புதன், 18 ஆகஸ்ட், 2010

அவள்அவள பாத்த உடனே அவள என் வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுனும்னு தோணிச்சி, வாழ்க்கைல சிலர தான் பாத்த உடனே எந்த காரணமும் இல்லாம பிடிச்சி போய்டும் இவள பிடிச்சி போன மாதிரி. அவகிட்ட எத குறிப்பா பிடிச்சி போனதுனு என்னால சொல்ல முடியல, அவங்க ஏரியாவுக்கு போனப்ப அவகூட இருந்த எல்லாரும் என்ன பாத்து முறச்சப்ப அவ மட்டும் அமைதியா என்ன பார்த்த பார்வையா? தெரியல.

எங்க வீட்ல நான் அவள வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வர போறேனு சொன்ன உடனேயே, “என்ன ஜாதி என்ன கருமம்னே தெரியல, வீட்டுக்கு கூட்டிட்டு வரானாம், காலேஜ்க்கு போனோமா படிச்சோமானு இல்லாம என்னாடா இது புது பழக்கம், கொஞ்சம் கூட சரி இல்ல பாத்துக்கோனு” ஒரே எதிர்ப்பு குரலா தான் இருந்திச்சி, ஆனா என்ன பண்ண என்னால அவள மறக்க முடியல.

காலேஜ் முடிஞ்சி அவ இருக்க தெரு பக்கமா தான் நான் வந்தாக வேண்டிய கட்டாயம், அவளும் எனக்காக காத்திருக்க மாதிரி இருந்திச்சி ஆனா எனக்கு ஒரே தயக்கம், பயம், இருந்தாலும் அவ பக்கத்துல போனேன். அவள பாத்தேன், அவளும் பாத்தா, எனக்கு என்ன பேசரதுனே தெரியல. சரினு விறுவிறுனு நடக்க ஆரம்பிச்சிட்டேன். அவளும் அமைதியா என் பின்னாடியே வந்தா. கன்ஃபோர்ம் ஆய்டிச்சி அவளுக்கு என் மேல ஒரு ஈர்ப்பு இருக்கரது.

தினமும் இது வழக்கம் ஆய்டிச்சி, நான் காலேஜ் முடிச்சிட்டு வந்தா அவ எனக்காக கரக்ட்டா அந்த தெரு முனைல நிப்பா, ரெண்டு பேரும் அந்த தெரு முனைக்கு பக்கத்துல இருக்க பார்க்ல ஒரு அரை மணி நேரம் காலார நடப்போம். பீச்சிகெல்லாம் கூட்டிட்டு போற அளவுக்கு உரிமை இல்லாத அந்த காலகட்டத்தில்  ஒரு நாள் நாங்க பழகறத எங்க அப்பா பாத்துட்டார். அங்க ஒண்ணும் சொல்லல, நேரா எங்க வீட்டுக்கு போய் என் அம்மாகிட்ட போய் “உன் புள்ள பண்ற வேலைய பாத்திய தொர ஏன் தினமும் அரை மணி நேரம் லேட்டா வரார் தெரியுமா? நாம வீட்டுக்கு கூட்டிட்டு வர கூடாதுனு சொன்னோம்ல, அது கூட சாரு பார்க்ல சுத்திகிட்டு இருக்கார், அவர் வீட்டுக்கு வரட்டும் ரெண்டுல ஒண்ணு பேசி தீர்த்துடுணம்”னு சத்தம் போட்டுக்கிட்டு இருந்தார்.

இத ஒரு மாதிரி நான் எதிர் பார்த்துக்கிட்டே தான் வீட்டுக்கு போனேன். எங்க அம்மா வாசல்லேயே என்ன நிக்க வச்சி “நில்டா அங்க, நாங்க சொன்னதுக்கு அப்புறமும் இப்படி பண்ணா என்ன அர்த்தம், ஒண்ணு அவ கழுத்தல ஏதாவது ஒண்ண கட்டி வீட்டுக்கு கூட்டிட்டு வா, இல்ல இதோட அத தல முழுகு, அத விட்டு பார்க் அங்க இங்கனு கூட சுத்திகிட்டு இருக்காத”னு சொன்ன உடனே, “ஏம்மா நிஜமா தான் சொல்றியா, கழுத்தல கட்டி தான் கூட்டிட்டு வரணும்மா?, அப்படியே கூட்டிட்டு வந்தா என்னமா தப்புனு” நான் கேக்க, “டே வீதல போறவன் எவனாவது வந்து  நாளைக்கு எதுவும் நாக்குல பல்லு படர மாதிரி பேச கூடாதுல, டே நாங்க பெரியவங்க எல்லாம் தெரிஞ்சி தான் சொல்றோம், அவ கழுத்துல கட்டி கூட்டிட்டு வந்தா என்னைக்கு நம்ப கூட தான் இருப்பா, போடா போய் சொன்னத செய்”னு சொன்ன அடுத்த நாளே கடைக்கு போய் கழுத்துல மாட்ட வாங்கிட்டேன்.

காலேஜ் முடிஞ்சி சாய்ந்தரம் போனா, எனக்காக தெருமுனைல காத்துக்கிட்டு இருந்தா, நான் பேக்ல இருந்து அத எடுத்து அவ கழுத்துல கட்டும் போது அவ என்ன எவ்வளவு பாசமா பார்த்தா தெரியுமா, என்ன யாருமே அவ்வளவு பாசமா பாத்ததுல்ல, நேரே வீட்டுக்கே கூட்டிட்டு போய்ட்டேன். அவ வந்ததுல இருந்தே வீட்ல எல்லாரும் சந்தோசம் ஆய்ட்டாங்க, எல்லார் மேலயும் ரொம்ப பாசமா இருக்கா, இப்ப எங்க அப்பா, அம்மாவுக்கு என்ன விட அவள ரொம்ப பிடிச்சி போச்சி.

அவளுக்கு பேர் கூட வச்சிட்டோம் “ரோஸி”, பேர் நல்லா இருக்குல, பொம்ள நாய்க்கு இத விட நல்ல பேர் இருந்தா நீங்களே சொல்லுங்களேன்.........

65 கருத்துகள்:

ரமேஷ் சொன்னது…

நல்லாருக்குங்க கதை...வாழ்த்துக்கள்

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@ரமேக்ஷ்: மிக்க நன்றி பாஸ்......

எஸ்.கே சொன்னது…

நல்லாயிருக்கு சார்!

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@எஸ்.கே: மிக்க நன்றிங்க பாஸ்..........

பாரதசாரி சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.அந்த படம் மட்டும் இல்லேன்னா இன்னும் thrillingஆ இருந்திருக்கும்.

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@பாதசாரி: ஏதோ புதுசா எழுதுனும்னு நானும் எழுதி இருக்கேன், அத போய் thrilling அது இதுனு சொல்லி வெக்க பட வைக்கிறீங்களே..மிக்க நன்றி பாஸ்...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

உன்ன மாதிரி எத்தனை டுபாக்கூர் பாத்து இருப்போம்... எங்களுக்கேவா?

சரி உங்க Profile படிச்சேன். Engineer போட்டு இருக்கிங்க அப்புறம் Inspector சொல்ரிங்க...நீங்க எஞ்ஜினிய்யரா? இல்ல போலீஸா?

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

" TERROR-PANDIYAN(VAS) கூறியது...
உன்ன மாதிரி எத்தனை டுபாக்கூர் பாத்து இருப்போம்... எங்களுக்கேவா?

சரி உங்க Profile படிச்சேன். Engineer போட்டு இருக்கிங்க அப்புறம் Inspector சொல்ரிங்க...நீங்க எஞ்ஜினிய்யரா? இல்ல போலீஸா?"

இந்த உலகமே டுபாக்கூர்மயம், நான் இஞ்சினியரிங் தான் படிச்சேன் ஆனா mechanical qc inspector a வேல பாக்குறேன் ராசா....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//இந்த உலகமே டுபாக்கூர்மயம், நான் இஞ்சினியரிங் தான் படிச்சேன் ஆனா mechanical qc inspector a வேல பாக்குறேன் ராசா....//

முன்னாடி இங்ஜினியார் சொன்னிங்க, அப்புற்ம் இன்ஸ்பேக்டர் சொன்னிங்க இப்போ மெக்கானிக் சொல்ரிங்க? நீங்க என்ன அன்னியனா?

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

பாஸூ நீங்களும் சார்ஜா தானா முடிஞ்சா madhanchozhan@gmail.comக்கு ஒரு பிரண்ட் இன்வைட் கொடுங்க இல்ல 050-9672870 இதுக்கு ஒரு போன போடுங்க உங்களுக்கு விளக்கமா சொல்றேன்...........

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//பாஸூ நீங்களும் சார்ஜா தானா முடிஞ்சா madhanchozhan@gmail.comக்கு ஒரு பிரண்ட் இன்வைட் கொடுங்க இல்ல 050-9672870 இதுக்கு ஒரு போன போடுங்க உங்களுக்கு விளக்கமா சொல்றேன்..........//

செல்லாது!! செல்லாது!! உலக மக்கள் உங்கள பத்தி தெரிஞ்சிக வேண்டாம? இங்கயே சொல்லுங்க.... நீங்க போலீஸா? இங்ஜினியரா? மெக்கானிக்கா?

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

சரி அப்புறம் உங்க தலையெழுத்து...BE mechanical(மெக்கானிக் இல்ல மெக்கானிக்கல் அதனால ஒரு சாய்ஸ் அவுட் ஆய்டிச்சி) engineering முடிச்சிட்டு, மெக்கானிக்கல் QC inspectorஆ(போலிஸ்ல மட்டும் தான் இன்ஸ்பெட்டர் இருக்கணும்னு அவசியம் இல்ல ரோடு இண்ஸ்பெக்டரா இருக்கலாம் இல்ல என்ன மாதிரி மெக்கானிக்கல் இண்ஸ்பெக்டராவும் இருக்கலாம் அதனால ரெண்டு சாய்ஸ் அவுட்) வேல பாக்குறேன், மீதி ஒரு சாய்ஸ் தான் இருக்கு அதான் நான்...

ப.செல்வக்குமார் சொன்னது…

///அவளுக்கு பேர் கூட வச்சிட்டோம் “ரோஸி”, பேர் நல்லா இருக்குல, பொம்ள நாய்க்கு இத விட நல்ல பேர் இருந்தா நீங்களே //
அட பாவமே ..
இங்க என்ன நடக்குது ..? இதுக்கெலாம உங்க அப்பா திட்டுனார் ..நான் என்னமோ செம கதையா இருக்கும்னு நெனச்சேன்..!!
இது ஓவர் மொக்கயாவுல இருக்கு ..?!?

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@செல்வகுமார்: ஹாஹா கதைய கதையா மட்டும் தான் பாக்கணும் பாஸ்,கதைல ஒரு டிவிஸ்ட் வேணாம் அதான்.....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

// மீதி ஒரு சாய்ஸ் தான் இருக்கு அதான் நான்..//

இப்படி தெளிவா சொல்லூங்க!! அடுத்த சந்தேகம் கேக்கலாம?

ப.செல்வக்குமார் சொன்னது…

@ டுபாக்கூர்கந்தசாமி
//ஒரு சாய்ஸ் அவுட் ஆய்டிச்சி///
//அதனால ரெண்டு சாய்ஸ் அவுட்) //
மொத்தம் மூணு ஆகுது .. அவரு கொடுத்ததும் மூணு சாய்ஸ்தான்..
அப்ப நீங்க எத சொல்ல வரீங்க ..?!

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@பாண்டியன்: ரைட்டு கும்மிய ஆரம்பிச்சிட்டீங்களா.. அப்புறம் என்ன கேக்கலாமா தாராளமா கேளுங்க....

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@செல்வா: ரெண்டு சாய்ஸ் தான் அவுட் நல்லா படிச்சி பாருங்க பாஸூ

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//உடனே எந்த காரணமும் இல்லாம பிடிச்சி போய்டும் இவள பிடிச்சி போன மாதிரி.//

நீங்கள் இங்கு இவள் என்று கூறுவது நாய் பற்றி. இவள் பிடிச்சி - நாய் பிடிச்சி.... இங்ஜினியரி முடித்த நீங்கள் நாய் பிடிக்க காரண்ம் என்ன?

ப.செல்வக்குமார் சொன்னது…

//நீங்கள் இங்கு இவள் என்று கூறுவது நாய் பற்றி. இவள் பிடிச்சி - நாய் பிடிச்சி.... இங்ஜினியரி முடித்த நீங்கள் நாய் பிடிக்க காரண்ம் என்ன?
//
இப்போ பதில் சொல்லியே ஆகணும் ..!!??

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

”நீங்கள் இங்கு இவள் என்று கூறுவது நாய் பற்றி. இவள் பிடிச்சி - நாய் பிடிச்சி.... இங்ஜினியரி முடித்த நீங்கள் நாய் பிடிக்க காரண்ம் என்ன?”

@பாண்டி: பாஸூ கதைய திரும்ப படிங்க, இஞ்சினியரிங் படிக்கறப்ப தான் கத நடக்கறதா வருது, இஞ்சினியரிங் முடிஞ்சினு இல்ல, அதால வேற ஏதாவது கேள்விய கரக்ட்டா கேளுங்க...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//பாஸூ கதைய திரும்ப படிங்க, இஞ்சினியரிங் படிக்கறப்ப தான் கத நடக்கறதா வருது, இஞ்சினியரிங் முடிஞ்சினு இல்ல, அதால வேற ஏதாவது கேள்விய கரக்ட்டா கேளுங்க...//

சரி இங்ஜினியாரிங் படிக்கும்போது நாய் பிடிக்க காரணம் என்ன?

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

சும்மா டைம்பாஸ்க்கு தான்.....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//tamizh vasipu kovil ula thanimayil sinthanai nala cinema parpathu//

அப்படியா!! மேலே குறிப்பிட்டு இருக்கும் உங்கள் பொழுதுபேக்கில் இதை சொல்லாத காரணம்?

ப.செல்வக்குமார் சொன்னது…

//அப்படியா!! மேலே குறிப்பிட்டு இருக்கும் உங்கள் பொழுதுபேக்கில் இதை சொல்லாத காரணம்?
//
வச்சோம்ல ஆப்பு ..!!

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@பாண்டி: அதாவது டைம்பாஸ்க்கு, ஹாபீஸ்க்கு நிறைய வித்தியாசம் இருக்கு, நீங்க ரொம்ப குழம்பி போய் இருக்கீங்கனு நினைக்கிறேன், அதான் உங்களால வித்தியாச படுத்த முடியல.....

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@பாண்டி: அதாவது டைம்பாஸ்க்கு, ஹாபீஸ்க்கு நிறைய வித்தியாசம் இருக்கு, நீங்க ரொம்ப குழம்பி போய் இருக்கீங்கனு நினைக்கிறேன், அதான் உங்களால வித்தியாச படுத்த முடியல.....

ப.செல்வக்குமார் சொன்னது…

@ டுபாக்கூர்கந்தசாமி
அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல ..
நீங்கதான் குழம்பிப்போய் இருக்கீங்க.
இப்ப ஒரே கம்மெண்ட இரண்டு தடவ போட்டிருக்கீங்கள்ள..
இது இரண்டும் ஒண்ணு தானே ..!!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

ஆமாம். நானும் உங்களை போல் அப்பப்ப புத்திசாலினு காட்டிக்க முயற்ச்சிகிர ஒரு முட்டாள் மனிதன் ஹிஹி.... அதனால் டைம்பாஸ், ஹாபீஸ் விளக்கி சொல்ல முடியுமா? ப்ளீஸ்...

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@செல்வா: சரி டைம்பாஸ்க்கும், விருப்பங்களுக்கும் என்ன வித்தியாசம் இல்லைனு நீங்க சொன்னா ரொம்ப உத்தமமா போகும்....ஏன்னா ரெண்டும் வேற வேறங்கரது என் கருத்து..

//அப்படியா!! மேலே குறிப்பிட்டு இருக்கும் உங்கள் பொழுதுபேக்கில் இதை சொல்லாத காரணம்?//

கேள்வி இன்னும் தெளிவா கேளுங்க....

Jey சொன்னது…

பேர்லயே டுபாக்கூர் இருக்கிறத கனிக்காம படிச்சதனால...பல்பு வாங்கிடேன், இனி இந்த சைடு வந்து படிக்க ஆரம்பிக்கும் போதே அலர்ட்டா இருக்கனும்...

அப்பறம்...இங்க என்ன நம்ம பயபூள்ளக கும்மி அதிகமாருக்கு...எலேய் பாண்டி புது ஆடா!!!!:)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ஜய்
//அப்பறம்...இங்க என்ன நம்ம பயபூள்ளக கும்மி அதிகமாருக்கு...எலேய் பாண்டி புது ஆடா!!!!:)//

நம்ம ஊர் தல அதான் சந்தேகம் கேக்கரேன்...

Jey சொன்னது…

//மீதி ஒரு சாய்ஸ் தான் இருக்கு அதான் நான்...//

அது தான் ”டுபாக்கூர்”, எப்புடீ சரியா சொன்னேனா.. மக்கா....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ஜய்
//அப்பறம்...இங்க என்ன நம்ம பயபூள்ளக கும்மி அதிகமாருக்கு...எலேய் பாண்டி புது ஆடா!!!!:)//

நம்ம ஊர் தல அதான் சந்தேகம் கேக்கரேன்...

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

" Jey கூறியது...
//மீதி ஒரு சாய்ஸ் தான் இருக்கு அதான் நான்...//

அது தான் ”டுபாக்கூர்”, எப்புடீ சரியா சொன்னேனா.. மக்கா....
"

அதான் பேர்லயே அத நாங்க வச்சிடோம்ல, தப்பு இன்னும் முயற்சி செய்ங்க.........

ப.செல்வக்குமார் சொன்னது…

சரி சரி .. போலாம் ..
அப்படியே நம்ம வீட்டுக்கும் வந்து உங்க கருத்த சொல்லுங்க ..
www.koomaali.blogspot.com

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@செல்வா: ஏற்கனவே படிக்க ஆரம்பிச்சாச்சு பாஸு

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

நான் கேட்டதை நீங்கள் விளக்கவில்லை... சரி அடுத்த கேள்வி... மேலே உள்ள படத்தி இரண்டு உருவம் உள்ளது... அதில் எது நாய்?

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@பாண்டி: கண்ணு நல்லா தெரியுற எல்லாருக்கும் எது நாய்னு தெரியும், சரி உங்களுக்கு பார்வை பிரச்சனையா இல்ல பகுத்தறிவு பிரச்சனையா தெரியல.. நாலு கால், ஒரு வாலோட இருக்கு பாருங்க அது தான் நாய்...நல்ல டாக்டரா போய் பாருங்க..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//கண்ணு நல்லா தெரியுற எல்லாருக்கும் எது நாய்னு தெரியும், சரி உங்களுக்கு பார்வை பிரச்சனையா இல்ல பகுத்தறிவு பிரச்சனையா தெரியல.. நாலு கால், ஒரு வாலோட இருக்கு பாருங்க அது தான் நாய்...நல்ல டாக்டரா போய் பாருங்க..//

கால் என்றால் பாதியில் ஒரு பாகம்.. நாலு (4) கால் (1/4) = 1 . வாலோட... வால் (wall) என்றால் சுவை... அங்கு எந்த ஒன்றும் சுவரேடு இல்லையே??

(என்ன பாஸ் டென்ஷ்ன் அகிடிங்க?? சரி சரி டைம் இருந்த வீட்டுகு வாங்க.. www.terror-pandian.blogspot.com)

cho visiri சொன்னது…

Good, dear.

Please keep writing more.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

நான் போய் சோறூ கிடைக்குத பாக்கரேன்... நம்ம ஊர் உங்களுக்கு தெரியாத.... டாடா... பை...

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

"கால் என்றால் பாதியில் ஒரு பாகம்.. நாலு (4) கால் (1/4) = 1 . வாலோட... வால் (wall) என்றால் சுவை... அங்கு எந்த ஒன்றும் சுவரேடு இல்லையே??

(என்ன பாஸ் டென்ஷ்ன் அகிடிங்க?? சரி சரி டைம் இருந்த வீட்டுகு வாங்க.. www.terror-pandian.blogspot.com)"

ச்செச்சே டெண்ஸன் ஆகியிருந்தா முதல்லயே ஆகியிருக்கணும், கும்மி நல்லா இருந்திச்சி அதான் கண்டினியூ பண்னேன். அப்புறம் உங்க கடசி கேள்விக்கும் பதில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன். நான் உடல் உறுப்ப சொன்னேன் பாஸ். நீங்க வேற விதமா எடுத்துக்கிட்டீங்க போல, சரி கண்டிப்பா வந்து படிக்கிறேன்....

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

//cho visiri கூறியது...
Good, dear.

Please keep writing more.//

மிக்க நன்றி பாஸூ...

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

” TERROR-PANDIYAN(VAS) கூறியது...
நான் போய் சோறூ கிடைக்குத பாக்கரேன்... நம்ம ஊர் உங்களுக்கு தெரியாத.... டாடா... பை...”

ஓகே ஓகே போய் சாப்பிடுங்க...நான் நோன்புல இருக்கேன்... முடிஞ்சா வந்து கும்மிய கண்டினியூ பண்ணுங்கோ... :-)

ப.செல்வக்குமார் சொன்னது…

@டுபாக்கூர்கந்தசாமி
இன்னும் நம்ம வீட்டுக்கு வந்த மாதிரி தெரியலையே ..??

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//ஓகே ஓகே போய் சாப்பிடுங்க...நான் நோன்புல இருக்கேன்... முடிஞ்சா வந்து கும்மிய கண்டினியூ பண்ணுங்கோ... :-)//

லேட்டா போனதால கடை அடச்சிடான்... அவ்வ்வ்வ்வ்வ்

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@பாண்டி: அவ்வ்வ்வ்வ்வ் இன்னும் டியூட்டி முடியலயா...

ப.செல்வக்குமார் சொன்னது…

//@பாண்டி: அவ்வ்வ்வ்வ்வ் இன்னும் டியூட்டி முடியலயா...
///
இனிமே தானா ஆரம்பிக்கப்போறோம் ..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

அடுத்த கேள்வி

1. நாலு கால் உள்ளது நாய்? அங்கு இரண்டு கால் விலங்கு இருக்கிரது அதன் பெயார் என்ன?

2. அந்த விலங்கு தலையில் இருக்கும் சடை பெயார் என்ன?

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

”TERROR-PANDIYAN(VAS) கூறியது...
அடுத்த கேள்வி

1. நாலு கால் உள்ளது நாய்? அங்கு இரண்டு கால் விலங்கு இருக்கிரது அதன் பெயார் என்ன?

2. அந்த விலங்கு தலையில் இருக்கும் சடை பெயார் என்ன?”

உங்களுக்கும் ரெண்டு கால் தான் இருக்குனு நம்புறேன் :-P, அப்படினா அந்த விலங்கோட பேரு என்னானு யோசிச்சி பாருங்க இல்ல ஒழுங்க பள்ளிகூடம் போய் படிங்க பாஸ்...தலைல இருக்கறது சடைனு நீங்களே சொல்லிட்டீங்க அப்புறம் என்ன கேள்வி பாஸூ...

“ ப.செல்வக்குமார் கூறியது...
//@பாண்டி: அவ்வ்வ்வ்வ்வ் இன்னும் டியூட்டி முடியலயா...
///
இனிமே தானா ஆரம்பிக்கப்போறோம் ..


முடிஞ்ச வரைக்கும் தண்ணிய குடிச்சிட்டு ஆரம்பிங்க...

ப.செல்வக்குமார் சொன்னது…

///முடிஞ்ச வரைக்கும் தண்ணிய குடிச்சிட்டு ஆரம்பிங்க...
///
முடிஞ்சா அப்புறம் எப்படி தண்ணிய குடிக்கிறது ..?!!?

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

” ப.செல்வக்குமார் கூறியது...
///முடிஞ்ச வரைக்கும் தண்ணிய குடிச்சிட்டு ஆரம்பிங்க...
///
முடிஞ்சா அப்புறம் எப்படி தண்ணிய குடிக்கிறது ..?!!?”

முடிஞ்ச வரைக்கும்னு தான் பாஸு சொல்லி இருக்கேன், முடிஞ்ச அப்புறம்னு சொல்லல, இல்ல தெரியாம தான் கேக்குறேன் ஏன் இந்த ஆர்வ கோளாறு...அதுக்கு தான் சொன்னேன் தண்ணிய குடிங்க.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//உங்களுக்கும் ரெண்டு கால் தான் இருக்குனு நம்புறேன் :-P, அப்படினா அந்த விலங்கோட பேரு என்னானு யோசிச்சி பாருங்க இல்ல ஒழுங்க பள்ளிகூடம் போய் படிங்க பாஸ்...தலைல இருக்கறது சடைனு நீங்களே சொல்லிட்டீங்க அப்புறம் என்ன கேள்வி பாஸூ...//

பதில் தவறூ... எனக்கு 2 கால் என் பெயார் டெரர்.. உங்கலுக்கு 2 கால் உங்கள் பெயார் டுபாக்கூர்... அது போல் அந்த விலங்கு பெயார் என்ன?

சடை என்பது பொது பெயர்... இந்த வித சடைக்கு என்ன பெயார்? ஒற்றை சடை, இரட்டை சடை, பின்னச் சடை... இந்த சடை நான் சொன்ன 3ம் இல்ல...சரியான பெயர் கூரவும்...

ப.செல்வக்குமார் சொன்னது…

சரி சரி .. அப்புறம் பார்க்கலாம் ..
நான் கிளம்புறேன் . ஆணி புடுங்க கூப்பிடறாங்க ..!!

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

//பதில் தவறூ... எனக்கு 2 கால் என் பெயார் டெரர்.. உங்கலுக்கு 2 கால் உங்கள் பெயார் டுபாக்கூர்... அது போல் அந்த விலங்கு பெயார் என்ன?//

ம்ஹ்ம் தப்பு டெரரும் சரி, டுபாக்கூரும் சரி காரண பெயர், ஆனா நீங்க கேட்டது உருவ பேர் அதாவது நாம் இருவரும் ஆண் மனித இனம், படத்தில் இருக்கும் உருவம் பெண் மனித இனம்...

//சடை என்பது பொது பெயர்... இந்த வித சடைக்கு என்ன பெயார்? ஒற்றை சடை, இரட்டை சடை, பின்னச் சடை... இந்த சடை நான் சொன்ன 3ம் இல்ல...சரியான பெயர் கூரவும்...//

பின்னபடாத கூந்தல்...

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

”ப.செல்வக்குமார் சொன்னது…
சரி சரி .. அப்புறம் பார்க்கலாம் ..
நான் கிளம்புறேன் . ஆணி புடுங்க கூப்பிடறாங்க ..!!”

ஓ அப்ப நீங்க என்ன புடு%கியா..... சரி சரி இனிமே நீங்களே அங்க அங்க போய் பல்பு வாங்காதீங்க....அவ்வ்வ்வ்வ்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//காரண பெயர்,//

நாலு கால் உள்ளது நாற்க்காலி. இது காரண பெயார். அப்படியானால் நீங்கள் டுபாக்கூரா?

//பின்னபடாத கூந்தல்..//

பதில் தவறு. பின்னபடாத கூந்தல்...தலைவிரி கோலம்.

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

” TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//காரண பெயர்,//

நாலு கால் உள்ளது நாற்க்காலி. இது காரண பெயார். அப்படியானால் நீங்கள் டுபாக்கூரா?”

அப்ப நீங்க என்ன டெரர்ரா இத கேக்கும் போதே என்னால சிரிக்காம இருக்க முடியல...டெரர்

”//பின்னபடாத கூந்தல்..//

பதில் தவறு. பின்னபடாத கூந்தல்...தலைவிரி கோலம்.”

ம்ஹ்ம் படத்துல இருக்க உருவத்த கூர்ந்து பாருங்க அது தலைவிரி கோலம் அல்ல...பின்னபடாத கூந்தல் தான்....

harini சொன்னது…

மக்கா பாண்டி ஆடுயும் அறுத்து கைமாவும் போட்டு முடிச்சாச்சா....
ராமசன் நோன்ம்பு முடிச்சாச்சா

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

60......

இன்னைக்கு இது போதும்... படத்துல இன்னு சந்தேகம் இருக்கு... அதுக்கு அப்புற்ம் பதிவுல சந்தேகம்... கேப்பேன்... okva??

harini சொன்னது…

மக்கா பாண்டி ஆடுயும் அறுத்து கைமாவும் போட்டு முடிச்சாச்சா....
ரம்ஜான் நோன்ம்பு முடிச்சாச்சா

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

” TERROR-PANDIYAN(VAS) கூறியது...
60......

இன்னைக்கு இது போதும்... படத்துல இன்னு சந்தேகம் இருக்கு... அதுக்கு அப்புற்ம் பதிவுல சந்தேகம்... கேப்பேன்... okva??”

இன்னைக்கு ரொம்ப தான் முக்கிட்டீங்களோ?/// ரைட்டு கேளுங்க....

“ harini கூறியது...
மக்கா பாண்டி ஆடுயும் அறுத்து கைமாவும் போட்டு முடிச்சாச்சா....
ரம்ஜான் நோன்ம்பு முடிச்சாச்சா”

இது யாரு புதுசா ஓ கும்பல்ல கோயிந்தா போடறவரா வாங்க பாஸ்...கல்யாணம் ஆனதெல்லாம் சாதனையா போட்டவர்ல வாங்க பாஸூ..

Jey சொன்னது…

என்னப்பா டுபாக்கூர்கந்தசாமி, நன் வந்து குமிட்டு போனதுக்கு, பதி வந்து கும்மினியே , அது மாதி , நான் உனக்கு ஃபாலோவர் ஆகிட்டு, ஓட்டு போட்டேனே..அத மட்டும் பதிலுக்கு செய்யலை.....ஞாயம்னு ஒன்னு இருக்கா இல்லையா....

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி சொன்னது…

சூப்பர்பா..