செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

ஒரு வசந்த காலம்....2நான் ஒரு லூசுங்க, அவ யாரு கூட போனா, எந்த பஸ்ல போனா எதயும் பாக்காம நான் பாட்டுக்கு ‘பே’னு கைல டீ கிளாஸோடு நின்னுக்கிட்டு இருந்தேன் என்னயே மறந்து போய்.....”எப்பா சிவா டீ கிளாஸ கொடு நீ பாட்டுக்கு அத கைல வச்சி இருந்தா வர கஸ்டமருக்கு நான் என்ன கொட்டாங்குச்சியிலயா டீ கொடுக்க முடியும்”னு மணி பின்னாடி இருந்து சவுண்டு கொடுத்த உடனே தான் நிகழ்காலத்துக்கு வந்தேன்(எவன பாத்தாலும் நம்மள அசிங்கபடுத்தறதயே வேலயா வச்சி இருக்கானுங்க).

“மணி இப்ப ஒரு 2 நிமசத்துக்கு முன்னாடி ஒரு பஸு போச்சே அது எந்த ஊரு பஸ் மணி”னு நான் கேக்க அவன் வியாபார டெண்ஸன்ல இருந்திருக்கணும் வேகமா டீ ஆத்திக்கிட்டே “ஏன் சிவா நிமசத்துக்கு இந்த பக்கம் நாலு பஸ்ஸு போது, நான் வியாபாரத்த கவனிப்பேனா இல்ல பஸ்ஸு போறத கவனிப்பேனா, நீ தான் பைக் வச்சி இருக்கியே பின்னாடியே போனா எந்த பஸ்ஸுனு பாக்கலாம்ல” அப்படினு எளக்காரமா சொன்னாலும் அதுலயும் ஒரு பாய்ண்ட் இருந்தது. உடனே ஆர்வத்துல கைல இருந்த கிளாஸ அப்படியே மணிக்கிட்ட தூக்கி போட்டுட்டு (லவ் பண்ண ஆரம்பிச்சாலே இப்படில பண்ணனும் - எத்தண தமிழ் படம் பாத்திருப்போம்) வண்டிய ஸ்டார்ட் பண்ண மணி கடைல இருந்து என்ன ஏக வசனத்துல திட்டனதெல்லாம் காதுல ஒண்ணும் விழல. சின்ன சேலம் போகுற பக்கம் தான் பஸ் போச்சி, பஸ்ஸூக்கும் எனக்கும் 2 நிமிச கேப் இருந்தாலும் புடிச்சிடலாம், புடிச்சாகணும் வாழ்க்கைல ஃப்ர்ஸ்ட் டைம் காத்தடிச்சிருக்கு இத மிஸ் பண்ண கூடாது..... ரத்தத்துல ஏதோ வேகமா என்ன முருக்கிச்சி.

எப்படியும் அண்ணாநகர் ஸ்டாப்புல எல்லாம் பஸ்ஸும் நின்னு தான் போகும், மனசுக்குள்ள ஒரு பட்சி சொல்லிக்கிட்டே இருந்தது என் வாழ்க்கைல ஏதோ முக்கியமானது நடக்கபோகுதுனு, 22 பைக்கு, 6 சைக்கிள், 9 லாரி, 3 பஸ்ஸு இதையெல்லாம் தாண்டி 600 மீட்டர்ல இருந்த அண்ணாநகர் பஸ் ஸ்டாப்புக்கு என்னால முடிஞ்ச வேகத்துல போய் சேர்ந்தேன். அவள பாத்தே ஆக வேண்டிய ஆர்வம் என்னய என்ன செய்றோம்ங்கறதயே மறக்க வச்சிடிச்சி, நின்னுக்கிட்டு இருந்த 2 பஸ்ஸையும் இடது பக்கமா போய் ஜன்னலோரமா அவ இருக்காளானு பாத்தேன். ‘ப்ச்’ இல்ல மனசுலஒரு சின்ன பயம் அவள இழந்துடுவேனோனு இன்னும் அவ பேர் தெரியாது, ஊர் தெரியாது ஆனாலும் அவ என் வாழ்க்கைல கூட வரணும்ங்கற எண்ணம் மட்டும் தீர்கமா இருந்தது.

சின்னசேலம் 15 கிமீ அதுக்கு முன்னாடி ரெண்டு வழி நடுவுல பிரியும் அதுக்குள்ள எதுலயாவது வண்டி போய் இருந்திச்சினா கஸ்டம், சரி நம்ப அதிர்ஸ்டம் எவ்வளவுனு பாக்கலாம்னு தீர்மானமா வண்டிய ஓட்டினேன். என் மனசுல இருந்த படபடப்பு என் கட்ட போட்ட சட்டையுலையும், நைஞ்சு போன நீல ஜீன்ஸ் பேண்டலையும் நல்லா தெரிஞ்சிது. மணி சாயந்தரம் நாலரைங்கறதால முன்னாடி போற பஸ்ஸையோ இல்ல அதில இருக்கறவங்களையோ பாக்குறதுல பெரிய கஸ்டம் இல்ல. திரும்பவும் முகத்துல ஜில்லுனு காத்து எதிர்த்தாப்புல பஸ் அப்படியே லெஃப்ட்ல ஓவர்டேக் பண்ண //பூங்காற்றே, பூங்காற்றே பூ போலே வந்தாள் இவள்//னு பஸ்ல இருந்து பாட்டு, முன் பக்க படிக்கட்ல இருந்து பின்னாடி இருக்க 2வது ஜன்னல இருந்து கரும்பச்சை துப்பட்டா வெளில தெரிஞ்சிது. திராட்டில்ல முருக்கி ஜன்னல பாத்துகிட்டே போனேன், அவளும் பாத்தா கண்ள ஒரு டண் ஆச்சிரியம் நிச்சயம் அவ என்னை எதிர் பாக்கலுனு அவ கண்கள் சொல்லிச்சி, அவ உதடும் சிரிச்சிச்சி ரொம்ப மகிழ்ச்சியா.

இன்னும் கொஞ்சம் முருக்கி பஸ்ஸ ஓவர் டேக் பண்ணினேன், அவ தல ஜன்னல விட்டு கொஞ்சம் வெளில வந்தத கண்ணாடில பாக்க முடிஞ்சிது. திரும்பவும் பஸ்ஸுக்கு வழி விட்டேன், நான் பின்னாடி போறப்ப அவ கண்ணும் சிரிச்சிக்கிட்டே பின்னாடியே வந்துது என்ன பாத்துக்கிட்டே, இதே மாதிரி ஒரு 3 தடவ பஸ்ஸுக்கு முன்னாடியும் பின்னாடியும் போனேன். டிரைவர் உட்பட பஸ்ல இருந்த பல பேர் “கிறுக்கு பய பாரு ரோட்ல எப்படி வித்த காட்டுதுனு” 100 % நிச்சயம் நினச்சி இருப்பாங்க, அத பத்திலா யாரு கவல பட்டா. நான் பஸ்ஸுக்கு இடது பக்கம் அவள பாத்துக்கிட்டே ஓட்னப்ப, எதிர்ல இருந்த மாற்று பாதையை உபயோகிக்கவும்ங்கற தடையை நான் பாக்காதத அவ பாத்து “பாத்து ஓட்டுங்க”னு சொல்றத கேட்டு வண்டிய கட்டுபடுத்தரதுக்கு முன்னாடி, 4 விநாடில வண்டி தடுப்பு கட்டைல மோதி என் கிழிஞ்சி போன இன்னும் கிழிஞ்சி என் முட்டி ரோட்டுல தேய்க்க, இடது தோள் பட்டைல இருந்து ஏதோ பிரிஞ்சி போன மாதிரி தோண, என் தலைல ஏதோ வேகமா மோத, தூரத்துல ”டிரைவர் வண்டிய நிறுத்துங்க”னு மாலினி கத்துனது என் காதுல சன்னமா ஒலிச்சி அடங்கியது, நான் ஒரு புன்னகையோடு மயங்கியிருந்தேன்.

வசந்த காலம் தொடர்ந்தது.....

தொடரும்.......

10 கருத்துகள்:

ப.செல்வக்குமார் சொன்னது…

நான்தான் முதல் போல .. படிச்சிட்டு வரேன் ..

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@செல்வா: வாங்க பாஸ் அப்படியே பாகம் 1யையும் படிங்க......

ப.செல்வக்குமார் சொன்னது…

///(லவ் பண்ண ஆரம்பிச்சாலே இப்படில பண்ணனும் - எத்தண தமிழ் படம் பாத்திருப்போம்///
தமிழ்ப் படம் ஒண்ணு தானே வந்துச்சுங்க ..

ப.செல்வக்குமார் சொன்னது…

///”டிரைவர் வண்டிய நிறுத்துங்க”னு மாலினி கத்துனது என் காதுல சன்னமா ஒலிச்சி அடங்கியது, நான் ஒரு புன்னகையோடு மயங்கியிருந்தேன்.///
இது சொந்த கதை மாதிரி தெரியுது .. ஆணாகும் படிக்கிரக்கு நல்லாத்தான் இருக்கு ..தொடருங்க .. நானும் உங்களை தொடருகிறேன் ( follow )

பாரதசாரி சொன்னது…

ஸூப்பர் பாஸ் !!
நகைச்சுவை, எதார்த்தம் , உணர்வு எல்லாமே சரிவிகிதத்தில் இருக்கு...இன்னும் த்ராட்டில்ல முருக்குங்க...சீக்கிரமா மூன்றாம் பாகம் ரிலீஸ் பன்னுங்க.

பாரதசாரி சொன்னது…

//நான் ஒரு புன்னகையோடு மயங்கியிருந்தேன்//

supreme ending for this chapter

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@பாதசாரி:உங்க உற்சாகத்துக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி தல, அடுத்த பாகத்த இத விட இன்னும் சிறப்பா எழுத முயற்சிகிறேன்....

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@செல்வா: மிக்க நன்றி செல்வா...

vasy சொன்னது…

nanba...dubakoor kantha samy nu peru vechitu eppadi real story ah eluthu...enathu vazhthugal...

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@vasy: ஹி ஹி நம்மல எந்த பொண்ணு டா லவ் பண்ணிச்சி இது முழுக்க முழுக்க கற்பனை தான்....