புதன், 1 செப்டம்பர், 2010

ஒரு வசந்த காலம்...3

(இத படிக்கறதுக்கு முன்னாடி ஒரு முற ஒரு வசந்தகாலம்....யும், காலம்...2யும் படிச்சிடுங்க)

மூர்த்தி வழக்கத்த விட ரொம்ப கோவமா இருந்தான். மூர்த்திய தாண்டி போகணும்னா 2 செகண்ட் தேவ படும், வஞ்சன இல்லாம வளர்ந்து இருந்தான், எல்லார் விட்டுக்குள்ளயும் தலய குனிஞ்சி போக வேண்டிய உயரம், பாத்த உடனே எல்லா குழந்தயும் போய் ஒளிஞ்சிக்கிற அளவுக்கு முகவெட்டு, இதுக்கெல்லாம்கேத்த மாதிரி அதுக்கு பொருத்தமான வேலை //வட்டிக்கு பணம் விடுறது//. அவன் இப்ப கோவமா இருக்கறதுக்கு காரணம் யாரும் சொன்ன தேதிக்கு வட்டி கொடுக்காம போனது இல்ல, ஏன்னா வட்டிய எப்படி எந்த டைமுக்கு வசூல் பண்ணனும் அவன விட யாருக்கும் சரியா தெரியாது. ஒரு டைம் ஆட்டோ டிரைவர் கோவிந்தசாமி மூர்த்திக்கிட்ட 25,000 ரூவா அஞ்சு வட்டிக்கு வாங்கி 4 வாரம் அத கொடுக்காம இப்ப தரன் அப்ப தரன் சொல்லி டபாய்ச்சதோட இல்லாம மூர்த்தி ஆட்டோ ஸ்டேண்ட போய் கடன்+வட்டிய கேட்டப்ப அப்புறம் தரேன்னு சொல்லாம “எல்லாம் நான் தரப்ப தரேன் அப்ப வந்து வாங்கிக்க இப்படி ஆட்டோ ஸ்டேண்டுக்கெல்லாம் வந்து இம்ச பண்ணாத”னு சொன்னதுக்கு அப்ப ஒண்ணும் சொல்லாம போய்ட்டான், அடுத்த நாள் காலைல கோவிந்தசாமி எழுந்து வெளில வரலாம்னு பாத்தா அவன் வீட்டுக்கு முன்னாடி முழுசா 10 அடி ஆழம் 5 அடி அகலுத்துல ஒரு குழிய வெட்டி அதுல செப்டிக் டேங்க் வண்டிய கொண்டு வந்து குழில மேற்படி விவகாரத்த நிரப்பிகிட்டு இருந்தான் மூர்த்தி. அடுத்த 10வது நிமிசத்துல கோவிந்தசாமி கடன்+வட்டி+குழி வெட்டுன காசு+செப்டிக் டாங்க் வண்டிக்கு காசு இவ்வளவையும் கொடுத்த உடனே தான் செப்டிக் டேங்க வண்டிய அங்க இருந்து எடுத்தான், இப்படி அசால்டா கடன் வசூல் செய்றவனே இப்ப கோவமா இருக்கானா விசயம் கொஞ்சம் சீரியஸா தான் இருக்கணும்.

”டே இப்ப அந்த பொண்ணு எங்கடா இருக்கு அவங்க சித்தப்பன் காசு வாங்கிட்டு செத்துட்டான், இப்ப அந்த பொண்ணு மட்டும் தான் பணத்துக்கு காரண்டி அதுவும் நான் வேலைக்கு போய் கடன அடச்சிடிறேனு 6 மாசமா சொல்லிக்கிட்டு தான் இருக்கு ஆனா சல்லி காசு வந்த பாடில்ல இப்ப நாலு நாளா ஆள வேற காணும் என்னய என்ன கேனபயனு நினச்சிட்டாளா? கிளம்பு அவ வீட்டுக்கு போவோம்”

“மூர்த்தி அந்த பொண்ணு பாவம்டா ஏதோ வேலையா கூட வெளியூர் போய் இருக்கும் இத்தண நாள் தொனைனு இருந்தது அவங்க சித்தப்பா மட்டும் தான், இப்ப அவரும் போய்ட்டார் அதான் அந்த பொண்ணு வேலைக்கு போய் பணம் தரேன் சொல்லுதுள்ள அப்ப வாங்கிளாம்டா”

“ஏண்டா ரமேஸு ஒரு பொண்ணுன உடனே உங்களுக்குகெல்லாம் அப்படியே பாவம் பொத்துக்கிட்டு வந்துடுமே, அவ வீட்ல இருந்து எடுத்துட்டு வரதுக்கு கூட ஒண்ணும் அங்க இல்ல, அவ பாட்டுக்கு எங்கயாவது போய்ட்டா, 70,000 ரூபா, நான் என்ன மணியாட்டிக்கிட்டு போறதா? நாம ஒண்ணும் இங்க பாவபுண்ணியம் பாத்துக்கிட்டு இருக்கறதுக்கு இல்ல, காச வசூல் பண்ணி  நான் யாருக்கு பணம் கொடுக்கணும் தெரியும்ல சும்மா சொம்பிக்கிட்ட இல்ல காசு வரதுக்கு லேட் ஆகுதுனு கண்ட காரணத்த சொல்ல %ராமலிங்கம்%கிட்ட பதில் சொல்லணும், அவன்கிட்ட நான் வேல செய்றதே நமக்கு எதுவும் பிரச்சன வரகூடாதுங்கறதுக்கு தான், சொன்ன டைமுக்கு பணம் கொடுக்களனா அவன் எப்படி நடந்துகுவான்னு நினச்சி பாக்கவே முடியாது, எங்களுக்கு தெரியும் நீ பொத்திக்கிட்டு கூட வந்தா போதும்”னு கூட்டாளிங்கற இங்கிதெல்லாம் கொஞ்சமும் இல்லாம ரமேஸ இழுத்துக்கிட்டு போனான்.

%ராமலிங்கம்% கள்ளகுறிச்சி வட்டதுல விசயம் தெரிஞ்சிவங்களுக்கு கொஞ்சம் விவகாரமான பேரு. போலீஸ்க்கு தலவலி கொடுக்கரதுக்குனே ஊருக்குள்ள எப்பவும் ஒரு ஆள் இருக்கும். கள்ளகுறிச்சிக்கு ராமலிங்கம். கொஞ்சமும் கூச்சம் இல்லாம அவனுக்கு பட்டத செய்றவன். பிராந்தி கடய  ஏலம் விடறப்ப நடந்த தகறாருல அவன் உயருத்துக்கு(5 அடி 3 அங்குலம்) சம்பந்தமே இல்லாம 6 அடி 5 அங்குலத்துல இருந்த கட்டையனக்கு கழுத்து, மேல் வயிறு, கால் முட்டிக்கு பின்னாடினு மூணு இடத்துல ஆழமா கத்தி வெட்டு, இன்னும் 3 பேருக்கு சரியா மணிக்கட்டுலயும், காலுல பாதத்துக்கு மேல நரம்புலயும் வெட்டு  கொடுத்து 6 நிமிசத்தல உயிர ஊசலாட விட்டவன், அவன் எவ்வளவு வேகமா சண்ட போடுறப்ப நகருவானே அத விட வேகமா யோசிப்பான், அதுக்கு உதாரணம் 1 வருசத்துக்கு முன்னாடி நடந்த சட்டமன்ற உறுப்பினர் தேர்தல். அந்த ஏரியா ஜாதி ஓட்டு எல்லாத்தையும் வச்சி சுயேட்சியா $தணிகாசலம்$ நிக்க, அந்த ஆள எதிர்த்து ஆளுங்கட்சிய சேர்ந்த *ஊமைய்யன்* நின்னான், ஆனா ஜாதி ஓட்டு இருக்கற காரணாத்தால தொகுதி தணிகாசலத்துக்கு சாதகாமா இருந்தது. எப்படியும் இந்த தேர்தல்ல ஜெய்ச்சா தான் அரசியல் வாழ்க்க இல்ல அதே பழைய ரைஸ்மில்ல அரச்சிக்கிட்டு தான் இருக்கணும்னுங்கறத உணர்ந்து ’ராமலிங்கமே’ சரணம்னு ராமலிங்கதுக்கிட்ட வந்து ”ஏதாவது செஞ்சு என்னய ஜெய்க்க வச்சிடு உனக்கு என்ன வேணும்னாலும் செய்றேன்”:னு வாக்கு கொடுத்த உடனே, ஆத்துல மண்ணு அள்ற காண்டிராக்ட்ட ராமலிங்கத்துக்கே கொடுக்கணும்ங்கற தீர்மானபடி திட்டம் செயல்பட ஆரம்பிச்சிது.

தேர்தலுக்கு இன்னும் 3ஏ நாள் தான், என்ன பண்ணினா தணிகாசலத்த கவுக்கலாம்னு, தணிகாசலத்தோட எல்லா வீக் பாய்ண்டையும் நோட் பண்ணியும் ஒண்ணும் வேலைக்கு ஆகல, அந்த ஆள் காந்தியவாதி ஒரு லஞ்சம், ஒரு கேஸ் ஒண்ணும் இல்ல நோ பிளாக் மார்க்ஸ், ஆனா ஒரு சின்ன முள் சிக்க்கிச்சி தணிகாசலத்தோட பொண்ணு வேற ஜாதி பையன காதலிக்கிறா இந்த மேட்டர் அந்த பொண்ணோட பிரண்ட்ஸுகளுக்கே தெரியாது. ஆனா மேட்டர் is dealt by ramalingam. ராவோட ராவா தணிகாசலம் பொண்ணு காதலிக்கற பையன கொண்டு வந்து அவனுக்கு சொல்ல வேண்டிய [புத்திமதி]ய சொல்லி, தணிகாசலத்தோட பொண்ணையும் அவன வச்சி சம்மதிக்க வச்சி அடுத்தே நாளே ரிஜிஸ்ட்ர் ஆபிஸ்ல கல்யாணத்த முடிச்சி அப்படியே அத போட்டோ எடுத்து எல்லா இடத்தலயும் போஸ்டர் அடிக்க ஆட்டம் குளோஸ். எல்லா ஜாதி ஓட்டும் அப்படியே ஊமையனுக்கு மாறிடிச்சி. ராமலிங்கத்துக்கு செலவு எல்லாம் ஒரு குவாட்டர்(மாப்பிளைக்கு ஊத்தி அவன் மனச மாத்த), ஒரு தாலி, இரண்டு மாலை, 100 போஸ்டர் மட்டும் தான், இப்ப ராமலிங்கம் எப்படி யோசிப்பானு லைட்டா உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.

இந்த மாதிரி மலமுழுங்கியெல்லாம் சமாளிச்சியாகணும்ங்கறத பத்தி கொஞ்சமும் எண்ணம் இல்லாம ஒரு சின்ன தலவலி, என்ன என் ஆளு தான் ஹாஸ்பிட்டல்ல சேத்து இருப்பாங்கற சொல்லமுடியாத மகிழ்ச்சியான எண்ணம், ஒரு புன்னகையோடு கண் முழிச்சேன், பேக் கிரவுண்ட்ல //என் காதல் சொல்ல நேரமில்லை//னு பாட்டு.

வசந்தகாலம் கொஞ்சம் காத்தோடு தொடற்கிரது.

தொடரும்.............

5 கருத்துகள்:

பாரதசாரி சொன்னது…

;-) இன்னா நைனா ட்ரேக் மாறுது??

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

// பாரதசாரி கூறியது...
;-) இன்னா நைனா ட்ரேக் மாறுது??//

ஹாஹா தல லவ் சாதாரணமா ஓகே ஆச்சினா அப்புறம் அதுக்கு மதிப்பு இருக்காதுல்ல அதான்...

பாரதசாரி சொன்னது…

சினிமா மாதிரி இருக்கு....பட்டய கெளப்புங்க பாஸ்

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

// பாரதசாரி கூறியது...
சினிமா மாதிரி இருக்கு....பட்டய கெளப்புங்க பாஸ்//

ஒரு சின்ன காதல் திரில்லர் தான் தல...நன்றி

vasy சொன்னது…

kanave kalaiyathe...