேநச்சுதன்மையாக  மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்  என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.   ஆனால்  நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும்,  இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம்மற்றும் ஆலமரமும் அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதைஉணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சிநம்மிடம்  இல்லையே என்பதே என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல்பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம்செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!