செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

Zeitgeist.Addendum - பாகம் 2


” there are two ways to conquer and enslave a nation.
      one is by the sword. the other is by the debt."

என்ற வாசகத்துடன் இரண்டாம் பாகம் துவங்குகிறது. இப்பாகம் முழுவது john perkins எனும் பொருளாதார பேராசிரியர், எழுத்தாளர் எவ்வாறு அமெரிக்க வங்கி (அ) உலகவங்கி அமெரிக்க அரசின் துணையுடன் மற்ற நாடுகளை கையகப்படுத்துகிறது என விளக்குகிறார்.

முதலில் எந்நாடு நிறைய வளம் கொண்டுள்ளது என கண்டறிந்து அந்நாட்டிற்கு கடனுதவி அளிக்க முடிவு செய்வார்கள். தொழிற்சாலைகள், துறைமுகங்கள் என கட்ட கடனளிப்பார்கள் அது அந்நாட்டில் அதிகாரத்தில் உள்ளவர்களை செழிப்படைய செய்யும். மற்ற அனைத்து மக்களையும் கடனாளி ஆக்கும். அதன் பிறகு உங்களால் கடனை திரும்ப தர இயலாது ஆதலால் உங்கள் நாட்டில் உள்ள வளங்களை எங்களுக்கு தாரை வார்த்து கொடுங்கள், ராணுவ தளங்களை கட்ட அனுமதியுங்கள், உங்கள் தண்ணீர், மின்சார மூலதனத்தை தனியார்மயமாக்குங்கல். அந்த தனியார்மயமாக்கலால் எங்கள் நாட்டு நிறுவனங்கள் உங்கள் நாட்டின் அனைத்து துறைகளிலும் உள்நுழையும்.

இதற்கு உதராணமாக உலகில் நடந்த சில சம்பவங்களை கூறுகிரார்.
1) 1951ல் ஈரானில் பிரதமராக மொகமத் மொசதக் பதவி ஏற்றார், பின்பு ஈரானின் பெட்ரோல் காசு அனைத்தும் ஈரானிய மக்களையே சென்றடையுமாறு வடிவமைத்தார். இது அமெரிக்க அரசுக்கு இஸ்டம் இல்லாத ஒன்று ஆதலால் அது என்ன செய்ததது. CIA ஏஜண்டுகளை அனுப்பி மொகமத்துக்கு கையூட்டல் அளித்து அதை வெளிபடுத்தி அவரை ஆட்சியில் இருந்து இரக்கி, புரட்சியை உண்டாக்கி சா என்பவரை ஆட்சியில் ஏற்றி முன்பு போல பெட்ரோலை சுரண்ட ஆரம்பித்தது.ஈரான் விசயத்தில் படைகளை அனுப்பாமல் தாங்கள் நினைத்ததை சுலபமாக செய்து விட்டதால் அதை போலவே அடுத்தடுத்து மற்ற நாடுகளிலும் அதன் வேலையை காட்டியது.
2) வளமிக்க நாடுகளை எப்படியாவது கடன் வாங்க செய்து பின்பு சாதாரண மக்களின் உழைப்பை உருஞ்சுவது. கவுதமாலா நாட்டிலும் ஈரானில் நடந்ததது போலவே நாடகம் நடத்தி அந்நாட்டிலும் தங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிபரை பல்வேறு காரணங்களை காட்டி ஆட்சியில் இருந்து அகற்றியது.
3) 1981ல் தங்களுக்கு எதிராக செயல்பட்ட ஈகுவாடர் அதிபரை விமானவிபத்து என்ற பெயரில் கொலை செய்த்தது.
4) பனாமா கால்வாய் தங்களுக்கு வேண்டும் என கேட்ட பனாமா அதிபரும் 1981ல் விமான விபத்தில் இறந்தார்(CIAவால் கொல்லப்பட்டார்.)
5) ஈராக்கிலும் இதே நிலை தான். தற்போது ஈராக்கை புணரமைப்பது அனைத்தும் அமெரிக்க கம்பெனிகள்.
6) வெனிசுலாவில் மட்டும் சாவோஸ்க்கு எதிராக இவர்கள் பப்பு வேகவில்லை.

மூன்று விதமாக ஒரு நாட்டில் தங்கள் ஆதிகத்தை செலுத்த முயலுவாரகள்.
முதலில் ஆட்சி செய்பவரை ஊழல் படுத்த முயலுவாரகள், அது முடியவில்லை எனில் CIA மூலம் நாட்டில் குழப்பம் ஏற்படுத்தி அவர்களை ஆதரிக்கும் நபரை ஆட்சியில் அமர வைக்க முயலுவார்கள் அதுவும் இல்லையெனில் ராணுவத்தின் மூலம் உள்நிழைவார்கள். இதுவே ஈராக்கில் நிகழ்ந்தது.

இதையெல்லாம் அமெரிக்க அரசு செய்கிறதா என்றால் இல்லை அமெரிக்க அரசை நடத்த துணை புரியும் corporatocracy அதாவது மிக பெரிய நிருவனங்களை சொந்தமாக கொண்டுள்ள தனி நபர்களே. இவர்களே இவை அனைத்துக்கும் காரணமாணவர்கள். அவர்களே அரசியல்வாதிகளை கட்டுபடுத்தவதும், அவர்களின் தேர்தல் செலவை பூர்த்தி செய்கிறார்கள்.

உலகமயமாக்கல்: அரசியல் குறுக்கீடுகள், லஞ்சம், ராணுவம் ஆகியவற்றின் மூலம் corporatocracy ஆட்கள் மற்ற நாடுகளில் தங்கள் ஆதிக்கத்திதை செலுத்துவதே உலகமயமாக்கல்.

ரிசர்வ் வங்கி எவ்வாறு அமெரிக்க மக்களை கடன், வட்டி மூலம் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கிரதோ அதே போல தான் உலக வங்கி, IMF ஆகியவை உலகை தங்கள் கட்டுகுள் வைத்திருக்கிறது. ஒரு நாட்டின் தலைவரை ஊழல் படுத்தி அந்நாட்டிற்கு கடன் கொடுத்து அந்நாட்டை கடனாளி ஆக்கி, அந்நாட்டின் நாணய மதிப்பை குறைத்து. அதன் மூலம் அந்நாட்டில் உள்ள வளங்களை சொட்ப மதிப்புக்கு தங்கள் கட்டுபாட்டுகுள் கொண்டுவருவது.

இதன் மூலம் பெரிய நிறுவனங்கள் தங்களது பொருளை மக்களிடையே கொண்டு போய் சேர்த்து சிறு வியாபாரிகளை நசுக்குவது உதாரணம் நம் நாட்டில் reliance fresh.

அதை போலவே ஏழை நாடுகளை முன்னேற்றுகிறேன் என சென்ற உலக வங்கி ஒண்ணத்தையும் கிழிக்கவில்லை இருந்தத விட எல்லாத்தையும் மோசமா தான் ஆக்குச்சு கல்விதரம், பொருளாதாரம், சுகாதாரம் என எல்லாம் கீழ தான் போச்சி.

ஒண்ணு தெரிஞ்சிக்கோங்க உலகி வங்கிங்கறது அமெரிக்க வங்கி எல்லா வட்டியும் அமெரிக்காவுக்கு தான் போகும் முதலே கொடுக்காம வட்டி மட்டும் வாங்குறாங்க. உலகத்துல இருக்க 100 முண்ணனி நிருவனங்களில் 51 நிருவனம் அமெரிக்காவுது.

அதை போலவே தீவரவாதம் என்னும் சொற்தொடர் இந்த பெரிய பணமுதலைகளை எதிர்பவர்களை குறிக்க உருவாக்கப்பட்டது. அல்-கொய்தா இயக்கமும் அமெரிக்கா முகாஜிதீன் என்னும் இயக்கத்தை ஊக்குவிக்கபட்டு பின் அல்-கொய்தாவாக மாறியது. அமெரிக்காவில் சராசரியாக ஒரு வருடத்திற்க்கு தீவரவாததிற்க்கு பலியானவர்களின் எண்ணிகை 68 ஆனால் கடலைபருப்பு ஒவ்வாமையால் இறந்தவர்கள் அதை விட இருமடங்கு அதிகம். இருதய நோயால் இறந்தவர்களின் எண்ணிகை 450000. தீவரவாதத்திற்கு எதிராக ஒரு ஆண்டுக்கு அமெரிக்க அரசு செலவிடும் தொகை 161.8 பில்லியன் டாலர் ஆனால் இருதய நோய் ஆராய்ச்சிகாக சொலவிடபடும் தொகை 3 பில்லியன் டாலர்களே ஆக மக்களின் நலனை விட பணமுதலைகளின் நலமே பிராதனமாக உள்ளது அரசுக்கு. நாம் தீவரவாதிகள் என நம்பி கொண்டிருப்பவர்கள் தீவரவாதிகள் அல்ல இந்த கார்பரேட் முதலாளிகலே தீவரவாதிகள்.

நாம் எப்படி இந்த பேராசை பிடித்த நபர்களை நிறுத்துவது. இவர்களே எண்ணை வளத்தையும், கஞ்சா விளைச்சலையும் கட்டுபடுத்துகிறார்கள்.ஆப்கானிஸ்தானில் 1980க்கு முன் 0%மாக இருந்த கஞ்சா விளைச்சல் தற்போது 90% மாக உயர்ந்துள்ளது.

இதற்க்கெல்லாம் என்ன மூல காரணம் என நாம் ஆராய்ந்தால் அதனடியில் நியாமற்ற, பேராசைமிக்க, சுயநலமான பல பணக்கார கும்பல்கள் இருக்கும்.

இதை எவ்வாறு ஒழுங்கு படுத்துவது அதை பாகம் 3ல் காண்போம்.

இப்படம் எந்த அளவிற்க்கு உண்மையான தகவல்களை அளிக்கிறது என தெரியவில்லை ஆனால் எல்லாம் நம்பும்படியாகவே உள்ளது.

8 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

நிறய தகவல்கள்.. நன்றி...

மதன் சொன்னது…

@அண்ணாமலையான்: தங்கள் வரவுக்கு நன்றிங்க தல. ஏதோ படத்த பாத்து எழுதினேன். அடிக்கடி வந்துட்டு போங்க :)

பாலா சொன்னது…

Zeitgeist படங்கள் / கருத்தரங்குகள் எல்லாம்.. ஒரு ‘மாற்றுப் பார்வை’ டைப் தாங்க.

இவங்களோட 9/11 டாகுமெண்ட்ரி பார்த்தீங்கன்னா தெரியும். இதே மாதிரி நூறு 9/11 டாகுமெண்ட்ரி வந்திருக்கு.

ஒவ்வொன்னும்.. அவங்க பார்க்கும் கோணத்தில் இருந்து... அதை ஓரளவுக்கு ப்ரூவ் பண்ணுவாங்க.

ஆனாலும்.. இந்த வீடியோக்கள்.. அந்த காலத்தில்.. மிக அதிகமாக கூகிள் வீடியோவில் பார்க்கப் பட்டது.

இம்பேக்ட்தான் இல்லை!! :( :(

மதன் சொன்னது…

ஆமாங்க தல நானும் 9/11 படம் பாத்திருக்கேன். எந்த அளவுக்கு அவங்க சொல்ரது உண்மைனு தெரியல.

இருந்தாலும்சும்மா ஒரு பரபரப்புக்கு நாமலும் அத எழுத வேண்டியதுதான். :))

இம்பெக்ட்டும் பண்ண முடியாதுனுதான் தல தோணுது ஏன்னா food Inc பாத்தா KFC போக மாட்டோம் ஆனா இத பாத்தாலும் நம்மாள செய்ய கூடியது ஒண்ணும் இல்லங்க தல :((.

பாலா சொன்னது…

உங்க ஆர்கைவ் கேட்ஜட்.. மாதத்தை மட்டும் காட்டுது. அதை கொஞ்சம் மாத்தி, பதிவுகளை காட்டுற மாதிரி வச்சீங்கன்னா.. நல்லாயிருக்குமே தல?

பழைய பதிவுகளை கண்டுபிடிக்க வசதியா இருக்கும்.

kailash,hyderabad சொன்னது…

தல.ரொம்ப அருமையா எழுதிருக்கிங்க.
அமெரிக்கா அவங்க நாட்டுல விவசாயிங்களுக்கு மானியத்த கொடுத்துட்டு ,நம்மள மட்டும் கடன் வேணும்னா மானியம் தராதே என்கிறது. அப்பதானே நம்ம விவசாயி நொடிச்சு போய் விவசாயம் ஒழிஞ்சு வெளிநாடுகளையே இறக்குமதிக்கு நம்பிகிட்டிருப்போம்.
சரி .அவங்க மட்டும் ஏன் மானியம் தராங்கன்ன, அதுக்கு விடை KFC ,Mecdonalds. போன்ற கம்பனிகள் என்று food inc ல சொல்லி இருக்காங்க.
இதெல்லாம் பாத்தா மண்டைய பிச்சுகிட்டு காட்டில்தான் போய் வாழனும் போலிருக்கு.

TAMIL சொன்னது…

sir blog post panradu votes vangradu ida pathilam konjam detaila post konjam podunga pls

மதன் சொன்னது…

@tamil:
சார்னுலா கூப்பிட்டு என்ன வெக்க பட வைக்காதீங்க தமிழ். i am a small boy நீங்க எப்படி இந்த பதிவுகள்ல சுட்டிய சேக்கரதுன்னு கேக்றீங்கனு நினைக்கிறேன். http://www.tamilish.com/login.php?return=http://www.tamilish.com/submit?lang=ta,
http://ulavu.com/page.php?page=vote
மேலே கொடுக்கபட்டுள்ள லிங்க் போனீங்கனா எப்படி சுட்டிகள்ல சேத்துகலாம்னு தெரியும் :)