செவ்வாய், 22 டிசம்பர், 2009

தண்ணீர்.....



உலகம் முக்கால் வாசி(71%) தண்ணீரால் உருவானது எனினும் அதில் 0.6% சதவீதமே நிலத்தில் உள்ள தண்ணீர். அதில 60% நல்ல நீர் விவசாயத்துக்கு பயன் பட படுகிறது மீதம் 30% நமது இதர தேவைகளுக்கு. நான் சொல்வது உலக அளவில். அதில் 4% தான் இந்தியாவில் உள்ள தூய நீர் ஆகும். அந்த 4%த்திலும் தமிழ் நாட்டில் வேறும் 3% சதவீதமே உள்ளது. ஆக தெளிவாக நாம் உபயோகபடுத்த கூடிய நிலையில் உள்ள நீரை மிக குறைவாக, மிக மிக குறைவாக கொண்டுள்ளோம் என்பதை உணரலாம் (உணர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள படும் போது உணருவோம் நிச்சயமாக)

நாம் சற்று நெருங்கி தமிழ்நாட்டின் நீர் ஆதாரத்தை, நிலையை காண்போம்.

http://www.environment.tn.nic.in/soe/images/Waterresources.pdf

மேல் கொடுக்க பட்டுள்ள இணைப்பே தமிழ் நாட்டின் நீர் ஆதாரங்களை பற்றியும், நிலையையும் விளக்குகிறது.

நீர் ஆதாரங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் நிலத்தின் மேல் உள்ள நீர், நிலத்தின் கீழ் உள்ள நீர்.

மும்மாறி(அப்படியெனில்) பெய்த மழையும் இன்று பொய்த்து விட்டது. வருடத்திற்க்கு சராசரியாக இந்தியாவில் 1250 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. ஆனால், தமிழ் நாட்டின் சராசரி மழைபொழிவு 470 மில்லி மீட்டரே(கவனத்தில் கொள்க நாட்டின் சராசரியில் பாதி கூட இல்லை)

நிலத்தின் மேல் உள்ள நீர் ஆதாரங்களாக 17 ஆற்று படுகைகளும், 61 நீர்த்தேக்கங்களும், 41,948(தோராயமாக) ஏரிகளும்(எதுவும் நாம் உருவாக்கியது அல்ல நம் முன்னோர்கள் நமக்கு அளித்த வரம்) நம் தமிழ் நாட்டில் உண்டு (என நம்பி கொண்டிருக்கிறோம், அல்லது நம்ப வைக்க படுகிறோம், எத்தணையோ நீர் ஆதாரங்கள் பிளாட்களாகவும், பங்களாக்களாவும் மாறி விட்டது). அது தேக்க கூடிய நீரின் அளவு 27,270 மில்லியன் கியூபிக் மீட்டர்கள்(27 270 000 000 000 லிட்டர் என கணக்கில் கொள்ளலாம்) அதில் 90% சதவீதம் விவசாயத்துக்கு பயன் படுகிறது(விவசாயம் இன்னும் எத்துணை காலம் நம் நாட்டில் இருக்கும் என தெரியாது ஆகையால் நாம் கவலை கொள்ள வேண்டாம்), ஆக நாம் உபயோகிக்க மிக சொற்ப நீரே உள்ளது.

நிலத்தடி நீரின்(நீர் தேங்க கூடிய அளவு) அளவு 22,423 மில்லியன் கியூபிக் மீட்டர்கள். ஆனால், அளவுக்கு அதிகமான நீர் உரிஞ்சிததால் நம்மிடம் தற்போது மொத்த நீரின் அளவில் 40% சதவீதமே உள்ளது. பல மாவட்டங்களில் கவனிக்கதக்க அளவில் கிணறுகள் இறந்து விட்டன (எவ்வளவு தோண்டினாலும் நீர் இல்லை).

ஆனால் வரும் காலங்களில் தண்ணீரின் தேவை நிச்சயம் அதிகரிக்கும் என நீர்துறை வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.

நமக்கு தேவை அதிகமாக உள்ளது விவசாயித்திற்க்கே (நம் நாடு விவசாய நாடு என்பதை மறந்து காலங்கள் ஓடி விட்டது), விவாசய நிலங்கள் 50% கிணறுகளாலும், 30% ஆற்றாலும்(ஆற்றில் இருந்து வரும் வாய்க்கால்கள்), 20% குளங்களாலும் பாசனம் செய்ய படுகிறது.

ஆனால் பல பாசன வசதிகள் நமது அதிக தேவையால் அதனுடைய கடைசி கட்டத்தை எட்டி விட்டது(உதாரணம் 16,000 கிணறுகள் இறந்து விட்டன).

பல விதமான சீரிய நீர் (சொட்டு நீர்) பாசன முறை வந்துவிட்டாலும் இன்னும் நாம் அதன் மூலம் அல்லது அதை பற்றிய சரியான புரிதல் இல்லாததால் உபயோக்கிக்காமல் உள்ளோம்.

அரசாங்கமும், தொண்டு நிறுவனமும், நம் சந்ததியை பற்றி கவலை கொள்ளும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களும் நீர் ஆதாரத்தை காக்க போராடுகின்றனர். ம்ஹ்ம் நமக்கு டிவியும், நமது விருப்பங்களும் தான் முக்கியம் ஆதலால் இதை பற்றி எப்பொழுதும் கவலை கொள்ள வேண்டாம், நாம் அசுத்தம் கலந்த நீரை குடிக்கும் நிலை வரும் வரை அந்நிலை வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது திண்ணம்.

நம்ம ஊர்ல மழ பெய்றதே கஸ்டம் இதுல பெய்ற மழைய தேக்கி வைக்கிறது ரொம்ப கஸ்டம். இவ்வளவு கஸ்டப்பட்டு தண்ணிய சேமிச்சி வச்சா ம்ம்ம் நாம அத கண்ட கழிவுகளால (மனித கழிவு, ரசாயன கழிவு, ஆலை கழிவு எல்லாம் உள்ளடக்கம்)வீணாக்கிடுறோம்.

காடுகளை அழித்தல், அதிக படியான நீரை இரைப்பதால் உப்பு நீர் நிலத்தடி நீரில் கலத்தல் அதனால் நிலம் பாதிக்க படுதல், இப்பொழுது விவசாயித்தில் பயன் படுத்த படும் உர கழிவுகளும், நிலத்தை கையகபடுத்ததாலும் என எந்வ்வளவு முடியுமோ அந்த அளவு நிரையும், நீ ஆதாரத்தையும் அழித்து கொண்டிரிக்கிறோம்.

மரம் இல்லாததால் மழை நீர் ஓரிடத்தில் சேமிக்கபடாமல் மண்ணை அரித்து கொண்டு வீணே ஓடுகிறது. அது மட்டும் இல்லாமல் சரியாக தூர்வார படாததால் பல நீர்தேக்கங்கள், ஏரிகளும் தங்கள் நீர்தேக்க திறன் அல்லது இயல்பை இழந்து விடும் அபாயம் உள்ளது.

சென்னையில் நல்ல நீர் என ஒரு விசயமே இல்லாமல் போய் நிறைய காலம் ஆகி விட்டது.

ஆக எல்லா நீர் ஆதரங்களையும் அழித்து கொண்டு இருக்கிறோம், இது அனைத்தும் நமக்கு பெரிய விசமாக இப்பொழுது தோன்றாவிடிலும் தமிழ் நாடே இந்நிலை தொடர்ந்தால் நிச்சயம் பாலைவனம் ஆகும் என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.

மழை நீரை சேமிக்க அரசாங்கம் திட்டம் வகுத்தாலும் அதை செயல்படுத்த மக்களாகிய நாம் தான் அத்திட்டத்தை செயல்படுத்த முடியும். அது மட்டும்மின்றி நீரின் முக்கியதுவத்தையும் அதை சேமிக்கும் மற்றும் உபயோகிக்கும் முறையையும் நாம் சரி வர உணர்ந்து செயல்பட கடமை பட்டுள்ளோம் நிச்சயமாக இது நமக்காக நாமே வைத்து கொள்ள வேண்டிய ஒரு விசயமாகும்.

டாஸ்மாக் தண்ணியை பத்தி கவலை படும் நாம், உயிர் ஆதாரமான நீரை பற்றி நிச்சயம் கவலை கொள்வது நியாயம் என எண்ணுகிறேன்.


h2o வேண்டுனெமில் நாமும் கொஞ்சம் அக்கறை கொள்வது நியாயம் நண்பர்களே......

3 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

ம்ம்ம்
thodarka


plz remove சொல் சரிபார்ப்பு

மதன் சொன்னது…

எனக்கு முதல் கருத்துரை இட்ட நல்ல மனசு காரரே மிக்க நன்றி :)

மதன் சொன்னது…

நீக்கிட்டேன் பாஸ் உதவிக்கு நன்றி அப்ப அப்ப எட்டி பாருங்கோ :):)...