ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

Zeitgeist.Addendum - பாகம் 3

  
 " Greed and competition are not the result of immutable human
    temperament... greed and fear of scarcity are in fact being created 
     and amplified..the direct consequences is that we have to fight
   each other in order to survive"

எனும் வாசகத்துடன் 3ஆம் பாகம் துவங்குகிறது. இப்பாகம் முழுவது ஜாக் ஃப்ரஸ்சோ(jacque fresco) எனும் பேராசிரியர், விஞ்ஞானி, சிந்தனையாளரால் விளக்க படுகிறது. இவர் வீனஸ் பிராஜக்ட் எனும் அமைப்பை நடத்தி வருகிறார். அவ்வைமைப்பின் நோக்கம் லாப நோக்கில் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களால் ஏற்படும் ஏழ்மை, குற்றம், லஞ்சம், போர் அனைத்தும் ஏற்படுகிறது என்றும், இதற்கு மாற்றாக எல்லா பொருளும் எல்லா மக்களையும் சென்றடையுமாறு ஒரு புதிய சமுதாயாத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளது.  எல்லாருக்கும் எல்லாம் கிடைத்தால் மக்கள் மற்றவர்களுடன் நட்புணர்வுடன் வாழ்வார்கள் என்பது இவரது நம்பிக்கை. இவரது அமைப்புக்கான அதிகார வலைக்கான இணைப்பு கீழே கொடுக்கபட்டுள்ளது.
தன்னை பற்றிய சுயறிமுகத்துடன் தற்போது உள்ள பண அமைப்பு எவ்வகம் உலகில் நடக்கும் அநியாயங்களுக்கு ஆணிவேறாக உள்ளது. மனிதன் சமூகம் எவ்வாறு உள்ளானோ அதற்கு அவன் சமூகமே காரணம். அவன் நல்லவனாவதும், தீயவனாவதும், தற்போது உள்ள போட்டி, பொறாமை மனப்பான்மையுள்ள உலகில் வளரும் அவன் அவ்வாறான மனப்பான்மையுடனே வாழ்வான். உலகில் உள்ள எல்லா தேசங்களும் இப்போது லஞ்சத்தின் பிடியிலே உள்ளது ஏனெனில் நாம் புதிதாக தேர்ந்தெடுக்கும் அரசும் முந்தைய அரசின் வழியிலே செல்கிறது மாற்றம் எதுவுமில்லை, நான் எந்த அரசையும் இழிவு படுத்தவோ, குற்றம் கூறவோ இதை கூறவில்லை இதுவே எதார்த்தம். நம்முடைய தற்போதுள்ள மனப்பான்மை நம்மை முதலில் காத்து கொள்ளும் மனபான்மையாக உள்ளது. எல்லா நிறுவனங்களும் அரசியல், மதம் எல்லாம் மக்களை ஒரு பயத்துடன் வாழவே வழிவகுக்கிறது. இருந்தாலும் பணமே வாழ்வின் ஆதாராமாக விளங்குகிறது.

இதனால் ஒரு ஏழை திருடுவதும் இந்நிறுவனங்களின் பங்களிப்பே. மனிதர்கள் இப்போது பொறாமையுடன், பொய்யுடன் வாழ்வதற்கு பணத்தை சார்ந்த அமைப்பே காரணமாகும். உதராணம் தற்ப்போது நீங்கள் ஒரு கடை வைத்து இருக்கிறீர்கள் அதில் உள்ள பொருளை காட்டிலும் பக்கத்து கடையில் உள்ள பொருள் சிறப்பானது ஆனால் நீங்கள் வியாபாரம் வாழ்வாதாரம் ஆன காரணத்தால் உங்கள் கடை பொருளே சிறப்பானது என பொய் சொல்லும்
கட்டாயத்துக்கு தள்ளபடுகிறீர்கள்.

FASCISM, COMMUNISM, CAPITALISM அல்லது SOCIALISM எதுவானாலும் அதன் அடிப்படை நோக்கம் பணம், போட்டி, தொழிலாளர்கள் ஆகியவற்றை உருவாக்குவதே.

“இதுக்கு மேல இந்த படத்தை பற்றி எழுதினால் பதிவுலகமே குனிய வைத்து குமறும் அபாயம் உள்ளதால், இத்தோட நிப்பாட்டிக்கலாம்னு பாக்குறேன், அதனால் எல்லா நல்லவங்களும் இந்த படத்த பாத்துகோங்க.”

இந்த படம் உண்மையிலே ரொம்ப நல்ல படம்னுலா சொல்ல மாட்டேன் கொஞ்சம் மொக்க தான், ஆனா பல மேட்டர் தெரிஞ்சிகளாம். படம் பாக்கணும்னு விருப்ப படரவங்களுக்கு கீழ லிங் கொடுத்து இருக்கேன்.

http://video.google.com/videoplay?docid=7065205277695921912&ei=QQhvS8H9CoGcwgOA6uTRBg&q=zeitgeist+addendum&hl=en#

ஒரு சுமாரான மொக்க படத்த பத்தி நான் எழுதறதுக்கு ஆதரவு கொடுத்த எல்லா
நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துகளாம் ஆயுத கலாச்சாராம் வேண்டாம் சொல்லிட்டேன் : )

4 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

சரி சமாதானமா போய்டலாம்

மதன் சொன்னது…

@அண்ணாமலையான்: அப்படி கத்திய போட்டுட்டு போங்க தல ஏன்னா எங்கள்ட கத்தியும் இல்ல கத்தி எடுக்கவும் தெரியாது :))

kailash,hyderabad சொன்னது…

வந்தாச்சு. ஓட்டு போட்டாச்சு.
பதிவு நல்லாருக்கு. சீரியஸ் வாடை போக அடுத்து ஏதாவது ஒரு காமெடி பதிவு போடுங்க தல.

மதன் சொன்னது…

@kailash: தல பதிவ தொடர்ச்சியா படிக்ககிறதுக்கு ரொம்ப நன்றி. உங்க ஆதரவால தான் நிறைய எழுத ஊக்கம் கிடைக்குது. நிச்சயமா எழுதுறேங்க தல