ஒரு மெல்லிய இறகை போல மவுனமாக வாழ்வில் அங்கும் இங்கும் திரிந்த போது தவிழந்த இடங்களின் நினைவுகளையும் என் மனதின் எண்ணங்களையும் பதிவு செய்கிறேன்...
செவ்வாய், 28 டிசம்பர், 2010
சிறு சொர்க்கம்
நம்ம சுத்தி எல்லாம் தப்பு தப்பா இருக்கு இல்ல எல்லாம் ரொம்ப சரியா இருக்கு......ரெண்டையும் தீர்மானிக்கறது நம்ப மனசு தான். நம்ப நாட்டுல சொல்லவே வேணாம் எல்லாத்தையும் அரசியல் தான் தீர்மானிக்குது, இல்ல எல்லாம் அவங்க தான்னு நாமே தீர்மானிச்சிக்கிறோம்....ரெண்டாவது இந்த வீணா போன முட்டாப்பய சினிமாக்காரனுங்க எப்ப பாரு ஏதோ பெருசா வெட்டி முறிச்ச மாதிரியே அவனுங்க போடுற எஃபக்ட் தாங்க முடியாது.....இதுல அவனுங்க புடுங்கற புடுங்குக்கு.....நடிகர் சங்க விழா, இயக்குனர் சங்க குழானு கூத்து வேற.....என்ன பொறுத்த வரைக்கும் சினிமாவுல நடிகைக்கள போக பொருளா தான் வச்சி இருக்காங்க....நாம இல்ல நான் அத தான் பாக்குறேன், இல்ல நாங்களா நடிப்ப ரசிக்கிறோம்னு சொல்றவங்க தயவு செய்ஞ்சி கைய தூக்குங்க, மூணாவது நம்ப வீட்டுக்குள்ள எந்த பர்மிசனும் வாங்காமா தான் பாட்டுக்கு வந்து கடுப்புகள கிளப்புற சீரியல் கம் முட்டா பய பாட்டு போட்டிகள், டேண்ஸ் போட்டிகள், அடங்க அது இன்னாங்கடா ’ஜட்ஜ் உங்க ஸ்கோர்’ இந்த டயலாக்க மாத்த மாட்டிங்களா........முடியல
சரி எழவு இதெல்லாம் தான் நம்ப வாழ்க்கைள நாம சாப்பிடற, தூங்குற, வேல பாக்குற நேரத்த தவிர மீதி நேரத்த சாப்பிடறதா இருக்கு. இந்த விசயங்கள் நிச்சயம் நம்ப சிந்தனைய, செயல்பாடுகள் மாத்திக்கிட்டு இருக்கு நம்மையும் அறியாமல். நான் புத்தர் பேரன், காந்தி சொந்தக்காரன்லா இல்ல ரோட்டுல அழகா ஒரு பொண்ணு போனா வச்ச கண்ணு வாங்காமா பாக்குறவன் தான் இருந்தாலும் சில விடயங்கள் எப்பவும் உறுத்துலா இருந்துக்கிட்டு தான் இருக்கு. நம்ப தமிழ் நாட்டுள எல்லாரும் இங்க இருக்க அரபி மாதிரி சொந்தமா பல காரு பல வீடு வச்சிக்கிட்டு இருக்க முடியாது ஆனா நிச்சயம் நம்ப மனச வச்சி சிறு சிறு சொர்கத்த அமைச்சிக்க முடியும். தேவையெல்லாம் மனமாற்றம், வாழ்க்கைய வேறு கோணத்துல வாழறுதுக்கான ஒரு சிறு முயற்சி. ராஜா 1.5 லட்சம் கோடி அடிச்சாலும், கடசியா 50 பைசா தீக்குட்சில மேட்டர் குளாஸ், எல்லாம் காசையும் தர்மம் பண்ணுங்கனு மொன்னத்தனமா சொல்லள, செலவு செய்ற பணத்த நியாயமா உபயோகமா செய்ய பரிந்துரைக்கிறேன்.
உதாரணம்: ஒரு பீசா 200 ரூபா கொடுத்து வாங்குறீங்க, அதுக்கு உற்ப்பத்தி செலவு அதிக பட்சம் 20 ரூபா ஆகும் அம்புட்டுத்தேன், ஏதாவது இரு குளிர்பானம் விலை 10 ரூபானு வச்சிக்குவோம் உற்பத்தி செலவு 50 பைசாவுக்கு மேல தாண்டுனா அதிகம் ஆகா உற்பத்தி செலவு போக்குவரத்து செலவு, அந்த செலவு இந்த செலவுனு வச்சிக்கிட்டா கூட 70% மேல விக்கறவனுக்கு லாபம், அந்த லாபம்ல பெரிய பகுதி ராயல்டி கொடுத்த ஏதாவது வெளிநாட்டுக்காரனுக்கும், உற்பத்தி செஞ்சி செஞ்சி மேல்த்தட்டு குடிமகன்(எ.கா: மிஸ்டர் மல்லையா) போனவனுக்கும் தான் கிடைக்கும், ஆனா மூலதன பொருட்கள் அதாவது கோதுமை, காய்கறிகள், மாமிசம் இதெல்லாம் விவசாயிகள் அல்லது அன்னைய பொழுத ஓட்டுறவங்களால உண்டாக்க படுது அதுக்கு அவங்களுக்கு ஒண்ணும் மலைய புடுங்கி கொடுக்க மாட்டானுங்க எல்லாம் மார்கெட் ரேட் தான், இது பரவாயில்ல கொக்ககோலாக்குளாம் தண்ணி தாமிரபரணியில இருந்து நேரடி சப்ளை சல்லிகாசுல விவசாயிக்கு விவசாயம் பண்ண தண்ணியில்ல ஆக நீங்க கஸ்டப்பட்டு சம்பாரிக்கிர காசு பணசுழற்சியில இல்லாம (உங்களுக்கும் ரிட்ர்ன் வராது) கடசியா ஏதாவது சுவிஸ் வங்கியில போய் தூங்கும்.
சோ மனமாற்றத்த நம்ப பாக்கெட்ட காலியாக்குற விசயத்துல இருந்து ஆரம்பிச்சா நல்லா இருக்கும் எல்லாரும் கூழ் குடிங்கனு சொல்லள கொடுக்குற காசுக்கு தரமிருந்தா எந்த பொருளுக்கும் கொடுங்க.
மாசம் முழுக்க கஸ்டப்பட்டு சம்பாதிரிக்கிற பணம் திருடு போனா எவ்வளவு வருத்துப்படுவோம் ஆனா அதையே பாலீசா நாட்டுள பலபேர் புடுங்குறானுங்க உசாருயிருந்துக்கோங்க......அந்த காச நாலு படிக்க காசில்லாம கஸ்டப்படுற புள்ளைக்கு கொடுக்கலாம் இல்ல சில பெரியவங்க பெத்தவங்கள பாத்துக்கக்கூட முடியாத நாதாரிகளால முதியோர் காப்பகத்துல விடப்பட்டவங்களுக்கு கொடுக்களாம், இல்ல லூசுதனமா கல்யாணத்துக்கு தனக்குத்தானே வினையல் போர்டு வச்சிக்கிறதுக்கு பதிலா கல்யாணத்துக்கு வரவங்களுக்கு மரக்கன்று தரலாம்......சிறு சிறு சொர்க்கம் தானா உருவாக ஆரம்பிக்கணும் நம்புறேன், நம்ப மனசு உவந்து கனிந்து செய்ற செயலோட எந்த பொருளும், எந்த இடமும் மகிழ்ச்சிய அதிகம் தந்துடாது.
அடுத்து நான் விஜய் ஃபேன் நீ யாரு விஜயா அஜீத்தானு கேக்குறானுங்க டே அப்படிலா ஒண்ணுமில்லடானா ச்சச்ச உண்மைய சொல்லுங்குறானுங்க, அடிங்க என்னை என்ன எங்க ஊட்ல அவனுங்களுக்கா நேர்ந்து விட்டுக்கிட்டு பெத்தானானுங்க. சும்மா நான் ஃபர்ஸ்ட் சோவே அவன் படத்தப்பாத்தேன் இவன் படத்தப்பாத்தேன்ங்கற ரொம்ப பரவசமான மொன்னதனமான பிட்ட மட்டும் போடாதீங்க.......அதுல ஒரு மசிரு பெருமையும் இல்ல சந்தோசமும் இல்ல. இது நாமா தேடி போறது.
அடுத்து இந்த விசயம் சீரியலக்கூட ஒரு விதத்துல டிவி விசயத்துல ஏத்துக்களாம் ஆனா இந்த நடனப்போட்டிய, பாட்டு போட்டியெல்லாம் சில வீடுகள்ள பாக்குற விதம் இருக்கே அதுலயே அந்த கேணப்பு^(*&*(&ங்க போடுற சீன பாக்க முடியாது, ஜட்ஜ் (இந்த வார்த்தை முதல்ல தூக்கணும்) 10 மார்க்குனா போதும் உடனே ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சிகறது, எவன் பொண்டாட்டிய எவன் கட்டிப்பிடிக்கறது என்னமோ போங்கடா, இந்த கூத்தையெல்லாம் அப்படி இரு சந்தோசமா வச்ச கண்ணு வாங்காம பாக்குறது, அட ஒரு நாள் ரெண்டு நாள் பாக்குளாம்ங்க இதே மொக்கைய சீசன் சீச்னால பாக்குறாங்க எப்படி தான் முடியுதோ புரியல......அப்புறம் பையன் ஒழுங்கா படிக்களுனு அவன போட்டு அடிக்கறது.
நம்பளால இந்தியன் தாத்தா மாதிரியோ இல்ல டுபாக்கூர் கந்தசாமியோ மாதிரிலா ஒண்ணும் பண்ண முடியாது தான். ஆனா நல்ல மனுசங்களா, நியாயமா, மத்தவங்களுக்கு நம்மாள முடிஞ்ச அளவுக்கு உதவி செய்து சிறு சிறு சொர்ககங்கள நிச்சயம் உருவாக்களாம்னு நம்புறேன்......சரியோ தப்போ, இன்பமோ துன்பமோ நம்பக்கிட்ட தான் இருக்கோ....
சிறு சொர்க்கம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)