வெள்ளி, 20 நவம்பர், 2009

fair and lovelyum எரும மாடும்


இப்படி இருந்த நான்



எங்க தாத்தா வீட்ல ஒரு எரும மாடு இருக்குங்க எங்க தாத்தாவுக்கு அத வித்துட்டு ஒரு நல்ல பசு மாடு வாங்கனும்ணு ஆசங்க ஆனா பாருங்க அவர் ஒரு பாவ பட்ட விவசாயி இந்தியாவல விவசாயம் பாத்தா நாசமா போய்டுவோன்னு தெரிஞ்சிம் கஸ்டபடற அப்பாவிங்கள்ள அவரும் ஒருத்தர். இத ஏண்டா எரும மாடு எரும மாட்டு கதைல சொலல்றேன்னு நீங்க கேக்கறது எனக்கு தெரியுது அதாவாதுங்க நமக்கு ஒரு செல் போன் போர் அடிச்சா வேற புது கைபேசிய என்ன வில இருந்தாலும் 10 ஆயிருமோ, 15 ஆயிருமோ காசு கொடுத்து வாங்கிட்டு போய்டுவோம் ஆனா அவர் என்னங்க பண்ணுவார் பாவம் பல குடும்பங்கள் இன்னைக்கு அவங்க வச்சி இருக்கற ஒத்த பசு மாட்ட நம்பி தான் இருக்கு.

அவருக்கு நான் இப்ப புதுசா வாங்கன கைபேசியோட விலைல பாதி கொடுத்து இருந்தா கூட ஒரு நல்ல பசு மாடு வாங்கி இருப்பார் ஆனா பாருங்க நமக்கு நம்ப சந்தோசம் தான் முக்கியம் அடுத்தவங்க வாழ்க்கைய விட. சரி வேற என்ன பண்ணுனா எரும மாட வித்து பசு மாடாக்களாம்னு யோசிச்சப்பதாங்க இந்த fair and lovely விளம்பரம் பாத்தேன். சரி நாட்ல இருக்குற எத்தனையோ பேர் இத போட்டு வெள்ளையா ஆகி இருக்காங்கலே, நாம ஏன் எரும மாட்டுக்கு இத தேச்சி வெள்ளை ஆக்க கூடாதுனு தோணுச்சிங்க.

சரி இத பத்தி இணையத்தல தேடலாம்னு போட்டா என்ன மாதிரியே இன்னும் ஒருத்தனுக்கும் தாத்தா இருந்துருக்கணும் அவர் எரும மாட்டையும் பசு மாடு ஆக முயற்ச்சி செஞ்சிருக்கணும் அத அவனும் ibibola கேள்வியா கேட்டு இருந்தான் அத படிக்க இத கிளிக் பண்ணுங்க http://sawaal.ibibo.com/other-shopping-tips/by-applying-fair-and-lovely-cream-to-buffalo-can-we-make-her-become-white-cow-175126.html

சரி எழவு அத படிச்சி பாத்தா எனக்கு சந்தேகம் வந்துருச்சி சந்தேகமான்னு கேக்காதீங்க ஒரு 50 கிராம் fair and lovely குப்பியோட வில 50 ரூபாங்க பின்ன நான் முழு மாட்டுக்கும் தேய்க்க வேணாமா என் பாக்கேட் தாங்காதுங்க. சரி அட்லீஸ்ட் எருமையோட மூஞ்சிக்கு அத தேச்சி பாக்கலாம்ன்னு எரும மூஞ்சில தேய்ச்சேன்ங்க அட அட என்னமா கலர் மாறிச்சி!!!!! அட நீங்க வேற எரும கலர் இல்ல கீரீம் கலர்ங்க. இதுல இருந்த என்ன தெரியுதுனா என்னைக்கும் எருமைய பசு ஆக்க முடியாது அதே போல நாமும் கண்ட கிரீம் போட்டா கலர் ஆக முடியாது.

அப்ப நான் வெள்ளையாவே ஆக முடியாதுன்னு கேக்கறவங்க பெய்ண்ட் அடிச்சிக்களாம், சிவாஜி ரஜினி மாதிரி கிராபிக்ஸ் பண்ணலாம், நிறைய காசு வச்சி இருக்கவங்க மைக்கேல் ஜாக்ஸ்ன் மாதிரி பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கலாம்.


கிண்டல் பண்ணாத என்ன பண்ணா சிவப்பாகலாம்னு கேக்கறவங்களுக்கு நண்பர்களே கொஞ்சம் அசிங்கமா இருந்தாலும் இது தான் உண்மை நம்ப கக்கதோட நிறத்த விட நாம என்னைக்கு நிறமாக முடியாது இந்த கிரீம்கல் அதிக பட்சம் நம்பள வெயில் இருக்கும் புற ஊதா கதிர்கள்ள இருந்து பாதுகாக்கலாம் அதுக்க மேல ஒண்ணும் செய்யாது. அப்படியே பாத்தா கூட நியாயப்படி பொழுதன்னிக்கும் வெயில்ல கிடக்கற விவசாயியும், கஸ்ட படற தொழுலாளியும் தான் போடணும் ஆனா பாருங்க பாவம் பசிய போக்க பாடு படற அவங்களால 50 கிராம் பாக்கெட்ட 50 ரூபா கொடுத்து கண்டிப்பா வாங்க முடியாது அதனால அவங்க சார்பா நாம வாங்கி தேச்சிக்குவோம் சரியா.

என்ன தான் இருந்தாலும் நாம சாதாரண மனசுடைய சாதாரண மனுசங்க நமக்கும் சிவப்பா ஆகற ஆசை வரது ரொம்ப இயற்கை ஆனா நல்ல உணவு முறை, நிறைய காய்கறி, பழங்கள், நிறைய தண்ணீர் இத அருந்தினாலே போதும் நம்முடைய தோல் பொலிவுடன் இருக்கும் ஏதோ எனக்கு தெரிஞ்சத சொல்றேன். இன்னும் நிறைய தெரிஞ்சிக்க இத கிளிக் பண்ணுங்க http://answers.yahoo.com/question/index?qid=20070730013930AAQZZds தயவு செய்து இனி அந்த கிரீம் வாங்கருதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க. உண்மைலே இத நான் fair and lovelya மட்டும் சொல்லல மார்க்கெட் இருக்கற எல்லாத்தையும் தான் சொல்றேன்.


எப்படி ஆய்ட்டேன் எல்லாரும் இத use பண்ணுங்க வெள்ளை ஆகுங்க



2 கருத்துகள்:

சாமக்கோடங்கி சொன்னது…

நம்ம நாட்டில் விளம்பரத்தைப் பாத்தே கேட்டுப்
போபவர்கள் பல பேர்.. தத்ரூபமாகக்காட்டப்படும் விளம்பரங்களைப்
பார்க்கும்போது படித்தவர்களே நம்பி விடும்போது , படிக்காத மக்கள் என்ன
செய்வார்கள்.. பல விளம்பரங்களை எடுக்கும் விளம்பரக் கம்பெனிகள்
இப்பொழுதெல்லாம் மனிதர்களைக் கவரும் வசிய விஷயங்களை உளவியல் முறைப்படி
வகுப்பெடுத்து, கற்று பின்னரே இத்தகைய விளம்பரங்களைப்
படமாக்குகின்றனராம்... உஷாரா இருந்தா நல்லது எது கெட்டது எதுன்னு கண்டு
பிடிச்சுக்கலாம்... அருமையா எருமைய வெச்சு வெளக்கியிருக்கீங்க...
--
நன்றி
பிரகாஷ் (எ)சாமகோடங்கி

மதன் சொன்னது…

@சாமகோடாங்கி: வாங்க பாஸ்.

நீங்க சொல்ரது சரி தான் எப்படிலா விளம்பரம் எடுக்குறாய்ங்க, நீங்க குறிப்பா பாத்தீங்கனா இந்த அழகு பொருள் விளம்பரங்கள் ஏதோ கருப்பா இருக்கறது குத்தம் மாதிரியும் இவிங்க எல்லாரயும் வெள்ளையா மாத்ற மாதிரியும் டகால்டி வேல காட்டுறான்ங்க அந்த காண்டுல போட்ட பதிவு தான் இது....

அப்புறம் கொஞ்சம் கூர்ந்து கவனிச்சா உங்களுக்கு தெரியும் இந்த நுகர் பொருள் முக்காவாசி unilever பிராண்டா தான் இருக்கும்...

ம்ம் நாட்டுக்கு நல்லது செய்ய மட்டும் ஆராய்ச்சி செய்ய மாட்டானுங்க இந்த வீணா போன விசயத்துக்கு எல்லாம் நல்லா பண்ணுவாங்க...

சரி அடிக்கடி வந்துட்டு போங்க பாஸ்/