வெள்ளி, 21 மே, 2010

வித்தியாசமான பதிவு உங்களுக்காக


என்ன எழுதறதுனு பல நேரம் யோசிச்சி எதையாவது எழுத ஆரம்பிச்சிடுறேன் இதோ இப்ப எழுதுறேனே அப்படி. எதுக்கு எழுதுறோம்னு யோசிச்சி பாத்தா நிச்சயம் நாலு பேரு(இதுவே அதிகமோ) நமக்கு அங்கீராம் கொடுக்கறாங்கர (படிக்கிராங்க, ஓட்டு போடுறாங்க, பின்னூட்டம் எழுதுறாங்க இப்படி) உண்மை தான்.

அதாவது இது நமக்கு நம்பளையும் நாலு பேர் கவனிக்கிறாங்க அப்படிங்கற ஒரு உத்வேகத்த கொடுத்து பெருமை அடைய செய்யுது (பெருமைக்கு ஆச படாத மனிதன் நிச்சயம் இருக்க மாட்டான்ங்கரது என்னுடைய தாழ்மையான கருத்து).


நேத்து உண்மைக்கு என்ன எழுத நினச்சேன்னா ஒரு சீரியல் பேரு ’தங்கம்’  அதுல நம்ப கதாநாயகர் திரு. விஜயகுமார் அவர்கள் அவருக்கு இருக்க மனைவிகள் (நாடகத்துல தாங்க சாமி) முதல் கொண்டு எல்லா பொம்பள கேரக்டைரையும் தடவு தடவுனு தடவுறார்- அட உண்மையா தாங்க சொல்றேன் முடிஞ்சா நீங்களே அத பாத்து தெரிஞ்சிங்கோங்க மேல படத்துல இருக்க படங்கள் ஒரு 5 நிமிச வீடியோல கட்பண்ணது இதுலயே இவ்வளவுனா அப்ப சீரியல் முழுக்க எத்தனயோ - இந்த சொற்தொடருக்கு நிறைய எதிர்ப்பு பின்னூட்டம் எதிர்பாக்குறேன்ங்கோ (கொடுத்து வச்ச மகராசன் ம்ஹ்ம் இந்த வயசலயும் ஜல்சா பண்றார் ஆனா உண்மைக்கு திரைபடங்களோட இப்ப தொடர்நாடகங்கள தான் கவர்ச்சி அதிகம்னு நினைக்கிறேன் - டே ஏண்டா எல்லாத்தையும் தப்பான கண்ணோட்டதில பாக்குறேனு தயவு செய்து கேக்காதீங்க இவனுங்க அடிக்கிற கூத்த பாத்தாலே அது இன்னானு நமக்கு கிளியரா விளங்கிடுதுங்க, நான் திரும்ப சொல்றேன்ங்க நான் நல்லவன்லா இல்ல குகூள் இமெஜ்ல ஹாட் ரம்யா கிருஸ்ணன்னு தேடுற குரூப்ப சேந்தவன் தான் ஆனா இந்த மாதிரி இவனுங்க ரொம்ப பப்ளிக்கா காட்றதால லைட்டா சுர்ருனு இருக்கு) இந்த மாதிரி மேட்டர படத்தோட எழுதலாமானு பாத்தா. இதோ இவன் இப்படியே தான் எழுதிகிட்டு இருப்பான் இவனுக்கு நல்ல மேட்டரே கிடைக்காதானு நம்மள தப்பா நினச்சிடுவாங்கனு நினச்சி எழுதாம விட்டுட்டேன்(ஆனா இப்படி ஒரு பிட்ட போட்டு இப்ப எழுதிட்டேன்).


அப்புறமா இசைஅருவில ஒரு பாட்டு பாத்தேன், ‘அழகான பொண்ணு தான்’ அப்படிங்கற படத்துல இருந்து தான் அந்த பாட்டு நம்ப!!!!! நமீதா கொஞ்சம் ஓவராவே குண்டாயிடிச்சி, நமீதாவ நினச்சி ஹீரோ என்னமா பீல் பண்ணி பாடறார் தெரியுமா “நீ சாப்பிட்டா அழகு, நீ நின்னா அழகு, உக்காந்தாஅழகுனு என்ன என்னமோ பாடுனாரு” டே எப்படிடா இந்த பாடல் வரியெல்லாம் பாட்ல போட உங்களுக்கு மனசு வருது அப்படினு ஒரு பதிவு போடலாம்னு நினச்சேன் ஆனா டே கொய்யால நீ ஏன் சினிமாவ கொற சொல்லி எழுதிர அப்படினு யாராவது சொல்லிடுவாங்கனு எழுதல!!!!!!!!


அடுத்து ‘குட்டி பிசாசு’ சத்தியமா டிரைலரயும் அந்த பாப்பா ஆடுற டேன்சயும் தான் பாத்தேன். ம்ம்ம்ம்ம்ம் சூப்பர் சார் ராமநாரயணன் சார் எந்த பக்கம் சார் இருக்கீங்க சொல்லுங்க சார், அந்த பக்கம் விழுந்து கும்புட்டுகிறேன், தயவு செஞ்சி நீங்க இதுக்கப்புறம் படம் எடுக்காதீங்க சார், இந்த படத்துக்கே சாரி டிரைலருக்கே (ஏன்னா நான் அத மட்டும் தான் பாத்தேன்) ஒலகத்துல இருக்க எல்லா விருதையும் கொடுத்தடலாம், டே படம் புடிக்கலனா பாக்காம இருக்க வேண்டியது தானே அப்படினு நீங்க சொல்றது புரியுது, ஆனா என்ன பண்ண அந்த பாட்ல ஆடுற பாப்பா இந்த படத்துல நடிக்காம இருந்திருவாவது வாழ்கைல நல்லா இருந்திருக்கும் இப்ப அதுவும் போச்சேங்கற ஆதங்கம் தான்.
மனுசன் கொன்னுடான்ங்க:((((


ஓவரா மொக்க போடாம ஒரு விசயத்த சொல்றேன் நேத்து பர் துபாய்ல இருந்து அல் கூஸ்க்கும் பஸ்ல போனேன், கிரகம் நான் ஏற்ன வண்டியில கார்டு மெசின் வேல செய்ல, டிரைவரும் ஆன மட்டும் சரி பண்ணி பாத்தார் வேலைக்கு ஆகல . அதனால வண்டிக்கு காத்திருந்த (இத வெய்ட் பண்ண அப்படினு எழுதி இருக்களாம் ஆனா எனக்கு தமிழ்ப்பற்று அதிகம்னு காட்ட முடியாம போய்டுமே அதனால தான் காத்திருந்து அப்படினு எழுதினேன், நிறைய எழுதறதுக்கு நிறைய காரணம் கண்டுபிடிக்களாம் போல) எல்லா பயணிகளையும் வண்டிலா கார்ட காட்டாம ஏற சொல்லிட்டார். எல்லாரும் ஏறிட்டோம், வண்டியும் கிளம்பிடிச்சி திடீர்னு பக்கத்துல உட்காந்திருந்த ஆந்திரா பெரியவர்(நெத்தியல ஒரு சின்ன குங்குமம், தோள்ள ஒரு துண்டு - பொதுவா தெலுங்கர்கள் துபாய்ல இப்படி தான் இருப்பாங்க அப்படிங்கரது என்னோட கருத்தா நேத்திக்கு வரைக்கும் இருந்திச்சி) கார்ட எடுத்துட்டு போய் அந்த மெசின்ல காட்ட போனார், உடனே நான் (நமக்கு தான் எப்பவுமே நாம தான் புத்திசாலிங்கற நினப்பு அதிகமாச்சே) “ஓ மெசின் நகி சாலு கரேகா” (ஹிந்தி தெரியும் அப்படினு காட்டிக்க)னு சொன்னேன். அப்புறம் பாத்தா அந்த டிக்கெட் மெசின் வேல செய்யுது, அத கவனிச்சி பாத்துட்டு தான் அவரு சரியா போய் கார்ட அதுல காட்டி இருக்கார். அப்புறம் நானும் போய் பன்ச் பண்ணிட்டு அவர் பக்கத்துல வந்து உட்காந்தேன், அவரு சாவகாசமா “பன்ச் பண்ணலனா செக்கிங் வரும் போது கார்ட காட்டாம வந்திருந்தோமனா செக்கர் ஃபைன் போடுவான், லேபர் கார்ட புடுங்கி வச்சிக்கிட்டு ஆபிஸ்ல வந்து வாங்கிக்க சொல்லுவான் அதுக்கு நாம இப்பவே ஜாக்கிரதையா இருந்துகிறது நல்லதில்லையா” அப்படினு சுந்தர தெலுங்கல இல்ல செந்தமிழ்ல சொன்னார் (நாம் என்னைக்கும் சரியாவே கணிக்க மாட்டோம் போல). அப்புறம் நானும் தமிழ்ல பேச (ஆனா உண்மை தமிழ்ர்களுக்குனு ஒரு முகம் இருக்கு போல சுலபமா அடையாளம் காண முடியும் -அவரு என்ன அடையாளம் கண்டுகிட்டது போல) ஒரு 30 நிமிடம் பேசிக்கிட்டு இருந்தோம் இல்ல அவர் பேசுனார் நான் கேட்டுக்கிட்டு இருந்தேன். துபாய்ல இருக்க இந்தியர்களோட பங்களிப்பு (தனிநபர் பெயர் முதல்கொண்டு சொன்னார்), ஒரு அரபுநாட்ல ஹிந்து கோவில் கட்டிக்க அனுமதிச்ச துபாய் சேக்கோட பரந்த மனப்பான்மை, எல்லா நாட்டவரும் சரிசமமா இருக்க உதவுர போக்குவரத்து (பஸ், மெட்ரோ ட்ரைன்), தன்னோட மண்ணுக்கு வர எல்லாரயும் அரவணச்சி துபாய் வாழ வைக்கிறது அப்படினு ரொம்ப பாஸிட்டிவா, ஆனா ரொம்ப தெளிவா, உண்மையா எல்லாத்தையும் சொன்னார் நான் ம்ம்ம் ம்ம்ம்னு ம்ம்ம் சாமி போட்டுக்கிட்டு இருந்தேன். நான் உண்மைக்கும் முதல்ல அவர படிப்பறிவில்லாத ஒரு தொழிலாளி (ஒரு பட்டம் வாங்கிட்டா மத்தவன் எல்லாத்துக்கும் ஒண்ணும் தெரியாதுனு நினைக்க ஆரம்பிச்சிடுறோம் - இது என்னோட தனிப்பட்ட என்னை பத்திய கருத்து மத்தவங்க யாரையும் நான் சொல்லலங்க) உண்மையா நான் அவர எதுவும் கேவலமா நினைக்கல ஆனா ஒண்ணும் தெரியாதுனு நினச்சேன் ஆனா அவரோ அவருக்கு சுத்தி நடக்கற விசயத்த ஆழ்ந்த அனுபவம் மற்றும் அறிவோட பாத்திருக்கார் (அதனால வெளித்தோற்றத்த பாத்து ஒருத்தங்க இப்படி தான் அப்படினு நாம நினைக்கிரது எவ்வளவு முட்டாள்தனம் அப்படினு என் மனசுல பதியுற மாதிரி அவரோட நினைவ விட்டுட்டு போய்ட்டார்). இத நான் ரொம்ப உணர்ச்சி பொங்க நான் திருந்திட்டேன்லா சொல்லலங்க. ஆனா ஒரு சிறந்த அனுபவம், நம்ப அனுமானாம் சமயத்துல எப்படி தப்பா போகும் அப்படிங்கரத பத்தி எழுதி இருக்கேன் அவ்வளவு தான்.


பாருங்க எப்படியோ அதயும் இதயும் எழுதி ஒரு பதிவாய்டிச்சி. டே வென்று வித்தியாசமான பதிவுனியே அது எங்கடானு கேக்கரவங்களுக்கு “இன்னுமா என்ன நம்புறீங்க, ஏங்க எத்தன படத்த பத்தி அதோட இயக்குனர்கள் இது ரொம்ப வித்தியசமான படம்னு சொல்லி மொக்க படத்த கொடுக்கறாங்க ஹிஹி இதையும் அதே லிஸ்ட்ல சேத்துகிட்டு திட்டிக்கிட்டாவது ஒரு ஓட்ட போட்டுட்டு போய்டுங்க மக்களே”  இப்ப கூட பாருங்க ஓட்டு கேட்டு ஓட்டு கேட்டு அரசியல்வாதி ஆய்ட்டிருக்கோம்னு (எல்லாத்திலயும் அரசியல் இருக்கு போல)


சரி இந்த பதிவ இப்ப எழுதனது கூட ஒரு நாலு பேரு நம்பள, நம்ப எழுத்த அங்கீகரிக்க மாட்டாங்களான்னு தான் - நிச்சியமா...........