செவ்வாய், 22 டிசம்பர், 2009

தண்ணீர்.....உலகம் முக்கால் வாசி(71%) தண்ணீரால் உருவானது எனினும் அதில் 0.6% சதவீதமே நிலத்தில் உள்ள தண்ணீர். அதில 60% நல்ல நீர் விவசாயத்துக்கு பயன் பட படுகிறது மீதம் 30% நமது இதர தேவைகளுக்கு. நான் சொல்வது உலக அளவில். அதில் 4% தான் இந்தியாவில் உள்ள தூய நீர் ஆகும். அந்த 4%த்திலும் தமிழ் நாட்டில் வேறும் 3% சதவீதமே உள்ளது. ஆக தெளிவாக நாம் உபயோகபடுத்த கூடிய நிலையில் உள்ள நீரை மிக குறைவாக, மிக மிக குறைவாக கொண்டுள்ளோம் என்பதை உணரலாம் (உணர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள படும் போது உணருவோம் நிச்சயமாக)

நாம் சற்று நெருங்கி தமிழ்நாட்டின் நீர் ஆதாரத்தை, நிலையை காண்போம்.

http://www.environment.tn.nic.in/soe/images/Waterresources.pdf

மேல் கொடுக்க பட்டுள்ள இணைப்பே தமிழ் நாட்டின் நீர் ஆதாரங்களை பற்றியும், நிலையையும் விளக்குகிறது.

நீர் ஆதாரங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் நிலத்தின் மேல் உள்ள நீர், நிலத்தின் கீழ் உள்ள நீர்.

மும்மாறி(அப்படியெனில்) பெய்த மழையும் இன்று பொய்த்து விட்டது. வருடத்திற்க்கு சராசரியாக இந்தியாவில் 1250 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. ஆனால், தமிழ் நாட்டின் சராசரி மழைபொழிவு 470 மில்லி மீட்டரே(கவனத்தில் கொள்க நாட்டின் சராசரியில் பாதி கூட இல்லை)

நிலத்தின் மேல் உள்ள நீர் ஆதாரங்களாக 17 ஆற்று படுகைகளும், 61 நீர்த்தேக்கங்களும், 41,948(தோராயமாக) ஏரிகளும்(எதுவும் நாம் உருவாக்கியது அல்ல நம் முன்னோர்கள் நமக்கு அளித்த வரம்) நம் தமிழ் நாட்டில் உண்டு (என நம்பி கொண்டிருக்கிறோம், அல்லது நம்ப வைக்க படுகிறோம், எத்தணையோ நீர் ஆதாரங்கள் பிளாட்களாகவும், பங்களாக்களாவும் மாறி விட்டது). அது தேக்க கூடிய நீரின் அளவு 27,270 மில்லியன் கியூபிக் மீட்டர்கள்(27 270 000 000 000 லிட்டர் என கணக்கில் கொள்ளலாம்) அதில் 90% சதவீதம் விவசாயத்துக்கு பயன் படுகிறது(விவசாயம் இன்னும் எத்துணை காலம் நம் நாட்டில் இருக்கும் என தெரியாது ஆகையால் நாம் கவலை கொள்ள வேண்டாம்), ஆக நாம் உபயோகிக்க மிக சொற்ப நீரே உள்ளது.

நிலத்தடி நீரின்(நீர் தேங்க கூடிய அளவு) அளவு 22,423 மில்லியன் கியூபிக் மீட்டர்கள். ஆனால், அளவுக்கு அதிகமான நீர் உரிஞ்சிததால் நம்மிடம் தற்போது மொத்த நீரின் அளவில் 40% சதவீதமே உள்ளது. பல மாவட்டங்களில் கவனிக்கதக்க அளவில் கிணறுகள் இறந்து விட்டன (எவ்வளவு தோண்டினாலும் நீர் இல்லை).

ஆனால் வரும் காலங்களில் தண்ணீரின் தேவை நிச்சயம் அதிகரிக்கும் என நீர்துறை வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.

நமக்கு தேவை அதிகமாக உள்ளது விவசாயித்திற்க்கே (நம் நாடு விவசாய நாடு என்பதை மறந்து காலங்கள் ஓடி விட்டது), விவாசய நிலங்கள் 50% கிணறுகளாலும், 30% ஆற்றாலும்(ஆற்றில் இருந்து வரும் வாய்க்கால்கள்), 20% குளங்களாலும் பாசனம் செய்ய படுகிறது.

ஆனால் பல பாசன வசதிகள் நமது அதிக தேவையால் அதனுடைய கடைசி கட்டத்தை எட்டி விட்டது(உதாரணம் 16,000 கிணறுகள் இறந்து விட்டன).

பல விதமான சீரிய நீர் (சொட்டு நீர்) பாசன முறை வந்துவிட்டாலும் இன்னும் நாம் அதன் மூலம் அல்லது அதை பற்றிய சரியான புரிதல் இல்லாததால் உபயோக்கிக்காமல் உள்ளோம்.

அரசாங்கமும், தொண்டு நிறுவனமும், நம் சந்ததியை பற்றி கவலை கொள்ளும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களும் நீர் ஆதாரத்தை காக்க போராடுகின்றனர். ம்ஹ்ம் நமக்கு டிவியும், நமது விருப்பங்களும் தான் முக்கியம் ஆதலால் இதை பற்றி எப்பொழுதும் கவலை கொள்ள வேண்டாம், நாம் அசுத்தம் கலந்த நீரை குடிக்கும் நிலை வரும் வரை அந்நிலை வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது திண்ணம்.

நம்ம ஊர்ல மழ பெய்றதே கஸ்டம் இதுல பெய்ற மழைய தேக்கி வைக்கிறது ரொம்ப கஸ்டம். இவ்வளவு கஸ்டப்பட்டு தண்ணிய சேமிச்சி வச்சா ம்ம்ம் நாம அத கண்ட கழிவுகளால (மனித கழிவு, ரசாயன கழிவு, ஆலை கழிவு எல்லாம் உள்ளடக்கம்)வீணாக்கிடுறோம்.

காடுகளை அழித்தல், அதிக படியான நீரை இரைப்பதால் உப்பு நீர் நிலத்தடி நீரில் கலத்தல் அதனால் நிலம் பாதிக்க படுதல், இப்பொழுது விவசாயித்தில் பயன் படுத்த படும் உர கழிவுகளும், நிலத்தை கையகபடுத்ததாலும் என எந்வ்வளவு முடியுமோ அந்த அளவு நிரையும், நீ ஆதாரத்தையும் அழித்து கொண்டிரிக்கிறோம்.

மரம் இல்லாததால் மழை நீர் ஓரிடத்தில் சேமிக்கபடாமல் மண்ணை அரித்து கொண்டு வீணே ஓடுகிறது. அது மட்டும் இல்லாமல் சரியாக தூர்வார படாததால் பல நீர்தேக்கங்கள், ஏரிகளும் தங்கள் நீர்தேக்க திறன் அல்லது இயல்பை இழந்து விடும் அபாயம் உள்ளது.

சென்னையில் நல்ல நீர் என ஒரு விசயமே இல்லாமல் போய் நிறைய காலம் ஆகி விட்டது.

ஆக எல்லா நீர் ஆதரங்களையும் அழித்து கொண்டு இருக்கிறோம், இது அனைத்தும் நமக்கு பெரிய விசமாக இப்பொழுது தோன்றாவிடிலும் தமிழ் நாடே இந்நிலை தொடர்ந்தால் நிச்சயம் பாலைவனம் ஆகும் என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.

மழை நீரை சேமிக்க அரசாங்கம் திட்டம் வகுத்தாலும் அதை செயல்படுத்த மக்களாகிய நாம் தான் அத்திட்டத்தை செயல்படுத்த முடியும். அது மட்டும்மின்றி நீரின் முக்கியதுவத்தையும் அதை சேமிக்கும் மற்றும் உபயோகிக்கும் முறையையும் நாம் சரி வர உணர்ந்து செயல்பட கடமை பட்டுள்ளோம் நிச்சயமாக இது நமக்காக நாமே வைத்து கொள்ள வேண்டிய ஒரு விசயமாகும்.

டாஸ்மாக் தண்ணியை பத்தி கவலை படும் நாம், உயிர் ஆதாரமான நீரை பற்றி நிச்சயம் கவலை கொள்வது நியாயம் என எண்ணுகிறேன்.


h2o வேண்டுனெமில் நாமும் கொஞ்சம் அக்கறை கொள்வது நியாயம் நண்பர்களே......

வியாழன், 17 டிசம்பர், 2009

11th hour - உலகம் அழிவதற்கான சாத்திய கூறுகளும் நம்முடைய அலட்சியமும்


படம் என்பது பொழுது போக்க என்பது உங்கள் கருத்து எனில் இப்படம் உங்களுக்கு நிச்சயம் ஒரு மாற்று கருத்து

எனக்கு படங்களை விமர்சனம் செய்து எழுதிய அனுபவம் இல்லை ஏன் நிறைய எழுதிய அனுபவமே இல்லை எனலாம், ஆனால் இப்படம் பற்றிய சிலருக்கு என்னால் தெரிவிக்க முடியுமானால் எனக்கு திருப்தியே.

2007ஆம் ஆண்டு வெளியான இப்படம் ஒரு மிக சிறந்த டாகுமெண்ட்ரி படம், இது படம் அல்ல நமக்கான அறிவுறத்தல்

இப்ப(பா)டத்தில் பல்வேறு இயற்கை ஆவலர்களும், இயற்கை விஞ்ஞானிகளும், விஞ்ஞானிகளும், அரசியல் தலைவர்களும், பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் நம் உலகம் அழிந்து கொண்டிருக்கும் வேகத்தையும், அதற்கான காரணத்தையும், அக்காரணம் உருவாக காரணமான நம் மனதின் அலட்சிய போக்கையும், இயற்கையை பற்றிய அறியாமையும் மிக சரியாக நமக்கு உரைக்கும் படி கூறுகிறார்கள்.

ஹாலிவுட் நடிகர் லியார்டினோ டி கேப்ரியோ இப்படத்தை விவரித்து உள்ளார்.

இப்படம் முழுக்க உண்மையால் நிறப்ப பட்டது, அப்பட்டமான உண்மைகள், வனங்களின் அழிவும், கடல், நிலம் மாசுபடுவதும், பல்வேறு வகையான உயிரினங்களின் மறைவும், அதற்கு காரணமான நம்முடைய நடவடிக்கையும் என நம்மை அறைந்து கொண்டே போகிறது..

இப்படத்தின் ஆரம்பத்தில் காண்பிக்க படும் காட்சிகளின்(பல்வேறு அழிவுகள், நிகழ்வுகள்) வேகம் நம் உலகம் அழியும் வேகத்தை ஒப்பிடுவதாக எனக்கு தோன்றுகிறது.

மரங்கள் அறுக்க படுவது நமக்கான சாவுமணி (மரங்கள் நமக்கு இலவசமாக ஒரு வருடத்திற்க்கு அளிக்கும் ஆக்ஸிஜனை நாம் செயற்கையாக தயாரித்தால் உண்டாகும் செலவு 35 ட்ரில்யன் டாலர்கள் ஆனால் உலகில் உள்ள மொத்த நாடுகளின் ஒரு வருட பட்ஜெட்டை சேர்த்தாலும் வரும் தொகை 18 ட்ரில்யன் டாலர்களே, இயற்கை நமக்கு எவ்வளவு உதவுகிறது என்பதற்க்கு இது ஒரு சிறிய உதாரணம் - டேவிட் சுசிகி, இயற்க்கை ஆவலர்).

நம் இயற்க்கையில் இருந்து எவ்வளவு வேறு பட்டு இருக்கிறோம் என்பதற்க்கு ஒரு மிக சிறந்த உதாரணம் (நாம் காலையில் எழுவதில் இருந்து உறங்கும் வரை இயற்கையோடு எத்தனை சதவீதம் தொடர்பு படுத்தி கொள்கிறோம் எனில் அது 0 சதவீதமே, செயற்கை ஒளி, ஒலி, பொருள் என எல்லாமே செயற்கை தான், இப்படி இருக்கையில் இயற்க்கையின் ஸ்பரிசத்தை மறந்தே விட்டோம்)

நமக்கு சிந்திக்க தெரியும் எனும் ஒரே காரணதுக்காக் உலகில் உள்ள அனைத்து வகை விலங்கினங்களையும் அழிப்பது எந்த அளவிற்க்கு நமக்கு உரிமை உள்ளது???? உலகம் எல்லா உயிரனங்களுக்கும் பொதுவானது என்பதை என்று தான் உணருவோமே தெரியவில்லை. நம் உலகின் சூழ்நிலைமண்டலம் மரங்கள், மனிதர்கள், விலங்குகள் என எல்லா ஜீவராசிகளும் சரி சதவீதத்தால் உண்டானதே இதில் ஏது நிலை மாற்றம் உண்டானால் என்ன ஆகும் என்பது நம் 5ஆம் வகுப்பு உயிரியல் பாட புத்தகத்திலே உண்டு.

நாம் உபயோகிக்கும் ஒவ்வொறு பொருள் உருவாவ அதே அளிவிலான 32 பொருள் குப்பை கூடைக்கு செல்லும் அதனால் எவ்வள்வு பொருள் நாம் சேர்க்கிறமோ அதை போல 32 மடங்கு குப்பையை பூமிக்கு சுமத்துகிறோம்.

வடதுருவமும், தென் துருவமுமே உலகில் விழும் சூரிய கதிர்களை பெரும் அளவிற்க்கு திரும்ப அனுப்புகிறது, ஆனால் இன்னும் 20 வருடத்தில் இரு துருவங்களும் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது நாம் இதே நிலையை கடைபிடித்தால். உலகம் உச்சகட்ட வெப்பம் அடைந்து நாம் உருகி போகலாம், இதற்க்கு முக்கிய காரணம் எண்ணேய் அல்லது கரிமலவாயுவை அதிகம் வெளிப்படுத்தும் காரணிகளே(நிலக்கரி, பெட்ரோலிய எண்ணெய்). இதன் பயன் பாட்டை குறைத்து மாற்று எரிபொருள் அல்லது புதுப்பிக்கதக்க ஆற்றலே சிறந்த தீர்வு. காற்றிலும்,தண்ணீரிலும், சூரியகதிரிலும் எண்ணிலடங்கா ஆற்றல் உள்ளது நாம் இலவசமாக பெற. கணினியுலும், ராணுவதளவாடங்களிலும் நம்மால் ஆராய்ச்சி செய்து வெற்றி பெறும் பொழுது புதுப்பிக்கதக்க சக்தியிலும் நம்மால் வெற்றி பெற முடியும் நிச்சயமாக, ஆட்சியாளர்களின் மனுமும், இதற்க்கு மேலும் நமக்கு காலம் இல்லை என்கிற நிஜமும் இதை சாத்தியம் ஆக்கும், தேவை கொஞ்சம் அக்கறை, விழிப்புணர்வுமே.


விஞ்ஞானம் நமக்கு நிறைய உதவிகளை செய்து கொண்டிருக்கிறது, ஆனால் நாம் விஞ்ஞானைத்தையும் சரியாக புரியாமல், இயற்கையையும் சரியாக உணராமல் ஒரு தற்குறி வாழ்வே வாழுகிறோம் வேதனையுடன் என கூறுகிறார் ஓர் பேராசிரியர்.

நோபல் பரிசு பெற்ற இயற்கை ஆர்வலர் வாங்கரி மாத்தாய் மரங்களின் முக்கிய நலன்ங்களை விளக்குகிறார் அக்கறையுடன். ஒரு மரம் தன் வேரில் தேக்கி வைக்கும் தண்ணீரின் அளவில் ஒரு சிறிய வெள்ளமே உருவாக கூடும், ஆக நாம் எத்துனை எத்துனை மரங்களை வெட்டுகிறோமோ அத்துனை அத்துனை வெள்ளத்திற்க்கு வழி வகுக்கிறோம்.

இப்படத்தை ஒன்றி பார்த்தால் உங்கள் உள்ளத்தில் உண்டாகும் நடுக்கத்தை தவிர்க்க இயலாது நிச்சயமாக...

இப்படம் உலகம் அழிவதற்கான சாத்திய கூறுகளை மட்டுமே விளக்கவில்லை அதில் இருந்து மீள்வதற்கான (புதுப்பிக்கதக்க ஆற்றல், பசுமை கட்டடம், மாற்று எரிபொருள், மிக முக்கியமாக நமது மனபான்மை மாற்றம்) என எல்லா முயற்ச்சிகளையும் நமக்கு முன் வைக்கிறது ஆதங்கத்துடன்.

நமது சகோதர சகோதரிகள் பலர் இயற்கைக்காக போராடி கொண்டிருக்கின்ரனர் என்பதையும் இப்படம் தெளிவுற விளக்குகிறது.

இது 11ஆம் மணி நேரம் அல்ல 11ஆம் மணி 59ஆம் மணி துளியாகும் இப்பொழுது நாம் விழிக்கவில்லை எனில இனி எப்பொழுதும் விழிக்க இயலாது.........

அடுத்த முறை ஒரு பொருளை வாங்குவதற்க்கு, அல்லது அதை குப்பையில் போடுவதற்க்கும் முன்னும் யோசித்தே செய்வோம், இது மிக அவசியமான ஒண்று.

குப்பைய சிறந்த முறையில் கையால்ளுவதும் நம் உலகை அழிவில் இருந்து மீட்கும், நமது ஒரு ஒரு செயலும் நம் உலகை காக்க வேண்டும் என்ற உன்மத்துடன் செய்ய பழகுவோம்

மிக முக்கியமாக எனது தாழ்மையான வேண்டுகோள் இப்ப(பா)டத்தைhttp://video.google.com/videoplay?docid=-2174195060267517042# ஒரு முறை காண முயற்சியுங்கள்...

நன்றி நண்பர்களே உங்கள் பொறுமைக்கும், உலகை காக்க போகும் கரங்களுக்கும்

சனி, 5 டிசம்பர், 2009

முடி
முடி உதிரும் பிரச்சனையா


எங்கள் சாம்புவை பயன்படுத்துங்கள்
உங்கள் பிரச்சனை அறவே நின்று விடும், பின்ன அந்த சாம்ப போட்டதுக்குப்புறம் இப்படி ஆனா அப்புறம் எப்படி முடி உதிரும்???
அதனால முடிஞ்ச வரைக்கும் சீககாய் போடுங்கப்பா காசாவது மிஞ்சும் ஏதோ எனக்கு தெரிஞ்சித சொல்ரேன் நண்பர்களே......

வெள்ளி, 20 நவம்பர், 2009

சூப்பர், பெண்டாஸ்டிக், ஜேன்சே இல்ல.................


தலைப்புல இருக்கற இந்த மூணு வார்த்தைய நீங்க எங்க கேட்ருபீங்க?????? அதே தான் குரங்காட குருவியாட பத்தி தான் சொல்ரேன், அட அட என்ன ஒரு சிந்தனை, என்ன ஒரு கருத்து, நாட்டுக்கு ரொம்ப தேவையான விசயம்.

ரெண்டு பேர் ஆடுவாங்களாம் அத பாத்து மூணு நீதிபதிகள் (சட்டம் படிக்காமலே நீதிபதி ஆய்டுலாங்க நீங்களும் அப்ளை பண்ணுங்க)தீர்ப்பு சொல்லுவாங்க. என்ன ஒரு தீர்ப்பு, அவங்க ஆடுற நடனம், அதுக்கு இவங்க லூச பயலே உங்க ஸ்டார்ட்டிங் சூப்பர், ஆனா நடுவுல தான் கொஞ்சம் சருக்கிடுச்சி, அத சரி பண்ணுங்க மத்தபடி ஜேன்சே இல்ல (என்ன ஜேன்சே இல்லனு இன்ன வரைக்கும் எனக்கு தெரியல யாராவது தெரிஞிசா சொல்லுங்க) அப்புறம் லூசு பொண்ணு உங்க ஆட்டம் பெண்டாஸ்டிக் என்ன ஒரு எனர்ஜி கடசி வரைக்கும் அந்த எனர்ஜி குறையவே இல்ல (அவங்கள boost விளம்பரத்துல நடிக்க ரெக்கமண்ட் பண்ணுங்கப்பா சச்சினுக்கும் வயசாய்டிச்சி) உடனே லூசு பையனும், லூசு பொண்ணும் மைக்க ரெண்டு கைலையும் புடிச்சி ஏதோ கடவுளே(அப்படி ஒருத்தர் இருந்தார்னா சொல்ரேன்) வந்து சொல்லர மாதிரி தேங் யு மாஸ்டர் (என்ன மாஸ்டர்னே தெரியல சாமி பரோட்டா மாஸ்டரா, டிரிள் மாஸ்டாரா இல்ல என்ன மாஸ்டர்னு தெரியல), தேங் யு மாஸ்டர்னு தலைய தாழ்த்தி சொல்லரதும் இதல்லாம் பாக்க கொடுத்து வச்சி இருக்கணும்.

அத விட ஒரு பெரும் கூத்து 2 அல்லகைங்க நின்னு இப்ப நம்ப பம்பு மேடம் என்ன சொல்லராங்கனு பாப்போம் ”பம்பு மேடம் உங்க கமெண்ட்ஸ்”. உடனே பம்பு மேடம் மைக்க புடிச்சி ”லூசு பையா இத நான் உங்க கிட்ட இருந்து எதிர் பாக்கவே இல்ல” (வேற என்ன எதிர் பாத்தாங்களோ??) என்ன ஒரு பர்மாமண்ஸ்!!! இப்ப நான் அங்க வர போறேன் அப்படினி சொல்லிக்கிட்டு அங்க வந்து அப்படியே அவங்கள கட்டி புடிப்பாங்களாம் (கொடுத்து வச்ச லூசு பய பின்ன பம்பு மேடம்ல கட்டி புடிக்கிறாங்க) உடனே கேலரில உட்காந்து இருக்கற மத்த லூசுங்களாம் ஊஊஊஊஊஊஊஊஊஊஊனு கத்துவாங்க பின்ன கத்த வேணாமா இது குரங்காட குயிலாடப்பா.......

அடுத்து நம்ப அல்லக்கைங்க சிரிச்சிக்கிட்டே (எப்ப பாத்தாலும் எப்படி தான் சிரிச்சிக்கிட்டே இருக்காங்களோ லூசுங்க தான் சிரிச்சிகிட்டே இருக்கும் ஆமா இவங்களுக்கும் லூசுக்கும் பெரிய வித்யாசம் இல்ல) கும்பா மேடம் உங்க கமெண்ட்ஸ் கும்பா மேடம் உடனே “லூசு பையா என்ன சொல்லரதுனே தெரியல (தெரியலனா வாய மூடிக்கிட்டு இருக்க வேண்டியது தானே)இப்படி ஒரு பர்ஃபாண்ஸ் வாவ் சூப்பர்” அப்படிம்பாங்க

ஹிஹி வழக்கம் போல நம்ப அல்லகைங்க சிரிச்சிக்கிட்டே நாம ஸ்கோர் என்னனு பாக்கலாம் அதுக்கு முன்னாடி ஒரு சின்ன பிரேக்

பிரேக் முடிஞிதும் ரெண்டு அல்லகைகளும் வெல்கம் பேக் டு குரங்காட குருவியாட சீசன் 4 (அது என்னங்க சீசன் என்னமோ போங்க ஒண்ணுமே புரியல) அப்படிண்டு இப்ப ஜட்ஜஸோட ஸ்கோர் கேப்போம் மாஸ்டர் உங்க ஸ்கோர் உடனே அவங்க அஞ்சி விரல காட்டுவாங்களாம் உடனே லூசு பையணும் லூசு பொண்ணும் அய்யயோ நாங்க இன்னும் எதிர்பாக்கறோம்ங்கற மாதிரி பாப்பாங்களாம் உடனே மாஸ்டர் மத்த கைல இருக்குற ஒரு ஒரு விரலா நீட்டுவாங்கலாம் (திரில் ஏத்ராங்கலாம் கருமம்டா சாமி) 10 அப்படினு சொன்ன வுடனே லூசு பையனும், லூசு பொண்ணும் ஹை ஜாலினு குதிப்பாங்களாம்.

இதே மாதிரி மத்த 2 ஜட்வும் மார்க் கொடுக்க அதுக்கும் அதே ரியாக்ஸன் எப்படி தான் வருசகணக்கா இதே ரியாக்ஸ்ன கொடுக்கறாங்களோ இதுக்காக லூசு பைனையும், பொண்னையும் பாராட்டி ஆகணும்.

இதே மாதிரி தான் எல்லாம் லூசும் டேண்ஸ் ஆடும், அதே மாதிரி தான் மார்க், ரியாக்ஸண் எல்லாம் இதையும் காலம்காலமா உட்காந்து பாத்துகிட்டு தான் இருக்கோம். கடசியா பாத்தா நாம தான் லூசுனு தோணுது.

தயவு செஞ்சி நம்பல நாமே ”நமக்கு வேற பொழுது போக்கு இல்ல இத தான் பாக்கணும்னு அப்படினு ஏமாத்திக்க வேணாம் படிக்கறதுக்கும், பாக்கறதுக்கும், கேககருதுக்கும் எவ்வள்வோ சிந்தனைய தூண்டற விசயம் இருக்கு கொஞ்சம் அதுல கவனம் செலுத்தி பாக்களாம்”.

எத்தன நாளைக்கிங்க இந்த மொக்கையெல்லாம் பாத்துகிட்டு இருக்க முடியும்.

நான் ஏதோ குரங்காட குருவியாடய மட்டும் சொல்லலங்க எல்லாம் கரும பிடிச்ச டுபாக்கூர் ஜோடி, இன்னும் என்ன என்ன எழவோ ஓடுதுங்க. எல்லாம் வெளி நாட்ட பாத்து தான் எடுக்கறாங்க அதுல இருக்குற நல்ல விசயத்த மட்டும் விட்டுடுவாங்க எல்லாரும் கஸ்ட பட்டு தான் ஆடுறாங்க பிராக்டிஸ் பண்றாங்க ஆனா அதுக்கு எதுக்கு இந்த பில்டப்னு தான் தெரியல நாட்ல அவன் அவன் எவ்வளவு கஸ்ட படறான் அதல்லாம் பாத்து ஆதங்கத்துல்ல ஏதோ எழுதி இருக்கேங்க.

பி.கு. மேல சொல்லப்பட்ட சம்பவம்(கருத்து) அனைத்தும் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுத பட்டது அல்ல.

fair and lovelyum எரும மாடும்


இப்படி இருந்த நான்எங்க தாத்தா வீட்ல ஒரு எரும மாடு இருக்குங்க எங்க தாத்தாவுக்கு அத வித்துட்டு ஒரு நல்ல பசு மாடு வாங்கனும்ணு ஆசங்க ஆனா பாருங்க அவர் ஒரு பாவ பட்ட விவசாயி இந்தியாவல விவசாயம் பாத்தா நாசமா போய்டுவோன்னு தெரிஞ்சிம் கஸ்டபடற அப்பாவிங்கள்ள அவரும் ஒருத்தர். இத ஏண்டா எரும மாடு எரும மாட்டு கதைல சொலல்றேன்னு நீங்க கேக்கறது எனக்கு தெரியுது அதாவாதுங்க நமக்கு ஒரு செல் போன் போர் அடிச்சா வேற புது கைபேசிய என்ன வில இருந்தாலும் 10 ஆயிருமோ, 15 ஆயிருமோ காசு கொடுத்து வாங்கிட்டு போய்டுவோம் ஆனா அவர் என்னங்க பண்ணுவார் பாவம் பல குடும்பங்கள் இன்னைக்கு அவங்க வச்சி இருக்கற ஒத்த பசு மாட்ட நம்பி தான் இருக்கு.

அவருக்கு நான் இப்ப புதுசா வாங்கன கைபேசியோட விலைல பாதி கொடுத்து இருந்தா கூட ஒரு நல்ல பசு மாடு வாங்கி இருப்பார் ஆனா பாருங்க நமக்கு நம்ப சந்தோசம் தான் முக்கியம் அடுத்தவங்க வாழ்க்கைய விட. சரி வேற என்ன பண்ணுனா எரும மாட வித்து பசு மாடாக்களாம்னு யோசிச்சப்பதாங்க இந்த fair and lovely விளம்பரம் பாத்தேன். சரி நாட்ல இருக்குற எத்தனையோ பேர் இத போட்டு வெள்ளையா ஆகி இருக்காங்கலே, நாம ஏன் எரும மாட்டுக்கு இத தேச்சி வெள்ளை ஆக்க கூடாதுனு தோணுச்சிங்க.

சரி இத பத்தி இணையத்தல தேடலாம்னு போட்டா என்ன மாதிரியே இன்னும் ஒருத்தனுக்கும் தாத்தா இருந்துருக்கணும் அவர் எரும மாட்டையும் பசு மாடு ஆக முயற்ச்சி செஞ்சிருக்கணும் அத அவனும் ibibola கேள்வியா கேட்டு இருந்தான் அத படிக்க இத கிளிக் பண்ணுங்க http://sawaal.ibibo.com/other-shopping-tips/by-applying-fair-and-lovely-cream-to-buffalo-can-we-make-her-become-white-cow-175126.html

சரி எழவு அத படிச்சி பாத்தா எனக்கு சந்தேகம் வந்துருச்சி சந்தேகமான்னு கேக்காதீங்க ஒரு 50 கிராம் fair and lovely குப்பியோட வில 50 ரூபாங்க பின்ன நான் முழு மாட்டுக்கும் தேய்க்க வேணாமா என் பாக்கேட் தாங்காதுங்க. சரி அட்லீஸ்ட் எருமையோட மூஞ்சிக்கு அத தேச்சி பாக்கலாம்ன்னு எரும மூஞ்சில தேய்ச்சேன்ங்க அட அட என்னமா கலர் மாறிச்சி!!!!! அட நீங்க வேற எரும கலர் இல்ல கீரீம் கலர்ங்க. இதுல இருந்த என்ன தெரியுதுனா என்னைக்கும் எருமைய பசு ஆக்க முடியாது அதே போல நாமும் கண்ட கிரீம் போட்டா கலர் ஆக முடியாது.

அப்ப நான் வெள்ளையாவே ஆக முடியாதுன்னு கேக்கறவங்க பெய்ண்ட் அடிச்சிக்களாம், சிவாஜி ரஜினி மாதிரி கிராபிக்ஸ் பண்ணலாம், நிறைய காசு வச்சி இருக்கவங்க மைக்கேல் ஜாக்ஸ்ன் மாதிரி பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கலாம்.


கிண்டல் பண்ணாத என்ன பண்ணா சிவப்பாகலாம்னு கேக்கறவங்களுக்கு நண்பர்களே கொஞ்சம் அசிங்கமா இருந்தாலும் இது தான் உண்மை நம்ப கக்கதோட நிறத்த விட நாம என்னைக்கு நிறமாக முடியாது இந்த கிரீம்கல் அதிக பட்சம் நம்பள வெயில் இருக்கும் புற ஊதா கதிர்கள்ள இருந்து பாதுகாக்கலாம் அதுக்க மேல ஒண்ணும் செய்யாது. அப்படியே பாத்தா கூட நியாயப்படி பொழுதன்னிக்கும் வெயில்ல கிடக்கற விவசாயியும், கஸ்ட படற தொழுலாளியும் தான் போடணும் ஆனா பாருங்க பாவம் பசிய போக்க பாடு படற அவங்களால 50 கிராம் பாக்கெட்ட 50 ரூபா கொடுத்து கண்டிப்பா வாங்க முடியாது அதனால அவங்க சார்பா நாம வாங்கி தேச்சிக்குவோம் சரியா.

என்ன தான் இருந்தாலும் நாம சாதாரண மனசுடைய சாதாரண மனுசங்க நமக்கும் சிவப்பா ஆகற ஆசை வரது ரொம்ப இயற்கை ஆனா நல்ல உணவு முறை, நிறைய காய்கறி, பழங்கள், நிறைய தண்ணீர் இத அருந்தினாலே போதும் நம்முடைய தோல் பொலிவுடன் இருக்கும் ஏதோ எனக்கு தெரிஞ்சத சொல்றேன். இன்னும் நிறைய தெரிஞ்சிக்க இத கிளிக் பண்ணுங்க http://answers.yahoo.com/question/index?qid=20070730013930AAQZZds தயவு செய்து இனி அந்த கிரீம் வாங்கருதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க. உண்மைலே இத நான் fair and lovelya மட்டும் சொல்லல மார்க்கெட் இருக்கற எல்லாத்தையும் தான் சொல்றேன்.


எப்படி ஆய்ட்டேன் எல்லாரும் இத use பண்ணுங்க வெள்ளை ஆகுங்கவெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

இந்தியாவும் எண்ணையும்

இந்தியா ஆயில் வைத்திருக்கும் சதவீதம் 0.5%. ஆனால் சீனாவிர்கு அடுத்தபடியக ஆயில் தேவை அதிகம் உள்ள நாடு. நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் ஆயில் தேவை அதே சமயம் அதிகரித்து கொண்டிருக்கும் அதன் விலை இந்தியவையே பணயம் வைக்கும் ஆபத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. இப்போது 70% ஆயிலை 65* டாலர் ஒரு பேரலுக்கு என்று இறக்குமதி செய்து கொண்டிருக்கும் இந்தியா 2012யில் 85% ஆக தனது ஆயில் இறக்குமதியை உயர்த்தும் என கணக்கிடபட்டிருக்கிறது, ஆனால் 2015ஆம் ஆண்டின் போது ஒரு பேரல் ஆயிலின் விலை 385* டாலராக உயரும் என எதிர் பார்க்க படுகிறது. கவனத்தில் கொள்க இப்போது உள்ளது போல் 6 மடங்கிற்கு மேல் அதிகம்.

இந்திய அரசாங்கம் மானியம் பல கொடுத்தும் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை எதிர்த்து போரட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இன்று விலையை கட்டுக்குள் வைத்திருந்தாலும் இது நிச்சியம் நீடிக்காது. ஏனெனில் இந்தியா தனது ஆயில் கையிருப்பை 2015ஆம் ஆண்டின் வாக்கில் இழந்து விடும் அபாயத்தில் உள்ளது. அதன் பிறகு 100% நாம் அந்ந்யர்களின் தயவை எதிர் பார்க்கும் கட்டாயத்திற்க்கு தள்ள படுவோம். அவர்கள் சொல்வது தான் விலை. எந்த கட்சியும் ஒன்றும் செய்ய இயலாது. மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்ரிக்க நாடுகள், கனடா, ரஸ்யா, அமெரிக்கா மற்றும் சில தென் அமெரிக்கா நாடுகளே ஆயில் கையிருப்பு உள்ள நாடுகள்.OPEC எனப்படும் ஆயில் ஏற்றுமதி கூட்டமைப்பு நாடுகளே அதிகம் நமக்கு எண்ணையை ஏற்றுமதி செய்கிறது. இந்த கூட்டமைபின் போக்கு விசித்திரமானது. அது எண்ணையின் விலையை எப்போது வேண்டுமானாலும் ஏற்றி கொள்ளும் யாரும் கேள்வி கேக்க முடியாது, ஏனெனில் நாம் கேள்வி கேட்டு அது முருக்கி கொண்டால் நம் நாடு எண்ணை இல்லாமல் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகலாம். அதனால் நாம் மற்ற நாடுகளிடம் எண்ணை இறக்குமதி செய்யலாம் எனில் அது நமது எற்றும் நேச நாடான ரஸ்யா மற்றும் சில ஆப்ப்ரிக்க நாடுகள் தான். ஆனால் ரஸ்யாவிடமோ 5% எண்னை கைய்யிருப்பே உள்ளது அதுவும் 2020 ஆம் ஆண்டு தீர்ந்து விடும் என கணக்கிடப்பட்டிருக்கிரது. மற்றும் உள்ள ஆப்ரிக்க நாடுகளிலும் 2025ஆம் ஆண்டின் வாக்கில் எண்ணை தீர்ந்து விடும். வேறு வழியில்லாமல் OPECயிடம் நாம் கையேந்தும் நிலைமைக்கு தள்ள படுவோம் மிக மோசமாக.

அமெரிக்கா தனது எண்ணை தேவையை கட்டுக்குள் வைத்திருக்க தன் படைகளை ஈராக்கில் நிருவி விட்டது, போதாதற்க்கு 25% உலகின் எண்ணை கையிருப்பை வைத்திருக்கும் சவுதி அரேபியாவில் SAUDI ARAMCO எனும் நிருவனத்தில் கூட்டு வைத்துள்ளது. ஆனால் உள் நாட்டிலே பல குழப்பங்கள் கொண்டுள்ள நம் நாட்டின் அரசாங்கத்திடம் இத்தகைய நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது, சில ஆப்ரிக்க, ஆசிய நாடுகளிடம் சில புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா வைத்திருந்தாலும் அது எதிர் காலத்தில் எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்பது கேள்வி குறியே.

சரி இழவு பணத்தை கொடுத்து ஒழிக்களாம் எனில் நாம் கொடுக்கும் பணம் மத்திய கிழக்கு நாடுகளின் உற்பத்தி செலவு மற்றும் அவர்களுக்கான தேவையை விட மிக மிக மிக மிக அதிகம். இதனால் அதிகம் இருக்கும் பணம் பெருவாரியாக‌ தீவரவாத இயக்கங்களுக்கு சென்று சேர்கிறது, அதுவும் அதிகம் நம் நாட்டிற்க்கு பங்கம் விளைவிக்க. இது நம் கண்ணை நாமே குத்தி கொள்வது போல, என்ன கொஞ்சம் வித்தியாசமாக அடுத்தவன் தலையை சுற்றி குத்தி கொள்கிரோம் அவ்வளவேஇதனை சவால்கள் இருக்க, நாம் எதிர் காலத்தில் இதனை எவ்வாறு சமாளிக்க போகிறோம் எனும் போது ஜெயந்தா சென் எனும் பொருளாதார பேராசிரியர் சில யோசனைகளை முன் வைக்கிறார் அவை
1) எண்ணை ஏற்றுமதி கூட்டமைப்பு நாடுகளை போல எண்ணையை இறக்குமதி செய்யும் பெருவாரியான‌ நாடுகளும் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும், OPEC நாடுகள் ஏற்றுமதி விலையை நிர்ணயம் செய்வது போல, இறக்குமதி நாடுகளும் ஒரு விலை உடன்படிக்கை செய்து அந்த விலைக்கு மேலாக கொடுக்க கூடாது, இந்த இறக்குமதி நாடுகள் எண்ணையை இறக்குமதி செய்யவில்லை எனில் OPEC நாடுகள் வேறு எங்கும் விற்பனை செய்ய இயலாது ஆகையால் இறக்குமதி நாடுகள் சொல்லும் விலையை OPEC நாடுகள் ஏற்கவில்லை என்றாலும் பேரம் பேசி இப்போது உள்ள விலையை விட குறைக்க நிச்சயம் முடியும். இதனால் நம் நாட்டின் பணம் பெருவாரியாக வெளி செல்வதை தடுக்க இயலும்.
2) இரண்டாவாதாக இறக்குமதி நாடுகள் இறக்குமதிக்கேற்ப்ப வரி இட்டு அதை உபயயோகிப்பவர் கட்டுமாறு செய்யலாம் இதனால் விலை உயர்வு ஏற்ப்பட்டாலும், தேவை குறையும் இதனால் நாம் இறக்குமதியையும் குறைக்கலாம், நாட்டின் பணம் வெளி செல்வதும் குறையும்.

மேற்ப்படி சொல்லப்பட்டுள்ள யோசனைகளை செயல் படுத்த வேண்டுமெனில் நாம் மற்ற எண்ணை இறக்குமதி நாடுகளுடன் நட்புணர்வோடு இருக்க வேண்டும். ஆனால் மற்ற நாடுகளின் வெளியுறவு கொள்கை நம் நாட்டிற்கு ஒத்து வருமா என்று எண்ணும் போது கேள்வி குறியே எழுகிறது?. அப்படியே ஒரு ஒப்பந்தம் உருவனாலும் அது எத்தனை நாள் தாங்கும் என தெரியாது ஏனெனில் 54 வருடம் கழித்து உல்கின் ஒட்டுமத்த எண்ணையும் தீர வாய்ப்புள்ளது, அந்த 54 ஆம் வருடம் நெருங்கும் தருவாயில் எண்ணை வள நாடுகள் தங்கள் வருவாய் அத்துடன் முடிந்து விடும் என்பதை உண்ர்ந்து விலையை கற்ப்பனை செய்ய முடியாத அளவிற்க்கு உயர்த்த கூடும், அப்போது இறக்குமதி நாடுகளின் விலையை ஒத்து கொள்ளுமா என்பது சந்தேகமே.

இதிலிருந்து நமக்கு ஒன்று தெளிவாக தெரிகிறது. நாம் எண்ணையில் தன்னிறைவு அடைய வேண்டும் அல்லது மாற்று எரிபொருள் கண்டுப்பிடிக்க வேண்டும். நாம் நிச்சயம் தன்னிறைவு அடைய இயலாது, இரண்டாவது வழியே நம் நாட்டிற்கு சிறந்தது. நாம் நம்முடைய வாகனத்தை உயிர்ப்பிக்கும் இது அவசியமான பயண‌மா என்று ஒரு முறை கேட்டு கொண்டால் குறைந்தபட்சம் நம்மால் முடிந்த சேவையாக பெட்ரோலை சிறிதலவாவது சேமிக்க முடியும் நமது சந்ததிக்காக.

கொச்சினில் எண்ணை கையிருப்பு உள்ளது என ஆசியா நெட்டில் செய்தி பார்த்தவுடன் ஒரு நப்பாசையில் இந்தியா எண்ணையில் தன்னிறைவு பெற்று விட்டதா என்று இணையத்தில் தேடியதில் மேற்கண்டவற்றை படித்து இதில் தொகுதுள்ளேன்.


இந்த தொகுப்பு பெரிய பிரளயத்தை உருவாக்காது என்பதை அறிந்தாலும், ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முயற்சியே இது.

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

தமிழ் ஹீரோகளின்(முண்ணனி நடிகர் என்பதே சரியான சொற்தொடர் என கருதுகிறேன்) சூரசம்ஹாரம்

சினிமா என்பது எவ்வகம் உருவானது என்று எனக்கு தெரியாது. ஆனால் இன்று இருக்கும் சினிமாவின் தாக்கங்கள் பற்றிய எனது சிறிய எண்ணத்தை பதிவு செய்கிறேன். இன்று இருக்கும் முண்ணனி நடிகர்களான விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிலம்பரசன், சூர்யா, ஜீவா, விஷால் ஆகிய பலர் சினிமா பின்புலம் பலமாக கொண்டவர்கள். நான் ஒரு பொறியாளன் அக வேண்டும் எனில் கண்டிப்பாக படித்து, நேர்காணலில் என்னை விற்றே ஆக வேண்டும்.


ஆனால் சினிமா முண்ணனி நடிகர்கள் தங்களது தந்தை இயக்குனரவோ நடிகராகவோ இருந்தால் போதுமானதாக உள்ளது. ஆக ஒரு நடிகராக தங்கள் தந்தையின் செல்வாக்கை உபயோகிக்கும் இவர்கள் எந்த திறமையும் இல்லாமல் பல கோடிகளை சம்பளமாக பெறுகின்றனர். இதற்காக இவர்கள் நாட்டுக்கு நன்மை செய்வதாக நினைக்க வேண்டாம். தமிழ் மக்களை குறிப்பாக இளைய சமுதாயத்தை குட்டி சுவராக்கும் பணியிலே ஈடு படுகின்றனர். தாங்கள் ஒரு பல கோடி மதிப்புள்ள வீடுகளில் வாழ, சொகுசு காரில் பயணம் செய்ய தாங்கள் நடிக்கும் படம் நன்றாக வசூல் செய்ய வேண்டும் அதற்கு படம் என அவர்கள் அடிக்கும் கூத்துக்கு நாம் நம் பாக்கெட்டில் இருந்து பணத்தை போட வேண்டும். தங்களை விட சதையை விருப்பதுடன் காட்டி நடிக்கும் நடிகைகளை நம்புகிறார்கள் என்பதே உண்மை இல்லயேல் கவர்ச்சியே இல்லாமல் நடிக்க இவர்களுக்கு துணிவும் இல்லை, திறமையும் இல்லை. எந்த பாதிப்பில் எனது தமிழ் சகோதரன் இந்த சினிமா மாயத்தில்
விழுகிறான் என தெரிய வில்லை.


சினிமா என்னும் ஊடகத்தின் வலிமை, நன்மை தெரியாதவர்களின் கையில் இறக்கும் சினிமா பரிதபமனதே. தங்கள் உழைப்பின் வலியை மறக்க வரும் எம் சகோதரனின் மனதில் விசமாய் தீய எண்ணங்களை உருவாக்க பாடுபடும் மகான்களே இந்த சினிமா விற்பனர்கள். வாழ்கையில் நாம் காண, கேட்க எந்தன் தமிழ் திருநாட்டில் என் மூதையாதர்கள் கட்டிய கோவில்களும், வடித்த சிற்பம்களும், செவியையும் உள்ளதையும் தொடும் பதிகங்களும், தேவாரமும், திருவாசகமும் உண்டென்பதை மறக்க வைத்து விட்ட புண்ணியவான்கள். எந்த ஆதங்கத்தில் இதை எழுதுகிறேன் எனில் எனது சமுதாயம் சீரழியும் ஆதங்கம்.