புதன், 9 நவம்பர், 2011

போர்


நான்காம் சுற்றின் இறுதியில் ஒரு சொட்டு குருதம் வீணாய்யிருந்தது, ஒன்று வீழ வேண்டும் அல்ல வீழ்த்தப்பட வேண்டும், துப்பாக்கித்தோட்டாகளின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்து கொண்டிருப்பது அத்தணை நல்ல சகுனமாக தோன்றவில்லை, இன்னும் போராட்டகாலம் நீண்டத்தூரம் விரவி கிடக்கிறது.  இன்று போராட்டம் தீவரமடைந்திருப்பதிற்க்கு காரணம் எங்கள் பலம் ஓங்கி இருப்பதற்கு சாட்சியா அல்லது எதிரியின் பல குறையாமல் இருப்பதற்க்கான அறிவிப்பா………மாலை நடக்கும் சுவாரசியமற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் போதே அது தெளிவுபடும்.
மூடுப்பனியுடன் இந்த புகையும் சேர்ந்து இன்னும் காலக்கட்டத்தின் நிலையற்றத்தன்மையை அதிகப்படுத்தி கொண்டிருந்தது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி இத்தகைய ஒரு நிலையற்றத்தன்மையை உருவாக்கும் என எந்த தரப்பினரும் கருத்தில்க்கொள்ளாத நிலையில் வாழ்வு தனக்குள் ஒளித்து வைத்திருந்த அந்த கணத்தை வெகு விமர்சையாக வெளிப்படுத்தியது ரத்தத்தின் நிறம்க்கூட காணாத பல தமிழ் மக்களின் பார்வைக்கு.
இப்பொழுது அதை நினைவில் கொண்டு வருவது அத்தணை பயனளிக்க போவதில்லை ஆனால் ரத்தத்தில் தோய்ந்து போன ஒரு ஒரு முகங்களிலும் தோன்றி தோன்றி மறையும் தங்கள் இறந்தக்காலத்தின் வாழ்வின் வெளிப்பாடு இந்நினைவுகளை அதிகப்படுத்தி கொண்டிருந்தது. நாட்கணக்குகளும் வாரக்கணக்குகளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வாயிலாக உணர்ந்து கொண்டிருந்த காலங்கள் இந்நிலமை வாழ்விற்கு காரணமாக என் மனதிற்குப்படுவதை எக்காரணம் கொண்டும் தவிற்க்க முடியவில்லை. உயிரிழப்புகள் அதிகமாகி கொண்டிருந்தது, வாழ வேண்டும் என்ற உத்வேகமும், உயிரை தொலைக்காமல் இருக்க நொடிக்கு நொடி விழிப்போடு இருக்க வேண்டும் என்ற உணர்வும் கூடல்களையும், புதிய உயிர் அப்பிராந்தியத்தில் உருவாகுவதற்க்கான சாத்தியத்தை முழுவதுமாக துடைத்தெறிந்திருந்தது.
விஸ்க்…….விஸ்க்…..ஒரு வினாடி விலகல் என் உயிரை தோட்டாக்களில் காப்பாற்றியிருக்கிறது, இனி நினைவுகளில் மூழ்க கூடாது அது வாழ்வின் நிதர்சனத்தை இழக்க செய்கிறது, தோட்டா வடக்கிலிருந்து தான் வந்தது அது துளைத்துள்ள தோற்றத்தை கவனித்தால் உயரித்தில் இருந்து குறி பார்க்கப்பட்டிருக்க வேண்டும். அந்த திசையில் ஒரே ஒரு ஒற்றை வீடு ஜன்னலின் திரை விலகி வழிக்காட்டியதில் ஒரு துப்பாக்கி முனை ஸ்னைப்பர் வகையாறாவாய் இருக்கவேண்டும், எண்ணங்களும் செயல்களும் ஒன்றாய் இருக்க வேண்டிய கட்டாயம் அந்த துப்பாக்கிக்காரனை எவ்வாறு அழிப்பது என்று தெளிவாய் விளக்கியது.
திடத்திக்கரமான சிந்தனையும், தெளிந்த எண்ணமும், தன்மானமும் நீர்த்துப்போகி இனம் கொஞ்சம் கொஞ்சமாய் சென்னை மாநகரின் அழுக்கில் யாருக்கோ உழைத்து கொண்டிருந்தது ஓநாய் விழிகளுடன் எல்லாவற்றையும் விழுங்கி விடுவது போல, இதோ நாளை நல்லதாக பிறக்கும், இல்ல பிறக்கவைக்கப் படும் என்று வரிசையில் நின்றிருந்தது கூட்டம், வரிசை நீண்டுக் கொண்டே சென்றது. ச்ச திரும்ப நினைவுகள், நிதர்சனத்தை உணர், எதிரிய எப்படிக் கொல்ல போற யோசி யோசி…….யோசித்துக் கொண்டே இருந்தேன் அந்த ஆறு எவ்வளவு அழகா இருக்கு பச்சை நிறத்துக்குத் தான் என்ன ஒரு குணம் இந்த தெளிந்த வெயில்ல  தென்னைமரங்களும், மாமரங்களும் தான் என்ன ஒரு பசுமை, ஆனா அந்த சண்டையில எப்படி அந்த துப்பாக்கிக்காரன கொன்னேன், அந்த சண்டை வர என்ன காரணம் யோசி யோசி, “டே மச்சி என்ன யோசிச்சிட்டு இருக்க, மேட்ச் ஆரம்பிக்கப் போகுதுடா வா இன்னும் ஒரு மேட்ச் தான் அப்புறம் ஃபைனல்ஸ்”ங்கற வார்த்தை என்னை எழுப்பிச்சி சுத்தியும் ஆரவாரம் அந்த கூடைப்பந்து மைத்தாத்த சுத்தி தங்களையும் விளையாட்டோட்ட இணைச்சி வேறெந்த சிந்தனையும் இல்லாத கூச்சல்கள், எல்லாத்தையும் செவியை நிறைத்து வெளிய போய்ட்டு இருந்ததது, கைய விட்டு நழுவாம இருக்கரதுக்காக கிரிப்போட வடிவமைக்க பட்ட சிகப்பு பந்த இறுக்கமா புடிச்சிட்டு இருந்தேன், ரெஃப்ரி குழல ஊத ஊத மெல்ல என் கண்ண விட்டு மங்கலா மறஞ்சிட்டு இருந்தார்.
நான் என் கணினி திரையை உத்து பாத்துக்கிட்டு இருந்தேன், அதுல நிர்வாணமா புணர்ந்துக்கிட்டு இருந்த ஒரு உருவங்கள மூளையோட தொடர்புப்படுத்தி கண்களுக்கும் எண்ணங்களுக்கும் பாலம் உண்டாக்கி இருந்தேன், விஸ்க் விஸ்க் இரண்டாவதுத்தோட்டா என் தொடையை உரசி என் குருதியின் இரண்டாவதுச் சொட்ட வீணாக்கி இருந்ததது.