வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

தேரையும் நானும்




விடுதியில் தங்கி படிப்பதில் பல செளகரியங்கள் உண்டு நினைத்த நேரத்திற்கு எழலாம், சாப்பிடலாம், சட்டை அழுக்கென்றால் நண்பன் சட்டையை அணிந்து கொள்ளலாம், யார் கட்டுபாட்டிலும் இல்லாமல் இருக்கலாம் இப்படியாக பல உள்ளது. ஆனாலும் சில அசெளகரியங்களும் இருக்க தான் செய்கிறது. அதிலும் குளிப்பதற்காக காத்திருக்க வேண்டியது மிக பெரிய கொடுமை. இருக்கும் 45 பேருக்கு 5 குளியல் அறை தான் இருக்கும், அதிலும் உள்ளே ஒருவன் குளித்து கொண்டிருப்பான். அவனுக்கு அடுத்ததாக குளிக்க இருவர் காத்திருப்பார்கள்.

அன்று தேர்வு நாள் தாமதாக குளிக்க சென்றது என் என்னுடைய தவறு தான். தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக குளிக்க சென்றேன். நான்கு பாத்ரூம் பூட்டியிருந்தது. ஒன்று மட்டும் எனக்காக காத்திருப்பது போன்று திறந்திருந்தது. என் அதிர்ஸ்டத்தை மெச்சி கொண்டே உள்ளே சென்றேன். எங்கள் விடுதி பாத்ரூமில் குழாய் சுவரிலிருந்து இரண்டடி வெளியே நீட்டி கொண்டிருக்கும். அதற்கு நேர் கீழே தண்ணீர் செல்வதர்கு சிறிய வழி (பள்ளம்) இருக்கும். அது எல்லா பாத்ரூமையும் கடந்து கடைசியாக பெரிய குழாய் வழியாக வெளியே செல்லும்.

அன்று என் போதாத காலம் போல என் நண்ப சிகாமணி ஒருவன் கதவை தட்டி என்னை சீக்கரம் வருமாறு அழைக்க, நான் கொஞ்சம் அதிகமாக சவுண்டு கொடுத்ததின் விளைவாக அந்த மகராசன் சத்திமில்லாமல் நான் இருந்த அறையின் கதவை பூட்டி விட்டு சென்று விட்டான். அது தெரியாமல் முதலில் நான் உடம்பில் தண்ணீர் ஊற்றி கொள்ளும் பொழுது என் பின்னால் ஏதோ அசைவு தெரிந்து பின்னால் திரும்ப “ ஆகா! என் பரம வைரியான தேரையார் சுவற்றில் ஒட்டி கொண்டிருந்தார்” எனக்கு எப்போதுமே தேரையின் மேல் அருவருப்பு கலந்த பயம் உண்டு. இவர் வெளிர் மஞ்சள் நிறத்துடன் என்னையே பார்த்து சிரிப்பது போன்று தோன்றியது.

மெதுவாக தாழ்ப்பாளை நீக்கி வெளியே போகலாம் என்றால் வெளியே இருக்கும் கிராதகன் கதவை பூட்டி இருந்தது தெரிந்தது. கெஞ்சலாக “மச்சான்! கதவ திறடா உள்ளே தேரை இருக்குதுடா” என்று சொல்ல அவன் குக்ஷியாகி இருக்க வேண்டும் பலத்த சிரிப்புடன் “ நல்லா விளையாடுடா மாப்ளே” என்று கொக்கரித்தான், வேறு வழி இல்லை இங்கேயே தான் குளித்தாக வேண்டும் இல்லையேல் தேர்வுக்கு தாமதமாக தான் சொல்ல நேரிடும் என்று உணர்ந்தவனாய் மெல்ல தண்ணீரை ஊற்ற ஆரம்பித்தேன். அது வரை அமைதியாக இருந்த தேரையார் மெல்ல அங்குமிங்கும் தாவ ஆரம்பித்தார். நான் அமைதியாக இருந்தால் அவரும் அமைதியாக இருப்பார், நான் அசைவு காட்டினால் அவரும் காண்பிப்பார்.

இவரை வெளியே அனுப்பினால் தான் நான் நிம்மதியாக குளிக்க முடியும். ஆனால் கதவும் பூட்டியிருக்கிறது, வெளியா இவரை தள்ள ஒரே வழி தண்ணீர் செல்லும் வழி தான். அவர் மேல் மக்கில் இருந்த தண்ணீரை ஊற்ற அவர் மிக வேகமாக அங்குமிங்கும் தாவ ஆரம்பித்தார். நான் பந்தடி விளையாட்டில் பந்தில் அடிபடுவதில் இருந்து லாவகமாக விலகும் திறமசாலியாக இருப்பதால் அவரிடம் இருந்து மூன்று முறை தப்பி விட்டேன். அதற்குள் அவரும் அமைதியாகி விட்டார். எனக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது. ஒரு முடிவுக்கு வந்தவனாய் மெல்ல குழாயை திறந்து விட்டேன். வாளி நிரம்ப ஆரம்பித்தது. இவ்வளவு நேரம் விடாப்பிடியாக சுவற்றில் ஒட்டி இருந்தவர் இப்போது கொஞ்சம் மனமிறங்கி தரையில் உட்காந்து இருந்தார். அதுவும் கடவுள் புண்ணியத்தில் தண்ணீர் ஊற்ற அவரும் மெல்ல மெல்ல தண்ணீர் போகும் வழியை நோக்கி சென்றார்.

கொஞ்சம் தண்ணீரை வைத்து எல்லாம் அவரை வெளியே தள்ள முடியாது என்று அறிந்திருந்த நான் மெதுவாக நிரம்பியிருந்த வாளியை எடுத்து தண்ணீரை அவர் மேலே வேகமாக ஊற்ற வேலை செவ்வென முடிந்தது. எனக்கு இது முடியும்வரை எவ்வாறு தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஓட்டு எண்ணிகையின் போது கவலையுடன் காத்திருப்பாரோ அதே நிலையிலர்ந்து மீண்டேன். போரில் வென்ற வீரனாய் “வென்றுட்டேன், வென்றுட்டேன்” என மனதுக்குள் குதுகாலத்தபடியே குளித்து முடித்து கதவை இழுக்க அது திறந்து கொண்டது. எவனோ புண்ணியவான் திறந்து கொண்டது. எவனோ புண்ணியவான் திறந்து விட்டிருந்தான். அதற்குள் தேரையார் தனது லீலையை ஆரம்பித்து இருக்க வேண்டும் ஏனென்ரால் பக்கத்து அறையில் ஆரவாரம் அப்படி.

இதே வெற்றி பெற்ற உற்சாகத்துடன் அன்றைய “தெர்மல் இஞ்சினீயரிங்” பேப்பர் எழுத அதிலும் வெற்றி தான். இந்த சம்பவம் ஐந்து நிமிடம் தான் நடந்திருக்கும் ஆனால் எனக்கு ஐந்து யுகமாய் தோன்றியது (ஐன்ஸ்டீனின் relativity விதிப்படி - “கரக்டாதேனே சொல்ரேன்”). உங்கள் குளியலரையில் தேரை இருந்தால் என் வழியை பின்பற்றுங்கள் ஆனால் கொஞ்சம் அதிர்க்ஷ்டம் வேண்டும்.

7 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

தேரை எழுத்தில் ஊர் கூட்டி தேரை இழுத்துவிட்டீர்கள்...சபாஷ். வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

தேரையைத் தானே வென்ற தானைத்தலைவன்.. வாழ்க..:-))

நீங்க பொறியாளரா நண்பா? எங்க படிச்சீங்க? எந்த பாட்ச்?

மதன் சொன்னது…

"@மதுரை சரவணன்: மிக்க நன்றி, ஒரு சின்ன முயற்சி, ஆனால் இந்த கதை எழுத முக்கிய பங்கு வகித்தவர் திரு தேரையார், அவர் இல்லனா இப்படி ஒரு கத உருவாக சேன்சே இல்ல”

“@கார்த்திகை பாண்டியன்: ஆகா ஏன் இப்படி, ஆமாங்க பாஸ் பொறியாளரே தான் நான் SKP engineering college, 2007 batch, நீங்களும் நம்ப டிப்பார்ட்மண்ட் ஆளோ......”

Ramesh சொன்னது…

ஹஹ்ஹா...செம காமெடி..

மதன் சொன்னது…

@ரமேக்ஷ்: வாங்க நண்பரே, ஹிஹி சில சொற்ப நிமிட விசயம் இந்த மாதிரி காமெடி ஆய்டும்...... நன்றீ

பாரதசாரி சொன்னது…

மிக இயல்பான நீரோட்டம் போன்ற நடை... தேரையோடு குளியலறையில் குஜாலா? கலக்குங்க பாஸ் ;-)

மதன் சொன்னது…

" பாரதசாரி கூறியது...
மிக இயல்பான நீரோட்டம் போன்ற நடை... தேரையோடு குளியலறையில் குஜாலா? கலக்குங்க பாஸ் ;-)"

மிக்க நன்றி பாஸ்....