ஒரு மெல்லிய இறகை போல மவுனமாக வாழ்வில் அங்கும் இங்கும் திரிந்த போது தவிழந்த இடங்களின் நினைவுகளையும் என் மனதின் எண்ணங்களையும் பதிவு செய்கிறேன்...
வெள்ளி, 20 நவம்பர், 2009
சூப்பர், பெண்டாஸ்டிக், ஜேன்சே இல்ல.................
தலைப்புல இருக்கற இந்த மூணு வார்த்தைய நீங்க எங்க கேட்ருபீங்க?????? அதே தான் குரங்காட குருவியாட பத்தி தான் சொல்ரேன், அட அட என்ன ஒரு சிந்தனை, என்ன ஒரு கருத்து, நாட்டுக்கு ரொம்ப தேவையான விசயம்.
ரெண்டு பேர் ஆடுவாங்களாம் அத பாத்து மூணு நீதிபதிகள் (சட்டம் படிக்காமலே நீதிபதி ஆய்டுலாங்க நீங்களும் அப்ளை பண்ணுங்க)தீர்ப்பு சொல்லுவாங்க. என்ன ஒரு தீர்ப்பு, அவங்க ஆடுற நடனம், அதுக்கு இவங்க லூச பயலே உங்க ஸ்டார்ட்டிங் சூப்பர், ஆனா நடுவுல தான் கொஞ்சம் சருக்கிடுச்சி, அத சரி பண்ணுங்க மத்தபடி ஜேன்சே இல்ல (என்ன ஜேன்சே இல்லனு இன்ன வரைக்கும் எனக்கு தெரியல யாராவது தெரிஞிசா சொல்லுங்க) அப்புறம் லூசு பொண்ணு உங்க ஆட்டம் பெண்டாஸ்டிக் என்ன ஒரு எனர்ஜி கடசி வரைக்கும் அந்த எனர்ஜி குறையவே இல்ல (அவங்கள boost விளம்பரத்துல நடிக்க ரெக்கமண்ட் பண்ணுங்கப்பா சச்சினுக்கும் வயசாய்டிச்சி) உடனே லூசு பையனும், லூசு பொண்ணும் மைக்க ரெண்டு கைலையும் புடிச்சி ஏதோ கடவுளே(அப்படி ஒருத்தர் இருந்தார்னா சொல்ரேன்) வந்து சொல்லர மாதிரி தேங் யு மாஸ்டர் (என்ன மாஸ்டர்னே தெரியல சாமி பரோட்டா மாஸ்டரா, டிரிள் மாஸ்டாரா இல்ல என்ன மாஸ்டர்னு தெரியல), தேங் யு மாஸ்டர்னு தலைய தாழ்த்தி சொல்லரதும் இதல்லாம் பாக்க கொடுத்து வச்சி இருக்கணும்.
அத விட ஒரு பெரும் கூத்து 2 அல்லகைங்க நின்னு இப்ப நம்ப பம்பு மேடம் என்ன சொல்லராங்கனு பாப்போம் ”பம்பு மேடம் உங்க கமெண்ட்ஸ்”. உடனே பம்பு மேடம் மைக்க புடிச்சி ”லூசு பையா இத நான் உங்க கிட்ட இருந்து எதிர் பாக்கவே இல்ல” (வேற என்ன எதிர் பாத்தாங்களோ??) என்ன ஒரு பர்மாமண்ஸ்!!! இப்ப நான் அங்க வர போறேன் அப்படினி சொல்லிக்கிட்டு அங்க வந்து அப்படியே அவங்கள கட்டி புடிப்பாங்களாம் (கொடுத்து வச்ச லூசு பய பின்ன பம்பு மேடம்ல கட்டி புடிக்கிறாங்க) உடனே கேலரில உட்காந்து இருக்கற மத்த லூசுங்களாம் ஊஊஊஊஊஊஊஊஊஊஊனு கத்துவாங்க பின்ன கத்த வேணாமா இது குரங்காட குயிலாடப்பா.......
அடுத்து நம்ப அல்லக்கைங்க சிரிச்சிக்கிட்டே (எப்ப பாத்தாலும் எப்படி தான் சிரிச்சிக்கிட்டே இருக்காங்களோ லூசுங்க தான் சிரிச்சிகிட்டே இருக்கும் ஆமா இவங்களுக்கும் லூசுக்கும் பெரிய வித்யாசம் இல்ல) கும்பா மேடம் உங்க கமெண்ட்ஸ் கும்பா மேடம் உடனே “லூசு பையா என்ன சொல்லரதுனே தெரியல (தெரியலனா வாய மூடிக்கிட்டு இருக்க வேண்டியது தானே)இப்படி ஒரு பர்ஃபாண்ஸ் வாவ் சூப்பர்” அப்படிம்பாங்க
ஹிஹி வழக்கம் போல நம்ப அல்லகைங்க சிரிச்சிக்கிட்டே நாம ஸ்கோர் என்னனு பாக்கலாம் அதுக்கு முன்னாடி ஒரு சின்ன பிரேக்
பிரேக் முடிஞிதும் ரெண்டு அல்லகைகளும் வெல்கம் பேக் டு குரங்காட குருவியாட சீசன் 4 (அது என்னங்க சீசன் என்னமோ போங்க ஒண்ணுமே புரியல) அப்படிண்டு இப்ப ஜட்ஜஸோட ஸ்கோர் கேப்போம் மாஸ்டர் உங்க ஸ்கோர் உடனே அவங்க அஞ்சி விரல காட்டுவாங்களாம் உடனே லூசு பையணும் லூசு பொண்ணும் அய்யயோ நாங்க இன்னும் எதிர்பாக்கறோம்ங்கற மாதிரி பாப்பாங்களாம் உடனே மாஸ்டர் மத்த கைல இருக்குற ஒரு ஒரு விரலா நீட்டுவாங்கலாம் (திரில் ஏத்ராங்கலாம் கருமம்டா சாமி) 10 அப்படினு சொன்ன வுடனே லூசு பையனும், லூசு பொண்ணும் ஹை ஜாலினு குதிப்பாங்களாம்.
இதே மாதிரி மத்த 2 ஜட்வும் மார்க் கொடுக்க அதுக்கும் அதே ரியாக்ஸன் எப்படி தான் வருசகணக்கா இதே ரியாக்ஸ்ன கொடுக்கறாங்களோ இதுக்காக லூசு பைனையும், பொண்னையும் பாராட்டி ஆகணும்.
இதே மாதிரி தான் எல்லாம் லூசும் டேண்ஸ் ஆடும், அதே மாதிரி தான் மார்க், ரியாக்ஸண் எல்லாம் இதையும் காலம்காலமா உட்காந்து பாத்துகிட்டு தான் இருக்கோம். கடசியா பாத்தா நாம தான் லூசுனு தோணுது.
தயவு செஞ்சி நம்பல நாமே ”நமக்கு வேற பொழுது போக்கு இல்ல இத தான் பாக்கணும்னு அப்படினு ஏமாத்திக்க வேணாம் படிக்கறதுக்கும், பாக்கறதுக்கும், கேககருதுக்கும் எவ்வள்வோ சிந்தனைய தூண்டற விசயம் இருக்கு கொஞ்சம் அதுல கவனம் செலுத்தி பாக்களாம்”.
எத்தன நாளைக்கிங்க இந்த மொக்கையெல்லாம் பாத்துகிட்டு இருக்க முடியும்.
நான் ஏதோ குரங்காட குருவியாடய மட்டும் சொல்லலங்க எல்லாம் கரும பிடிச்ச டுபாக்கூர் ஜோடி, இன்னும் என்ன என்ன எழவோ ஓடுதுங்க. எல்லாம் வெளி நாட்ட பாத்து தான் எடுக்கறாங்க அதுல இருக்குற நல்ல விசயத்த மட்டும் விட்டுடுவாங்க எல்லாரும் கஸ்ட பட்டு தான் ஆடுறாங்க பிராக்டிஸ் பண்றாங்க ஆனா அதுக்கு எதுக்கு இந்த பில்டப்னு தான் தெரியல நாட்ல அவன் அவன் எவ்வளவு கஸ்ட படறான் அதல்லாம் பாத்து ஆதங்கத்துல்ல ஏதோ எழுதி இருக்கேங்க.
பி.கு. மேல சொல்லப்பட்ட சம்பவம்(கருத்து) அனைத்தும் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுத பட்டது அல்ல.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 கருத்துகள்:
உங்களுக்கும் , அந்த நிகட்சிக்கும் , நல்ல கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆவுது... ஹ ஹா
ஆகா வினு ஏன் இப்படி இல்லங்க உண்மைலே இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு நாம முக்கியதுவம் தரது பைத்தியக்கார தனம்னு தோணுச்சி அதான் எழுதினேன்,
வருகைக்கு நன்றி அப்ப அப்ப எட்டி பாருங்கோ.....
நண்பரே சூப்பரா இருக்கு... அதை சொல்லல... நீங்க எழுதினத சொல்றேன்...
@வெறுபய: வாங்க பாஸ், மிக்க நன்றி.....
அந்த லாஸ்ட் "பி. கு." பிடிச்சிருந்துது. அப்படியே புண் படர மாதிரி சொன்னாலும் இதுங்களுக்கு எல்லாம் உரைக்கவா போகுது?
@PG: ஆமாங்க பாஸ் எப்படி சொன்னாலும் இதுங்க திருந்தாதுங்க, காறி துப்புனா ஒரு வேல திருந்திடுங்களோனு ஒரு நப்பாச தான்...
கருத்துரையிடுக