சனி, 31 டிசம்பர், 2011

Chicago bulls: the rising.......
கல்லூரில தூங்காம எப்படி பாடத்த கவனிக்கறதுனு யாராவது பாடம் எடுத்தா நல்லா இருக்குனு வெளில இருக்க பூவரசம் மரத்த பாத்து யோசிச்சிட்டு இருந்த அந்த மதிய நேரம் ரம்மியமா இருந்தது. வகுப்பில இருந்த 54 பேரும் அந்த ஜீன் மாத ரம்மியத்த ரசிக்காம கூச்சல் போட்டுக்கிட்டு இருந்தாங்க, 54 பேரும் ஆண்களா இருந்த சவுகரியம் கெட்ட வார்த்தை பேசரதும், கேக்கரதும் சகஜமா இருந்தது, அந்த மாதிரி ஏதோ ஒரு காரணத்துக்காக அவன் கோபத்த வெளிப்படுத்த எதுகைமோனையோட நண்பன் ஒருத்தன் உறையாற்றிட்டு இருந்தான் அத ரசிச்சிக் கேட்டுட்டு இருந்தப்ப எங்க சந்தோசத்த பங்கம் பண்ண லெக்சுரர் வகுப்புல நுழஞ்சார்.

மதியம் சாப்பிட்ட சாம்பர் சாதம் வயத்த நிரச்சி தூக்கத்துக்கு ரூட் போட்டுட்டு இருந்த அந்த மணிதுளில லெக்சரர் தெர்மோடைனமிக்ஸ்ல மொத்தமாவே 4 பேர் தான் பாஸ் ஆகி இருக்கீங்க இப்படியே போன டிகிரி கஸ்டம் தான்னு சொல்ல ஹைவேல போய்ட்டு இருந்த தூக்கம் பைபாஸ்ல போய்டிச்சி. ஏதோ சொல்ல வரார்னு உள்ளுணர்வு சொல்லிச்சி.

வகுப்பே அமைதி ஆச்சி எல்லாருக்கு உள்ளுணர்வு சொல்லி இருக்கு போல, (லெக்சுரர்னு டைப் அடிக்க கஸ்டமா இருக்கு அதுனால இனிமே வாத்திங்கற வார்த்தைய லெக்சுரர்னு பொருள் கொள்க) வாத்தியோட இந்த கீச்சு குரலுக்கா இந்த மகத்துவம்னு (கீச்சு குரல்னு அவர கிண்டல் பண்ணல அவரோட குரல் இயல்ப சொல்ல வேற சரியான வார்த்தை சிக்கல) யோசிச்சி இல்ல நாம என்ன பண்ணனும்னு நாம யோசிச்சிட்டு இருந்ததுக்கு தீப்பொறி வச்சிருக்கார்னு தோணிச்சி.

இனி வாத்தி என்ன சொன்னார்னு அவரோட மொழியில “இப்படி இருந்தா வாட் ஆர் யு கோயிங் டு டூ கைஸ் (என்ன பண்றது அரியர் தான் எழுதணும்னு ஒருத்தன் முனுகணுது கேட்டாலும் அத சட்டப்பண்ணாம எல்லாம் வாத்தி சொற்பொழிவுல கவனமா இருந்தாங்க), 2ண்ட் செமஸ்டர்லயே இத்தண அரியர் வச்சா ஃபைனல் செம்ல இத எப்படி கிளயர் பண்ணுவிங்க (திரும்ப ஒருத்தன் பிட்டு தான் வேற என்ன பண்ணரதுனு சொன்னத சட்டப்பண்ணாம எல்லாம் வாத்தி சொற்பொழிவுல கவனமா இருந்தாங்க) நீங்களா யாரு மெக்கானிக்கல் இஞ்சினீயர் ஆக போறவங்க, இந்த மாதிரி படிச்சிட்டு இருந்தா ஒண்ணும் ஆக முடியாது, தனி தனியா படிச்சிங்கினா (அப்படியே படிச்சிட்டாலும்னு திரும்ப எவனோ சொன்னது வேற ஒரு சந்தர்ப்பமா இருந்திருந்தா சத்தமா சிரிக்கிறதுக்கு உதவியிருக்கும் ஆனா அந்த சமயத்துல வாத்தியோட வார்த்தைகள் அத முடக்கிடச்சி) உங்களுக்கு சந்தேகம் வந்தா அத தீர்த்துகிறது கஸ்டமா இருக்கும் அதுக்கு எல்லாரும் குரூப் குரூப்பா படிக்கணும் அப்ப தான் ஒருத்தர் டவுப்ட இன்னொருத்தர் தீர்த்துக்க முடியும் (அப்ப லெக்சுரர்னு நீங்க எதுக்கு இருக்கீங்கனு திரும்ப எவனோ முணகிக்கிட்டு இருந்தான்).

நமக்கு தேவ டீம்ஸ் ஒருத்தர்க்கு ஒருத்தர் தோள்க் கொடுத்து நிக்கிற டீம், இப்ப நான் அஞ்சு அஞ்சு பேரா டீம் பிரிக்க போறேன் (என்ன என்னவோ பண்றாருப்பானு திரும்ப எவனோ முணுகிக்கிட்டு இருந்தான்) ஒரு ஒரு டீம் பிரிச்சதுக்கப்புறம் அந்த அஞ்சு பேரும் சேர்ந்து அவங்க டீம்க்கு ஒரு பேர் செலக்ட் பண்ணனும் அப்புறம் இந்த டீமுக்கு நடுவுல நிறைய சப்ஜெக்ட் ரிலேட்டட் குவிஸ் புரோகிராம், காம்படீசன் நடத்தணும் அப்ப உங்களுக்குள்ளயே படிக்கணும்னுங்கற எண்ணம் அதிகம் ஆகும் (இப்ப எவனும் கமெண்ட் பண்ணாம இருந்தான்ங்க) நல்லா படிப்பிங்க மெக்கனிகல் டிப்ட்னா எப்படினு அப்ப மத்த டிப்ட்டுக்கு தெரியும்னு அவரு சொல்லசொல்ல எல்லார் முகத்தலயும் ஒரு பரவசம் உண்டாக்கிட்டு இருந்தத கவனிக்க முடிஞ்சது.

சரி இப்ப டீம் பிரிப்போம்னு அஞ்சு அஞ்சு பேரா பிரிச்சிட்டு இருந்தார் அப்ப என்னைய, கீர்த்திய, சதீச, விசுவ, அறிவ ஒரு டீமா அறிவிச்சார், இப்ப எல்லாரும் தனி தனி குழுவா உட்காந்து என்ன பேர் வைக்கிளாம்னு யோசிச்சாங்க. நாங்களும் யோசிச்சோம் எங்களுக்கு இன்ஸ்பிரேசன் தேவப்பட்டுது, ஆளுக்கு ஒரு பேர் சொல்லிட்டு இருந்தப்ப எங்க டிப்பார்ட்மண்ட்டோட குல விளையாட்டான பேஸ்கட்பால் டீம்ல ஏதாவது ஒண்ண தேர்ந்தெடுக்கரதா முடிவாச்சு, எப்பவும் ஜெய்ச்சே பழக்கப்பட்ட ஒரு டீம் பேர் வேணும்னு யோசிச்சப்ப உண்டான பேர் தான்  *CHICAGO BULLS*.

அந்த பேர்ர வச்ச உடனே எங்களுக்குள்ள ஏதோ மாற்றம் உண்டான மாதிரி ஒரு உணர்வு, எல்லாரும் அவங்க அவங்க டீம் பேர சொன்னாங்க, நாங்க எங்க டீம் பேர சொன்னப்ப, ஹெஹெஹேனு சிரிச்சி என்ன மச்சி எருமனு பேர் வச்சி இருக்கீங்கனு நக்கலா சொன்னப்ப இவங்களுக்கு நாங்க யாருனு காட்டணும்னு முடிவு பண்ணனோம்.

முதல்ல நடந்த 2 சப்ஜெக்ட் ரிலேட்டட் குவிஸ்லயும் பெருசா எங்களால மார்க் ஸ்கோர் பண்ணல ஆனா நாங்க எந்த ஒரு சந்தர்ப்பத்தலையும் நாங்க நம்பிகைய மட்டும் இழக்கவே இல்ல, இழக்கரதுக்கு ஒண்ணும் இல்லாதப்பையும் நம்பிக்கை மட்டும் எப்பவும் கூடவே இருந்தது.

அதுக்கப்புறம் எங்க ஸ்டெர்ந்த் ஆஃப் மெட்டீரியல், தெர்மல் லேப் எல்லாத்துலயும் நடந்த பேனா ஃபைட், படம் பேர நடிச்சி கண்டுப்பிடிக்கறதுனு எந்த ஒரு போட்டியா இருந்தாலும் ஜெய்கிறத மட்டுமே பழக்கமா வச்சிக்கிட்டோம். பெருமைக்கு பட்ட பேர் வச்சிக்கிற இந்த உலகத்துல டீமுக்கு மதிப்பு கொடுத்து புல்ஸ்ங்கற வார்த்தைய பேருக்கு முன்னாடி சேர்த்து விஸ்வரூபம் எடுத்தோம், இன்னமும் நீங்க ஆர்குட்லயோ ஃபேஸ்புகலயோ புல்ஸ்னு தேடுனா எங்க பேர்கள் சர்ச் ரிசல்ட்ல வரத தவிர்க முடியாது. BULLS have raised........

பி.கு: டைம் பாஸாகத்ததுக்கு எழுதன இந்த சரித்திர சம்பவத்த நீங்களும் டைம் பாஸுக்கு தான் படிக்க வந்திருக்கீங்கனு தெரியுது, பேட் வேர்ட்ஸ் எதுவும் உங்களுக்கு சொல்லணும் போல இருக்கும் ஆனா அதுக்குனு கமெண்ட் போஸ்ட்ட டேமேஜ் பண்ணிடாதீங்க......