புதன், 29 செப்டம்பர், 2010

ஒரு வசந்த காலம்...4(இத படிக்கறதுக்கு முன்னாடி என்னோட முந்தய பதிவுகள் @ஒரு வசந்த காலம்...1, ஒரு வசந்த காலம்...2, ஒரு வசந்த காலம்...3யையும் படிச்சிடுங்க நண்பர்களே)

”ரத்தம் ஒரே நிறம்....சிகப்பு. அவன் ஐரோப்பியனோ, இந்தியனோ, அமெரிக்கனோ யாரா இருந்தாலும் ரத்தம் ஒரே நிறம் தான், அதே மாதிரி காதல்ங்கற உணர்வு எல்லாருக்கும் ஒண்ணு தான்.....” அய்யயோ என்னாச்சு எனக்கு தலைல அடிப்பட்டதால ஏதாவது இப்படி யோசிக்க சொல்லுதோ ச்ச ச்ச இது காதல், ஆமாம் அதான் டெஸ்டஸ்டரோனும், ஈஸ்ட்ரோஜனும் அதிகம் சுரக்க ஆரம்பிச்சிடிச்சி...டே டே என்ன ஆச்சி உனக்கு என்னமோ என்னமோ யோசிக்க்ற.....ஏன் இப்படி யோசிக்கிறேன்....என் தேவத தான் காரணம்...அவ பேர் என்ன......

“டே சிவா, சிவா.....இப்ப தான் கண்ணு முழிச்ச அதுக்குள்ள என்னடா விட்டத்த பாத்து கனவு காணுற...”

”அம்மா!!! நீயா....எப்பமா வந்த, எனக்கு என்னாச்சு கடசியா அடிப்பட்டதோட தான் நியாபகம் இருக்கு அதுக்கு மேல என்னாச்சினே தெரியல..”

“ஏண்டா உனக்கு எப்படி தெரியும்..2 நாளா மயக்குத்துல இருந்தடா, இப்ப தான் கண்ணு முழிச்சிருக்க....ரெண்டு நாளா எல்லாரும் எவ்வளவு பாடுப்பட்டோம், அப்பா வெளில மருந்து வாங்க போய்ருக்காரு, நம்ப சொந்தகாரங்க எல்லாம் வந்து பாத்துட்டு போனாங்க நீ மயக்கத்துல இருந்ததால உனக்கு ஒண்ணும் தெரியல..நல்ல காலம் எல்லாம் சரியாயிடிச்சி....”

“சரிம்மா நான் எப்படி இந்த வந்தேன்..உங்களுக்குலா எப்படி நான் இங்க இருக்கறது தெரியும்???”

“டே மாலினிடா அந்த பொண்ணு தான் உன்ன இங்க கொண்டு வந்து சேர்த்தா...உன் போன்ல வீட்டு நம்பர் இருக்கறத பாத்து கூப்பிட்டுருக்கு....நாங்க வந்து உன்ன பாக்க வரும் போது அந்த பொண்ணு அப்படி தேம்பி தேம்பி அழுதுச்சிடா” இப்படி எங்க அம்மா சொல்லிக்கிட்டு இருக்கும் போதே மாலினி மாலினி என் தேவதை பேரு மாலினி.....என் தேவதை தான் காப்பாத்தி இருக்கா....சிவா மாலினி ஜோடி பொருத்தம் நல்லா தான் இருக்கு...நான் பறக்க ஆரம்பிச்சிட்டேன் இறக்கையே இல்லாம...

“டே..டே..உன்ன தாண்டா திரும்ப கனவா?? என்ன தான் ஆச்சி உனக்கு...”

“அம்மா இப்ப அந்த பொண்ணு எங்கம்மா?”

“நம்ம வீட்ல தாண்டா இருக்கு...நீ கண்ணு முழிக்கிற வரைக்கும் இருந்து பாத்துட்டு தான் போவேன்னு ஒரு நாள் முழுக்க இங்க தான் இருந்துது, அப்புறம் டாக்டர் தான் சிவா சரியாயிட்டார், மயக்கம் தான் இருக்கு அதுவும் ஒரு நாள்ல சரியாயிடும் சொன்னப்புறம் தான் நானும் அப்பாவும் நீ வீட்ல இரும்மா...நாங்க அவன் கண்ணு முழுச்சதும் சொல்றோம் நீ வந்து பாருனு சொன்னோம் அப்ப தாண்டா அந்த பொண்ணு இங்க இருந்து போச்சி...என்னமோ போ அந்த பொண்ணு இருந்த்ததால நீ இப்ப உட்காந்து என்கிட்ட பேசிக்கிட்டு இருக்க....”

“என்னடா சிவா இப்ப எப்படி இருக்கு....தலைல வலி இருக்கா??” அப்பா

“நல்லா இருக்குப்பா.....தலவலிளாம் பரவாயில்ல...முட்டில மட்டும் லைட்டா வலி இருக்கு...”

“காலுள நல்ல ஃப்ரேக்சர்னு டாக்டர் சொன்னாரு......சரி அப்படி என்ன வண்டி ஓட்டுன...இப்படி கண்ணுமண்ணு தெரியாம அடிப்பட்டு கிடக்குற...அந்த பொண்ணு என்னடானா முன்னாடி இருந்த தடுப்ப கவனிக்காம போய் முட்டிட்டார்னு சொல்லுது”

பரவாயில்லயே என் ஆளு என்ன பலவிதத்துல காப்பாத்தி இருக்கே ஆனா இது எப்படி நடந்ததுனு சொன்னா காறித்துப்பிடுவார்னு “இல்லப்பா பஸ்ஸ லெஃப்ட்ல போய் ஓவர்டேக் பண்ணலாம்னு நினச்சேன், அங்க தடுப்ப இருந்தத கவனிக்கல அதான்”னு என்னமோ உளறி வச்சேன்.

“சரி பரவாயில்ல விடு, மாலினிக்கு தான் நாம கடன் பட்டிருக்கோம்..”

மாலினி, மாலினி உன்ன இப்ப பாக்கணுமே நான் என்ன பண்ணுவேன்னு நினைக்கும் போதே...”சரிடா நான் போய் மாலினிய கூட்டிட்டு வரேன், நீ கண்ணு முழிச்ச உடனே பாக்கணும்னு 100 முறை சொல்லி இருக்கும்...நீ ஒழுங்கா இந்த பால குடி ரெண்டு நாளா வெறும் குளுக்கோஸ் தான் உடம்புல ஏறிருக்கு”

########################################################################

"மூர்த்தி இப்ப என்ன தான் சொல்ல வர...நீ சொல்லரதலா நான் கேக்கரதுக்கு இல்ல பணம் வரலனுலா காரணம் சொல்லாத...எனக்கு எப்பவுமே ஒரு முடிவு தான் வேணும், காரணம் வேணாம் எனக்கு பணம் வேணும்...அதுக்கு என்ன பண்ண போற...நான் என்ன பண்ணினா பணம் கிடைக்கும் அத சொல்லு அத விட்டுட்டு சின்னபுள்ள மாதிரி ஏதாவது சொல்லாத...” ராமலிங்கம்

இவன்கிட்ட போய் மாட்டுனோமே சும்மாவே சீறுவான் இப்ப பணம் அந்த பொண்ணுக்கிட்டு இருந்து வசூல் பண்ணாம இவன்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியதா இருக்கேனு நினச்சிக்கிட்டே மூர்த்தி “இல்லனா அந்த பொண்ண ரெண்டு நாளா ஆள காணும், அந்த பொண்ணோட பிரண்டுக்கிட்ட விசாரிச்சப்ப கள்ளகுறிச்சில எதோ அந்த பொண்ணுக்கு தெரிஞ்சவங்களுக்கு உடம்பு சரியில்லனு பாக்க போய்யிருக்காம், இங்க வந்த உடனே பேசி வாங்கிடலாம் இல்ல மிரட்டி கடனுக்கு வீட்ட எழுதி வாங்கிடலாம் ஒண்ணும் பிரச்சின இல்லனா”

”பிரச்சனையா இல்லையானு நீயே முடிவு பண்ணாத...பொண்ணு வந்த பிரச்சன இல்ல, வரலனா என்ன பண்ணுவ...பேசிக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது நானும் கள்ளகுறிச்சிக்கு தான் போக வேண்டி இருக்கு, அந்த பொண்ணயும் பாத்து ஒரு முடிவுக்கு வரலாம், வண்டிய எடு” ராமலிங்கம்

வாய கொடுத்தா வாங்கி கட்டிக்கிட்டே இருக்க வேண்டியது தான் அவன் சொல்றத அப்படியே செஞ்சாவாச்சும் ஒண்ணும் சொல்லாம இருப்பான்னு நினச்சிக்கிட்டே மகிந்திரா பொலிரோவோட 100HP இஞ்சின ஆன் பண்ணினான் மூர்த்தி.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

”டே..டே..இவன் வேற விட்டத்த பாத்து கனவு காண ஆரம்பிச்சிடுறான்....இந்தாடா சிவா இந்த பிரட்ட சாப்பிடுடா, உன்ன எங்கயாவது சாமியார் கிட்ட தாண்டா காட்டணும்..இப்படி பேனு இருக்க”

மனசுக்குள்ள ‘மாலினி வந்தா போதும்மா எல்லாம் சரியாயிடும்’

ஒரு 9 30 மணி போல வசந்த காலத்துல அடிக்கிர வெயில் எப்படி இருக்கும் தெரியுமா....அந்த வெயிலாள உடம்புல மெல்லிய வெப்பம் பரவும்....அதுக்கூட மெலிசா வீசுர இளங்காத்து....அந்த ரம்யிமான சூழ்நிலை இப்ப நான் இருந்த அறையிலயும் பரவ ஆரம்பிச்சது...ஆகா இது எதுக்கோ சிக்னல் ஆச்சே....

வந்துட்டா என் தேவதை...அட ஏன் அழுகறா...என்ன பாக்குறப்ப கண்ணுல இருந்து கண்ணீர் தாரை தாரையா வழியுதே...

“மாலினி ஏன் கண்ணு அழுவற....அட சின்னபுள்ள மாதிரி என்னது இது அவனுக்கு தான் ஒண்ணும் இல்லனு டாக்ட்டர் சொல்லிட்டாரே...அப்படியே இருந்தாலும் நீ என்ன சொந்தமா பந்தமா இப்படி அழுவிறியே புள்ள”னு என் அம்மா அவள சமாதனப்படுத்த என் மனசு கரைய ஆரம்பிச்சிடிச்சி நான் இவளுக்கு என்ன பண்ணினேன்......ஒரு ஒரு மணி நேரம் அவள விடாம பின்தொடர்ந்தத விட...உண்மையிலே காதல் இவ்வளவு சீக்கரம் இவ்வளவு ஆழமா மனசுக்குள்ள நுழையுமா தெரியல...ஆனா என் விசயத்துல இது நடக்குதே...எனக்கு கல்யாணம் ஆச்சா, என் பேரு என் வயசு எதுவும் அவளுக்கு தெரியாதே அப்புறம் எத வச்சி அவ என் மேல அன்பு வச்சா......கொஞ்சம் யோசிச்சி பாக்குறேன்.....எனக்கும் அது ஒண்ணுமே தோணலயே....காதல் வரதுக்குகூட ஒரு பட்டர்ஃப்ளை எஃபக்ட் தேவ படுது....சந்தோசமான நிகழ்வு.

”என் வாழ்க்கைல ரொம்ப நாளுக்கப்புறம் நான் சந்தோசமா இருந்தது நீங்க என்ன பாக்கறதுக்காக கூட வந்தப்ப தான்....ஏன்னுலா எனக்கு தெரியாது எனக்கு... எனக்கு..... உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு, என்னால உங்களுக்கு அடிப்பட்ட உடனே என்னால தாங்கிக்க முடியல.....இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்” மாலினி மெல்லிய கண்ணீரோட தேம்பி தேம்பி இத சொல்ல.

அய்யோ பெண்ணே இவ்வளவு மென்மையா இருக்கியே.....என்ன நீ ஏன் இப்படி உணர்ச்சிய கட்டுப்படுத்தாம என் அப்பா அம்மா முன்னாடி கொட்டுற....நான் என் அம்மாவ பாக்க நான் எதிர்ப்பாத்ததுக்கு ஆப்போசிட் ரியாக்கசன கொடுத்துக்கிட்டு இருந்தாங்க......ரொம்ப சந்தோசமா போய் மாலினிய உச்சி முகர....என் பின்னாடி ராஜா, ஏ.ஆரோட பேக் கிரவுண்ட் மியூசிக் கேக்க ஆரம்பிச்சிது....வாழ்க்கைல என்னால இத விட சந்தோசமா இருக்கவே முடியாது.....

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

”மூர்த்தி நீ போய் அந்த பொண்ணு ஆஸ்பித்திரில எங்க இருக்கானு பாத்துட்டு கூப்பிடு” ராமலிங்கம். ராமலிங்கத்துக்கு எப்பவும் ஒரு பழக்கம் தனக்கு ஒரு விசயம் நடக்கணும்னு முடிவு பண்ணிட்டா அத முடிச்சிட்டு தான் மறி காரியம் பாப்பான்...அது சின்னதா இருந்தாலும் சரி பெருசா இருந்தாலும் சரி...காரியம் முடியணும் அவ்வளவு தான்....பின்விளைவு? அத பின்னால பாத்துக்கலாம்.

*சக்ஷ்டியை நோக்க சரவணபவனார்* டோன் சொல்லுல ஒலிக்க “சொல்லு மூர்த்தி என்ன பேசிட்டியா பொண்ணுக்கிட்ட”

”இல்லனே பேசல ரெண்டாவது ஃப்ளோர் ரூம் நம்பர் 201ல இருக்கா நீங்களே வந்து பேசி முடிச்சிட்டா நல்லா இருக்கும்”னு சொல்லிட்டு ஒரு 70,000க்கு ஏன் இவன் இவ்வளவு அவசரபடுறான்.....இவன புரிஞ்சிக்கவே முடியாது...அவனே வந்து ஏதோ பேசி தொலையுறான்..நம்மல விட்டா சரி.

“சரி வரேன்” ராமலிங்கம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

முதல்முறையா என் தேவதைக்கிட்ட நான் ”மாலினி என்ன பாரு....”னு சொல்லிக்கிட்டு இருக்கும் போதே ரூமுக்குள்ள ரெண்டு பேரு, பாக்கரதுக்கு நல்லவங்களா படல..நுழஞ்சாங்க, எங்கப்பா அவங்கள பயத்தோட பாக்க அதுல

 முதலாமானவன் “மூர்த்தி இந்த பொண்ணா???”

அடுத்தவன் ”ஆமாம்னே இந்த பொண்ணு தான்”

அத கேட்டு முதலாமானவன் நேரா மாலினிக்கிட்ட வந்து ‘ரப்’னு அறைய.....

‘கெட்ட நேரம்’ ஆரம்பிச்சிடிச்சி.

ஒரு வசந்த காலம்....தொடரும்.

8 கருத்துகள்:

ப.செல்வக்குமார் சொன்னது…

நான்தான் முதல்ல படிப்பேன் .!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//என் பின்னாடி ராஜா, ஏ.ஆரோட பேக் கிரவுண்ட் மியூசிக் கேக்க ஆரம்பிச்சிது....வாழ்க்கைல என்னால இத விட சந்தோசமா இருக்கவே முடியாது....//

சத்தியமா கலக்கல் அண்ணா ,, ஹய்யோ அப்படியே உடம்பு சிலிர்க்குற மாதிரி இருக்கு .!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//‘கெட்ட நேரம்’ ஆரம்பிச்சிடிச்சி.

ஒரு வசந்த காலம்....தொடரும்.
/

சத்தியமா கலக்கலா இருக்கு அண்ணா ., தொடர்ந்து எழுதுங்க .. சீக்கிரமா எழுதுங்க . இதே மாதிரி ரொம்ப நாள் தாமதம் பண்ணிறாதீங்க ......

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@செல்வா:வா செல்வா... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....

என்னைய நீ கலாய்க்கிறியா இல்ல உண்மைய சொல்றியானே தெரியலயே ;-D

சீக்கரம் அடுத்த பதிவ போடுறேன்,,,,

பாரதசாரி சொன்னது…

ப.செல்வக்குமார் சொன்னா மாதிரி ரொம்ப காலம் தாழ்த்தாதீங்க தல, கன்டினியூட்டி போயிடும் (எங்களுக்கும் சரி உங்களுக்கும் சரி ;-))
இப்போ வரைக்கும் சூப்பரா போய்கிட்டிருக்கு!!!!

vasy சொன்னது…

vivek thirutu payal padathula solramathiri..anga poya twist vechae....

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

நல்லாருக்கு நண்பா,பழசையும் படிச்சுட்டு வரேன்

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@பாதசாரி: வாங்க தல, ஒண்ணும் இல்ல ஒரு எக்சாமுக்கு படிச்சிக்கிட்டு இருந்தேன் அதான் லேட் சீக்கரம் அடுத்த பதிவ எழுதிறேன்........ : )

@vasy: ஆமாம் டா டிவிஸ்ட்டு தான்....

@கீதாப்பிரியன்: வாங்க தல, நன்றீ....ஏதோ எழுதிருக்கேன் படிச்சி பாருங்கோஓஓஓஓஓஓஓ