ஞாயிறு, 28 நவம்பர், 2010

எந்திரன் - the iron giant

மு.கு:  இது 160 கோடி செலவு செய்து, அருமை நட்சத்திரம் கக்ஷ்டப்பட்டு நடிச்சி, உலக அழகி கவர்ச்சி காட்டி, ஒரு போங்கு இயக்கத்தில் வெளிவந்து, அதையும் பல நூறு ரூபாய் கொடுத்து பாத்த பல ரசிக பெருமக்கள் (ஹாஹாஹாஹா-யோவ் என்னத்தையா நீங்களா ரசிக்கிறிங்களோ தெரியல, எவனாவது ஒண்ணு நல்லா இருந்தா உடனே ஆமாம் சாமி போடாமா(ரஜினி, விஜயோட இல்ல பொதுவா பல நடிகர்களோட விசிறினு சொல்லிக்கிர அரைவேக்காட்டுத்தனத்த சொல்றேன்) வெளில வாங்க) ஓட வச்ச எந்திரன்ங்கற மொண்ண படத்த பத்தின பதிவு இல்ல.நியாயமா பேசினா எல்லாரும் படம் பாக்குறோம், சரி எத எதிர்ப்பார்த்து படத்துக்கு போறோம், அது ஆளாளுக்கு மாறுபடற விசயம் ஆனா ஒரு நோக்கம் நேரத்த செலவு (இப்ப பணம் அது வேற விசயம்) செய்யணும், நேரத்த பயனுள்ளதா செலவு செய்யணும்லா எதுவும் மொண்ணையா சொல்ல மாட்டேன். பாக்குற படம் நல்ல(குறிச்சிகோங்க கெட்ட எண்ணங்கள தூண்ட கூடாது) பொழுதுபோக்கா இருக்கணும் அதே சமயம் நம் நல்வுணர்வ தூண்டனும் இல்ல குறைஞ்சப்பட்சம் நம்ப அறிவுக்கு வேல கொடுக்கணும் (மூளைய யோசிக்கணும் வேற ஒண்ணும் இல்ல அப்ப தான் நாம மனுசன் இல்லனா வேற) இது எதுமே இல்லாம இன்னமும் படத்துல 100 பேர ஆட உட்டு பாட்டு வைக்கிறது அதையும் என்னா பிச்சு ஆங் மச்சுபிச்சாம்ல அங்கிட்டு உலக அழகி டேண்ஸ் போடணும்னு எவன் அழுதான்............எப்பா நீங்க எடுக்கறது சைண்ஸ் பிக்சன் படம்டா நியாபகம் வச்சிக்கோங்க.....ஒண்ணும் இல்லங்க படம்ங்கறது இப்படி மசாலாதனமாவே இருந்தா நமக்கு சீக்கரம் புளிச்சிடும்னு தெரிஞ்சி ஏன் ஆதரக்கிறோம்னு புரியல.........எல்லா படமும் அப்படி இருந்தா தான் ஓடும்னு ஏன் நினைக்கிறோம் எல்லாத்துக்கும் ஒரு முதல் இருக்குங்க முதல் அடி அந்த முதல் அடி கோணலா போய்க்கிட்டே இருக்கு.....

the iron giant 1999 வெளியான ஒரு ஆங்கில மொழி அனிமேசன் திரைப்படம். ஆர்பரிக்கிற கடல் மழையும் புயலும் வலுவா இருக்கு, அமெரிக்க கடலோரமா மைன்ங்கற ஊருக்கு பக்கத்துல அந்த படகு கரையை அடைய ரொம்ப சிரமப்படுது. படகோட்டி ரொம்ப கவனமா படக செலுத்திக்கிட்டு இருக்கார், திடீர்னு வானத்துல இருந்து ஒரு ஒளி கீற்று கடல்ல பாயுரத பாத்து ஆச்சிரியப்படுறார். சட்டுனு படகோட்டிக்கு கலங்கரை விளக்கோட வெளிச்சம் தெரியுது அத நோக்கி செலுத்தலாம்னு ஓட்டுனா அது ஒரு பெரிய பொருள் மீது மோதி உடைஞ்சிடுது. என்னானு அண்ணாந்து பாக்குறப்ப இரண்டு ஒளி பொருந்திய கண்களோடு ஒரு இயந்திர மனிதன் தெரிறான்.

காலைல அத அவரோட கூட்டாளிகள்க்கிட்ட அந்த படகோட்டி சொல்ல எல்லாரும் என்னா நைட்டு சரக்கு ஓவாரானு கேலி பண்ணி சிரிக்கிறாங்க.
ஹோகார்த்து மைன்ல அவங்க அம்மா கூட வாழுற ஒரு 9 வயது சிறுவன். எல்லா சிறுவர்கள போல அமானுக்ஷ்ய கதைகளையும் விசயங்களையும் விரும்பறவன். அன்னைக்கு ராத்திரி அம்மா வர தாமதம் ஆகும்கரதால டிவில ஒரு திகில் படத்த பாத்துக்கிட்டு இருக்கப்ப திடீர்னு சிக்னல் கட்டாயிடுது சரி ஆண்டனாவ சரி பண்ணலாம்னு போனா அங்க ஆண்டனாவ காணோம். உடனே தன்னோட பொம்ம துப்பாக்கிய தூக்கிக்கிட்டு காட்டுக்குள்ள தீர செயல் பண்ற மாதிரி போறான். அங்க திடீர்னு ஒரு சத்தம் பின்னாடி திரும்பி பாத்தா 50 அடி உயருத்துல ஒரு இரும்பு இயந்திர மனிதன் (இது 1 டெரா பைட் மெமரி, 10 ஜிபி ரேம்னுலா கேணத்த்னமா கம்ப்யூட்டர் கான்பிகிரேசன தன் மெக்காணிசமா சொல்ர டுபாக்கூர் எந்திரன் இல்ல) அங்க இருக்க டிராண்ஸ்பார்மர் ஸ்டேசனகிட்ட போய் அந்த இருக்க டிராண்ஸ்பார்மர்ல கைய வைக்க அதுக்கு சாக்கடிக்கிது. ஹோகர்த் ஓடி போய் மெயின ஆஃப் பண்ணி அந்த இரும்பு மனிதன காப்பாத்திட்டு வீட்ட நோக்கி ஓடுறான், அந்த களேபரத்துல அவன் பொம்ப துப்பாக்கிய அங்கயே விட்டுடுறான். அவன் அம்மாகிட்ட அவன் பாத்தத சொல்றான் ஆனா அவன் அம்மா வழக்கம் போல ஏதோ காமிக்ஸ படிச்சிட்டு உளறரானு விட்டுடுறாங்க......

அடுத்த நாளும் திரும்ப அங்க போறான். அங்க அந்த இரும்ப மனிதன போட்டோ எடுத்து தன் நண்பர்கள்க்கிட்ட காட்டணும்னு உட்காந்து இருக்கான். திடீர்னு அந்த இரும்பு மனிதன் வெளிபடுறதால பயந்து ஓடுறான் ஆனா அது இவன தடுக்குது ஆனா காயப்படுத்துல. இவன் அதுக்கிட்ட பேச முயலுறான் ஆனா அதுக்கு புரியல செய்கை மூலமா விசயங்கள விளக்குறான். சில ஆங்கில வார்த்தைகளையும் அதற்க்கான அர்த்தத்தையும் விளக்குறான் அதுக்கு கொஞ்சமா புரிய ஆரம்பிக்குது. அதே சமயம் டிராண்ஸ்பார்மர் மர்மமான முறைல தாக்கப்பட்டத்த விசாரிக்க ஒரு அதிகாரி ராணுவத்தால அனுப்பி வைக்க படுறான். அவன் அந்த இயந்திர மனிதன் காட்டுக்குள்ள இருக்கரைதையும், ஹோகர்த்துக்கு அதுக்கூட பழக்கம் இருக்கரதையும் மோப்பம் பிடிக்கிறான்.

அந்த இயந்திர மனிதன் இரும்ப மட்டுமே உண்ணும்ங்கரதால டீன்ங்கற பழைய இரும்பு வியாபாரியோட யார்டுக்கு அத கூட்டிட்டு போய் சாப்பிட சொல்றான் ஹோகாத்து, சத்தம் கேட்டு வெளில வர டீன் அவ்வளவு பெரிய இரும்பு மனிதன பாத்து அதிர்ச்சி அடையறான். ஹோகார்த்து டீன பொறுமையா சமாதனப்படுத்தி அந்த இயந்திர மனிதன் தன்னோட நண்பனும் அது தீங்கு செய்யாத நல்ல இயந்திரனும் சொல்றான், ஒரு மாதிரி சமாதனம் அடையற டீன் அந்த இயந்திர மனிதன் அங்க தங்க சம்மதிக்கிறான்.  ஒரு சமயம் விளையாடுறப்ப இயந்திர மனிதன நோக்கி தன்னோட பொம்ப துப்பாக்கி காட்டி ஹோகார்த்து விளையாட அந்த இயந்திர மனிதன் அது உண்மையான துப்பாக்கினு நினச்சி தற்காப்புக்கு திரும்ப தாக்குது. ஆனா அது தற்காப்புக்கு மட்டும் தான் ஆயுதத்த உபயோக்கிக்கும்னு ஹோகர்த்தும், டீனும் தெரிஞ்சிகிறாங்க.....

அதே சமயம் அந்த அமெரிக்க உளவு அதிகாரி அப்ப நடந்துக்கிட்ட இருந்த பனிப்போர காரணம் காட்டி ரஸ்யா தான் இப்படியான ஒரு இயந்திர மனித அனுப்பி நாச வேலைள ஈடுபட போகுதுனு சொல்லி மைனுக்கு ராணுவத்த வர சொல்றான். ராணுவம் வந்து இயந்திர மனிதன என்ன பண்ணிச்சி, ஹோகர்த்து, அவன் அம்மா, டீன் என்ன ஆனாங்கறது மீதி கத.

இது முழுக்க கற்பனை தான் கொஞ்சம் கூட லாஜிக் இல்ல ஒத்துக்கிறேன். ஆனா கதைய சொன்னவிதம், அதுக்கு உபயோகிச்ச காட்சி அமைப்புகள், குணாதசியங்கள், வசனங்கள், வார்த்தைகள் ”you are who you choose to be" நீ என்னவாக வேண்டும் என்று நீ தீர்மானிக்கிறாய்.......ஒரு எளிமையான ஆனா மனச தொடுற வசனம். இதுல ஒண்ணு கூட இல்லாம எதுக்கு தான் படம் எடுக்குறாங்களோ.

எந்திரன விட 100% தரமான திரைப்படம் காண பரிந்துரை செய்கிறேன்.

6 கருத்துகள்:

philosophy prabhakaran சொன்னது…

அறிமுகத்திற்கு நன்றி... ஆனாலும் கவன ஈர்ப்புக்காக இந்திரன் என்ற பெயரை அதிகமாக பயன்படுத்திவிட்டீர்கள்...

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@philosophy: கருத்துக்கு நன்றி பிரபாகர், எந்திரன் பெயர நிச்சயம் அதிகம் பயன்ப்படுத்திட்டேன் ஆனா அது கவன ஈர்ப்புக்கு இல்ல, ஒரு ஒப்பீட்டுக்காக ஒரு அனிமேசன் படம் எந்திரன விட எந்த அளவுக்கு சிறப்பா இருக்குனு சொல்ரதுக்காக தான்.....

Viki's Kitchen சொன்னது…

Thanks for trying the biryani and salna recipe brother! Your comments make me try new recipes:)

Viki's Kitchen சொன்னது…

எந்திரன் படம் பற்றிய கருத்து அருமை. நானும் ரஜினி ரசிகை தான்,ஆனால் இப்போ வர வர, அவ்வளவா ரசிக்க முடியலை:) I think we are growing:) Iron giant படம் பற்றிய முழு கதைக்கு நன்றி. இந்த படம் முன்பு காமிக்ஸ்ஸாக வெளி வந்து சக்கைபோடு போட்டது. நானும் இதை முத்து காமிக்ஸ் புக்கில் தமிழில் படித்திருக்கிரேன். ஆங்கில படமும் நன்றாக இருக்கும். எந்திரன் படத்தில் குருப் டான்ஸ் வைத்ததை என்னாலும் மன்னிக்கவே முடியலை:)

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@viki:

vanga vanga.....amam sister enna than irunthalum innum ippadila group dance podratha yethuka mudiyala antha kadupula konjam over a poitten....ohhh ithu comics veraya nan padichathu illa....

பாரதசாரி சொன்னது…

வணக்கம் தல!! எந்திரன் மற்றும் தலைப்பு மிக பொருத்தம் :-) தலைவரோட மிக மோசமான படம் இதுதான்..:-(