சனி, 7 ஆகஸ்ட், 2010

கவித கவித....

எதிர்மறை


அவளை கவர பல முறை
      நல்லவனாக நடித்திருக்கிறேன்,
என் தந்தையின் ஆசைகளை ஒரு
      போதும் மதித்ததில்லை,
அவளின் வருகைக்காக பல மணி நேரம்
       கணக்கிழந்து போய் இருந்தது,
என் தாயின் தேவைக்கு என்னால்
       சில நிமிடங்கள் தர இயலவில்லை,
நான் அவளை கவர்ந்ததாக பிதற்றினேன்
      என் பெற்றோர் என்னை தேற்றினர்.

இயலாமை


இயலாதவர்கள் என்னிடம் யாசகம்
        கேட்ட போது அருவருத்து திரும்பிய என் முகம்
அந்த ஆபாச சுவரொட்டியை
         இமைக்காமல் நோக்கிற்று,
பசியை போக்க சில்லரையை யாசித்த அவர்கள்
         முகம் என் விலையுயர்ந்த
பதார்த்தங்கள் முன்னே நிழலாடியது,
       வியர்வை இல்லாத என் உழைப்பு
கூலியும் வியர்வை வழியும் அந்த வாயோதிகரின்
       கூலியும் ஏனோ என்னுள் குருகுருத்தது,
இத்தணை அவலங்களையும் கண்டும்
       செயலாற்றாத என் இயலாமையை
என் மனம் வெறுத்தது.

விடலை


அவள் வருகை
      பாதையை ரசிக்க வைத்தது,
ஒரு கண பார்வை
      என்னை நிலை குலைய வைத்தது,
பேசிய எண்ணிய போதெல்லாம்
      மெளனமே பாக்ஷையாக அமைந்தது,
வாய் பேசாத கதைகள்
      உன் கண்கள் பேசுதடி என்னவளே,
புரியாத சொல் புரியுதே உன் கண்ணிமைக்குள்,
       செயலிழந்து போனேனே
உன் ஓர பார்வையால்,
       புன்னகை புரியாதே மரமாவேன்,
ஆனால் என்னை பாராமல் போகாதே
        என்னை இழப்பேன்.

2 கருத்துகள்:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அய்.. கவிதை..ரைட் பாஸ்...

மதன் சொன்னது…

@பட்டாபட்டி: வாங்க பாஸு என்ன பண்ண நாம சொன்னா தான் நாம எழுதனுது கவிதைனு எல்லாருக்கும் தெரியுது அது தான் ஒரு சின்ன விளம்பரம்...