ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

சிறு காதல்...

இது ஒரு தொடர் தொகுப்பு.......எல்லா சொற்தொடரையும் வெவ்வேறு சமயத்தில் எழுதினேன் ஆனா கடசியா எல்லாத்தையும் படிச்சி பாத்தா எல்லா வரிகளும் தொடர்புடைய மாதிரி எனக்கு ஒரு எண்ணம்.....அத வரிச படுத்தி இருக்கேன்......


6 வயதுக்கும் குறைவான குழந்தைகளிடமும், 70 வயதுக்கும் அதிமான வயதான பெரியவர்களிடமும் பழகும் போது கடவுளின் தடம் சிறிது தெரியும் என சொல்லி கேள்வி...எனக்கு கடவுள்க்கிட்ட பழகணும்ங்கற அளவுக்கெல்லாம் ஆசையில்லங்க....ஒரு வயசு பொண்ணுகிட்ட பழகினா போதும்னு பாக்குறேன் ...ஆனா பாருங்க அதுக்குக்கூட கொடுத்து வைக்கில....
அழகியல் என்பது பார்க்கப்படும் பொருளின் தன்மையை பொறுத்து அன்று..........அது பார்க்கப்படும் பார்வையின் தன்மையை பொறுத்து....
தாய்க்கு தன் பிள்ளை...
எனக்கு என்றென்றும் நீ மட்டும்.......

எப்பொழுதும் சட்டென சுருங்கி கொள்ளும் என் முகம்......உன்னுடன் பேசும் கணங்களில் புன்னகையால் விரிந்துக்கொண்டே சென்றது என்னையும் அறியாமல்......என் புன்னகை என்றென்றும் நிலைத்திறுக்க என்னுடன் இருப்பாயா......


எங்கே உன்னை காதலித்து விடுவேனோ என்று பயம் கொள்கிறேன்......
ஆனால் அப்பயம் வேணுமென்னும் என் இதயத்திற்க்கு என்ன சொல்வேன்.......நீயே சொல்......எந்த பெண்ணை காதலிக்கிறாய் என்று கேட்கும் என்னவளிடமே எப்படி கூறுவேன்........அடியேய் நீ தான் என்று.......


என் காதலின் ஆழத்தை உணர்த்த வார்த்தை கிடைக்காத தருணங்களில் சில முத்தங்களின் சத்தம் உதவிக்கு வந்தன......


அழுதறியாத என் கண்கள் வழியே கண்ணீராக என்னுள் கரைந்த போன உன் நினைவை வெளித்தள்ள அழுகிறேன்........கண்ணீர் மட்டும் புறம் செல்ல.......என் அகமே நீயானாய் பெண்ணே......


கவிதனுலா சொல்லல சும்மா தோணிச்சி எழுதினேன்.......