வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

என் தமிழ் பெண்ணே


"நீண்ட உன் புருவங்களிடையே சிறு திலகமிட்டு,
கார்குழலில் வகிடெடுத்து பிண்ணிய ஜடையில் ஒரு குஞ்சமிட்டு,
காதில் சிணுங்க இரு தொங்கட்டான் இட்டு,
சிவந்த உன் கைவிரல் மேலும் சிவக்க மருதாணியிட்டு,
கிண்கிணி ஒலிக்க காலில் கொலிசிட்டு,
பாவாடை தாவிணி சரசரக்க
மல்லிகை மணமணக்க உன்னை காண விழைந்தேனடி என் தமிழ் பெண்ணே
அந்தோ உனக்கு தமிழ் அறியாது என்றரிந்து மனம் நொந்தேன்......."

2 கருத்துகள்:

தமிழரசி சொன்னது…

ஹஹஹா உனக்கு தமிழ் தெரியாது என்றதும் மனம் நொந்தேன்...அதெல்லாம் பிற மொழியினரும் செய்துக் கொள்ளும் அலங்காரமே..கவிதை முயற்சி பாராட்டுக்கள்..

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@தமிழரசி: வாங்க என்ன பண்ணறதுங்க இப்ப பல தமிழ் பொண்ணுங்களுக்கு தமிழே தெரியல ஒரு காதல் கடிதம் கூட தமிழ்ல எழுதி தர முடியல :(( :((

அந்த ஏக்கத்துல்ல எழுதிட்டேன், உங்க பாராட்டுக்கு மிக்க நன்றிங்க : )