வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

டாடி மம்மி வீட்டில் இல்ல....


நான் சமுதாயகாவலன்லா இல்லங்க பிட்டு படம் பாப்பேன்.

ஆனா பாருங்க சில விசயம் இதையும் மீறி சுர்ருனு இருக்கு அட நம்ப ஊர் சினிமாவ பத்தி தாங்க சொல்றேன். சினிமாவ ஏண்டா குறை சொல்றேனு தயவு செய்து யாரும் கேக்காதீங்க ஏன் அதால தான் எல்லாருக்கும் எல்லாம் தெரியுது. படத்துல இப்படி ஒரு காட்சி  ஃபர்ஸ்ட் நைட்ல ரூம்க்குள்ள போய்ட்டு காலைல பொட்டு, சேலைலாம் கலஞ்சி கதாநாயகி வெளில வந்தா பசங்களுக்கு உள்ள என்ன நடந்ததுனு தெரிஞ்சிக்கனும்னு தோணாதா அட எனக்கு நிச்சயம் தோணிச்சி. டே நாங்க ரியாலிஸ்ட்டிக்கா எடுக்குறோம்னு சொல்ர நல்லவங்களே அப்படியே உள்ள நடந்த மிச்சத்தையும் நீங்க காட்டுனா ரொம்ப ரியாலிஸ்டிக்கா இருந்திருக்கும். காட்டுரது ரியாலிஸ்டிக்னு சொன்னா முண்ணனி நடிகர் பத்து பேர அடிக்கரது, கனவு பாட்டு, அதலயும் முண்ணனி நடிகையோட தம்மாத்தூண்டு டிரெஸ் இதெல்லாம் எப்படி ஏத்துகிறது.

அவங்க கட்டி புடிச்சிக்கிட்டே லைட் ஆஃப் பண்ணுவாங்களாம். அதலாம் காட்றாங்க நீ ஏன் அத பத்தி மட்டும் பேசரனு கேக்காதீங்க காட்றது பத்தி மட்டும் தாங்க பேச முடியும், அவங்க லைட் ஆஃப் பண்ண உடனே ஒரு கனவு சாங் வெளிநாட்டுல அதலயும் முண்ணனி நடிகர் (ஹீரோங்கர வார்த்த மிக பெரிய முட்டாள்தனம்ங்க ) முண்ணனி நடிகையை போட்டு தடவு தடவுனு தடவுவார், எங்க காலத்துல இதெல்லாம் இல்லனு யாரும் பெரியவங்க கிளம்பாதீங்க எம்.ஜி.ஆர் காலத்துல இருந்தே இது இருக்கு. அப்புறம் அத பாக்குற பசங்க மனசு என்ன ஆகும்.

வீட்ல பெரியவங்க இருக்கிரப்ப இந்த படத்த பாத்துட்டு டாடி மம்மி வீட்ல இல்லனா அப்புறம் கலர் படம் தான் ஓடும் என்ன கலர்னுலா கேக்காதீங்க. பின்ன என்னங்க பாதி தான் சினிமாவுல காட்டுறாங்க மீதிய நாங்க பாத்து தெரிஞ்சிக்க வேணாமா, பசங்களுக்கு விசயங்கள தெரிஞ்சிகிரதுல ஆர்வம் அதிகம். இதுக்கேல்லாம் புள்ளையார் சுழி போடறது நம்ப ஊர் சினிமா கவர்ச்சி அத கொஞ்சம் குறைங்கப்பா.


சாமிகளா ரேப்புல இருந்து, தொப்புள பம்பரம் உடரது, ஆம்பிளேட் போடுரது வரைக்கும் நல்லா டீட்டைல காட்றீங்க ஆனா அப்படியே கொஞ்சம் நல்ல விசயத்தையும் டீட்டைலா சொன்னா  பாராட்டலாம் ஏன் நீ தான் அந்த நல்ல விசயத்த சொல்ரது சொல்லாதீங்க ஆம்ளெட் மேட்டரலா யோசிக்கிறீங்கல அப்புறம் இது மட்டும் தோணாதா.

மக்கள் இத தானே விரும்பறாங்கனு கிளம்புருவுங்களுக்கு ஏங்க காட்றத தானே பாக்க முடியும் நீங்க நல்ல விசயம், மூளைய கொஞ்சம் யோசிக்கிர மாதிரி, மனச நெகிழ்ச்சி அடையற மாதிரி எடுங்கப்பு நாங்க வேணாம்னா சொல்ரோம். டே படம்ங்கறது பொழுது போக்கரதுக்கு அதுல அறிவுரை சொன்னா தியேட்டர் பக்கம் யாரும் வரமாட்டாங்கனு சொல்ரவங்களுக்கு, நாங்க உங்கள அறிவுரை சொல்லி படம் எடுக்க சொல்லல ஆனா தப்பான விசயத்த டீட்டைலா சொல்லிட்டு காசு பாக்குறீங்களே அத பண்ணாதீங்க கொஞ்சம் அதயெல்லாம் விட்டுட்டு நல்ல விசயம் பக்கம் வாங்க.

டே பாக்கரத பாத்துட்டு என்னடா நல்லவன் மாதிரி பேசுறனு நீங்க கேக்கரது எனக்கு கேக்குது. ஏங்க நம்ப வீட்டு கொழந்த டாடி மம்மி வீட்டில் இல்ல, இல்ல என் பேரு மீனாகுமாரி போவோமோ குதர சவாரினு பாடுனா கேக்கரது நல்லவா இருக்கு. அப்பவே ஆரம்பிச்சி வச்சிடுறோம். அத வேர சிலர் போன் போட்டு கேக்கிறாய்ங்க. நல்ல ரசனைங்கோ இப்படியே மெய்ன்டைன் பண்ணுங்க. நம்ப ஊர்ல இப்பலாம் முண்ணனி நடிகர் டேண்ஸ் ஆடரத காட்டி சோறு ஊட்றாங்களே. அப்ப பயப்புள்ளைவ என்ன பண்ணும் பாவம் அடுத்த வாட்டி அத பாக்க தான் ஆச படும்.

ஏங்க நான் படத்த குத்தம் சொல்லலங்க அதுல காட்ட படற தேவை இல்லாத கவர்ச்சி(நீ ஏன் இதுலயே குறியா இருக்கனு கேக்காதீங்க கெட்ட விசயம் மக்கள சீக்கரம் போய் சேரரதுக்கு சினிமா ரொம்ப தான் உதவி செய்யுது). சினிமா மிக பெரிய ஊடகம்ங்க இன்னைக்கு சமுதாயத்துல அதோட தாக்கம் அதிகம் இருக்கு. நம்மளையும் குத்தம் சொல்லனும்ங்க அரசி வில, காய்கறி விலலாம் உயர்ந்தா மட்டும் முணுகுறோம் அதே என்ன விலையா இருந்தாலும்  காசு கொடுத்து முதல் நாள் முதல் சோவேக்கு படம் பாக்கணும்னு என்னங்க இருக்கு. என்ன அன்னைக்கு முண்ணனி நடிகர் சொல்லர அருமையான கருத்தால நாட்ல பசிபட்டினி கொரஞ்சிடுமா இல்ல நாட்ல ஒரு நாளைக்கு 40 ரூபா சம்பாதிக்கிற குடும்பம் அட்லீஸ்ட் 100 ரூபா சம்பாதிக்க போகுதா ஒண்ணும் இல்லங்க. அதனால இந்த கருமத்தலா விட்டுட்டு கொஞ்சம் நமக்கு, நம்ப நாட்டுக்கு தேவையான விசயத்துக்கு முக்கியதுவம் கொடுப்போம். அட்வைஸ்லா இல்லங்க உண்ம

நீ யாருடா இத பத்து சொல்லரதுக்கு புடிக்கலனா நீ பாக்காதுனு சொல்ரவங்களுக்கு, இந்தியா ஒரு சுதந்திர நாடுங்க எனக்கு கெட்டதுனு பட்டத சொல்ரதுக்கு எனக்கு உரிம இருக்கு

பெரியவங்களுக்கான விசயம் பெரியவங்களுக்கு மட்டும் தெரிஞ்சா போதும்ங்க, சினிமாவும் டிவியும் பொது ஊடகமா ஆகி போச்சி அதனால அதுல இந்த மேட்டரலா குறச்சா நம்ப எதிர்கால சந்ததி அடுத்த வாட்டி நல்ல விசயத்த பத்தி யோசிச்சி நல்ல சமுதாயமா வளரும். அப்படியே பாக்கணும்னு தோணிச்சினா தனியா உட்காந்து என்ன வேணும்னாலும் பாருங்க.

சரி உடுங்க டிவில செம பிட்டு பாட்டு போட்டு இருக்கான் பாக்க போவோம்.....

7 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

எந்த டிவிலனு சொல்லலியே?

மரா சொன்னது…

இவிங்களே இப்படித்தான் பாஸ். இதையெல்லாம் பாத்தா நாம பொழப்பு நடத்த முடியுமா?

நல்ல சேனல்களாப் பாக்க வேண்டியதுதான் டிஸ்கவரி,நேஷனல் ஜியோக்ரஃபின்னு...

மதன் சொன்னது…

@அண்ணாமலையான்: ஹாஹா தல ஏங்க இப்படி

@மயில்ராவணன்: உண்ம தாங்க தல நாம நல்ல வழிய பாத்து போக வேண்டியது தான்.

அதே சமயம் இவனுங்க சும்மா படத்துல கவர்ச்சிய காட்டி நம்மல டென்சன் பண்ணுரான்ங்க அந்த கடுப்பல தாங்க தல ஏதோ எழுதிட்டேன் : )

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஆகா.. நல்லாயிருக்கே...
உடுங்க.. அடிக்கடி வரப்போறேன்...

மதன் சொன்னது…

@பட்டாபட்டி: முதல் முறை என் பக்கத்துக்கு வந்துஇருக்கிற நல்லவரே. வாங்க தல அடிக்கடி வந்துட்டு போங்க.

இருந்தாலும் உங்க கிட்ட கொஞ்சம் சாக்கிரதையா தான் இருக்கணும் (ஹாஹா சும்மா தமாசுக்கு சொன்னேன்)ஆமாம் பின்ன பதிவுல தான் எல்லாரையும் போட்டு தள்ளுறீங்களே

மதன் சொன்னது…

@பட்டாபட்டி: என்ன தொடர்ந்து கண் கலங்க வச்சிட்டீங்களே தல : (( ஆனந்த கண்ணீர்)

சாமக்கோடங்கி சொன்னது…

உடுங்க சார்.. இதெல்லாம் இப்ப சகஜமாகிடிச்சு..

அப்புறம் அந்த டிவி சேனல் பேர எழுதி இருக்கலாமே...

நன்றி..