ஒரு மெல்லிய இறகை போல மவுனமாக வாழ்வில் அங்கும் இங்கும் திரிந்த போது தவிழந்த இடங்களின் நினைவுகளையும் என் மனதின் எண்ணங்களையும் பதிவு செய்கிறேன்...
வெள்ளி, 26 பிப்ரவரி, 2010
டாடி மம்மி வீட்டில் இல்ல....
நான் சமுதாயகாவலன்லா இல்லங்க பிட்டு படம் பாப்பேன்.
ஆனா பாருங்க சில விசயம் இதையும் மீறி சுர்ருனு இருக்கு அட நம்ப ஊர் சினிமாவ பத்தி தாங்க சொல்றேன். சினிமாவ ஏண்டா குறை சொல்றேனு தயவு செய்து யாரும் கேக்காதீங்க ஏன் அதால தான் எல்லாருக்கும் எல்லாம் தெரியுது. படத்துல இப்படி ஒரு காட்சி ஃபர்ஸ்ட் நைட்ல ரூம்க்குள்ள போய்ட்டு காலைல பொட்டு, சேலைலாம் கலஞ்சி கதாநாயகி வெளில வந்தா பசங்களுக்கு உள்ள என்ன நடந்ததுனு தெரிஞ்சிக்கனும்னு தோணாதா அட எனக்கு நிச்சயம் தோணிச்சி. டே நாங்க ரியாலிஸ்ட்டிக்கா எடுக்குறோம்னு சொல்ர நல்லவங்களே அப்படியே உள்ள நடந்த மிச்சத்தையும் நீங்க காட்டுனா ரொம்ப ரியாலிஸ்டிக்கா இருந்திருக்கும். காட்டுரது ரியாலிஸ்டிக்னு சொன்னா முண்ணனி நடிகர் பத்து பேர அடிக்கரது, கனவு பாட்டு, அதலயும் முண்ணனி நடிகையோட தம்மாத்தூண்டு டிரெஸ் இதெல்லாம் எப்படி ஏத்துகிறது.
அவங்க கட்டி புடிச்சிக்கிட்டே லைட் ஆஃப் பண்ணுவாங்களாம். அதலாம் காட்றாங்க நீ ஏன் அத பத்தி மட்டும் பேசரனு கேக்காதீங்க காட்றது பத்தி மட்டும் தாங்க பேச முடியும், அவங்க லைட் ஆஃப் பண்ண உடனே ஒரு கனவு சாங் வெளிநாட்டுல அதலயும் முண்ணனி நடிகர் (ஹீரோங்கர வார்த்த மிக பெரிய முட்டாள்தனம்ங்க ) முண்ணனி நடிகையை போட்டு தடவு தடவுனு தடவுவார், எங்க காலத்துல இதெல்லாம் இல்லனு யாரும் பெரியவங்க கிளம்பாதீங்க எம்.ஜி.ஆர் காலத்துல இருந்தே இது இருக்கு. அப்புறம் அத பாக்குற பசங்க மனசு என்ன ஆகும்.
வீட்ல பெரியவங்க இருக்கிரப்ப இந்த படத்த பாத்துட்டு டாடி மம்மி வீட்ல இல்லனா அப்புறம் கலர் படம் தான் ஓடும் என்ன கலர்னுலா கேக்காதீங்க. பின்ன என்னங்க பாதி தான் சினிமாவுல காட்டுறாங்க மீதிய நாங்க பாத்து தெரிஞ்சிக்க வேணாமா, பசங்களுக்கு விசயங்கள தெரிஞ்சிகிரதுல ஆர்வம் அதிகம். இதுக்கேல்லாம் புள்ளையார் சுழி போடறது நம்ப ஊர் சினிமா கவர்ச்சி அத கொஞ்சம் குறைங்கப்பா.
சாமிகளா ரேப்புல இருந்து, தொப்புள பம்பரம் உடரது, ஆம்பிளேட் போடுரது வரைக்கும் நல்லா டீட்டைல காட்றீங்க ஆனா அப்படியே கொஞ்சம் நல்ல விசயத்தையும் டீட்டைலா சொன்னா பாராட்டலாம் ஏன் நீ தான் அந்த நல்ல விசயத்த சொல்ரது சொல்லாதீங்க ஆம்ளெட் மேட்டரலா யோசிக்கிறீங்கல அப்புறம் இது மட்டும் தோணாதா.
மக்கள் இத தானே விரும்பறாங்கனு கிளம்புருவுங்களுக்கு ஏங்க காட்றத தானே பாக்க முடியும் நீங்க நல்ல விசயம், மூளைய கொஞ்சம் யோசிக்கிர மாதிரி, மனச நெகிழ்ச்சி அடையற மாதிரி எடுங்கப்பு நாங்க வேணாம்னா சொல்ரோம். டே படம்ங்கறது பொழுது போக்கரதுக்கு அதுல அறிவுரை சொன்னா தியேட்டர் பக்கம் யாரும் வரமாட்டாங்கனு சொல்ரவங்களுக்கு, நாங்க உங்கள அறிவுரை சொல்லி படம் எடுக்க சொல்லல ஆனா தப்பான விசயத்த டீட்டைலா சொல்லிட்டு காசு பாக்குறீங்களே அத பண்ணாதீங்க கொஞ்சம் அதயெல்லாம் விட்டுட்டு நல்ல விசயம் பக்கம் வாங்க.
டே பாக்கரத பாத்துட்டு என்னடா நல்லவன் மாதிரி பேசுறனு நீங்க கேக்கரது எனக்கு கேக்குது. ஏங்க நம்ப வீட்டு கொழந்த டாடி மம்மி வீட்டில் இல்ல, இல்ல என் பேரு மீனாகுமாரி போவோமோ குதர சவாரினு பாடுனா கேக்கரது நல்லவா இருக்கு. அப்பவே ஆரம்பிச்சி வச்சிடுறோம். அத வேர சிலர் போன் போட்டு கேக்கிறாய்ங்க. நல்ல ரசனைங்கோ இப்படியே மெய்ன்டைன் பண்ணுங்க. நம்ப ஊர்ல இப்பலாம் முண்ணனி நடிகர் டேண்ஸ் ஆடரத காட்டி சோறு ஊட்றாங்களே. அப்ப பயப்புள்ளைவ என்ன பண்ணும் பாவம் அடுத்த வாட்டி அத பாக்க தான் ஆச படும்.
ஏங்க நான் படத்த குத்தம் சொல்லலங்க அதுல காட்ட படற தேவை இல்லாத கவர்ச்சி(நீ ஏன் இதுலயே குறியா இருக்கனு கேக்காதீங்க கெட்ட விசயம் மக்கள சீக்கரம் போய் சேரரதுக்கு சினிமா ரொம்ப தான் உதவி செய்யுது). சினிமா மிக பெரிய ஊடகம்ங்க இன்னைக்கு சமுதாயத்துல அதோட தாக்கம் அதிகம் இருக்கு. நம்மளையும் குத்தம் சொல்லனும்ங்க அரசி வில, காய்கறி விலலாம் உயர்ந்தா மட்டும் முணுகுறோம் அதே என்ன விலையா இருந்தாலும் காசு கொடுத்து முதல் நாள் முதல் சோவேக்கு படம் பாக்கணும்னு என்னங்க இருக்கு. என்ன அன்னைக்கு முண்ணனி நடிகர் சொல்லர அருமையான கருத்தால நாட்ல பசிபட்டினி கொரஞ்சிடுமா இல்ல நாட்ல ஒரு நாளைக்கு 40 ரூபா சம்பாதிக்கிற குடும்பம் அட்லீஸ்ட் 100 ரூபா சம்பாதிக்க போகுதா ஒண்ணும் இல்லங்க. அதனால இந்த கருமத்தலா விட்டுட்டு கொஞ்சம் நமக்கு, நம்ப நாட்டுக்கு தேவையான விசயத்துக்கு முக்கியதுவம் கொடுப்போம். அட்வைஸ்லா இல்லங்க உண்ம
நீ யாருடா இத பத்து சொல்லரதுக்கு புடிக்கலனா நீ பாக்காதுனு சொல்ரவங்களுக்கு, இந்தியா ஒரு சுதந்திர நாடுங்க எனக்கு கெட்டதுனு பட்டத சொல்ரதுக்கு எனக்கு உரிம இருக்கு
பெரியவங்களுக்கான விசயம் பெரியவங்களுக்கு மட்டும் தெரிஞ்சா போதும்ங்க, சினிமாவும் டிவியும் பொது ஊடகமா ஆகி போச்சி அதனால அதுல இந்த மேட்டரலா குறச்சா நம்ப எதிர்கால சந்ததி அடுத்த வாட்டி நல்ல விசயத்த பத்தி யோசிச்சி நல்ல சமுதாயமா வளரும். அப்படியே பாக்கணும்னு தோணிச்சினா தனியா உட்காந்து என்ன வேணும்னாலும் பாருங்க.
சரி உடுங்க டிவில செம பிட்டு பாட்டு போட்டு இருக்கான் பாக்க போவோம்.....
என் தமிழ் பெண்ணே
"நீண்ட உன் புருவங்களிடையே சிறு திலகமிட்டு,
கார்குழலில் வகிடெடுத்து பிண்ணிய ஜடையில் ஒரு குஞ்சமிட்டு,
காதில் சிணுங்க இரு தொங்கட்டான் இட்டு,
சிவந்த உன் கைவிரல் மேலும் சிவக்க மருதாணியிட்டு,
கிண்கிணி ஒலிக்க காலில் கொலிசிட்டு,
பாவாடை தாவிணி சரசரக்க,
மல்லிகை மணமணக்க உன்னை காண விழைந்தேனடி என் தமிழ் பெண்ணே,
அந்தோ உனக்கு தமிழ் அறியாது என்றரிந்து மனம் நொந்தேன்......."
புதன், 17 பிப்ரவரி, 2010
Friday Night Light's
1988 டெக்சாஸ் மாகணத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்த மையமா கொண்டு உருவாக்க பட்ட ஒரு திரைபடம், டெக்சாஸ்ல ஒடீஸாங்கர ஊர்ல இருக்குற (permian)பெர்மியன்ங்கற ஹை ஸ்கூல் எப்படி டெக்சாஸ் புட்பால் சேம்பியன்ஸிப்ப ஜெய்க்க போரடிச்சிங்கறது தான் கதை.
அமெரிக்கன் புட்பால்ல பத்தி நம்ப தல ஹாலிவுட்பாலா the blind sideலயே எழுதிட்டார். அதனால நான் எதுவும் எழுதல. எக்கசக்க எதிர்பார்ப்புள்ள ஒருக்க ஒரு டீம் நம்ப பெர்மியன் பேந்தர் டீம், ஊருக்குள்ள பசங்க மேல செம எதிர்ப்பார்ப்பு. இவங்க எங்க போனாலும் என்ன கண்டிப்பா சேம்பியன்சிப் நமக்கு தானேங்கற கேள்வி. அதே மாதிரி பசங்களும் சூரபுலியா தான் இருக்காங்க.
பூபி மைல்ஸ் தான் டீமோட சூராவளி கொய்யால எவன் எதிர்ல நின்னாலும் ஆட்டம் காட்டி கோர்ட்ல பறக்கர ஆள், டீமோட மிக பெரிய பலம். புட்பால தவிர ஒண்ணும் தெரியாது. அதே போல டீம் கேப்டன் வின்ஞல் நல்ல பிளேயர், ஆரகனைசர். அவனுக்கு ஸ்காலர்சிப் தேவ படுது.
அடுத்து எப்ப பாத்தாலும் அப்பாக்கிட்ட திட்டு வாங்கற பிலிங்சிலி, அவங்க அப்பா முன்னாடி ஒரு பெரிய சாம்பியன்சிப்பா இருந்ததால இவன்கிட்ட ஓவரா எதிர்பாத்துகிட்டு இருக்கிறவர். ஒழுங்கா பந்த புடிக்காம ஓயாம திட்டு வாங்கறவன்.
டீம்ல ஒரு மாதிரி காமெடி பீஸா இருக்கிற கிரிஸ் கார்னர், எப்பவும் சீரியசா இருக்கிற கிரிஸ்டியன்.
அடுத்து நம்ப தல கோச் கேரி கெய்ண்ஸ் ஒரு நல்ல இன்ஸ்பிரேஸ்னல் ஆளு டீம நல்லா வழி நடத்துரவர், அவருக்கு ஏற்கனவே கடன் தொல்லை அடிக்கடி அதால ஊர் ஊரா மாறிக்கிட்டு இருக்கிறவர்.
இதே மாதிரி தான் மத்த பிளேயர்சும் எல்லாருக்கும் இந்த தொடர் தான் வாழ்க்கைல கடசியா ஒண்ணா விளையாட சாண்ஸ், இந்த தொடர்ல ஜெய்ச்சா வாழ்க்கைல எல்லாருக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கு.
தொடரோட ஆரம்பமே அசத்தலா இருக்கு எதிர் டீம போட்டு துவச்சி எடுக்குறாங்க உபயம் நம்ம பூபி மைல்ஸ். அடுத்த மேட்ச்லயும் அதே அதிரடி தொடறது ஆனா பூபிய எதிர் டீம்காரன்ங்க கரு வச்சி அடிச்ச முட்டிய பேத்துடுறாங்க. அப்ப இருந்து ஆரம்பிக்கறது டீமுக்கு அடி சரியான குவாட்டர்பேக் இல்லாம டீம் தள்ளாடுது. அப்பனு பாத்து கிரிஸ் கார்னருக்கு ஒரு சேன்ஸ் கொடுத்து விளையாட சொன்ன உடனே எல்லாரையும் ஆச்சிரியத்துல ஆழ்த்தி டீமோட இன்னொரு ஸ்டார் பிளேயர் ஆய்டுரான் நம்ப ஆளு.
அதே நேரத்துல கால சரி ஆக்க பூபி அங்கயும் இங்கயும் திரிஞ்சி பாத்தப்ப தன்னோட முட்டி சரியாகாது இனிமே விளையாட முடியாதுனு டாக்டர் சொல்லியும் இல்ல என்னால கண்டிப்பா விளையாட முடியும்னு Midlandக்கு எதிரான விளையாட்ல கிரவுண்டுக்கு போய் நிக்குறான். Midland தான் இவங்களுக்கு பரமஎதிரி.
மேட்ச் ஆரம்பிக்குது எல்லாரும் கிரிஸ எதிர்பாக்க Midland பசங்க எல்லாரையும் முட்டி தள்றாங்க டீம் பாய்ண்ட் கம்மி ஆய்க்கிட்டே போகுது. சரினு கடசி 7 நிமசித்துல பூபிய இறக்கி விடுறாங்க ஆனா திரும்பும் அடிப்பட்டு இனிமே எப்பவும் விளையாட முடியாத நிலமைக்கு ஆளாகுறான். கேம்லயும் தோத்துடுறாங்க.
ஏற்கனவே கொடூர பசங்க Dallas Carterங்கரவனுங்க ஃபைனல்ஸ் செலக்ட் ஆய்ட்டாங்க. நம்ப டீம் பசங்க அப்புறம் இன்னும் 2 டீம் எல்லாரும் ஒரே பாய்ண்ட் எடுத்து டைல இருக்காங்க. அதனால மூணு டீமும் காச சுண்டி பாத்து ஹெட்ஸ் விழுறவங்க 2 பேரும் மோதி ஃபைனல்ஸ் போகணும். எப்படியோ நம்ப டீமும் இன்னொரு டீமும் ஹெட்ஸ் போட்டு மேட்ச் விளையாடுறாங்க. நம்ப பசங்க நல்லா விளையாண்டு ஜெய்ச்சி ஃபனல்ஸ் போய்டுறாங்க.
அதுக்கப்புறம் ஃபைனல்ஸ் என்னாச்சிங்கறது தான் மீதி படம். ஜெய்ச்சாங்கலா இல்ல தோத்தாங்களானு பாத்து தெரிஞ்சிக்கோங்க.
அதாவது இந்த கதை எனக்கு என்ன சொல்ல வருதுனு எனக்கு தோணுதுனா டீம் ஒர்க். நீங்க ஒரு விளையாட்டு வீரரா இருந்தா கண்டிப்பா நீங்க விளையாடரப்ப டீம் ஸ்பிரிட் உணர்ந்து இருக்கணும். அப்படி ஒரு சிறந்த உணர்வ வேற எப்பவும் உங்களால உணர முடியாது. டீமா இருக்கறப்ப மத்த டீம் ஆட்கள எப்பவும் பாதுக்காக்கணும்ங்கற உணர்வு, மற்றவங்கள சரியா புரிஞ்சிகரது, ஒண்ணா வேல செய்றதுனு நம்மள நல்லா செதுக்கறது தான் இந்த குழு விளையாட்டுகள்.
நீங்க கொஞ்சம் கவனிச்ச பாத்தா தெரியும் சென்னை 28, வெண்ணிலா கபடி குழு மாதிரியான படங்கள் நம்மோட மனசுல இருக்க விளையாட்டு விரனால ஜெய்க்க வைக்கப்பட்ட படம். அதனால நம்ப மனசு எப்பவும் ஒற்றுமையுணர்வோட இருக்கணும் தான் விரும்புது அத தான் திரைல பாக்கறப்ப தான் மனசு அத உணருது.
நான் ஏன் இந்த படத்த பத்தி எழுதுறேன்னா நீங்க பாத்துக்கோங்க நம்ம ஊர்ல எல்லாதுக்கும் சேனல் இருக்கு பாட்டுக்கு, செய்திக்கு, படத்துக்கு, ஏன் பிட்டுக்கே ஆரம்பிக்கலாமானு யோசிச்சாங்களாம் ஆனா விளையாட்ட பத்தி செய்திகள்ச 2 நிமிசம் சொல்ரதோட சரி. அப்புறம் எப்படி விளையாடாம நம்ப உடல் ஆரோக்கியாமா இருக்கும், மத்தவங்கள புரிஞ்சிக்க முடியும்.
ஏதோ நான் அறிவுரை சொல்லரதுக்கு இத எழுதல நல்லா விளையாடி விளையாடுனப்ப கிடச்ச அந்த உற்சாகத்த இப்ப இழக்கற உணர்வு, நிறைய பேர் அந்த உணர்வையே உணாராம இருக்கிர ஆதாங்கம் தான்.
அதனால விளையாடுவோம் நண்பர்களே : )
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010
Zeitgeist.Addendum - பாகம் 3
temperament... greed and fear of scarcity are in fact being created
and amplified..the direct consequences is that we have to fight
each other in order to survive"
எனும் வாசகத்துடன் 3ஆம் பாகம் துவங்குகிறது. இப்பாகம் முழுவது ஜாக் ஃப்ரஸ்சோ(jacque fresco) எனும் பேராசிரியர், விஞ்ஞானி, சிந்தனையாளரால் விளக்க படுகிறது. இவர் வீனஸ் பிராஜக்ட் எனும் அமைப்பை நடத்தி வருகிறார். அவ்வைமைப்பின் நோக்கம் லாப நோக்கில் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களால் ஏற்படும் ஏழ்மை, குற்றம், லஞ்சம், போர் அனைத்தும் ஏற்படுகிறது என்றும், இதற்கு மாற்றாக எல்லா பொருளும் எல்லா மக்களையும் சென்றடையுமாறு ஒரு புதிய சமுதாயாத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளது. எல்லாருக்கும் எல்லாம் கிடைத்தால் மக்கள் மற்றவர்களுடன் நட்புணர்வுடன் வாழ்வார்கள் என்பது இவரது நம்பிக்கை. இவரது அமைப்புக்கான அதிகார வலைக்கான இணைப்பு கீழே கொடுக்கபட்டுள்ளது.
தன்னை பற்றிய சுயறிமுகத்துடன் தற்போது உள்ள பண அமைப்பு எவ்வகம் உலகில் நடக்கும் அநியாயங்களுக்கு ஆணிவேறாக உள்ளது. மனிதன் சமூகம் எவ்வாறு உள்ளானோ அதற்கு அவன் சமூகமே காரணம். அவன் நல்லவனாவதும், தீயவனாவதும், தற்போது உள்ள போட்டி, பொறாமை மனப்பான்மையுள்ள உலகில் வளரும் அவன் அவ்வாறான மனப்பான்மையுடனே வாழ்வான். உலகில் உள்ள எல்லா தேசங்களும் இப்போது லஞ்சத்தின் பிடியிலே உள்ளது ஏனெனில் நாம் புதிதாக தேர்ந்தெடுக்கும் அரசும் முந்தைய அரசின் வழியிலே செல்கிறது மாற்றம் எதுவுமில்லை, நான் எந்த அரசையும் இழிவு படுத்தவோ, குற்றம் கூறவோ இதை கூறவில்லை இதுவே எதார்த்தம். நம்முடைய தற்போதுள்ள மனப்பான்மை நம்மை முதலில் காத்து கொள்ளும் மனபான்மையாக உள்ளது. எல்லா நிறுவனங்களும் அரசியல், மதம் எல்லாம் மக்களை ஒரு பயத்துடன் வாழவே வழிவகுக்கிறது. இருந்தாலும் பணமே வாழ்வின் ஆதாராமாக விளங்குகிறது.
இதனால் ஒரு ஏழை திருடுவதும் இந்நிறுவனங்களின் பங்களிப்பே. மனிதர்கள் இப்போது பொறாமையுடன், பொய்யுடன் வாழ்வதற்கு பணத்தை சார்ந்த அமைப்பே காரணமாகும். உதராணம் தற்ப்போது நீங்கள் ஒரு கடை வைத்து இருக்கிறீர்கள் அதில் உள்ள பொருளை காட்டிலும் பக்கத்து கடையில் உள்ள பொருள் சிறப்பானது ஆனால் நீங்கள் வியாபாரம் வாழ்வாதாரம் ஆன காரணத்தால் உங்கள் கடை பொருளே சிறப்பானது என பொய் சொல்லும்
கட்டாயத்துக்கு தள்ளபடுகிறீர்கள்.
FASCISM, COMMUNISM, CAPITALISM அல்லது SOCIALISM எதுவானாலும் அதன் அடிப்படை நோக்கம் பணம், போட்டி, தொழிலாளர்கள் ஆகியவற்றை உருவாக்குவதே.
“இதுக்கு மேல இந்த படத்தை பற்றி எழுதினால் பதிவுலகமே குனிய வைத்து குமறும் அபாயம் உள்ளதால், இத்தோட நிப்பாட்டிக்கலாம்னு பாக்குறேன், அதனால் எல்லா நல்லவங்களும் இந்த படத்த பாத்துகோங்க.”
இந்த படம் உண்மையிலே ரொம்ப நல்ல படம்னுலா சொல்ல மாட்டேன் கொஞ்சம் மொக்க தான், ஆனா பல மேட்டர் தெரிஞ்சிகளாம். படம் பாக்கணும்னு விருப்ப படரவங்களுக்கு கீழ லிங் கொடுத்து இருக்கேன்.
http://video.google.com/videoplay?docid=7065205277695921912&ei=QQhvS8H9CoGcwgOA6uTRBg&q=zeitgeist+addendum&hl=en#
ஒரு சுமாரான மொக்க படத்த பத்தி நான் எழுதறதுக்கு ஆதரவு கொடுத்த எல்லா
நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துகளாம் ஆயுத கலாச்சாராம் வேண்டாம் சொல்லிட்டேன் : )
இதனால் ஒரு ஏழை திருடுவதும் இந்நிறுவனங்களின் பங்களிப்பே. மனிதர்கள் இப்போது பொறாமையுடன், பொய்யுடன் வாழ்வதற்கு பணத்தை சார்ந்த அமைப்பே காரணமாகும். உதராணம் தற்ப்போது நீங்கள் ஒரு கடை வைத்து இருக்கிறீர்கள் அதில் உள்ள பொருளை காட்டிலும் பக்கத்து கடையில் உள்ள பொருள் சிறப்பானது ஆனால் நீங்கள் வியாபாரம் வாழ்வாதாரம் ஆன காரணத்தால் உங்கள் கடை பொருளே சிறப்பானது என பொய் சொல்லும்
கட்டாயத்துக்கு தள்ளபடுகிறீர்கள்.
FASCISM, COMMUNISM, CAPITALISM அல்லது SOCIALISM எதுவானாலும் அதன் அடிப்படை நோக்கம் பணம், போட்டி, தொழிலாளர்கள் ஆகியவற்றை உருவாக்குவதே.
“இதுக்கு மேல இந்த படத்தை பற்றி எழுதினால் பதிவுலகமே குனிய வைத்து குமறும் அபாயம் உள்ளதால், இத்தோட நிப்பாட்டிக்கலாம்னு பாக்குறேன், அதனால் எல்லா நல்லவங்களும் இந்த படத்த பாத்துகோங்க.”
இந்த படம் உண்மையிலே ரொம்ப நல்ல படம்னுலா சொல்ல மாட்டேன் கொஞ்சம் மொக்க தான், ஆனா பல மேட்டர் தெரிஞ்சிகளாம். படம் பாக்கணும்னு விருப்ப படரவங்களுக்கு கீழ லிங் கொடுத்து இருக்கேன்.
http://video.google.com/videoplay?docid=7065205277695921912&ei=QQhvS8H9CoGcwgOA6uTRBg&q=zeitgeist+addendum&hl=en#
ஒரு சுமாரான மொக்க படத்த பத்தி நான் எழுதறதுக்கு ஆதரவு கொடுத்த எல்லா
நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துகளாம் ஆயுத கலாச்சாராம் வேண்டாம் சொல்லிட்டேன் : )
வியாழன், 4 பிப்ரவரி, 2010
நானும் நீங்களும் செருப்பால அடி வாங்குறோம்
அட உண்ம தாங்க இந்தியாவுல இருக்குற எல்லாரும் ஏதாவது ஒரு வகைல எவன்கிட்டயாவது செருப்பால தான் அடி வாங்குறோம். முதல்ல பிரிட்டிஸ்காரன்ங்கிட்ட அடிமையா கிடந்தோம். அப்புறமா எத்தணையோ பேர் கஸ்ட பட்டு அவனுங்க கிட்ட இருந்து விடுதலை வாங்கி தந்தாங்க. ஆனா விட்டுட்டு போனவன்ங்க நாட்ட மட்டும் விட்டுட்டு போகல பசியையும் சேத்து விட்டுட்டு போனான்ங்க. அப்பத்த வடகிழக்கு மாகாணங்கள்ள கிட்டதட்ட 45,00,000 பேர் பசியால செத்து போனாங்களாம். என்ன பண்ணறதுனு யோசிச்ச நம்ம கவர்மெண்டு இடம் இல்லாததால தானே நிறைய பயிர் பண்ண முடியலனு காட்டலா அழிச்சி விவசாய நிலமாக்கி பண்ணயம் பாத்தாங்க.
அப்பவும் பாருங்க ஒண்ணும் கொட்டிடல அப்படி இப்படி ஏதோ நம்ப விவசாயிங்க வியர்வையால இழுத்து புடிச்சிகிட்டு நம்ப தேசம் சோறு தின்னுச்சி. அதே நேரத்துல மேற்ககத்திய நாடுகள்ள ஏதோ அவங்களா புதுசா ஏதோ வித கண்டுபுடிச்சி அத பயிரிட்டாங்களாம். அது வரைக்கு இருக்கோமா இல்லையானு தெரியாத இந்திய விவசாய ஆராய்ச்சி கூட்டமைப்பு மெக்சிகோல நார்மன் போர்லாக்ங்கரவர் பண்ணுன பசுமை புரட்சிய இந்தியாவுலயும் பண்ணனும்னு ஏதோ ஒரு அமெரிக்க கம்பெனிய கூட்டிட்டு வந்து பசும புரட்சி பண்ணுச்சாம். அது இன்னானா முதல்ல விவசாய நிலங்கள அதிகம் பண்ணரது அடுத்ததா ஒரு வருசத்துல ஒரு விளச்சல் நடந்த இடத்துல 2 விளச்சலா அதிகம் பண்ணறது, மூணாவதா அமெரிக்க காரன் ஒரு விதைய தந்தானாம் அது நிறைய மகசூல் கொடுக்குமுனு அத விதைகறது.
இப்படி தான் 1965ல் பசும புரட்சி ஆரம்பிச்சது அமெரிக்கனோட உதவியோட. நம்ம நாட்டுக்கு அது அந்த சமயத்துல மிகவும் தேவ பட்ட ஒரு விசயம் அதுல மாற்றுகருத்தே இல்ல ஆனா அமெரிக்க காரன நுழைய உட்டது தான் தப்பு. அவனுக்கு உட்கார இடம் கொடுத்தா பாய் போட்டு படுத்து விசிறி உட சொல்வான் அது தெரியாம போச்சி நம்ப ஆளுங்களுக்கு. வந்தவன் சும்மா இருப்பானா கொய்யால விதையையும் கொடுத்தான் அது கூட இந்தாங்கடா இந்த உரத்த போடுங்கடானு சொல்லி அவன் ஊரு உரத்த கொடுத்து காசு பாக்க ஆரம்பிச்சான். அப்புறமா பயிர்லா பூச்சியா இருக்கு இதுக்கு முன்னாடி இப்படி எங்க ஊர்ல இருந்த்தது இல்லனு நம்ப ஆளுங்க போய் நின்னதுக்கு எலேய் அதுக்கு ஏன் கவல படற இரு உனக்காக ஒங்க நாட்ல ஒரு பூச்சி கொள்ளி மருந்து பேக்ட்ரியே கட்றனு சொல்லி ஒரு பேக்டரியும் கட்னான்.
அதுல இருந்த வந்த பூச்சி கொள்ளி மருந்து பயிரல இருந்த பூச்சியையும் கொல்லிச்சி பேக்டரில இருந்து வந்த விசவாயு ஒரு 12000 பேரையும் போட்டு தள்ளிச்சி. அவன் சிம்பாலிக்கா சொல்லி இருக்கான் பாத்தியாடா என் பூச்சி கொல்லி மருந்தோட வீரியத்த ஒண்ணும் பயப்படாத எல்லா பூச்சியும் செத்துரும்னு. நாட்ல விவசாயம் வளந்தது ஆதே சமயம் அமெரிக்க காரன் கல்லாவும் நல்லா கலெக்சன் ஆச்சி ஆமாம் அவன் ஊட்டு உரத்தையும், பூச்சி கொல்லி மருந்தையும் ஓசியிலையா தருவான் அவன் என்ன இளிச்ச வாய் இந்தியா காரனா என்ன?
அவன் வெவரகாரங்க கொய்யால அவன் கொடுத்த விதைய போட்டு போட்டு பழக்க படுத்தி நம்ப நிலமும் இப்ப நம்மூரு விதைய போட்டா மகசூல் கொடுக்க மாட்டங்கது. அப்ப இன்னா பண்ணரது விதியேனு அவன் கொடுக்குற உரத்தையும், பூச்சி கொல்லி மருந்தையும் அடிக்க வேண்டியது தான்.
இப்ப அதுவும் இல்லாம ஏதோ புது வகையான கத்திரிக்காயாம் பேரு BT கத்திரிக்காயாம் அத விளைவிக்க போறாங்களாம் ஏண்டானு கேட்டா இதுல நிறைய பூச்சி எதிர்ப்பு சக்தி இருக்கு அப்படிங்கறாங்க GEAC(Genetic engineering approval committee of india). சரி யாருடா இந்த கத்திரிக்காய உருவாக்குறாங்கனு பாத்தா அட நம்ப FOOD INC. புகழ் MONSANTO நல்லா இருங்கடா. பல நாடுகள்ள இந்த GMO மரபணு மாற்ற பட்ட உயிரணு தடை செய்ய பட்டுகிட்டு இருக்கு ஆனா இத நம்ப விவசாய மந்திரி சரத் பவார்கிட்ட கேட்டா GEACயே முடிவு பண்ணிடிச்சி இதுக்கப்புறம் அரசால ஒண்ணும் பண்ண முடியாதுங்குறார். என்ன உள்குத்தோ யாருக்கு தெரியும்?
சரி பூச்சி கொல்லி மருந்த பூச்சி கொல்லி மருந்தா தான் தந்தானுங்கனா அதுவும் இல்லயே டேஸ்ட் பாருங்கடானு COCO COLAலயும், PEPSIலயும் கலந்து தானே கொடுத்தாங்க. அத நாம வாங்கனும்னு பல நடிக சிகாமணிகள் கோக் குடிங்கடானும், விளையாட்டு வீரர்கள் நாட்டுக்காக ரொம்ப கஸ்டபடறவங்க விளையாடற அப்ப லோகோவ போட்டுகிட்டும் யே தில் மாங்கே மோர்னு பாட்டு பாடுறாங்க அப்புறம் நம்ப ஊட்டு புள்ளைங்க இன்னா பண்ணும் நைனா எனக்கும் அது வேணும்னு கேக்கும் வாங்கி தராம இருக்க முடியுமா 1 ரூபா கூட உற்பத்தி செலவு ஆவாத அந்த தண்ட கருமத்த 15 20 ரூவான்னு வாங்கி கொடுப்போம். அட பின்ன அந்த நடிகருக்கு, விளையாட்டு மாவீரர்களாம் சும்மாவா நடிப்பாங்க அவங்களே பாவம் நடிக்கறதுக்கும், விளையாடுறதுக்கும் 5 10 தான் வாங்குறாங்க அப்புறம் இதுல தானே சம்பாரிக்க முடியும்.
இது மட்டுமா அவன் என்னத்த வித்தாலும் அது சூப்பர் தான். அவன் தரம் தான் உலகதரம் அவன் ஒரு செருப்ப 1000 ரூவானாலும் சூப்பர் செருப்புயானு வாங்கி மாட்டிக்குவோம், சட்ட 2000மா பரவாயில்ல கொடு, பீசா 200 பரவாயில்ல, நீ என்னத்த வித்தாலும் வாங்கறதுக்கு இந்தியா காரனுங்க நாங்க இருக்கோம். அவன் மார்க்கெட் அந்த பக்கம்லா முடிஞ்சி போச்சினு தான் மிச்சமீதி ஓட்ட சரக்க இங்க கட போடறான். நாமளும் கஸ்ட பட்டு சம்பாரிச்ச காசு பணத்த அவன்கிட்ட கொடுத்து வழக்கம் போல ஆண்டியா போவோம்.
அட நமக்கு எதுக்குங்க இதெல்லாம் சச்சின் சிக்ஸ் அடிக்கிறாரா பாத்து கை தட்டுவோம், அவரால தான நாட்ல எல்லாரும் சுபிக்சமா வாழுறாங்க, இல்ல நம்ப தளபதி நடிச்ச படமா போய் பால் அபிசேகம் பண்ணுவோம் அத வுட்டுட்டு மரம் நடற மாதிரியான லூசுதனமான வேலலாமா செய்வோம். அட ஒண்ணூமே இல்லனா மானாட மயிலாட சீசன் 10 பாப்போம் அட இப்படியே நாம உடாம பாத்தா சீசன் 100 கூட வரும்ங்க பின்ன அத வுட்டுட்டு நாட்ட பத்தி இல்ல விலவாசிய பத்தி ஏன் அப்படி ஆகுதுங்கறதலா பத்தி எதுக்கு யோசிக்கணும்.
எந்த விவசாயி கஞ்சிக்கு வக்கத்து போனா என்ன நாம மட்டும் 80 ரூவா 100 ரூவா கொடுத்து பிரியாணி சாப்பிடுவோம். அவன் சட்டையே போடலனா என்ன இப்ப நாம முகத்துக்கு பேஸ் கிரீம் வாங்கி போட்டுக்குவோம். அட எத பத்தியும் கவல பட கூடாதுங்க நாம சந்தோசமா பீர் அடிச்சிட்டு இருப்போம்.
இந்த வருசமே நம்ப நாட்டுக்கு 5 மில்லியன் டண் உணவு தானியம் வெளிநாட்ல இருந்து தேவ பட்டுச்சாம் ஆனா எங்கயும் அவ்வளவு இல்லையாம் 3 மில்லியண் டண் தான் மத்த நாட்ல ஸ்டாக் இருக்குனு அவ்வளவு தான் கிடச்சிதாம். இப்படியே போச்சுனா ஒண்ணும் பண்ண முடியாது. இப்பவே விவசாயம் பண்ணறதுக்கு தண்ணி இல்ல இதுல நமக்கு பல மாநாடு, பல விளையாட்டு, ராஜா யாரு ராணி 6 இதல்லாம் ரொம்ப தேவ தான். சோத்துக்கு வழி இல்லனாலும் பரவாயில்ல முதல் நாள் முதல் சோவ 200ரூவாயோ 300 ரூவாயோ கொடுத்து தலைவர் படம் பாக்கணும் இல்லனா தலைவர் கோவிச்சி கிட்டு உங்க கூட பேச மாட்டார்.
அட போங்க என்னத்த பேசி என்ன ஆக போகுது நடக்கறது தான் நடக்கும். நாமலும் இப்படியே எவன்கிட்டயாவது அடிவாங்கிகிட்டு நாட்ட நாசமாக்கிட்டு செத்து போய்டலாம்.....
செவ்வாய், 2 பிப்ரவரி, 2010
Zeitgeist.Addendum - பாகம் 2
” there are two ways to conquer and enslave a nation.
one is by the sword. the other is by the debt."
என்ற வாசகத்துடன் இரண்டாம் பாகம் துவங்குகிறது. இப்பாகம் முழுவது john perkins எனும் பொருளாதார பேராசிரியர், எழுத்தாளர் எவ்வாறு அமெரிக்க வங்கி (அ) உலகவங்கி அமெரிக்க அரசின் துணையுடன் மற்ற நாடுகளை கையகப்படுத்துகிறது என விளக்குகிறார்.
முதலில் எந்நாடு நிறைய வளம் கொண்டுள்ளது என கண்டறிந்து அந்நாட்டிற்கு கடனுதவி அளிக்க முடிவு செய்வார்கள். தொழிற்சாலைகள், துறைமுகங்கள் என கட்ட கடனளிப்பார்கள் அது அந்நாட்டில் அதிகாரத்தில் உள்ளவர்களை செழிப்படைய செய்யும். மற்ற அனைத்து மக்களையும் கடனாளி ஆக்கும். அதன் பிறகு உங்களால் கடனை திரும்ப தர இயலாது ஆதலால் உங்கள் நாட்டில் உள்ள வளங்களை எங்களுக்கு தாரை வார்த்து கொடுங்கள், ராணுவ தளங்களை கட்ட அனுமதியுங்கள், உங்கள் தண்ணீர், மின்சார மூலதனத்தை தனியார்மயமாக்குங்கல். அந்த தனியார்மயமாக்கலால் எங்கள் நாட்டு நிறுவனங்கள் உங்கள் நாட்டின் அனைத்து துறைகளிலும் உள்நுழையும்.
இதற்கு உதராணமாக உலகில் நடந்த சில சம்பவங்களை கூறுகிரார்.
1) 1951ல் ஈரானில் பிரதமராக மொகமத் மொசதக் பதவி ஏற்றார், பின்பு ஈரானின் பெட்ரோல் காசு அனைத்தும் ஈரானிய மக்களையே சென்றடையுமாறு வடிவமைத்தார். இது அமெரிக்க அரசுக்கு இஸ்டம் இல்லாத ஒன்று ஆதலால் அது என்ன செய்ததது. CIA ஏஜண்டுகளை அனுப்பி மொகமத்துக்கு கையூட்டல் அளித்து அதை வெளிபடுத்தி அவரை ஆட்சியில் இருந்து இரக்கி, புரட்சியை உண்டாக்கி சா என்பவரை ஆட்சியில் ஏற்றி முன்பு போல பெட்ரோலை சுரண்ட ஆரம்பித்தது.ஈரான் விசயத்தில் படைகளை அனுப்பாமல் தாங்கள் நினைத்ததை சுலபமாக செய்து விட்டதால் அதை போலவே அடுத்தடுத்து மற்ற நாடுகளிலும் அதன் வேலையை காட்டியது.
2) வளமிக்க நாடுகளை எப்படியாவது கடன் வாங்க செய்து பின்பு சாதாரண மக்களின் உழைப்பை உருஞ்சுவது. கவுதமாலா நாட்டிலும் ஈரானில் நடந்ததது போலவே நாடகம் நடத்தி அந்நாட்டிலும் தங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிபரை பல்வேறு காரணங்களை காட்டி ஆட்சியில் இருந்து அகற்றியது.
3) 1981ல் தங்களுக்கு எதிராக செயல்பட்ட ஈகுவாடர் அதிபரை விமானவிபத்து என்ற பெயரில் கொலை செய்த்தது.
4) பனாமா கால்வாய் தங்களுக்கு வேண்டும் என கேட்ட பனாமா அதிபரும் 1981ல் விமான விபத்தில் இறந்தார்(CIAவால் கொல்லப்பட்டார்.)
5) ஈராக்கிலும் இதே நிலை தான். தற்போது ஈராக்கை புணரமைப்பது அனைத்தும் அமெரிக்க கம்பெனிகள்.
6) வெனிசுலாவில் மட்டும் சாவோஸ்க்கு எதிராக இவர்கள் பப்பு வேகவில்லை.
மூன்று விதமாக ஒரு நாட்டில் தங்கள் ஆதிகத்தை செலுத்த முயலுவாரகள்.
முதலில் ஆட்சி செய்பவரை ஊழல் படுத்த முயலுவாரகள், அது முடியவில்லை எனில் CIA மூலம் நாட்டில் குழப்பம் ஏற்படுத்தி அவர்களை ஆதரிக்கும் நபரை ஆட்சியில் அமர வைக்க முயலுவார்கள் அதுவும் இல்லையெனில் ராணுவத்தின் மூலம் உள்நிழைவார்கள். இதுவே ஈராக்கில் நிகழ்ந்தது.
இதையெல்லாம் அமெரிக்க அரசு செய்கிறதா என்றால் இல்லை அமெரிக்க அரசை நடத்த துணை புரியும் corporatocracy அதாவது மிக பெரிய நிருவனங்களை சொந்தமாக கொண்டுள்ள தனி நபர்களே. இவர்களே இவை அனைத்துக்கும் காரணமாணவர்கள். அவர்களே அரசியல்வாதிகளை கட்டுபடுத்தவதும், அவர்களின் தேர்தல் செலவை பூர்த்தி செய்கிறார்கள்.
உலகமயமாக்கல்: அரசியல் குறுக்கீடுகள், லஞ்சம், ராணுவம் ஆகியவற்றின் மூலம் corporatocracy ஆட்கள் மற்ற நாடுகளில் தங்கள் ஆதிக்கத்திதை செலுத்துவதே உலகமயமாக்கல்.
ரிசர்வ் வங்கி எவ்வாறு அமெரிக்க மக்களை கடன், வட்டி மூலம் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கிரதோ அதே போல தான் உலக வங்கி, IMF ஆகியவை உலகை தங்கள் கட்டுகுள் வைத்திருக்கிறது. ஒரு நாட்டின் தலைவரை ஊழல் படுத்தி அந்நாட்டிற்கு கடன் கொடுத்து அந்நாட்டை கடனாளி ஆக்கி, அந்நாட்டின் நாணய மதிப்பை குறைத்து. அதன் மூலம் அந்நாட்டில் உள்ள வளங்களை சொட்ப மதிப்புக்கு தங்கள் கட்டுபாட்டுகுள் கொண்டுவருவது.
இதன் மூலம் பெரிய நிறுவனங்கள் தங்களது பொருளை மக்களிடையே கொண்டு போய் சேர்த்து சிறு வியாபாரிகளை நசுக்குவது உதாரணம் நம் நாட்டில் reliance fresh.
அதை போலவே ஏழை நாடுகளை முன்னேற்றுகிறேன் என சென்ற உலக வங்கி ஒண்ணத்தையும் கிழிக்கவில்லை இருந்தத விட எல்லாத்தையும் மோசமா தான் ஆக்குச்சு கல்விதரம், பொருளாதாரம், சுகாதாரம் என எல்லாம் கீழ தான் போச்சி.
ஒண்ணு தெரிஞ்சிக்கோங்க உலகி வங்கிங்கறது அமெரிக்க வங்கி எல்லா வட்டியும் அமெரிக்காவுக்கு தான் போகும் முதலே கொடுக்காம வட்டி மட்டும் வாங்குறாங்க. உலகத்துல இருக்க 100 முண்ணனி நிருவனங்களில் 51 நிருவனம் அமெரிக்காவுது.
அதை போலவே தீவரவாதம் என்னும் சொற்தொடர் இந்த பெரிய பணமுதலைகளை எதிர்பவர்களை குறிக்க உருவாக்கப்பட்டது. அல்-கொய்தா இயக்கமும் அமெரிக்கா முகாஜிதீன் என்னும் இயக்கத்தை ஊக்குவிக்கபட்டு பின் அல்-கொய்தாவாக மாறியது. அமெரிக்காவில் சராசரியாக ஒரு வருடத்திற்க்கு தீவரவாததிற்க்கு பலியானவர்களின் எண்ணிகை 68 ஆனால் கடலைபருப்பு ஒவ்வாமையால் இறந்தவர்கள் அதை விட இருமடங்கு அதிகம். இருதய நோயால் இறந்தவர்களின் எண்ணிகை 450000. தீவரவாதத்திற்கு எதிராக ஒரு ஆண்டுக்கு அமெரிக்க அரசு செலவிடும் தொகை 161.8 பில்லியன் டாலர் ஆனால் இருதய நோய் ஆராய்ச்சிகாக சொலவிடபடும் தொகை 3 பில்லியன் டாலர்களே ஆக மக்களின் நலனை விட பணமுதலைகளின் நலமே பிராதனமாக உள்ளது அரசுக்கு. நாம் தீவரவாதிகள் என நம்பி கொண்டிருப்பவர்கள் தீவரவாதிகள் அல்ல இந்த கார்பரேட் முதலாளிகலே தீவரவாதிகள்.
நாம் எப்படி இந்த பேராசை பிடித்த நபர்களை நிறுத்துவது. இவர்களே எண்ணை வளத்தையும், கஞ்சா விளைச்சலையும் கட்டுபடுத்துகிறார்கள்.ஆப்கானிஸ்தானில் 1980க்கு முன் 0%மாக இருந்த கஞ்சா விளைச்சல் தற்போது 90% மாக உயர்ந்துள்ளது.
இதற்க்கெல்லாம் என்ன மூல காரணம் என நாம் ஆராய்ந்தால் அதனடியில் நியாமற்ற, பேராசைமிக்க, சுயநலமான பல பணக்கார கும்பல்கள் இருக்கும்.
இதை எவ்வாறு ஒழுங்கு படுத்துவது அதை பாகம் 3ல் காண்போம்.
இப்படம் எந்த அளவிற்க்கு உண்மையான தகவல்களை அளிக்கிறது என தெரியவில்லை ஆனால் எல்லாம் நம்பும்படியாகவே உள்ளது.
திங்கள், 1 பிப்ரவரி, 2010
Zeitgeist.Addendum - பாகம் 1
Zeitgeist என்னும் ஜெர்மானிய வார்த்தை குறிக்கும் தகவல் காலத்தின் உயிர்
addendum என்னும் வார்த்தை இணைப்பை குறிக்கிறது.
முதலில் 2007ஆம் ஆண்டு Zeitgeist: The movie எனும் ஆவண படத்தை தொடர்ந்து 2008ல் Zeitgeist.Addendum வெளிவந்தது. இது மிக அதிகமாக ஒதுக்கபட்ட ஒரு படம். நம்பகதன்மையற்ற கருத்துகளை உள்ளடக்கியது என அதிகம் குற்றம் சாட்டப்பட்டது. பல முடிச்சிகளை அவிழ்ப்பது போல இருந்தாலும் பல முடிச்சிகளையும் இப்படம் போடுகிறது. ஒரு அறிதலுக்கு இப்படத்தை பார்க்க நான் பரிந்துரை செய்கிறேன் காரணம் இப்படம் முழுவதும் உருவாக்கபட்டது peter joseph எனும் ஒரு நபரால். நம்ப டி. ஆர் போல இயக்கம், தயாரிப்பு, படதொகுப்பு, இசை என எல்லாம் அவர் ஒருவரே ஆனால் மிக சிரத்தையுடன். காட்சியமைப்புகள் அனைத்தும் மிக வித்யாசமாக செய்யப்பட்டுள்ளது படத்தின் இசையை போலவே.
இருளான பிண்ணனி மெல்ல தோன்றும் சிறு வெளிச்சம், மெல்ல மெல்ல அதிகமாகும் இசை, ஒரு கண்ணின் கருவிழிக்கு பின்னால் ஒலிக்கிறது கூடவே சில காட்சிகளுடன் யுத்தம், வறுமை, அழுகை, தீவரவாதம். கண்கள் மூடி திறக்கும் போது ஒரு வாசகத்துடன் திறக்கிரது நாம் என்னவாக இருக்கிறோம் நல்லவனாக, கெட்டவனாக, குறிக்கோளுடன், குறிக்கோள் இல்லாமல் எல்லாம் தீர்மானிக்க பட்டது, அதை நாம் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம் எல்லாவற்றுக்கும் மாற்று உண்டு. ஆனால் இந்த விளையாட்டின் முடிவு என்ன என்பதை காண்போம். கண்ணிமை மூடி கொள்கிரது பின்னால் ஒரு தெருவின் காட்சியுடன் . அத்தெரு wall street ஆக இருக்களாம் என்பது எனது கணிப்பு.
திரும்பவும் ஒரு இருண்ட திரையில் இருந்து காட்சிகள் தோண்றுகிறது. ஒரு குரல் ஒலிக்கிறது “ நாம் என்ன சொல்கிரோம் என்றால் எவ்வளவு மக்கள் மனதில் புரட்சியை தூண்ட, நிலையற்றதன்மை இந்த நிலையற்ற தன்மை இப்போது பழைய முறைகளை பின்பற்றவில்லை, மனிதன் அப்படியே தான் இருக்கிறான் வன்மம், போராட்டம், குரோதம் ஆகிய குணத்துடன். பிறகு மனிதன் ஒரு சமுதாயத்தை உருவாக்கினான் இத்தகைய மனோபான்மையுடன்”.
" It is no measure of health to be well adjusted to a profoundly sick society" எனும் வாசகத்துடன் முதல் பாகம் ஆரம்பிக்கிறது. இச்சமுதாயம் பல நிருவனங்களால் உருவாகப்பட்டது. அரசியல் நிறுவனம், சட்ட நிறுவனம், மத நிறுவனம் என பலவற்றால் உருவாகப்பட்டது என்றாலும் பண நிறுவனமே நம் வாழ்வை மிக சரியாக தீர்மானிக்கும் ஒரு அங்கம். ஆனால் இந்நிருவனத்தை பற்றி மக்கள் விழிபுணர்வுடன் இல்லை.
இதன் பிறகு ஒரு ஆப்பிரிக்க குழந்தையின் பசி கொண்ட கண்களுக்கு பின்னால் இவ்வாசகம் ஒலிக்கிறது “உலகில் உள்ள 1 சதவீத மக்கள் உலகின் 40 சதவீத வளத்தை கொண்டுள்ளனர், உலகில் தினமும் 34,000 குழந்தைகள் பசியாலும், தீர்க்ககூடிய நோயாலும் இறக்கின்றனர், 50% சதவீத மக்கள் ஒரு நாளை 2 டாலர் வருமானத்துடன் வாழ்கின்றனர், ஒன்றும் மட்டும் தெளிவாக புரிகிறது ஏதோ ஒன்று தவறாக நடக்கிறது, நாம் அறிகறோமோ இல்லையோ நம்மை சூழ்ந்திருக்கும் அனைத்து நிருவனதிற்க்கும் ஒன்றே பிரதானம் பணம்ம் இப்பணத்தை பற்றிய புரிதல் நமக்கு வெகு குழப்பமாகவே உள்ளது ஆதாலாள அதனிடம் இருந்து தள்ளி நிற்கிறோம், அது குழப்பமாக உருவாக்க பட்டதுக்கு காரணம் அது அவ்வாறாக இருக்க வேண்டும் என சிலரால் விரும்பப்பட்டது ”.
இதற்க்கு பிறகு பணம் எவ்வாறாக உருவாகிரது, அது அரசிடம் எவ்வாறு வந்து சேர்கிறது பின்பு அது மக்களிடம் எவ்வாறாக சென்றடைகிரது, சென்றடைந்த பணம் எவ்வாறாக புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பை குறைக்கிரது. அதனால் மக்கள் வாங்கும் திறன் பாதிக்கபடுவது, தேவைக்காக அதிக பொருள் ஈட்டுவதற்க்காக அதிகம் உழைக்கும் மக்களிடம் இருந்து எவ்வாறாக வட்டியுடன் வங்கிகள் தங்கள் கஜானாக்களை நிறப்பி கொள்கிறது என இப்பகுதி 1 விளக்குகிறது.
உதாரணம் modern money mechanics எனும் ஒரு கோப்பின் அடிப்படையிலே உலக வங்கி முதல் பல வங்கிகள் பணத்தை உருவாக்குகிறது. தற்போது அமெரிக்க அரசுக்கு 10 பில்லியன் டாலர்கள் தேவை படுகிறது உடனே அது தன்னுடைய ரிசர்வ் வங்கியிடம் அதன் கோரிக்கையை வெளியிடுகிறது, ரிசர்வ் வங்கி 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் பத்திரத்தை கோருகிரது. அரசும் சில அரசு பொறிகளிட்ட பத்திரத்தை இது 10 பில்லியன் டாலர் மதிப்புள்ளது என்று சொல்லி வங்கியிடம் வழங்குகிரது. வங்கியிம் டாலர்களை அச்சடித்து அரசிற்கு இதை திருப்பி செலுத்த வேண்டும் என அனுப்பி வைக்கிரது. பணத்தை பெற்ற அரசு அப்பணத்தை பல்வேறு வங்கிகளில் முதலீடு செய்கிறது. தற்போது இப்பணம் அனைத்தும் புழக்கத்தில் விடப்பட்ட பணமாகிரது. தற்போது உருவாக்கப்பட்ட பணம் அனைத்தும் கடனில் இருந்தே உருவாக்கப்பட்டது. கடனில் இருந்து உருவாக்கபட்ட பணம் எப்படி திருப்பி அடைக்கபடும். மேலும் ஒரு தகவல் அமெரிக்காவில் 3%மே பேப்பர் பணம் மற்றனைத்தும் எலக்ட்ரானிக் பணம்.
ஆக ஓன்றுமே இல்லாமல் பணம் உருவாகிறது. modern money mechanics கோப்பின்படி வங்கிகள் சேமிப்பின் 10%த்தை எப்போதும் கையிருப்பு வைத்திருக்க வேண்டும். 10 பில்லியன் டாலர்களில் 1 பில்லியன் டாலர்களை கையிருப்பாக வைத்து கொண்டு மீதி 9 பில்லியன் டாலர்களை கடனாக கொடுக்க வங்கி முடிவு செய்கிறது. எவ்வாறு என்றால் கடன் வாங்குபவரிடம் ஒரு ஒப்பந்தந்தத்தை(கடன் பத்திரம் என வைத்து கொள்வ்வோம்) உருவாக்கி இப்பணத்தை தருகிறது. இப்பணம் மறுபடி மற்றோரு வங்கியில் சேமிப்பாக வைக்கபடுகிறது. சேமிப்பில் 10%த்தை வைத்து கொண்டு மீதி 90%சதவீத்தை அவ்வங்கி கடனாக கொடுக்க முடிவு செய்கிறது. இவ்வாறாக வளர்ந்து கொண்டிருக்கும் பணம் சேமிப்பில் போடப்பட்டதை போல 9 மடங்காக வளர்ந்து நிற்கும் அதாவது 90 பில்லியன் டாலர்களாக.
இவ்வாறாக புதிதாக உருவாக்கபட்ட பணத்திற்க்கு எங்கிருந்து மதிப்பு சேர்கிறது. அது புழக்கத்தில் உள்ள பணத்திடம் இருந்து தான். இதனால் பணத்தின் நிகர மதிப்பு குறைந்து மக்களின் வாங்கும் திறனையும் குறைக்கிறது. இதற்க்கு பெயரே பணவீக்கம். அதிக பண உற்பத்தி செய்யும் அதே நேரத்தில் பணவீக்கத்தை எவ்வாறு கட்டுபடுத்த முடியும். விடை சாத்தியமில்லை
இலகுவாக நீங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னால் 1 பணம் கொண்டு வாங்கிய பொருளை தற்ப்போது 22 பணம் கொண்டே வாங்க இயலும் இதுவே பணவீக்கம். அதிக பணம் உருவானால் அதிக கடன் உருவாகும் அதிக கடன் உருவானால் அதிக பணம் உருவாகும். எல்லா பணமும் கடனில் இருந்து உருவாக்க பட்டது தான் சரி எல்லா கடனையும் அடைத்தால் என்னாகும் நாட்டில் ஒரு பணம் கூட புழக்கத்தில் இருக்காது. சரி 10 பணம் வாங்கினேன் அதை திருப்பி செலுத்துகிறேன் என சொன்னால் சிரிப்பார்கள் எங்கடா வட்டி அதே தான் வங்கியிடம் இருந்து கடன் வாங்கிய அரசு ஒரு குறிப்பிட்ட சதவீதம் வட்டியுடன் அதை திரும்ப செலுத்துகிறேன் என வாங்கி மக்களிடம் கொண்டு சேர்க்கிறது அதே நிபந்தனையுடன். பணத்தை பெற்ற மக்களும் பணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த பாடுபடுகின்றனர். ஆனால் யோசித்து பாருங்கள் 10 பணம் தான் வங்கியில் இருந்து வெளிவருகிரது ஆனால் நீங்கள் வங்கிக்கு உதாரணமாக 12 பணம் செலுத்த வேண்டும் மிச்ச 2 பணத்தை எவ்வாறு பெற முடியும் இல்லாத பணத்தை எப்படி அடைக்க முடியும் அது முடியவே முடியாது. இந்த வட்டியை அடைக்க புது பணம் வெளியிட படும் அது மேலும் கடனை அதிகரிக்கும் அதில் ஏமாந்த யாரு ஒருவரின் சொத்து பரிபோகும் வங்கியிடம். விசயம் என்னவென்றால் இல்லாத பணத்திற்க்கு வட்டி கட்டினால் நிச்சயம் மோசம் போவோம் அது தான் modern money mechanicsன் நோக்கம். ஆக நாம் அனைவரும் நாள் நெடுக வேலை செய்கிறோம் யாருக்காக வங்கிக்காக, வங்கியிலயே உருவான பணம் வங்கியிடமே போய் சேர்கிறது அதிகமாக மிக அதிகமாக. உண்மையில் வங்கியும், அதற்க்கு ஆதரவு தரும் நிருவனங்களும், அரசுமே நம்மை ஆளுபவர்கள்.
முன்பு அடிமைக்களுக்கு உண்ண உணவு, உறங்க இடம் கொடுத்து அடிமை படுத்தினர் ஆனால் தற்போது சம்பளம் என்ற பெயரில் அடிமை படுத்த படுகிறோம். கடனே நம்மை அடிமை படுத்துகிறது வட்டி எனும் சாட்டையால்.
மேலும் அமெரிக்காவில் நடந்த சில சம்பவங்களை முன் வைத்து செல்கிறது.
உலக வங்கி, IMF (international monetary fund) அகியவற்றையே சூசகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வங்கிகளே உலகம் மொத்ததையும் தன் கட்டுக்குள் கொண்டு வர முயலுகிறது எவ்வாறு அது பாகம் 2ல்....
மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை என தெரியாத பட்சத்திலும் மூளையில் ஏதோ நிமிண்டுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)