ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

ஒரு வசந்த காலம்....வாழ்க்கைல இந்த 25 26 வயசு நெருங்கறப்ப மனசுல ஒரு ஏக்கம் நம்ம யாராவது காதலிக்க மாட்டாங்களானு சரி கல்யாணம் பண்ணி அப்படியாவது காதலிக்கலாம்னா நம்ப சம்பளம் நமக்கே பத்தாம இந்தியாவோட பற்றாகுரை பட்ஜெட் மாதிரி டல்லடிக்குது இதுல ரெண்டு பேருக்கலா சரி படாது, யாராவது ஒரு தட போகுற போக்குல பாத்தா கூட அப்படியே மனசு வானத்துல பறக்குர மாதிரி இருக்கும் இன்னொரு தடவ திரும்பி பாப்பாங்கனு பாத்தா நமக்கு பன்னு தான் மிஞ்சும், மன்னிகவும் எனக்கு, சாப்பிட போனா கூட ரம்யவிலாஸ்னு பொண்ணுங்க பேரா இருக்க ஹோட்டலுக்கு, துணி எடுக்க போனா சாந்தி டெக்டைல்ஸ்னு பொண்ணுங்க பேரு இருக்க கடைக்குனு ஒரு மார்க்கமா இருந்தேன்.

யமாஹாவுல டர்ருனு வர சத்தத்த வச்சே பக்கத்து வீட்ல இருக்குற எல்லாம் நினச்சி இருப்பாங்க “தொர டுயூட்டிக்கு கிளம்பிட்டார்னு” டுயூட்டின உடனே ஏதோ கம்பேனி வேலைக்கு போறேனு நினச்சிடாதீங்க, கச்சேரி ரோட்ல இருக்க மணி டீ கடைக்கு போய் பஸ் ஸ்டாண்டுக்கு வர பொண்ணுங்கள சைட் அடிக்க தான் ஆமா நம்ப திறமைய!!!!!!!!!!!!! மதிச்சி எவன் வேல தந்தான் மெட்ராஸ்ல போய் வருசகணக்கா உட்காந்தது தான் மிச்சம். இப்படி இருக்கப்ப நமக்கும் ஒருத்தர் வேல தந்தார் துபாய்ல, அங்க ஒரு வருசம் வேல பாத்துட்டு ஊர்ல ஒரு மாச லீவ எப்படி ஓட்றது,  அதான் நேரத்த இப்படி உபயோகமா பயன்படுத்திக்கிறேன்........

ஒண்ணு ரெண்டு புள்ளைங்க நாம பைக்குல உட்காந்து டீ குடிக்கிற ஸ்டைல பாத்து அப்படியே மையமா சிரிச்சிட்டு போகும் ம்ஹ்ம் என்ன தான் வீட்ல வக்கனையா சாப்பிட்டாலும், பசங்களோட லொக்கேசன் லொக்கேசன் போய் சினிமா பாத்துக்கிட்டு, சரக்கடிச்சிட்டு சுத்தினாலும், காசு பணத்துக்கு கஸ்டம் இல்லனாலும் மனசுல ஒரு ஏக்கம்

இரு விழிகளை தேடுகிறேன், என்னை உனதாக்கி கொள்பவளே எங்கிருக்கிறாய், உனை நான் காண்பேனே இல்லை எனை நீ காண்பாயா, காலம் கசக்கிறதிடி எனை ஆட்கொண்டு விடு........”


கை விரல்கள் பிணைந்திட, கால்கள் கடற்கரை மண்ணில் புதைந்திட, என் மனம் இணைந்திட, என் உயிரில் கலப்பவளே நீ எங்கேயடி......................."

இப்படி கவித கவிதயா எழுதி திரிஞ்சிக்கிட்டப்ப தான் மாலினிய பாத்தேன், அப்படியா முகத்துல மெல்லிசா ஃபேன் போட்டாப்புல காத்து அடிச்சிது, அப்பனு பாத்து மணி ஸ்பீக்கர்ல //கண்கள் இரண்டால்// பாட்ட போட அவ பக்கத்துல இருக்க பொண்ணுக்கிட்ட பேசிக்கிட்டே திரும்பரப்ப என்ன அப்படியே லைட்டா கண்ணுக்கு கண்ணா பாக்க எப்படி இருந்திருக்கும்னு உங்களுக்கே தெரியும், நானும் அவ பஸ் ஸ்டேண்டுக்குள்ள போற வரைக்கும் கைல டீயோட அப்படியே ஆவி அதுல இருந்து என் முகத்தல அறைய அவள பாத்துக்கிட்டு இருந்தேன், யாருமே என்ன செகண்டு டைம்ல திரும்பி பாத்ததில்லு ஆனா இந்த சுடிதார் போட்ட தேவத தன் முகத்துல இருந்த முடிய அப்படியே காதோரமா மெல்ல ஒதுக்கி விட்டுகிட்டு என்ன பாத்துட்டு தலைய குனிச்சிக்கிட்டு போய்டிச்சு, இன்னும் //கண்கள் இரண்டால்// பாட்டு நிக்கல, டீ ஆவி என் முகத்துல படறதும் நிக்கல, லைட்டா காத்து என் முகத்துல படறதும் நிக்கல, என்ன தான் பாக்குற பொண்ணுங்களயெல்லாம் ஒரு மாதிரி புடிச்சி இருந்தாலும் இது என்னமோ புதுசா இருந்தது, ஒரு வேல காதலா இருக்குமோ அய்யோ environmental symptoms லா அப்படி தானே சொல்லுது.

அவள பத்தி வர்ணிக்கணும்னா வேணாம் அப்புறம் கதய படிக்காம என் ஆள பத்தி கற்பன பண்ண ஆரம்பிச்சிடுவீங்க, சரி இருந்தாலும் சொல்றேன் எனக்கே ஆச்சிரியமா தான் இருக்கு சரியா ஒரு 40 செகண்ட் தான் அவள பாத்து இருப்பேன் ஆனா அவள பத்தி இவ்வளவு விசயத்த எப்படி கவனிச்சேன்.. தெரியல. கொஞ்சமும் சுருள்லில்லாத நீளமான முடி, திருத்தமான புருவம், அதுக்கு கீழ கூர்மையான கண்ணு, அந்த காதுக்குனே செஞ்ச மாதிரி தொங்கட்டான் தோடு, அளவான உதடு, தோளின் முன் பக்கமா விடப்பட்டு இருந்த மல்லிகை சரம் தொங்க கரும் பச்சை சுடிதார் போட்டுக்கிட்டு போனா..... நீங்களே சொல்லுங்க தேவத தானே.

இப்படியே அவள பத்தி கற்பன பண்ணிக்கிட்டு இருந்தப்ப, உள்ள போனவ இப்ப ஜன்னலோர சீட்ல உட்காந்துகிட்டு பஸ்ல வெளில வந்தா திரும்பவும் என்னய பாத்துக்கிட்டே  என் முகத்துல மெல்லிய காத்து, //பூக்கள் பூக்கும் தருணம்// பாட்டு என் மனசு என்கிட்ட இல்ல 2 நிமசித்துக்கு முன்னாடி இது காதலானு யோசிச்சிக்கிட்டு இருந்தது இப்ப கன்ஃபார்ம் ஆய்டிச்சி, பஸ் போய்டிச்சி என் மனசும் தான்.....

பனி காலம் முடிந்து வசந்தகாலம் தொடங்கியது.

தொடரும்.....

7 கருத்துகள்:

பாரதசாரி சொன்னது…

ஓப்பனிங்கே அசத்தல் தான் தல ;-) ரொம்ப காக்க வெச்சிடாதீங்க அடுத்த பார்ட்டுக்கு...

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@பாதசாரி: வாங்க தல வருகைக்கு நன்றி....இப்பவே ரெடியாகிட்டு இருக்கு....

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

அடியாத்தே.. தொடர் வேறவா? கலக்குங்க ராசா

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

யார் பெத்த புள்ளை தெரியல இப்படி பொலம்புது.... சரி அடுத்த ப்குதி எழுதிட்டு சொல்லி விடுங்க வரேன்... :)))

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@கார்த்திகை பாண்டியன்: ஹாஹா வாங்க தல சும்மா ஒரு முயற்சி தான்...

@பாண்டி: ஏனுங்க ராசா இப்படி, கண்டிப்பா சொல்லி வுடுறேன் வந்து படிங்க....

vasy சொன்னது…

maalinikum madanukum oru otrumai..irandum m endra ezhuthil thodanguvathaal....

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@vasy: டே இதயெல்லாம் விளக்கமா பாரு வென்று......