ஒரு மெல்லிய இறகை போல மவுனமாக வாழ்வில் அங்கும் இங்கும் திரிந்த போது தவிழந்த இடங்களின் நினைவுகளையும் என் மனதின் எண்ணங்களையும் பதிவு செய்கிறேன்...
செவ்வாய், 13 ஏப்ரல், 2010
அயல்நாட்டில் தெருக்கூத்து நடத்துவது எப்படி?
தலைப்புல இருக்குறது கேள்வி இடுகைல எழுத போறது பதில், இன்னாடா சொல்ற நம்ப ஊர்லையே இப்பலாம் கூத்து நடத்த மாட்டங்கறாங்க இது எப்படிடா னு நீங்க கேக்கரது கேக்குது.
இப்ப பாத்தீங்கனா எது எதுக்குளா வெளிநாடு போகலாம் குடும்ப கஸ்டத்த போக்கறதுக்கு அரபு நாடுகள்ல வேல செய்ய போற தொழிலாளியா, இல்ல ஊருக்குள்ள நல்ல சம்பளம் கிடைக்கலனா வெளிநாடு போகிற ஒரு பட்டதாரியா, இல்ல நம்ப கலாச்சாரத்த பெரும படுத்தற மாதிரி கலை நிகழ்ச்சிகள் நடத்துற கலைஞர்களா, இல்ல காசு நிறையா இருக்கறவங்க போற சுற்றுலா பயணியா, இல்ல நாட்டை முன்னிறுத்தி போற விளையாட்டு வீரர்களா இப்படி பல வகைல நாம வெளிநாடு போகலாம்.
ஆனா இதையெல்லாம் விட இன்னொரு குரூப் இருக்கு அதான் நம்ப ஊரு சினிமா குரூப், கதைக்காக போறவங்கள விட்றலாம் ஆனா பாட்டு எடுக்குறோம்னு போறாங்க பாருங்க அட அட நம்ப நாட்டு கலாச்சாரத்த என்னமா பரப்புறாங்க அட இவங்க தாங்க நம்ப ஊர்ல கூட இப்ப நடக்காத கூத்த இவங்க தான் வெளிநாடுல வெள்ளகாரனுக்கு இலவசமா நேர்லயும், நமக்கு காசு கொடுத்தா தியேட்டர்லயும் காட்றாங்க.
அது இன்னானே தெரியலங்க பொதுவாவே நம்ப ஹீரோயினுங்க தான் ஹீரோவோட நல்ல உள்ளம்!!!!!, அழகு!!!!!!!!!!! இதையெல்லாம் பாத்துட்டு அவங்க கூட பாட்டு பாட ஆரம்பிச்சிடுறாங்க என்னத்த சொல்ல பாட்டு பாடுனாலும் பாரீன்ல தான் பாடுறாங்க (எனக்கு பற்பல பேர் எல்லாம் மேற்படி மேட்டருக்கு தான் பாரீன் போறாங்கனு சொல்லி இருக்காங்க நமக்கு அந்த அளவுக்கு விவரம் பத்தாது விவரம் தெரிஞிசவங்க தயவு செய்து அத பின்னூட்டத்துல சொல்லுங்க). சரி எழவு வெளிநாட்டுல தான் ஆடுவோம்னு முடிவு பண்ணிடீங்க அந்த கருமத்த யாரும் இல்லாத இடத்துல போய் ஆடி தொலைக்க வேண்டியது தானே (சில புண்ணீயவான்ங்க அப்படி தான் ஆடுறாங்க சந்தோசம்).
ஆனா சில பேருக்கு அப்படி என்ன தான் கொலவெறியோ தெரியல கொய்யால கூத்து கட்ற டிரெஸ்ஸ(இதே டிரெஸ்ஸ அங்க இருக்குற வெள்ளகார பொம்பளைங்களுக்கும் அத போட்டு அழகு பாக்குறது நல்ல ரசனைங்கோ இப்படியே நடத்துங்க ) போட்டுக்கிட்டு அத்தினி பேர் சுத்தி நின்னு பாக்கறாங்களே அப்படிங்கரத எல்லாம் பத்தி கவல படறதே இல்ல இதுல அந்த கூத்துக்கு எத்தன டேக்கோ யாருக்கு தெரியும்.
ஏம்பா இயக்குனர் சிகரங்களே எங்க இருந்து தான் உங்களுக்கு இந்த எண்ணம்லா உதயம் ஆகுதோ (முண்ணனி நடிகரோட நிர்பந்தம்னா உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன்), உண்மைக்கு சொன்னா பாக்கற எனக்கே வெக்கமா இருக்கு இப்படி மானம் கெட்டதனமா ஆடிக்கிட்டு இருக்காங்களோ தெரியல.
நல்ல லொக்கேசன் மக்களுக்கு காட்டனும்னு தோணிச்சினா நல்ல லொக்கேசன காட்டுங்க ராசா அத விட்டுட்டு ஏன் கொடூரமா டிரெஸ் போட்டுக்கிட்டு ரணகளமா வெளிநாட்டு காரன் முன்னாடி ஆடி நம்ப மானத்த வாங்குறீங்க
இப்ப கூட ஒரு இயக்குனர் எப்ப பாத்தாலும் இங்கிலீஸ் படத்த தமிழ்ல எடுப்பாரே அவரு தான் அவரு இம்சையும் தாங்க முடியல வெளிநாட்ல எப்படியாவது ஒரு சீன்ன வச்சி அதுக்கேத்த மாதிரி அதுக்கேத்த மாதிரி ரொம்ப இயல்பா??????? பாட்ட வைக்கிறார். டிரெண்ட மாத்துங்க சாமிகளா.
இதுக்கு மேல நாம என்னத்த சொல்ல நீங்க கூத்து பாக்கணும்னு நினச்ச எப்படியும் வர 3 படத்துல 1 படத்துல கூத்து வரும் பாத்து சந்தோச பட்டுக்கோங்க : (
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)