ஞாயிறு, 7 மார்ச், 2010

.avi ஃபைலுக்கு எப்படி சப் டைட்டில் ஆட் பண்ணறது

நானும் நம்ப தலைங்க எழுதுற சினிமாக்கல பத்தின பதிவுகள படிச்சிட்டு நிறைய படம் தரவிறக்கம் பண்ணி வச்சி இருந்தேன் ஆனா என்ன மேட்டர்னா நமக்கு நிறுத்தி நிதானமா பேசினாலே இங்லீக்ஷ் புரியாது.

இந்த நிலைமைல snatch, lock stock and two smoking barrels மாதிரியான படங்கள எப்படி சப் டைட்டில் இல்லாம பாக்கறது, விமர்சனம் படிச்சி உடனே சுறுசுறுப்பா தரவிறக்கம் பண்ணிட்டேன். படத்த பாத்தா ஒரு எழவும் புரியல. அதனால அத அப்படியே கிடப்புல போட்டேன். அதே மாதிரி தானய தலைவி monnica bellucci நடிச்ச malena மற்றும் irreversible எல்லாம் தரவிறக்கம் பண்ணி எப்படி டா மொழி புரியாம பாக்கறதுனு எல்லா படமும் வெய்டிங் லிஸ்ட்லயே கிடந்தது.

சரி எப்படி தான் படத்துக்கு சப்டைட்டில் ஆட் பண்ணறதுனு நேத்து இணையத்துல நோண்டுனப்ப எப்படி ஆட் பண்ணரதுங்கற மேட்டர கண்டுபுடிச்சேன். டே பையா இதுல்லாம் ஜுஜூப்பி மேட்டர் நாங்க கொழந்தயா இருந்தப்பவே இதெல்லாம் தெரியும்னு பல பேர் சொல்றது கேக்குது. இருந்தாலும் எனக்கு நேத்து தானே தெரிஞ்சிது, என்னைய போல தெரியாம் சில பேர் இருக்கலாம் அவங்களுக்கு இது பயன் படும்னு நினைக்கிறேன்.

1. முதல்ல ஒரு புது folder ஓபன் பண்ணி அதுக்குள்ள இப்ப எந்த படத்துக்கு(உதாரணம்: snatch) சப் டைட்டில் ஆட் பண்ணனுமோ அத அந்த புது ஃபோல்டர்ல போட்டுடுங்க.

2. அப்புறம் http://www.divx-digest.com/software/srt2ssa.html இந்த லிங்க்குக்கு போய் அதுல srt to ssa converterனு ஒரு சாஃப்ட்வேர் இருக்கும் அத தரவிறக்கம் பண்ணி வச்சிக்கோங்க. வச்சாச்சா இப்ப நமக்கு snatch படத்தோட இங்கிலீக்ஷ் சப்டைட்டில் வேணும் அத http://www.allsubs.org/ என்கிற சைட்டுக்கு போய்ட்டு அதுலsearch ஆப்சன்ல snatch அப்புறம் language ஆப்சன்ல englishனு போட்டு தேடுனா பல செர்ச் ரிசல்ட்ஸ் வந்து நிக்கும்.

3. அந்த ரிசல்ட்ஸ் மேல மவுஸ வச்சி பாத்தா அது எந்த மாதிரி ஃபைல்னு தெரிய வரும் அதாவது .sub இல்ல .srt இப்படி நமக்கு இப்ப தேவையானது .srt file அதனால எந்த ரிசல்டுள .srtனு இருக்கோ அத download பட்டன் கிளிக் பண்ணுங்க அப்ப வேற பேஜ் ஓபன் ஆகும் அதுல இந்த .srt fileள எந்த எந்த வினாடில(டைம்ல) என்ன என்ன டயலாக் வரும்னு எழுதி இருக்கும்.

4. இப்ப நீங்க பண்ண வேண்டியது ஏற்கனவே நீங்க சப்டைட்டில் ஆட் பண்ண வேண்டிய படத்த ஒரு ஃபோல்டர்ள போட்டு வச்சி இருப்பீங்க இல்ல அந்த படத்த ஓபன் பண்ணனும். அதுல எந்த இடத்துல முதல் டையலாக் வருதோ அந்த டைம்ம நோட் பண்ணி வச்சிக்கோங்க. அப்புறம் allsubs.org ல நீங்க உங்களுக்கு தேவையான படத்த தேடி அது .srt file a இருந்தா அத டவுன்லோட் பட்டன் கிளிக் பண்ணி வச்சி இருப்பீங்கள்ல அதுல இருக்க முதல் டயலாக் டைமிங்கும், நீங்க படத்த ஓபன் பண்ணி முதல் டயலாக் டைமிங் நோட் பண்ணி இருப்பீங்கள்ள, இப்ப இது ரெண்டு டைமிங்கும் மேட்ச் ஆகுதானு பாருங்க ரெண்டும் மேட்ச் ஆச்சினா மேட்டர் ஓவர் அந்த .srt fileஅ allsubs.orgல இருந்து தரவிறக்கம் பண்ணுங்க. (அப்படி மேட்ச் ஆகலனா திரும்ப search results போய்ட்டு அதுல இருக்கிற ஒரு ஒரு .srt fileஐயும் ஓபன் பண்ணி பாத்து எதுல டயலாக் டைமிங் நீங்க வச்சி இருக்க படத்தோட டயலாக் டைமிங்கோட சரியா இருக்கோ அத டவுன்லோட் பண்ணுங்க)

5. தரவிறக்கம் பண்ணி (அது .zip இல்ல .rar ஃபார்மட்ல இருக்கும்)அதுக்குள்ள இருக்க .srt fileஅ மட்டும் drag பண்ணி நீங்க ஒரு புது ஃபோல்டர் ஓபன் பண்ணி இருந்தீங்க இல்ல அதுல போடுங்க.

6. இப்ப உதாரணம் படத்தோட பேர் snatch.aviனு இருக்கு ஆனா .srt file பேரு snatch.en.srt னு இருந்தா அதையும் snatch.srtனு மாத்தி வைங்க. ரெண்டும் ஒரே ஸ்பெல்லிங்கல இருக்கானு செக் பண்ணிட்டு படத்தையும் அந்த ஃபைலையும் close பண்ணுங்க.

7. இப்ப ஏற்கனவே டவுன்லோட் பண்ணி வச்சிருக்க srt to ssa convertera ஓபன் பண்ணி அதுல input file ஆப்சன்ல நீங்க ஏற்கனவே சேமிச்சி வச்சி இருக்க .srt fileஅ ஓபன் பண்ணுங்க டீபால்டா output file அதுவே காட்டிடும் நீங்க அத மாத்த வேண்டாம். அப்புறம் உங்களுக்கு தேவையான மாதிரி டயலாக் எழுத்து சைஸ் அது எங்க இருக்கனும் அப்படின்லா செலக்ட் பண்ணி convert பொத்தான கிளிக் பண்ணுங்க job finishedனு வரும் சில டை input file errorனு காட்டும் எனக்கு தெரிஞ்சி அது பெரிய error இல்ல படம் நல்லா தான் ஓபன் ஆகும்.

8. அவ்வளவு தாங்க இப்ப நீங்க படத்த ஓபன் பண்ணி பாத்தா படம் சப்டைட்டிலோட ஓடும்.

அப்பாடி எப்படியோ நானும் இந்த மாதிரி ஒரு பதிவ போட்டாச்சி!!!

ஏதாவது புரியலானா பின்னூட்டதில கேளுங்க, நானே ஒரு டுபாக்கூர் தான் புரியுது இருந்தாலும் என்னால முடிஞ்சத சொல்ரேன் : )

9 கருத்துகள்:

பா.வேல்முருகன் சொன்னது…

சூப்பரப்பு..

மரா சொன்னது…

எனக்கு தெரிஞ்சி film.avi,film.srt இரண்டும் ஒரே ஃபோல்டரில் இருந்தால் சிலசமயம் தானே சப்டைட்டில் வந்துரும்., இல்லைனா விடீயோ,சப்டைட்டில் ட்ராக்ல போயி இந்த .srt ஃபைல செலக்ட் பண்ணிங்கன்னாலே போதும்னு நெனைக்கிறேன். நானு டுபாக்கூர் நெ.2 :)

பிச்சைப்பாத்திரம் சொன்னது…

use any video player which has subtitle menu facility. (i.e. VLC media player). as you said if the avi file and srt file have the same name, the player will show the subtitle automatically. otherwise we can select manually by using the menu and we can see the movie with subtitle.

சென்ஷி சொன்னது…

நல்லப்பதிவு...

மதன் சொன்னது…

@vels: நன்றிங்க

@மயில்ராவணன்: ஹி ஹி ஆமாங்க தல இருந்தாலும் இந்த டைமிங் மேட்டர் முக்கியம் இல்லாட்டி படத்துல ஒண்ணு சொல்லுவான் கீழ ஒண்ணு ஓடும். சும்மா ஒரு பில்டப்புக்கு தான் இந்த பதிவ போட்டேன் : D

@சுரேஸ்: ஆமாங்க தல உண்ம தான் ரெண்டும் செம் nameஓட இருந்தா ஓபன் ஆய்டும். இருந்தாலும் சும்மா ஒரு பரபரப்புக்கு தான் இந்த பிட்டலாம் போட்டேன் :))

@சென்சி: வாங்க தல, நன்றி

ராஜ நடராஜன் சொன்னது…

படிச்சா டுபாக்கூர் மாதிரி தெரியலையே:)

எனக்கு சப்டைட்டிலின்னாலே அலர்ஜி பேசறது புரியலன்னாக்கூட.ஆன இன்க்ளோரியஸ் மாதிரி பலமொழி கல்வைக்கு சில சமயம் தேவைப்பட்டாலும் படும்.

சாமக்கோடங்கி சொன்னது…

எனக்கு இப்பதான் தெரியும்.. நல்ல தகவல்... ரொம்ப நன்றி... டைம் கிடைக்கும்போது ட்ரை பண்றேன்..

வாழ்க.. நன்றி...

பெயரில்லா சொன்னது…

I will know, many thanks for an explanation.

பெயரில்லா சொன்னது…

Bravo, this excellent idea is necessary just by the way