உங்கள் நெருங்கியவருக்கு எய்ட்ஸ் என்றால் உங்களால்(என்னால்) எந்த அளவிற்கு அவர்களிடம் பரிவு காட்டிட இயலும் அல்லது ஒன்றி உறவாடிட இயலும்.......
the cure தவறாக ரத்தம் செலுத்தப்பட்ட காரணத்தால் எய்ட்ஸ் கிருமி தொற்றி அதால் பாதிக்கபடும் டெஸ்டரும், அவனுடைய வீட்டிற்கு பக்கத்தில் புதிதாக குடிவரும் எரிக்குமான ஆழ்ந்த நட்பை புரிதலை கூறும் படம்.
கொஞ்சம் கண்டிப்பான சுயநல அம்மா எரிக்கிற்கு, தனது தோட்டதில் விளையாடும் போது பின்னால் வீட்டில் வாழும் டெஸ்டருடன் நட்பு ஏற்படுகிரது, அவனுக்கு எய்ட்ஸ் என்று அறிந்தவுடன் டெக்ஸ்டரை அதிலிருந்து எப்படியாவது குணபடுத்த வேண்டும் என உந்துதலுடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறான். சாக்கெலட் நிறைய சாப்பிட்டா குணமாய்டும்னு அத நிறைய சாப்பிட சொல்றான், தனது பாட்டி ஒரு முறை சொல்ல கேட்டதால் பல வகையான இலைகளை காய்ச்சி கசாயமாக்கி டெக்ஸ்டருக்கு கொடுக்கிறான். அப்பொழுது ஒரு முறை தவறுதலாக விச இலையை கொடுப்பதால் டெக்ஸ்டர் மருத்துவமனையில் சேர்க்கபடுகிறான்.
அச்சம்பவத்தின் மூலம் டெக்ஸ்டருக்கும், எரிக்கிற்குமான நட்பு எரிக்கின் அம்மாவிற்கு தெரிய வருகிறது. இதனை விரும்பாத எரிக்கின் அம்மா அவனை கண்டிக்கிறாள். ஆயினும் எரிக்கும், டெக்ஸ்டரும் ஆர்லியன்சில் ஒரு மருத்துவர் எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளார் என்பதை பேப்பரில் படித்து, ஒரு ஆற்றின் வழியாக ஆர்லியன்சை நோக்கி பயனபடுகின்றனர்.
ஆனால் அப்பயணத்தின் போது டெக்ஸ்டரின் உடல்நலம் கேடு அடைவதால் ஊருக்கே திரும்புகின்றனர். அங்கே டெக்ஸ்டர் தீவர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபடுகிறான். டெஸ்டரின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்களை 2 முறை ஏமாற்றி விளையாடுகிறார்கள், ஆனால் மூன்றாம் முறை ஏமாற்றும் போது அது உண்மையாக நிகழ்ந்து விடுகிறது. டெக்ஸ்டரின் மூச்சு நின்று விடுகிறது. இசையற்ற அக்காட்சி....... நீங்களே பாருங்கள்
இப்படத்தில் வரும் சலமற்ற நீரோடையை போலவே இப்படமும் செல்கிறது, அனைவரும் அந்தந்த பாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர், அதிலும் டெக்ஸ்டரின் நடிப்பு மிக சிறப்பு. எந்த உறுத்தலும் இல்லாத பிண்ணனி இசை என எல்லா விதத்திலும் ஒரு மனநிறைவு தரகூடிய படம், நிச்சயம் காண பரிந்துரை செய்கிறேன் நண்பர்களே.
2 கருத்துகள்:
’ஃபிலடெல்பியா’ வில் கூட டாம் ஹான்ஸ்க்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்தும் அவன் பெற்றோர், நண்பர்கள், வக்கீல் அவன் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டிருப்பர்.’தி க்யூர்’ விமர்சனம் short and sweet...
@மயில்ராவணன்: ஆமாங்க தல நானும் ஃபிலடெல்பியா பாத்து இருக்கேன், நல்ல படம்.
இந்த படமும் ஒரு பீல் குட் படம் தான் தாரளமாக பாருங்க.
கருத்துரையிடுக