புதன், 28 ஜூலை, 2010

பரிதவிப்பு



இரு விழிகளை தேடுகிறேன்,
என்னை உனதாக்கி கொள்பவளே எங்கிருக்கிறாய்,
உனை நான் காண்பேனே இல்லை எனை நீ காண்பாயா,
காலம் கசக்கிறதிடி எனை ஆட்கொண்டு விடு........

ஞாயிறு, 18 ஜூலை, 2010

வசனமற்ற கதை (பூமி)...............................


அந்த பொத்தனை அழுத்தியவுடன் சரியாக மணிக்கு 350 கி மீ வேகத்தில் செல்லும் இரட்டை இஞ்சின் உடைய  போடிங்கின் 2048ஆம் ஆண்டு மாடலான  ஏர் கார் உயிர் பெற்றது. சென்னையின் ஆல்டிடியூட் மாறுபாடு கொண்ட டிராபிகில் சங்கமிக்கும் நோக்கோடு எல்டாம்ஸ் ரோட்டில் இருந்து ராயப்பேட்டை செல்லும் சாலையில் வண்டியை திருப்பினான் ஈஸ்வர். இப்பொழுது அதாவது 2060 AD நிறைய ஏர்கார்களும், ஏர்பஸ்களும் பெருகிவிட்டாலும் போவதற்க்கு ஒரு ஆல்டிடியூட், வருவதற்க்கு ஒரு ஆல்ட்டிடியூட் என மாறுபடுத்தபட்டியிருந்ததால் சென்னையின் புறநகர் பகுதியான பொன்னேரிக்கு சரியாக 20 நிமிடத்தில் நியுக்கிளியர் புரப்பலண்ட் மற்றும் சோலார் பேனல் சக்தியுடைய ஹைபிரிட் இஞ்சினின் துணையுடன் சென்றடைந்தான்.

நியுக்கிளியர் டிஸ்போசில் கவுன்சில் ஆப் இந்தியாவின் கேட்டில் நிழையும் முன் தன் கண்களை ஸ்கிரீனில் காட்ட, அவன் கண்களை ஸ்கேன் செய்த கணினி அவன் பெயரான ஈஸ்வர், 32 வயதானவன், ஸ்பேஸ் டிஸ்போசில் கவுன்சிலின் இயக்குநர், A+ ரத்த வகையை சேர்ந்தவன் என்று திரையில் திரையுட்டு வாசலை திறந்தது.

ஏர்க்காரை தகுந்த இடத்தில் நிறுத்தி விட்டு, ஏ-விங்க் சென்று பலர் முகமன்னை ஏற்று கொண்டே சென்று தனது கேபினின் கதவருகில் தனது கட்டை விரலை பதித்ததும் கதவு இலகி வழி விட்டது. தனது இருக்கையில் அமர்ந்தவுடன் கண்ணாடி திரையில் அவனது அன்றைய அலுவல்கள் தோண்றின. நாளுக்கு நாள் விண்வெளியில் வெளியேற்ற பட வேண்டிய கழிவுகளின் எண்ணிக்கை அவனுக்கு கவலை அளித்தது. 2018ஆம் ஆண்டு எரிபொருளான பெட்ரோல், டீசல் தட்டுபாட்டால் விலை இந்திய ரூபாய்க்கு 1500 ஆக உயர்ந்தது. இப்படியே சென்றால் நாட்டையே அடமானம் வைக்க நேரிடும் என்று முடிவு செய்த இந்திய அரசாங்கம் தனது அனைத்து ஆராய்ச்சி கூடங்களிலும் மாற்று எரிபொருளை கண்டுபிடிக்க உத்தரவிட்டது. அதே நேரத்தில் ஜெர்மனியில் பிரபலமாகி கொண்டிருந்தது ஏர்கார். இந்திய அரசாங்கம் ஏர்கிராஃப்ட் வல்லுநர்கள், ஏவியானிக்ஸ் வல்லுநர்கள், அணுத்துறை வல்லுநர்கள் ஒருங்கிணைந்து இந்தியன் ஏர் டிராண்ஸ்போர்ட் ஆர்கனைசிர் (IATO) என்ற நிருவனைத்தை நிறுவி ஆராய்ச்சிக்களுக்கு பல மில்லியன் கோடிகளை செலவிட்டதின் விளைவாக 2030 ஆம் ஆண்டு முதல் நியூக்கிளியர் கார் உருவானது.

உற்பத்தியை பெருக்க அந்த அறிய கண்டுபிடிப்பை ஏலம் விட, ஏலத்தில் முந்தி கொண்ட கொழுத்த வெளிநாட்டு கம்பெனிகளான போடிங், ரோல்ஸ் டோஸ் ஆகியவை உற்பத்தியை பெருக்கி கொள்ளை லாபம் பெற்றது. காரின் இன்ஞ்சின்கள் வேறு வேறு கணிமங்களான யுரேனியம், தோரியம் போன்றவற்றுகாக உருவாக்கப்பட்டது. இது தான் சாக்கு என அமெரிக்கா இந்தியாவை 2008 ஆம் ஆண்டு நியுகிளியர் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட வைத்தது போல இப்பொழுதும் ஒரு ஒப்பந்தம் போட்டு இந்தியாவை அதன் யுரியேனியத்திற்காக கிட்டதட்ட அடிமை படுத்தியது. ஏர்காரில் பயன்படுத்தப்படும் நியுக்கிளியர் ஃபியூலை சுற்றி சிறந்த கோட்டிங் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு கதிர்வீச்சு வந்ததது. அதை தடுக்க அனைவரும் லெட் சீல்டுடைய ஆடையை அணிய வேண்டும் என அறிவுரத்த பட்டனர் இருந்தாலும் 2000ங்களில் தலை கவசம் அணியாதது போலவே இப்பொழுதும் லெட் சீல்டை அணியாமல் அபராதம் கட்டி கொண்டிருந்தனர் தங்கள் உடல் மெல்ல அரிக்கபடுவது அறியாமல்.

ஏர்கார் மற்றும் ஏர்பஸ்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போக, நியுக்கிளீயரின் வேஸ்ட்டும் அதிகமானது. இதற்கு இந்திய அரசாங்கம் தலையை பிய்த்து கொண்டு நியுக்கிளியர் டிஸ்போசில் கவுன்சில் என்கிற அமைப்பை நிறுவியது. புத்திசாலிதனமாக நடப்பதாக எண்ணி கொண்டு நியுக்கிளியர் குப்பையை அடர்த்தியான கான்கிரீட் குடுவைகளில் அடைத்து கடலுக்கு தள்ளியது. அது வரையில் மாசுபடாமல் இருந்து கடலும் மாசுப்பட்டு மீன்கள் செத்து மிதந்தன. என்ன செய்வது என்ற புரியாத காலத்தில் அடுத்துடத்து 20 சாட்டிலைட்களை  வெற்றிகரமாக அதன் பாதையில் செலுத்திய ஈஸ்வர், நியூகிளியரை ஸ்பேசில் டிஸ்போஸ் செய்யும் திட்டத்தை 1000 பக்கங்கள் கொண்ட புத்தகமாக அரசிடம் சமர்பித்து. அதை ஆய்வு செய்து குழு பரிந்துரை செய்து இந்திய அரசு அவனையே நியுக்கிளியர் ஸ்பேஸ் டிஸ்போசில் கவுன்சிலின் தலைவனாகக்கியதின் விளைவாக இப்பொழுது அந்த சேரில் அவன் உட்காந்திருந்தான்.

இன்றைய தேதியில் விண்வெளி போட்டியில் இந்தியாவே முதலிடத்தில் இருந்தது. அமெரிக்காவின் NASAவே நெப்டியூன் கிரகம் வரை நெப்டியூன் கிரகம் வரை செல்லகூடிய வானூர்தியை தான் உருவாக்கியிருந்தது. ஆனால் இந்தியாவின் ISROவோ நமது பால்வீதி கேலக்ஸியை தாண்ட கூடிய அளவில் உள்ள வானூர்தியை உருவாக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தது. அதன் சிறப்பு அதிகாரியாக ராக்கெட் பியுலை பற்றிய ஆராச்சியில் அதிக எடை உடைய சாட்டிலைட்களை ஏந்தி செல்லும் ராக்கெட்டுகளுக்கு பியூலை தயார் செய்யும் அனுபவம் பெற்றதால் தற்போது நாட்டில் உள்ள 5 கோடி வாகனங்கள் ஆண்டுக்கு உற்ப்பத்தி செய்யும் 100 டண் நியுகிளியர் பியூளை தயார் செய்து அதை விண்வெளிக்கு அனுப்பி சரியாக 6 மாதம் ஆகியிருந்த அன்று அதன் பாதையை TELEMETRY கருவியின் உதவியுடன் கண்ணாடி திரையில் பார்த்து கொண்டிருந்தான்.

அவன் வகுதிருந்த பால்வீதியை தாண்டியதும் பெருமூச்சு விட்டபடி தனது இருக்கையில் இருந்து எழுந்தான். எழுந்தவுடன் கண்ணாடி திரை கண்ணாடியானது. கேபினில் இருந்து வெளியே வந்து கேண்டீனுக்கு செல்லும் நகரும் படியில் ஏறி நின்றதும் அது நகர தொடங்கி கேண்டீனில் அவனை இறக்கியது. அங்கிருந்த ஒரு குழாயில் அவன் காற்றை ஊதியதும் அவனுக்கு தேவையான புரோட்டீன், விட்டமின், மினரள்கலை கணக்கிட்ட கணிணி சில மாத்திரைகளை அவனது தட்டில் கொட்டியது. விட்டமின் மாத்திரகளை விழுங்க தொடங்கிய அதே நேரம் அவன் அனுப்பிய நியூக்கிளியர் பியூல் கழிவு பெட்டகம் ஆப்ட்ரெம் கிரகத்தில் மோதி சிதறியது. அதனால் உண்டான கதிர்வீச்சு அன்கிருந்த உயிர் இனங்களை சேதபடுத்தியது. அந்த உயிரினமும் மனிதனை போன்றே இருந்தது.

அதில் ஒரு உயிரினம் ஈஸ்வரின் உருவத்தை ஒத்திருந்தது. அது வான்ஊர்தியை தொட்டு கண்களை மூடியவுடன் பூமியின் அனைத்து விசயமும் அதன் நினைவுகளில் பதிவானது. மனிதன் தோன்றியது, அவன் மற்றவர்களை அழித்தது, காடுகளை அழித்து விளை நிலமாக்கியது, ஆறுகளை பாழ்படுத்தியது, கடல்களை ஒன்றுமில்லாமல் செய்ததது என அதன் நினைவுகளில் மின்னலாய் தோன்றியது. இதற்கு மேலும் விட்டால் மற்ற கிரகங்களையும் அவ்வாறே அழிப்பான் என்று உணர்ந்ததாய் தனது விண்கலத்தில் ஏறி பூமியை நோக்கி செலுத்தியது.  மனோவேகத்தில் சென்ற அதன் விண்கலம் பூமியை நெருங்கியது. புது வித விண்கலம் வருவதை கண்ட பல்வேறு நாடுகளும் தத்தமது ஏவுகணைகளை அதன் மீது செலுத்தியது. ஆனால் அந்த களத்திற்க்கு ஒன்றும் நேரவில்லை “உங்களுக்கு உரிமை இல்லாத பொருளை அழிக்கும் மனோபாவம் கொண்ட நீங்கள் படைக்கபட்டதின் நோக்கம் என்னவென்று அறியாதவர்கள், உங்கள் காலம் முடிந்தது” என்று எண்ணி கொண்டு சிவப்பு நிற கதிரை கடலுக்குள் பாய்ச்சி விட்டு சென்றது. அது வந்து சென்ற நோக்கம் என்னவென்று அனைவரும் அறிய முற்படும் முன் பூமிக்குள் வெப்பம் அதிகரித்து கொண்டே சென்றது.

திடீரென சூரியன் எவ்வாறு பூமியை தந்ததோ அதே நிலைக்கு வெடித்து சிதறி உருமாறியது. பூமி ஆரம்ப நிலையிருந்தது ஒரு பாக்டீரியா கூட இல்லாமல்.............

செவ்வாய், 13 ஜூலை, 2010

எப்படி தான் இப்படி வெட்கம் கெட்டு இருக்காங்களோ............

கேரளா காரங்க கிட்டத்தட்ட கோமாளிங்க, ரசனை கொறஞ்சவங்க, நகைச்சுவைனா என்னானு சரியா தெரியாமா காமெடி பண்ணறவங்க எப்படினு கேக்கறவங்க தயவு செய்து ஐடியா ஸ்டார் சிங்கர் ஏசியாநெட்ல பாருங்க. தாங்க முடியலடா சாமி, இவனுங்கள என்ன தான் பண்ணறதுனே தெரியல......


மானாடா மயிலாடா மாதிரி (மானம்கெட்டனு கூட சொல்லலாம்) நிகழ்ச்சிலா தொடர்ந்திச்சினா நாம அவிய்ங்கள ரொம்ப சீக்கரம் முந்திடுவோம். எங்கள காப்பாத்த யாருமே இல்லயா...........


எதிர் கருத்து சொல்ரவங்க, திட்டறவங்க இவங்களலா ரொம்ப மகிழ்ச்சியோட எதிர்பாக்குறேன்