வியாழன், 17 டிசம்பர், 2009

11th hour - உலகம் அழிவதற்கான சாத்திய கூறுகளும் நம்முடைய அலட்சியமும்


படம் என்பது பொழுது போக்க என்பது உங்கள் கருத்து எனில் இப்படம் உங்களுக்கு நிச்சயம் ஒரு மாற்று கருத்து

எனக்கு படங்களை விமர்சனம் செய்து எழுதிய அனுபவம் இல்லை ஏன் நிறைய எழுதிய அனுபவமே இல்லை எனலாம், ஆனால் இப்படம் பற்றிய சிலருக்கு என்னால் தெரிவிக்க முடியுமானால் எனக்கு திருப்தியே.

2007ஆம் ஆண்டு வெளியான இப்படம் ஒரு மிக சிறந்த டாகுமெண்ட்ரி படம், இது படம் அல்ல நமக்கான அறிவுறத்தல்

இப்ப(பா)டத்தில் பல்வேறு இயற்கை ஆவலர்களும், இயற்கை விஞ்ஞானிகளும், விஞ்ஞானிகளும், அரசியல் தலைவர்களும், பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் நம் உலகம் அழிந்து கொண்டிருக்கும் வேகத்தையும், அதற்கான காரணத்தையும், அக்காரணம் உருவாக காரணமான நம் மனதின் அலட்சிய போக்கையும், இயற்கையை பற்றிய அறியாமையும் மிக சரியாக நமக்கு உரைக்கும் படி கூறுகிறார்கள்.

ஹாலிவுட் நடிகர் லியார்டினோ டி கேப்ரியோ இப்படத்தை விவரித்து உள்ளார்.

இப்படம் முழுக்க உண்மையால் நிறப்ப பட்டது, அப்பட்டமான உண்மைகள், வனங்களின் அழிவும், கடல், நிலம் மாசுபடுவதும், பல்வேறு வகையான உயிரினங்களின் மறைவும், அதற்கு காரணமான நம்முடைய நடவடிக்கையும் என நம்மை அறைந்து கொண்டே போகிறது..

இப்படத்தின் ஆரம்பத்தில் காண்பிக்க படும் காட்சிகளின்(பல்வேறு அழிவுகள், நிகழ்வுகள்) வேகம் நம் உலகம் அழியும் வேகத்தை ஒப்பிடுவதாக எனக்கு தோன்றுகிறது.

மரங்கள் அறுக்க படுவது நமக்கான சாவுமணி (மரங்கள் நமக்கு இலவசமாக ஒரு வருடத்திற்க்கு அளிக்கும் ஆக்ஸிஜனை நாம் செயற்கையாக தயாரித்தால் உண்டாகும் செலவு 35 ட்ரில்யன் டாலர்கள் ஆனால் உலகில் உள்ள மொத்த நாடுகளின் ஒரு வருட பட்ஜெட்டை சேர்த்தாலும் வரும் தொகை 18 ட்ரில்யன் டாலர்களே, இயற்கை நமக்கு எவ்வளவு உதவுகிறது என்பதற்க்கு இது ஒரு சிறிய உதாரணம் - டேவிட் சுசிகி, இயற்க்கை ஆவலர்).

நம் இயற்க்கையில் இருந்து எவ்வளவு வேறு பட்டு இருக்கிறோம் என்பதற்க்கு ஒரு மிக சிறந்த உதாரணம் (நாம் காலையில் எழுவதில் இருந்து உறங்கும் வரை இயற்கையோடு எத்தனை சதவீதம் தொடர்பு படுத்தி கொள்கிறோம் எனில் அது 0 சதவீதமே, செயற்கை ஒளி, ஒலி, பொருள் என எல்லாமே செயற்கை தான், இப்படி இருக்கையில் இயற்க்கையின் ஸ்பரிசத்தை மறந்தே விட்டோம்)

நமக்கு சிந்திக்க தெரியும் எனும் ஒரே காரணதுக்காக் உலகில் உள்ள அனைத்து வகை விலங்கினங்களையும் அழிப்பது எந்த அளவிற்க்கு நமக்கு உரிமை உள்ளது???? உலகம் எல்லா உயிரனங்களுக்கும் பொதுவானது என்பதை என்று தான் உணருவோமே தெரியவில்லை. நம் உலகின் சூழ்நிலைமண்டலம் மரங்கள், மனிதர்கள், விலங்குகள் என எல்லா ஜீவராசிகளும் சரி சதவீதத்தால் உண்டானதே இதில் ஏது நிலை மாற்றம் உண்டானால் என்ன ஆகும் என்பது நம் 5ஆம் வகுப்பு உயிரியல் பாட புத்தகத்திலே உண்டு.

நாம் உபயோகிக்கும் ஒவ்வொறு பொருள் உருவாவ அதே அளிவிலான 32 பொருள் குப்பை கூடைக்கு செல்லும் அதனால் எவ்வள்வு பொருள் நாம் சேர்க்கிறமோ அதை போல 32 மடங்கு குப்பையை பூமிக்கு சுமத்துகிறோம்.

வடதுருவமும், தென் துருவமுமே உலகில் விழும் சூரிய கதிர்களை பெரும் அளவிற்க்கு திரும்ப அனுப்புகிறது, ஆனால் இன்னும் 20 வருடத்தில் இரு துருவங்களும் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது நாம் இதே நிலையை கடைபிடித்தால். உலகம் உச்சகட்ட வெப்பம் அடைந்து நாம் உருகி போகலாம், இதற்க்கு முக்கிய காரணம் எண்ணேய் அல்லது கரிமலவாயுவை அதிகம் வெளிப்படுத்தும் காரணிகளே(நிலக்கரி, பெட்ரோலிய எண்ணெய்). இதன் பயன் பாட்டை குறைத்து மாற்று எரிபொருள் அல்லது புதுப்பிக்கதக்க ஆற்றலே சிறந்த தீர்வு. காற்றிலும்,தண்ணீரிலும், சூரியகதிரிலும் எண்ணிலடங்கா ஆற்றல் உள்ளது நாம் இலவசமாக பெற. கணினியுலும், ராணுவதளவாடங்களிலும் நம்மால் ஆராய்ச்சி செய்து வெற்றி பெறும் பொழுது புதுப்பிக்கதக்க சக்தியிலும் நம்மால் வெற்றி பெற முடியும் நிச்சயமாக, ஆட்சியாளர்களின் மனுமும், இதற்க்கு மேலும் நமக்கு காலம் இல்லை என்கிற நிஜமும் இதை சாத்தியம் ஆக்கும், தேவை கொஞ்சம் அக்கறை, விழிப்புணர்வுமே.


விஞ்ஞானம் நமக்கு நிறைய உதவிகளை செய்து கொண்டிருக்கிறது, ஆனால் நாம் விஞ்ஞானைத்தையும் சரியாக புரியாமல், இயற்கையையும் சரியாக உணராமல் ஒரு தற்குறி வாழ்வே வாழுகிறோம் வேதனையுடன் என கூறுகிறார் ஓர் பேராசிரியர்.

நோபல் பரிசு பெற்ற இயற்கை ஆர்வலர் வாங்கரி மாத்தாய் மரங்களின் முக்கிய நலன்ங்களை விளக்குகிறார் அக்கறையுடன். ஒரு மரம் தன் வேரில் தேக்கி வைக்கும் தண்ணீரின் அளவில் ஒரு சிறிய வெள்ளமே உருவாக கூடும், ஆக நாம் எத்துனை எத்துனை மரங்களை வெட்டுகிறோமோ அத்துனை அத்துனை வெள்ளத்திற்க்கு வழி வகுக்கிறோம்.

இப்படத்தை ஒன்றி பார்த்தால் உங்கள் உள்ளத்தில் உண்டாகும் நடுக்கத்தை தவிர்க்க இயலாது நிச்சயமாக...

இப்படம் உலகம் அழிவதற்கான சாத்திய கூறுகளை மட்டுமே விளக்கவில்லை அதில் இருந்து மீள்வதற்கான (புதுப்பிக்கதக்க ஆற்றல், பசுமை கட்டடம், மாற்று எரிபொருள், மிக முக்கியமாக நமது மனபான்மை மாற்றம்) என எல்லா முயற்ச்சிகளையும் நமக்கு முன் வைக்கிறது ஆதங்கத்துடன்.

நமது சகோதர சகோதரிகள் பலர் இயற்கைக்காக போராடி கொண்டிருக்கின்ரனர் என்பதையும் இப்படம் தெளிவுற விளக்குகிறது.

இது 11ஆம் மணி நேரம் அல்ல 11ஆம் மணி 59ஆம் மணி துளியாகும் இப்பொழுது நாம் விழிக்கவில்லை எனில இனி எப்பொழுதும் விழிக்க இயலாது.........

அடுத்த முறை ஒரு பொருளை வாங்குவதற்க்கு, அல்லது அதை குப்பையில் போடுவதற்க்கும் முன்னும் யோசித்தே செய்வோம், இது மிக அவசியமான ஒண்று.

குப்பைய சிறந்த முறையில் கையால்ளுவதும் நம் உலகை அழிவில் இருந்து மீட்கும், நமது ஒரு ஒரு செயலும் நம் உலகை காக்க வேண்டும் என்ற உன்மத்துடன் செய்ய பழகுவோம்

மிக முக்கியமாக எனது தாழ்மையான வேண்டுகோள் இப்ப(பா)டத்தைhttp://video.google.com/videoplay?docid=-2174195060267517042# ஒரு முறை காண முயற்சியுங்கள்...

நன்றி நண்பர்களே உங்கள் பொறுமைக்கும், உலகை காக்க போகும் கரங்களுக்கும்

8 கருத்துகள்:

geethappriyan சொன்னது…

மிக அருமையான விமர்சனம்.அடிக்கடி இதுபோல் எழுதுங்க

மதன் சொன்னது…

தலைவரே மிக்க நன்றீ உங்கள மாதிரி பெரிய ஆளுங்க ஆதரவு இருக்கும் போது இன்னும் நிறையா எழுத தூண்டுது அடிக்கடி வந்துட்டு போங்க தல..:))

kailash,hyderabad சொன்னது…

நன்றாக எழுதி இருக்கிறீர்கள் கண்டிப்பா பாத்துடறேன்.
Zeitgeist Addendum (பெயரே வாயில நுழையலை .) பார்த்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
உங்களோட பெட்ரோல் பற்றிய பதிவும் நல்லா இருந்தது.
தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

மதன் சொன்னது…

மிக்க நன்றி கைலாஸ் கண்டிப்பா பாத்துட்டு எழுதுறேன். நிறைய நிச்சயம் எழுதுறேன் தலைவரே. நீங்களூம் அடிக்கடி இந்த பக்கம் எட்டி பாருங்க.

மகா சொன்னது…

thanks for the nice post... keep going.......

மதன் சொன்னது…

நிச்சயமாக எழுதுறேங்க மகா வரவுக்கு நன்றி அடிக்கடி வந்துட்டு போங்க :)

சென்ஷி சொன்னது…

அருமையான பதிவு தலைவரே...

மதன் சொன்னது…

@சென்க்ஷி: வாங்க தல இந்த படத்த நிச்சயம் பாருங்க திரையில் இருந்து உங்க கண்கள அகற்ற முடியாது. அப்புறம் சார்ஜா பதிவுலக நண்பர்கள இந்த மாச முதல் நாள்னு நினைக்கிறேன் கான்கார்ட் திரையரங்கு வாசல்ல இரவு ஒரு 7 மணிக்கு பாத்தேன். பேசனும்னு நினைச்சேன் ஆனா எனக்கு யார் யாருனு சரியா அடையாளம் தெரியல எல்லாரயும் உங்க ஒரு பதிவுல உள்ள புகைப்படத்துல பாத்த நியாபகம்.

அடுத்து முறை பாத்தா நிச்சயம் ட்ரீட் கேக்குறேன் :)