ஞாயிறு, 7 மார்ச், 2010

.avi ஃபைலுக்கு எப்படி சப் டைட்டில் ஆட் பண்ணறது

நானும் நம்ப தலைங்க எழுதுற சினிமாக்கல பத்தின பதிவுகள படிச்சிட்டு நிறைய படம் தரவிறக்கம் பண்ணி வச்சி இருந்தேன் ஆனா என்ன மேட்டர்னா நமக்கு நிறுத்தி நிதானமா பேசினாலே இங்லீக்ஷ் புரியாது.

இந்த நிலைமைல snatch, lock stock and two smoking barrels மாதிரியான படங்கள எப்படி சப் டைட்டில் இல்லாம பாக்கறது, விமர்சனம் படிச்சி உடனே சுறுசுறுப்பா தரவிறக்கம் பண்ணிட்டேன். படத்த பாத்தா ஒரு எழவும் புரியல. அதனால அத அப்படியே கிடப்புல போட்டேன். அதே மாதிரி தானய தலைவி monnica bellucci நடிச்ச malena மற்றும் irreversible எல்லாம் தரவிறக்கம் பண்ணி எப்படி டா மொழி புரியாம பாக்கறதுனு எல்லா படமும் வெய்டிங் லிஸ்ட்லயே கிடந்தது.

சரி எப்படி தான் படத்துக்கு சப்டைட்டில் ஆட் பண்ணறதுனு நேத்து இணையத்துல நோண்டுனப்ப எப்படி ஆட் பண்ணரதுங்கற மேட்டர கண்டுபுடிச்சேன். டே பையா இதுல்லாம் ஜுஜூப்பி மேட்டர் நாங்க கொழந்தயா இருந்தப்பவே இதெல்லாம் தெரியும்னு பல பேர் சொல்றது கேக்குது. இருந்தாலும் எனக்கு நேத்து தானே தெரிஞ்சிது, என்னைய போல தெரியாம் சில பேர் இருக்கலாம் அவங்களுக்கு இது பயன் படும்னு நினைக்கிறேன்.

1. முதல்ல ஒரு புது folder ஓபன் பண்ணி அதுக்குள்ள இப்ப எந்த படத்துக்கு(உதாரணம்: snatch) சப் டைட்டில் ஆட் பண்ணனுமோ அத அந்த புது ஃபோல்டர்ல போட்டுடுங்க.

2. அப்புறம் http://www.divx-digest.com/software/srt2ssa.html இந்த லிங்க்குக்கு போய் அதுல srt to ssa converterனு ஒரு சாஃப்ட்வேர் இருக்கும் அத தரவிறக்கம் பண்ணி வச்சிக்கோங்க. வச்சாச்சா இப்ப நமக்கு snatch படத்தோட இங்கிலீக்ஷ் சப்டைட்டில் வேணும் அத http://www.allsubs.org/ என்கிற சைட்டுக்கு போய்ட்டு அதுலsearch ஆப்சன்ல snatch அப்புறம் language ஆப்சன்ல englishனு போட்டு தேடுனா பல செர்ச் ரிசல்ட்ஸ் வந்து நிக்கும்.

3. அந்த ரிசல்ட்ஸ் மேல மவுஸ வச்சி பாத்தா அது எந்த மாதிரி ஃபைல்னு தெரிய வரும் அதாவது .sub இல்ல .srt இப்படி நமக்கு இப்ப தேவையானது .srt file அதனால எந்த ரிசல்டுள .srtனு இருக்கோ அத download பட்டன் கிளிக் பண்ணுங்க அப்ப வேற பேஜ் ஓபன் ஆகும் அதுல இந்த .srt fileள எந்த எந்த வினாடில(டைம்ல) என்ன என்ன டயலாக் வரும்னு எழுதி இருக்கும்.

4. இப்ப நீங்க பண்ண வேண்டியது ஏற்கனவே நீங்க சப்டைட்டில் ஆட் பண்ண வேண்டிய படத்த ஒரு ஃபோல்டர்ள போட்டு வச்சி இருப்பீங்க இல்ல அந்த படத்த ஓபன் பண்ணனும். அதுல எந்த இடத்துல முதல் டையலாக் வருதோ அந்த டைம்ம நோட் பண்ணி வச்சிக்கோங்க. அப்புறம் allsubs.org ல நீங்க உங்களுக்கு தேவையான படத்த தேடி அது .srt file a இருந்தா அத டவுன்லோட் பட்டன் கிளிக் பண்ணி வச்சி இருப்பீங்கள்ல அதுல இருக்க முதல் டயலாக் டைமிங்கும், நீங்க படத்த ஓபன் பண்ணி முதல் டயலாக் டைமிங் நோட் பண்ணி இருப்பீங்கள்ள, இப்ப இது ரெண்டு டைமிங்கும் மேட்ச் ஆகுதானு பாருங்க ரெண்டும் மேட்ச் ஆச்சினா மேட்டர் ஓவர் அந்த .srt fileஅ allsubs.orgல இருந்து தரவிறக்கம் பண்ணுங்க. (அப்படி மேட்ச் ஆகலனா திரும்ப search results போய்ட்டு அதுல இருக்கிற ஒரு ஒரு .srt fileஐயும் ஓபன் பண்ணி பாத்து எதுல டயலாக் டைமிங் நீங்க வச்சி இருக்க படத்தோட டயலாக் டைமிங்கோட சரியா இருக்கோ அத டவுன்லோட் பண்ணுங்க)

5. தரவிறக்கம் பண்ணி (அது .zip இல்ல .rar ஃபார்மட்ல இருக்கும்)அதுக்குள்ள இருக்க .srt fileஅ மட்டும் drag பண்ணி நீங்க ஒரு புது ஃபோல்டர் ஓபன் பண்ணி இருந்தீங்க இல்ல அதுல போடுங்க.

6. இப்ப உதாரணம் படத்தோட பேர் snatch.aviனு இருக்கு ஆனா .srt file பேரு snatch.en.srt னு இருந்தா அதையும் snatch.srtனு மாத்தி வைங்க. ரெண்டும் ஒரே ஸ்பெல்லிங்கல இருக்கானு செக் பண்ணிட்டு படத்தையும் அந்த ஃபைலையும் close பண்ணுங்க.

7. இப்ப ஏற்கனவே டவுன்லோட் பண்ணி வச்சிருக்க srt to ssa convertera ஓபன் பண்ணி அதுல input file ஆப்சன்ல நீங்க ஏற்கனவே சேமிச்சி வச்சி இருக்க .srt fileஅ ஓபன் பண்ணுங்க டீபால்டா output file அதுவே காட்டிடும் நீங்க அத மாத்த வேண்டாம். அப்புறம் உங்களுக்கு தேவையான மாதிரி டயலாக் எழுத்து சைஸ் அது எங்க இருக்கனும் அப்படின்லா செலக்ட் பண்ணி convert பொத்தான கிளிக் பண்ணுங்க job finishedனு வரும் சில டை input file errorனு காட்டும் எனக்கு தெரிஞ்சி அது பெரிய error இல்ல படம் நல்லா தான் ஓபன் ஆகும்.

8. அவ்வளவு தாங்க இப்ப நீங்க படத்த ஓபன் பண்ணி பாத்தா படம் சப்டைட்டிலோட ஓடும்.

அப்பாடி எப்படியோ நானும் இந்த மாதிரி ஒரு பதிவ போட்டாச்சி!!!

ஏதாவது புரியலானா பின்னூட்டதில கேளுங்க, நானே ஒரு டுபாக்கூர் தான் புரியுது இருந்தாலும் என்னால முடிஞ்சத சொல்ரேன் : )

வெள்ளி, 5 மார்ச், 2010

the cure - நட்பின் ஆழம்


உங்கள் நெருங்கியவருக்கு எய்ட்ஸ் என்றால் உங்களால்(என்னால்) எந்த அளவிற்கு அவர்களிடம் பரிவு காட்டிட இயலும் அல்லது ஒன்றி உறவாடிட இயலும்.......

the cure தவறாக ரத்தம் செலுத்தப்பட்ட காரணத்தால் எய்ட்ஸ் கிருமி தொற்றி அதால் பாதிக்கபடும் டெஸ்டரும், அவனுடைய வீட்டிற்கு பக்கத்தில் புதிதாக குடிவரும் எரிக்குமான ஆழ்ந்த நட்பை புரிதலை கூறும் படம்.

கொஞ்சம் கண்டிப்பான சுயநல அம்மா எரிக்கிற்கு, தனது தோட்டதில் விளையாடும் போது பின்னால் வீட்டில் வாழும் டெஸ்டருடன் நட்பு ஏற்படுகிரது, அவனுக்கு எய்ட்ஸ் என்று அறிந்தவுடன் டெக்ஸ்டரை அதிலிருந்து எப்படியாவது குணபடுத்த வேண்டும் என உந்துதலுடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறான். சாக்கெலட் நிறைய சாப்பிட்டா குணமாய்டும்னு அத நிறைய சாப்பிட சொல்றான், தனது பாட்டி ஒரு முறை சொல்ல கேட்டதால் பல வகையான இலைகளை காய்ச்சி கசாயமாக்கி டெக்ஸ்டருக்கு கொடுக்கிறான். அப்பொழுது ஒரு முறை தவறுதலாக விச இலையை கொடுப்பதால் டெக்ஸ்டர் மருத்துவமனையில் சேர்க்கபடுகிறான். 

அச்சம்பவத்தின் மூலம் டெக்ஸ்டருக்கும், எரிக்கிற்குமான நட்பு எரிக்கின் அம்மாவிற்கு தெரிய வருகிறது. இதனை விரும்பாத எரிக்கின் அம்மா அவனை கண்டிக்கிறாள். ஆயினும் எரிக்கும், டெக்ஸ்டரும் ஆர்லியன்சில் ஒரு மருத்துவர் எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளார் என்பதை பேப்பரில் படித்து, ஒரு ஆற்றின் வழியாக ஆர்லியன்சை நோக்கி பயனபடுகின்றனர். 

ஆனால் அப்பயணத்தின் போது டெக்ஸ்டரின் உடல்நலம் கேடு அடைவதால் ஊருக்கே திரும்புகின்றனர். அங்கே டெக்ஸ்டர் தீவர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபடுகிறான். டெஸ்டரின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்களை 2 முறை ஏமாற்றி விளையாடுகிறார்கள், ஆனால் மூன்றாம் முறை ஏமாற்றும் போது அது உண்மையாக நிகழ்ந்து விடுகிறது. டெக்ஸ்டரின் மூச்சு நின்று விடுகிறது. இசையற்ற அக்காட்சி....... நீங்களே பாருங்கள்

இப்படத்தில் வரும் சலமற்ற நீரோடையை போலவே இப்படமும் செல்கிறது, அனைவரும் அந்தந்த பாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர், அதிலும் டெக்ஸ்டரின் நடிப்பு மிக சிறப்பு. எந்த உறுத்தலும் இல்லாத பிண்ணனி இசை என எல்லா விதத்திலும் ஒரு மனநிறைவு  தரகூடிய படம், நிச்சயம் காண பரிந்துரை செய்கிறேன் நண்பர்களே.

செவ்வாய், 2 மார்ச், 2010

காலம் செய்யும் கோலம்


ஹ்ம் நாம நினைக்கிறது ஒண்ணு நடக்கரது ஒண்ணு இத பல பேர் பாடிட்டாங்க அப்பலாம் அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியல, கடவுளே இந்த வெளிநாட்டு வாழ்க்கை இருக்கு பாருங்க அத என்னனு சொல்ரது.

ரொம்ப நாளா ஊருக்கு போகணும் எல்லாரையும் பாக்கணும்னு ஆச அதுக்கு ஏத்த மாதிரியே பிளான் பண்ணியாச்சி ஆனா விதி யார தான் விட்டுச்சி டிக்கெட் போட்ட அடுத்த 2வது நாளே டே வீணா போனவனே இப்ப நீ ஊருக்கு போகல டிக்கெட்ட கேன்சல் பண்ணு அப்படினு சொன்னா எப்படி இருக்கும் தெரியுமா சம்மட்டியால அடிச்ச மாதிரி இருக்கும், என்னடா இவன் எப்ப பாத்தாலும் புலம்பிக்கிட்டே இருக்கான்னு நினைக்காதீங்க சின்ன புள்ளையா இருந்தப்ப கூட முட்டாய் வாங்கி தரனு சொல்லி ஏமாத்தனப்ப கூட இவ்வளவு வருத்த பட்டது இல்ல.

அது ஏங்க அப்படி, நான் பரவாலிங்க எனக்கு தெரிஞ்ச அண்ணன் ஒருத்தர் இங்க இருக்கார், ஊர பாத்து 9 வருசம் ஆச்சி, திரும்ப எப்ப ஊருக்கு போவாரோ தெரியல. பாதி ஆயுள் தண்டனை, ஊர்ல கூட ஜெயில்ல குடும்பத்தல இருந்தவங்க வந்து பாக்க முடியும் ஆனா இங்க ஏதோ பரிதாபத்தக்கு இத சொல்லல இதோட வலி ரொம்ப அதிகம்ங்க.

இதையெல்லாம் தாங்கி தாங்க இந்த வெளிநாட்டு வாழ்க்கைய வாழ வேண்டி இருக்கு, டிக்கெட்ட மாத்துனு சொன்ன உடனேயே உடம்புல இருந்து ஏதோ போய்டிச்சி, இதோ இன்னும் 20 நாள் தான் 10 நாள் தான்னு காலண்டர ஆசையோட,ஏக்கதோட பாத்துகிட்டு இருந்தேன்ங்க ஆனா ஒரு வார்த்த எல்லாத்தையும் தகர்த்திடிச்சி அதுக்காக அழ முடியாதுல்ல.

சரி உடுங்க ஏதோ உணர்ச்சில எழுதிட்டேன், இல்ல எல்லா வெளிநாட்டு வாழ் நண்பர்கள் சார்பா எடுத்துகோங்க.

அடுத்த வாட்டி டே உனக்கு என்ன துபாய்ல இருக்கனு கலாய்க்காதீங்க, ரொம்ப தான் நொந்து போய் இருக்கோம்(கேன்)