வியாழன், 9 செப்டம்பர், 2010

இனிது இனிது....





மு.கு: இது சினிமா பத்தின பதிவு இல்லைங்கோ.........ஏன்னா படத்த பாசிட்டிவா எடுக்குறதா நினச்சிக்கிட்டு ரொம்ப பாஸிட்டிவா எடுத்துட்டாங்க, படம் முழுசுமா எப்ப பாத்தாலும் ஒருத்தர மாத்தி ஒருத்தர் கலாய்கிறாங்க, லவ் பண்றாங்க, சீனியருக்கு லவ் லெட்டர் கொடுக்குறாங்க, ஜாலியா புரபசரையே புரபோஸ் பண்றாங்க, சூப்பரா டிரெஸ் போட்டுக்கிட்டு கிளாஸ தவிர மத்த இடத்தல எல்லாத்தலையும் கும்பல் கும்பலா உட்காந்து பேசிகினே இருக்காங்க, என்ன தான் நண்பர்களோட நிகழ்வ படமாக்க முயற்சி இருந்திருந்தாலும் படம் நிறைய செயற்கைதனமா எனக்கு தெரிஞ்சிது ஏன்னா நான் சிட்டி கல்லூரில படிக்கலனாலும் கண்டிப்பா எந்த கல்லூரிலும் இப்படி நடக்காதுங்கறது திண்ணம்....59ஆவது நிமிசதுக்கு அப்புறம் முழு படத்தையும் ஓட்டியே பாத்துட்டேன்...

படத்துல இருக்க முக்கியமான கேரக்டர் எல்லாரும் மெக்கானிக்கல் இஞ்சினீரியங் டிபார்ட்மண்ட்ங்கற காரணத்தால படம் பாக்க ஆரம்பிச்சேன். அட பாவிகளா எந்த காலேஜ்ல டா மெக்குல அத்தண பொண்ணுங்க தெரிஞ்சிருந்தா அந்த காலேஜ்ல சேர்ந்து இருப்பேன். டிப்பார்ட்ண்ட்ல ஒரு பொண்ணு இருந்திருந்தா கூட அதுக்கே லவ் லெட்டர் கொடுத்து நாலு வருசத்த ஓட்டிருப்பேனே அத விட்டு ஜூனியர் பொண்ணுக்கு லெட்டர் கொடுத்து அசிங்க பட்டிருக்க மாட்டேனே....அது என்னமோ மெக்கானிக்கல் பசங்க எல்லாரும் தீவரவாதி மாதியே தானே எல்லா டிப்பார்மண்ட் பொண்ணுங்களும் பாத்தாங்க....அத மெய்ண்டயென் பண்ணறதா நினச்சிக்கிட்டு மூஞ்ச முறப்பா வச்சிக்கிட்டு உள்ளுக்குள்ள எவளாவது பாக்க மாட்டாளா..பேச மாட்டாளா எப்படி ஏங்கி இருப்போம்னு எங்க பொங்கி போன மனசுக்கு தான் தெரியும்.

அது என்னமோ இ.சி.இ பசங்களும், சி.எஸ்.சி, ஐ.டி பசங்களும் தான் கடல போட குத்தகைக்கு எடுத்த மாதிரி கேண்டீன்ல வருப்பானுங்க, லேப்ல வருப்பானுங்க அங்க வருப்பானுங்க, இங்க வருப்பானுங்க எப்ப பாத்தாலும் வருத்துக்கிட்டே இருப்பானுங்க அங்க புகையாது எல்லாம் எங்க சட்ட பாக்கெட்ல இருந்து தான் புகை வரும்......

அதே மாதிரி யாராவது என்ன படிக்கிரனு கேட்டு நாம “மெக்கனிக்கல்”னு பதில் சொன்னா கேள்வி கேட்டவன் பதில் சொல்ரது “அப்ப எப்ப பாத்தாலும் ஸ்பேனரும் கையுமா தான் இருப்பேன்னு சொல்லு ஹாஹா” காமெடி பண்றாராம், அடபாவிகளா கஸ்டப்பட்டு படிச்சா mechanical engineeringல mechanicங்கற வார்த்த இருக்கறதுக்காக ”அப்ப படிச்சிட்டு mechanic ஆக போறியா”னு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம கொஸ்டீன் போடுறது, ஏங்க அப்ப சிவில் படிச்சா என்னா செங்கலும் கையுமா இருப்பியானு கேப்பீங்களா, இல்ல டிரிபிள் ஈ படிச்சா என்ன கரண்டு கம்பியும் கையுமா இருப்பியானா கேப்பீங்களா, அது என்னமோ தெரியல எங்கள பாத்தா மட்டும் அப்படி கேக்க தோணுது போல...

அதே மாதிரி ஏதோ எங்களையெல்லாம் ஒதுக்கி வச்ச மாதிரியே பாக்கறது, சாஃப்ட்வேர் வேலைக்கு மெக்கானிக்கல், மேனுஃபேக்ச்சுரீங் please dont applyனு போடுறது. சரி எங்களுக்கு அங்க தான் வேல கொடுக்க மாட்டங்கறங்கனு எங்க கோர் இண்டஸ்ட்ரீகு போய் வேலைக்கு சேந்தா 5 ஆயிரம் 6 ஆயிரம் தான் சம்பளம் தரது, சரி பரவாயில்ல அனுபவம் கிடைக்குனு வேல செஞ்சாலும் அப்பப்ப மத்த டிப்பார்ட்மண்ட்ல கூட படிச்சிட்டு மென்பொருள் துறையில வேல பாக்கறவன் வாங்கற சம்பளத்த கம்பேர் பண்ணி பாக்கறப்ப வர காம்ளெக்கஸ கட்டுபடுத்த முடியாது...அப்புறம் கடைசிக்கு ஏதாவது இப்படி வெளிநாட்டுக்கு வந்து தான் ஓரளவுக்கு நல்ல சம்பளதுக்கு வேல பாக்கறது, இஞ்சினியரிங்கே எங்க டிப்பார்ட்மண்ட்ல இருந்து தான் உருவானது ஆனா கடசிக்கு நாங்க தான் லீஸ்ட் வாண்டட் இஞ்சினியர்ஸா இருப்போம் போல......

யாராவது மக்கள் ஆதரவு குரல் கொடுக்க இருக்கீங்களா...........

10 கருத்துகள்:

பாரதசாரி சொன்னது…

புரியுது தல ;-( நான் எலக்ட்ரானிக் அண்ட் இண்ஸ்ட்ருமெண்டேஷன் ஆனா இப்போ அந்த பக்கமே போவுரதில்லை

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//யாராவது மக்கள் ஆதரவு குரல் கொடுக்க இருக்கீங்களா..........//

நான் இருக்கேன் பாஸ்.... சூப்பாரா எழுதி இருக்கிங்க... & நீங்க சொன்னது எல்லாம் உண்மை... சிவில் பசங்களகூட மதிக்க மாட்டறாங்க பாஸ்...

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

// பாரதசாரி கூறியது...
புரியுது தல ;-( நான் எலக்ட்ரானிக் அண்ட் இண்ஸ்ட்ருமெண்டேஷன் ஆனா இப்போ அந்த பக்கமே போவுரதில்லை//

வாங்க தல ஆமாங்க தல இப்ப பாத்தீங்கனா மென்பொருள் வேலைக்கு இந்த டிப்பார்ட்மண்ட் ஆளுங்க தான் வேணும்னு நியாயம் இல்ல ஏன்னா அதுல வேல பாக்கறதுக்கு எந்த படிப்பு படிச்சியிருந்தாலும் அவங்க சொல்லி தரது தான் மேட்டர் அப்புறம் ஏன் இந்த பாரபட்சம் தான்னு புரியல....

அருண் பிரசாத் சொன்னது…

தல, கவலை படாதீங்க, அமெரிக்காகாரன் எல்லா சாப்ட்வேர்காரனையும் அடிச்சி துறத்தபோறான். மெக்கானிக்கல் தான் எப்பவும் ரஜினி மாதிரி ஸ்ட்ராங்க், மத்துலாம் 4 படத்துக்கு அப்புறம் கானாம போயிடும்

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//யாராவது மக்கள் ஆதரவு குரல் கொடுக்க இருக்கீங்களா..........//

நான் இருக்கேன் பாஸ்.... சூப்பாரா எழுதி இருக்கிங்க... & நீங்க சொன்னது எல்லாம் உண்மை... சிவில் பசங்களகூட மதிக்க மாட்டறாங்க பாஸ்..//

வாங்க பாஸ் கருத்துக்கு நன்றி.....பொண்ணு தரதுக்கு கூட டிப்பார்ட்மண்ட்ட பாத்து தான் தராங்களாம் ஒரு சர்வே சொல்லுது அதுலயும் மெக்குக்கும், சிவிலுக்கும் மார்க்கெட் கம்மி தான் தால......

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...
தல, கவலை படாதீங்க, அமெரிக்காகாரன் எல்லா சாப்ட்வேர்காரனையும் அடிச்சி துறத்தபோறான். மெக்கானிக்கல் தான் எப்பவும் ரஜினி மாதிரி ஸ்ட்ராங்க், மத்துலாம் 4 படத்துக்கு அப்புறம் கானாம போயிடும்///

வாங்க தல கருத்து மிக்க நன்றி, அது என்னமோ உண்மை தாங்க தல, எப்பவும் கிங்கு அப்படிங்கற மட்டும் உண்மை...

ப.செல்வக்குமார் சொன்னது…

//.அது என்னமோ மெக்கானிக்கல் பசங்க எல்லாரும் தீவரவாதி மாதியே தானே எல்லா டிப்பார்மண்ட் பொண்ணுங்களும் பாத்தாங்க...///

அப்படியெல்லாமா நடந்தது ..?!

ப.செல்வக்குமார் சொன்னது…

//யாராவது மக்கள் ஆதரவு குரல் கொடுக்க இருக்கீங்களா...........
///
கலக்கலா சொல்லிட்டீங்க .. நல்லா இருக்கு அண்ணா ...!!

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

//அப்படியெல்லாமா நடந்தது ..?!//

ம்ம் உண்மை தான் செல்வா...நிறைய நடந்திருக்கு அந்த மாதிரி..

//கலக்கலா சொல்லிட்டீங்க .. நல்லா இருக்கு அண்ணா ...!!//

மிக்க நன்றி செல்வா வருகைக்கும் கருத்துக்கும்....

SENTHIL சொன்னது…

nijamava