ஞாயிறு, 28 நவம்பர், 2010

எந்திரன் - the iron giant

மு.கு:  இது 160 கோடி செலவு செய்து, அருமை நட்சத்திரம் கக்ஷ்டப்பட்டு நடிச்சி, உலக அழகி கவர்ச்சி காட்டி, ஒரு போங்கு இயக்கத்தில் வெளிவந்து, அதையும் பல நூறு ரூபாய் கொடுத்து பாத்த பல ரசிக பெருமக்கள் (ஹாஹாஹாஹா-யோவ் என்னத்தையா நீங்களா ரசிக்கிறிங்களோ தெரியல, எவனாவது ஒண்ணு நல்லா இருந்தா உடனே ஆமாம் சாமி போடாமா(ரஜினி, விஜயோட இல்ல பொதுவா பல நடிகர்களோட விசிறினு சொல்லிக்கிர அரைவேக்காட்டுத்தனத்த சொல்றேன்) வெளில வாங்க) ஓட வச்ச எந்திரன்ங்கற மொண்ண படத்த பத்தின பதிவு இல்ல.



நியாயமா பேசினா எல்லாரும் படம் பாக்குறோம், சரி எத எதிர்ப்பார்த்து படத்துக்கு போறோம், அது ஆளாளுக்கு மாறுபடற விசயம் ஆனா ஒரு நோக்கம் நேரத்த செலவு (இப்ப பணம் அது வேற விசயம்) செய்யணும், நேரத்த பயனுள்ளதா செலவு செய்யணும்லா எதுவும் மொண்ணையா சொல்ல மாட்டேன். பாக்குற படம் நல்ல(குறிச்சிகோங்க கெட்ட எண்ணங்கள தூண்ட கூடாது) பொழுதுபோக்கா இருக்கணும் அதே சமயம் நம் நல்வுணர்வ தூண்டனும் இல்ல குறைஞ்சப்பட்சம் நம்ப அறிவுக்கு வேல கொடுக்கணும் (மூளைய யோசிக்கணும் வேற ஒண்ணும் இல்ல அப்ப தான் நாம மனுசன் இல்லனா வேற) இது எதுமே இல்லாம இன்னமும் படத்துல 100 பேர ஆட உட்டு பாட்டு வைக்கிறது அதையும் என்னா பிச்சு ஆங் மச்சுபிச்சாம்ல அங்கிட்டு உலக அழகி டேண்ஸ் போடணும்னு எவன் அழுதான்............எப்பா நீங்க எடுக்கறது சைண்ஸ் பிக்சன் படம்டா நியாபகம் வச்சிக்கோங்க.....ஒண்ணும் இல்லங்க படம்ங்கறது இப்படி மசாலாதனமாவே இருந்தா நமக்கு சீக்கரம் புளிச்சிடும்னு தெரிஞ்சி ஏன் ஆதரக்கிறோம்னு புரியல.........எல்லா படமும் அப்படி இருந்தா தான் ஓடும்னு ஏன் நினைக்கிறோம் எல்லாத்துக்கும் ஒரு முதல் இருக்குங்க முதல் அடி அந்த முதல் அடி கோணலா போய்க்கிட்டே இருக்கு.....

the iron giant 1999 வெளியான ஒரு ஆங்கில மொழி அனிமேசன் திரைப்படம். ஆர்பரிக்கிற கடல் மழையும் புயலும் வலுவா இருக்கு, அமெரிக்க கடலோரமா மைன்ங்கற ஊருக்கு பக்கத்துல அந்த படகு கரையை அடைய ரொம்ப சிரமப்படுது. படகோட்டி ரொம்ப கவனமா படக செலுத்திக்கிட்டு இருக்கார், திடீர்னு வானத்துல இருந்து ஒரு ஒளி கீற்று கடல்ல பாயுரத பாத்து ஆச்சிரியப்படுறார். சட்டுனு படகோட்டிக்கு கலங்கரை விளக்கோட வெளிச்சம் தெரியுது அத நோக்கி செலுத்தலாம்னு ஓட்டுனா அது ஒரு பெரிய பொருள் மீது மோதி உடைஞ்சிடுது. என்னானு அண்ணாந்து பாக்குறப்ப இரண்டு ஒளி பொருந்திய கண்களோடு ஒரு இயந்திர மனிதன் தெரிறான்.

காலைல அத அவரோட கூட்டாளிகள்க்கிட்ட அந்த படகோட்டி சொல்ல எல்லாரும் என்னா நைட்டு சரக்கு ஓவாரானு கேலி பண்ணி சிரிக்கிறாங்க.
ஹோகார்த்து மைன்ல அவங்க அம்மா கூட வாழுற ஒரு 9 வயது சிறுவன். எல்லா சிறுவர்கள போல அமானுக்ஷ்ய கதைகளையும் விசயங்களையும் விரும்பறவன். அன்னைக்கு ராத்திரி அம்மா வர தாமதம் ஆகும்கரதால டிவில ஒரு திகில் படத்த பாத்துக்கிட்டு இருக்கப்ப திடீர்னு சிக்னல் கட்டாயிடுது சரி ஆண்டனாவ சரி பண்ணலாம்னு போனா அங்க ஆண்டனாவ காணோம். உடனே தன்னோட பொம்ம துப்பாக்கிய தூக்கிக்கிட்டு காட்டுக்குள்ள தீர செயல் பண்ற மாதிரி போறான். அங்க திடீர்னு ஒரு சத்தம் பின்னாடி திரும்பி பாத்தா 50 அடி உயருத்துல ஒரு இரும்பு இயந்திர மனிதன் (இது 1 டெரா பைட் மெமரி, 10 ஜிபி ரேம்னுலா கேணத்த்னமா கம்ப்யூட்டர் கான்பிகிரேசன தன் மெக்காணிசமா சொல்ர டுபாக்கூர் எந்திரன் இல்ல) அங்க இருக்க டிராண்ஸ்பார்மர் ஸ்டேசனகிட்ட போய் அந்த இருக்க டிராண்ஸ்பார்மர்ல கைய வைக்க அதுக்கு சாக்கடிக்கிது. ஹோகர்த் ஓடி போய் மெயின ஆஃப் பண்ணி அந்த இரும்பு மனிதன காப்பாத்திட்டு வீட்ட நோக்கி ஓடுறான், அந்த களேபரத்துல அவன் பொம்ப துப்பாக்கிய அங்கயே விட்டுடுறான். அவன் அம்மாகிட்ட அவன் பாத்தத சொல்றான் ஆனா அவன் அம்மா வழக்கம் போல ஏதோ காமிக்ஸ படிச்சிட்டு உளறரானு விட்டுடுறாங்க......

அடுத்த நாளும் திரும்ப அங்க போறான். அங்க அந்த இரும்ப மனிதன போட்டோ எடுத்து தன் நண்பர்கள்க்கிட்ட காட்டணும்னு உட்காந்து இருக்கான். திடீர்னு அந்த இரும்பு மனிதன் வெளிபடுறதால பயந்து ஓடுறான் ஆனா அது இவன தடுக்குது ஆனா காயப்படுத்துல. இவன் அதுக்கிட்ட பேச முயலுறான் ஆனா அதுக்கு புரியல செய்கை மூலமா விசயங்கள விளக்குறான். சில ஆங்கில வார்த்தைகளையும் அதற்க்கான அர்த்தத்தையும் விளக்குறான் அதுக்கு கொஞ்சமா புரிய ஆரம்பிக்குது. அதே சமயம் டிராண்ஸ்பார்மர் மர்மமான முறைல தாக்கப்பட்டத்த விசாரிக்க ஒரு அதிகாரி ராணுவத்தால அனுப்பி வைக்க படுறான். அவன் அந்த இயந்திர மனிதன் காட்டுக்குள்ள இருக்கரைதையும், ஹோகர்த்துக்கு அதுக்கூட பழக்கம் இருக்கரதையும் மோப்பம் பிடிக்கிறான்.

அந்த இயந்திர மனிதன் இரும்ப மட்டுமே உண்ணும்ங்கரதால டீன்ங்கற பழைய இரும்பு வியாபாரியோட யார்டுக்கு அத கூட்டிட்டு போய் சாப்பிட சொல்றான் ஹோகாத்து, சத்தம் கேட்டு வெளில வர டீன் அவ்வளவு பெரிய இரும்பு மனிதன பாத்து அதிர்ச்சி அடையறான். ஹோகார்த்து டீன பொறுமையா சமாதனப்படுத்தி அந்த இயந்திர மனிதன் தன்னோட நண்பனும் அது தீங்கு செய்யாத நல்ல இயந்திரனும் சொல்றான், ஒரு மாதிரி சமாதனம் அடையற டீன் அந்த இயந்திர மனிதன் அங்க தங்க சம்மதிக்கிறான்.  ஒரு சமயம் விளையாடுறப்ப இயந்திர மனிதன நோக்கி தன்னோட பொம்ப துப்பாக்கி காட்டி ஹோகார்த்து விளையாட அந்த இயந்திர மனிதன் அது உண்மையான துப்பாக்கினு நினச்சி தற்காப்புக்கு திரும்ப தாக்குது. ஆனா அது தற்காப்புக்கு மட்டும் தான் ஆயுதத்த உபயோக்கிக்கும்னு ஹோகர்த்தும், டீனும் தெரிஞ்சிகிறாங்க.....

அதே சமயம் அந்த அமெரிக்க உளவு அதிகாரி அப்ப நடந்துக்கிட்ட இருந்த பனிப்போர காரணம் காட்டி ரஸ்யா தான் இப்படியான ஒரு இயந்திர மனித அனுப்பி நாச வேலைள ஈடுபட போகுதுனு சொல்லி மைனுக்கு ராணுவத்த வர சொல்றான். ராணுவம் வந்து இயந்திர மனிதன என்ன பண்ணிச்சி, ஹோகர்த்து, அவன் அம்மா, டீன் என்ன ஆனாங்கறது மீதி கத.

இது முழுக்க கற்பனை தான் கொஞ்சம் கூட லாஜிக் இல்ல ஒத்துக்கிறேன். ஆனா கதைய சொன்னவிதம், அதுக்கு உபயோகிச்ச காட்சி அமைப்புகள், குணாதசியங்கள், வசனங்கள், வார்த்தைகள் ”you are who you choose to be" நீ என்னவாக வேண்டும் என்று நீ தீர்மானிக்கிறாய்.......ஒரு எளிமையான ஆனா மனச தொடுற வசனம். இதுல ஒண்ணு கூட இல்லாம எதுக்கு தான் படம் எடுக்குறாங்களோ.

எந்திரன விட 100% தரமான திரைப்படம் காண பரிந்துரை செய்கிறேன்.

திங்கள், 22 நவம்பர், 2010

வெட்டியா இருந்தா என்ன பண்ண தோணும்

இப்படி உன்ன மாதிரி மொன்னையா மொக்க பதிவு எழுத தோணும்ங்கற உங்க மைண்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன். பொதுவா நமக்கு பொழுதுபோக்கு என்ன டிவி பாக்கறதும் லேட்டஸ்ட்டா நெட்ட நோண்டறதும் நமக்கு சாரி எனக்கு பொழப்பாவா ஆய்டிச்சி.....






(மேல புகைபடத்துல இருக்கறவருக்கும் எனக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லங்கோ)

எந்நேரமும் நெட்ல உட்காந்து இருக்குரதால நெட்ல உள்ள சாதகம் பாதகம் பத்தி எனக்கு கொஞ்சம் அனுபவம் உண்டு.....தினப்படி என்ன மெயில் செக் பண்ணுவோம், அடுத்து ஃபேஸ்புக்ல போய் மொக்கையா ஏதாவது ஸ்டேட்டஸ் மெசேஜ் போடறது, நம்ப அழகான!!!! போட்டோவ போடறது, எவனாவது நல்ல வீடியோ அவன் சுவத்துல போட்டு இருந்தா அத க்ஷேர் பண்ணி அதுக்கும் எதாவது மொண்ணையா “டாராயிருக்கு, இந்த மாதிரி நான் பாத்ததே இல்ல, என்ன ஒரு வீடியோ” இப்படி கேப்சன் போட்டுறது, இதயெல்லாம் பண்ணிட்டு எவனாவது கமெண்ட் போடுறானானு பாக்கறது, கமெண்ட் வந்த உடனே அதுக்கு ஒரு கமெண்ட் கூட ஒரு ஸ்மைலினு அடிச்சி விடறது.

அட இது கூட பரவாயில்ல....அப்படியே பொறுமையா ஒரு ஒரு பொண்ணு பேரா போட்டு தேடுறது அதுல எதாவது கண்ணுக்கு லட்சணமா இருந்தா உடனே அதுக்கு ஒரு ஃப்ரிண்ட் ரிக்வஸ்ட் கொடுக்கறது, அந்த பொண்ணு ரிக்வஸ்ட்ட அக்சப்ட் பண்ணிடிச்சினு மெயில் வந்தா உடனே விழுந்தடிச்சி போய் அதோட சுவத்த பாக்கறது, அங்க என்னாடா நா அதோடு பிரண்ட் லிஸ்ட்ல நாம 370 சொச்சம்ல நிக்கறது, அப்ப தான் தெரியுது இதுக்கு யாரு ரிக்வஸ்ட் கொடுத்தாலும் அக்சப்ட் பண்ற கூட்டம்னு பின்ன நம்மையெல்லாம் அக்சப்ட் பண்ண்????. சரி இனிமே பிரண்ட் லிஸ்ட் கம்மியா இருக்கிற பொண்ணா பாத்து ஒரு 15 இல்ல 20 பிரண்ட இருக்கிற பொண்ணா இருந்தா நாம கொஞ்சம் முயற்சி செய்யலாம்னு ரிக்வஸ்ட் கொடுத்து அது அக்செப்ட் பண்ணினா ஆகா பட்சி சிக்கிடிச்சினு நினச்சிக்கிட்டு ரெண்டு நாள் கழிச்சி போய் அதோட சுவத்த பாத்தா.....கொய்யால அதுக்குள்ள எப்படி 400 சொச்சம் பிரண்ட்ஸ ஆட் பண்ணாளோ/////கடசில இவளும் அவளா......

சரி இதெல்லாம் சரிப்பட்டு வராது நாம நேரா மேட்ரிமோனில இறங்கிடுவோமுனு அதுலயும் ரெஜிஸ்டர் பண்றது....ஏற்கனவே எடுத்த போட்டோ குரூப்பா எடுத்த போட்டோ இதையெல்லாம் க்ராப் பண்ணி நம்ப மூஞ்சி பளிச்சினு இருக்குற மாதிரி இருக்க போட்டோவா ஒரு நாலு போட்டோவ போட்டு வச்சிட்டு ரம்யா, திவ்யானு பேரு வகையறாவா ஸேர்ச் பண்ணி அதுல யாரு நல்லா இருக்காங்களோ அவங்களுக்கு இண்ரஸ்ட் ரிக்வஸ்ட் கொடுக்கறது...காசா பணமா ரிக்வஸ்ட் தானேங்கறதால அப்படியே அதயும் தாரளபிரபுவா (இளைய திலகம் இல்லங்க) தெளிச்சி உடறது.....இந்த பொண்ணுங்களுக்கு மனசாட்சியே இல்லங்க ஒண்ணு கூட அக்செப்ட் பண்ணாம எல்லாரும் ரிஜக்ட் பண்றது......

மேல உள்ளதை படிச்சிட்டு ச்ச இவ்வளவு மானம் கெட்டத்தனமாவா இருப்பாங்கனு யாராவது நினச்சிங்கனா இத்தோட நீங்க படிக்கறத நிறுத்திடுங்க இதுக்கு மேல அடல்ட்ஸ் ஒண்லியா இருக்க வாய்ப்பு அதிகம்......

நம்ப மனிச உடம்பு படைக்கப்பட்டு அது வாழுதுனா அதோட சில தேவைகள பூர்த்தி செஞ்சிக்க தான், புலன்களோட குணங்கள் வெவ்வேறு உணர்ச்சிகள நமக்குள்ள கொண்டு வரது தான். இன்னாட என்னனமோ சொல்றனு நினைக்காதிங்க மேட்டருக்கு வரேன்......காமம் தலைக்கேறிடிச்சினா என்ன செய்ய தோணும், ஏதாவது பிட்ட பாக்க தோணும் (உங்களுக்குலா எப்படினு தெரியல எனக்கு அப்பப்ப தோணும்) இந்த ஊர்ல எல்லா பிட்டு சைட்டையும் block பண்ணிட்டானுங்க அதுனால என்ன பண்றது அப்படியே youtube போறது அங்க போய் hot rain songனு போட்டு செர்ச் பண்றது. அங்க வகைவகையா நம்ப குலசெம்மல்கள் ச்ச நடிகைகள் எப்படி எப்படியே டிரெஸ் பண்ணிக்கிட்டு அதுலயும் குறிப்பா புடவையா இருந்தா நல்லது நம்ப அழகு முண்ணனிநடிகரகள கட்டிபிடிச்சி டேண்ஸ் போடறது.....எல்லாம் பாக்கணும்னு தானே இப்படி தாரளமா நடிக்கிறாங்க அப்புறம் நாம பாக்களணா அவங்க வருத்த படமாட்டாங்க....இப்படிலா பாத்து நாம கொஞ்சம் கிளுகிளுப்பாயிடறது......

அப்புறம் திடீர்னு நமக்கு ஞிநோதயம் வரது ச்ச இதெல்லாம் தப்புனு அப்படியே ஒரு ஒரு வலைப்பூவா போய் படிக்கறது.......அப்படியும் டைம்வ பாஸாகலயா ஏதாவது ஒரு பொருள வாங்க போற மாதிரி அத பத்தி மணிக்கணக்கா படிக்கறது....அப்படி நான் பாத்த சில நல்ல இணையங்கள் http://www.photonhead.com/http://www.dpreview.com/ ஒரு கேமிரா வாங்களாமேனு தேடுனப்ப படிச்ச நல்ல வெப்சைட்டுங்க (இங்கயும் சைட்டு தானா...) போட்டோகிராஃபி பத்தி தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம் உள்ளவங்க படிச்சி பாருங்க உபயோகமா இருக்கும்.

இதுக்கு மேல என்ன எழுதறதுனு தெரியல.....

சரி கவித(ஹாஹாஹா) எழுதுறேன்.

இப்போதெல்லாம் லட்சியங்கள் லட்சங்களிலே முடங்கி விடுகிறது.....
     காதல்கள் கேமில் தொடங்கி ரூமில் முடிங்கின்றது (நான் இன்னும் ஒரு காதல் கூட பண்ண அது வேற விசயம்).....
   ஒரு தேநீர் கோப்பையை இரு கைகளில் ஏந்தி உதடு நனைய பருகியபொழுது உன் முகம் பிடித்து உன் உதட்டை  சுவைத்தது என் உதடுகளில் இப்பொழுது இனிக்கிறது.......
    மரக்கிளையிடையே விழுந்த உன் கீற்றொளி ஓர புன்னகை இந்த அரபி பெண்ணின் விழியின் மையின் கருமையை ஊருடுவிகிறது......
     உன் வீடு கடக்கும் பொழுதெல்லாம் (அது ரோட்ல இருந்து ஒரு 300 மீட்டர் தள்ளி இருக்கும்) என் கண்கள் எதை தேடிற்று நீ இருக்க மாட்டாய் என்றரிந்தும் உன் வாசல் கண்டு மகிழ்ந்தது (கிறுக்கு பய மவன்....)
    இன்னும் கொஞ்சம் நேரா, கொஞ்சம் முன்னாடி வாப்பா, நிமிர்ந்து நில்லுப்பா, அட கேமரவ பாருப்பா என்று போட்டோகிராஃபர் ஓராயிரம் முறை கூறிக்கொண்டிருந்தார், பாவம் அவருக்கு என்ன தெரியும் எங்கும் நிறைந்திருக்கும் உன்னை நான் ரசிக்கிறேன் என்று.......

இதுக்கு மேல எழுதினா நாடு தாங்காது வெட்டியா இருந்தா இதுலாதாங்க பண்ண தோணும்//