வெள்ளி, 17 ஏப்ரல், 2009

தமிழ் ஹீரோகளின்(முண்ணனி நடிகர் என்பதே சரியான சொற்தொடர் என கருதுகிறேன்) சூரசம்ஹாரம்

சினிமா என்பது எவ்வகம் உருவானது என்று எனக்கு தெரியாது. ஆனால் இன்று இருக்கும் சினிமாவின் தாக்கங்கள் பற்றிய எனது சிறிய எண்ணத்தை பதிவு செய்கிறேன். இன்று இருக்கும் முண்ணனி நடிகர்களான விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிலம்பரசன், சூர்யா, ஜீவா, விஷால் ஆகிய பலர் சினிமா பின்புலம் பலமாக கொண்டவர்கள். நான் ஒரு பொறியாளன் அக வேண்டும் எனில் கண்டிப்பாக படித்து, நேர்காணலில் என்னை விற்றே ஆக வேண்டும்.


ஆனால் சினிமா முண்ணனி நடிகர்கள் தங்களது தந்தை இயக்குனரவோ நடிகராகவோ இருந்தால் போதுமானதாக உள்ளது. ஆக ஒரு நடிகராக தங்கள் தந்தையின் செல்வாக்கை உபயோகிக்கும் இவர்கள் எந்த திறமையும் இல்லாமல் பல கோடிகளை சம்பளமாக பெறுகின்றனர். இதற்காக இவர்கள் நாட்டுக்கு நன்மை செய்வதாக நினைக்க வேண்டாம். தமிழ் மக்களை குறிப்பாக இளைய சமுதாயத்தை குட்டி சுவராக்கும் பணியிலே ஈடு படுகின்றனர். தாங்கள் ஒரு பல கோடி மதிப்புள்ள வீடுகளில் வாழ, சொகுசு காரில் பயணம் செய்ய தாங்கள் நடிக்கும் படம் நன்றாக வசூல் செய்ய வேண்டும் அதற்கு படம் என அவர்கள் அடிக்கும் கூத்துக்கு நாம் நம் பாக்கெட்டில் இருந்து பணத்தை போட வேண்டும். தங்களை விட சதையை விருப்பதுடன் காட்டி நடிக்கும் நடிகைகளை நம்புகிறார்கள் என்பதே உண்மை இல்லயேல் கவர்ச்சியே இல்லாமல் நடிக்க இவர்களுக்கு துணிவும் இல்லை, திறமையும் இல்லை. எந்த பாதிப்பில் எனது தமிழ் சகோதரன் இந்த சினிமா மாயத்தில்
விழுகிறான் என தெரிய வில்லை.


சினிமா என்னும் ஊடகத்தின் வலிமை, நன்மை தெரியாதவர்களின் கையில் இறக்கும் சினிமா பரிதபமனதே. தங்கள் உழைப்பின் வலியை மறக்க வரும் எம் சகோதரனின் மனதில் விசமாய் தீய எண்ணங்களை உருவாக்க பாடுபடும் மகான்களே இந்த சினிமா விற்பனர்கள். வாழ்கையில் நாம் காண, கேட்க எந்தன் தமிழ் திருநாட்டில் என் மூதையாதர்கள் கட்டிய கோவில்களும், வடித்த சிற்பம்களும், செவியையும் உள்ளதையும் தொடும் பதிகங்களும், தேவாரமும், திருவாசகமும் உண்டென்பதை மறக்க வைத்து விட்ட புண்ணியவான்கள். எந்த ஆதங்கத்தில் இதை எழுதுகிறேன் எனில் எனது சமுதாயம் சீரழியும் ஆதங்கம்.

2 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

சினிமா வியபாரிகளுக்கே இங்கே மதிப்பு

தமிழகத்தில் கலைஞர்கள் மிக மிக குறைவு , அதிகம் வியபாரிகள்தான்

மதன் சொன்னது…

ஆமாங்க அதுவும் இவங்க பெறுகிற சம்பளம் மிக அதிகம் அதுக்கு அவங்க உழைக்கிறதும் மிக குறைவு சினிமாங்கர நல்ல ஊடகம் இப்படி இருக்கிரதுல எனக்கு வருத்தம் அத தான் பதிவு செஞ்சி இருக்கேன்.