திங்கள், 22 நவம்பர், 2010

வெட்டியா இருந்தா என்ன பண்ண தோணும்

இப்படி உன்ன மாதிரி மொன்னையா மொக்க பதிவு எழுத தோணும்ங்கற உங்க மைண்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன். பொதுவா நமக்கு பொழுதுபோக்கு என்ன டிவி பாக்கறதும் லேட்டஸ்ட்டா நெட்ட நோண்டறதும் நமக்கு சாரி எனக்கு பொழப்பாவா ஆய்டிச்சி.....


(மேல புகைபடத்துல இருக்கறவருக்கும் எனக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லங்கோ)

எந்நேரமும் நெட்ல உட்காந்து இருக்குரதால நெட்ல உள்ள சாதகம் பாதகம் பத்தி எனக்கு கொஞ்சம் அனுபவம் உண்டு.....தினப்படி என்ன மெயில் செக் பண்ணுவோம், அடுத்து ஃபேஸ்புக்ல போய் மொக்கையா ஏதாவது ஸ்டேட்டஸ் மெசேஜ் போடறது, நம்ப அழகான!!!! போட்டோவ போடறது, எவனாவது நல்ல வீடியோ அவன் சுவத்துல போட்டு இருந்தா அத க்ஷேர் பண்ணி அதுக்கும் எதாவது மொண்ணையா “டாராயிருக்கு, இந்த மாதிரி நான் பாத்ததே இல்ல, என்ன ஒரு வீடியோ” இப்படி கேப்சன் போட்டுறது, இதயெல்லாம் பண்ணிட்டு எவனாவது கமெண்ட் போடுறானானு பாக்கறது, கமெண்ட் வந்த உடனே அதுக்கு ஒரு கமெண்ட் கூட ஒரு ஸ்மைலினு அடிச்சி விடறது.

அட இது கூட பரவாயில்ல....அப்படியே பொறுமையா ஒரு ஒரு பொண்ணு பேரா போட்டு தேடுறது அதுல எதாவது கண்ணுக்கு லட்சணமா இருந்தா உடனே அதுக்கு ஒரு ஃப்ரிண்ட் ரிக்வஸ்ட் கொடுக்கறது, அந்த பொண்ணு ரிக்வஸ்ட்ட அக்சப்ட் பண்ணிடிச்சினு மெயில் வந்தா உடனே விழுந்தடிச்சி போய் அதோட சுவத்த பாக்கறது, அங்க என்னாடா நா அதோடு பிரண்ட் லிஸ்ட்ல நாம 370 சொச்சம்ல நிக்கறது, அப்ப தான் தெரியுது இதுக்கு யாரு ரிக்வஸ்ட் கொடுத்தாலும் அக்சப்ட் பண்ற கூட்டம்னு பின்ன நம்மையெல்லாம் அக்சப்ட் பண்ண்????. சரி இனிமே பிரண்ட் லிஸ்ட் கம்மியா இருக்கிற பொண்ணா பாத்து ஒரு 15 இல்ல 20 பிரண்ட இருக்கிற பொண்ணா இருந்தா நாம கொஞ்சம் முயற்சி செய்யலாம்னு ரிக்வஸ்ட் கொடுத்து அது அக்செப்ட் பண்ணினா ஆகா பட்சி சிக்கிடிச்சினு நினச்சிக்கிட்டு ரெண்டு நாள் கழிச்சி போய் அதோட சுவத்த பாத்தா.....கொய்யால அதுக்குள்ள எப்படி 400 சொச்சம் பிரண்ட்ஸ ஆட் பண்ணாளோ/////கடசில இவளும் அவளா......

சரி இதெல்லாம் சரிப்பட்டு வராது நாம நேரா மேட்ரிமோனில இறங்கிடுவோமுனு அதுலயும் ரெஜிஸ்டர் பண்றது....ஏற்கனவே எடுத்த போட்டோ குரூப்பா எடுத்த போட்டோ இதையெல்லாம் க்ராப் பண்ணி நம்ப மூஞ்சி பளிச்சினு இருக்குற மாதிரி இருக்க போட்டோவா ஒரு நாலு போட்டோவ போட்டு வச்சிட்டு ரம்யா, திவ்யானு பேரு வகையறாவா ஸேர்ச் பண்ணி அதுல யாரு நல்லா இருக்காங்களோ அவங்களுக்கு இண்ரஸ்ட் ரிக்வஸ்ட் கொடுக்கறது...காசா பணமா ரிக்வஸ்ட் தானேங்கறதால அப்படியே அதயும் தாரளபிரபுவா (இளைய திலகம் இல்லங்க) தெளிச்சி உடறது.....இந்த பொண்ணுங்களுக்கு மனசாட்சியே இல்லங்க ஒண்ணு கூட அக்செப்ட் பண்ணாம எல்லாரும் ரிஜக்ட் பண்றது......

மேல உள்ளதை படிச்சிட்டு ச்ச இவ்வளவு மானம் கெட்டத்தனமாவா இருப்பாங்கனு யாராவது நினச்சிங்கனா இத்தோட நீங்க படிக்கறத நிறுத்திடுங்க இதுக்கு மேல அடல்ட்ஸ் ஒண்லியா இருக்க வாய்ப்பு அதிகம்......

நம்ப மனிச உடம்பு படைக்கப்பட்டு அது வாழுதுனா அதோட சில தேவைகள பூர்த்தி செஞ்சிக்க தான், புலன்களோட குணங்கள் வெவ்வேறு உணர்ச்சிகள நமக்குள்ள கொண்டு வரது தான். இன்னாட என்னனமோ சொல்றனு நினைக்காதிங்க மேட்டருக்கு வரேன்......காமம் தலைக்கேறிடிச்சினா என்ன செய்ய தோணும், ஏதாவது பிட்ட பாக்க தோணும் (உங்களுக்குலா எப்படினு தெரியல எனக்கு அப்பப்ப தோணும்) இந்த ஊர்ல எல்லா பிட்டு சைட்டையும் block பண்ணிட்டானுங்க அதுனால என்ன பண்றது அப்படியே youtube போறது அங்க போய் hot rain songனு போட்டு செர்ச் பண்றது. அங்க வகைவகையா நம்ப குலசெம்மல்கள் ச்ச நடிகைகள் எப்படி எப்படியே டிரெஸ் பண்ணிக்கிட்டு அதுலயும் குறிப்பா புடவையா இருந்தா நல்லது நம்ப அழகு முண்ணனிநடிகரகள கட்டிபிடிச்சி டேண்ஸ் போடறது.....எல்லாம் பாக்கணும்னு தானே இப்படி தாரளமா நடிக்கிறாங்க அப்புறம் நாம பாக்களணா அவங்க வருத்த படமாட்டாங்க....இப்படிலா பாத்து நாம கொஞ்சம் கிளுகிளுப்பாயிடறது......

அப்புறம் திடீர்னு நமக்கு ஞிநோதயம் வரது ச்ச இதெல்லாம் தப்புனு அப்படியே ஒரு ஒரு வலைப்பூவா போய் படிக்கறது.......அப்படியும் டைம்வ பாஸாகலயா ஏதாவது ஒரு பொருள வாங்க போற மாதிரி அத பத்தி மணிக்கணக்கா படிக்கறது....அப்படி நான் பாத்த சில நல்ல இணையங்கள் http://www.photonhead.com/http://www.dpreview.com/ ஒரு கேமிரா வாங்களாமேனு தேடுனப்ப படிச்ச நல்ல வெப்சைட்டுங்க (இங்கயும் சைட்டு தானா...) போட்டோகிராஃபி பத்தி தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம் உள்ளவங்க படிச்சி பாருங்க உபயோகமா இருக்கும்.

இதுக்கு மேல என்ன எழுதறதுனு தெரியல.....

சரி கவித(ஹாஹாஹா) எழுதுறேன்.

இப்போதெல்லாம் லட்சியங்கள் லட்சங்களிலே முடங்கி விடுகிறது.....
     காதல்கள் கேமில் தொடங்கி ரூமில் முடிங்கின்றது (நான் இன்னும் ஒரு காதல் கூட பண்ண அது வேற விசயம்).....
   ஒரு தேநீர் கோப்பையை இரு கைகளில் ஏந்தி உதடு நனைய பருகியபொழுது உன் முகம் பிடித்து உன் உதட்டை  சுவைத்தது என் உதடுகளில் இப்பொழுது இனிக்கிறது.......
    மரக்கிளையிடையே விழுந்த உன் கீற்றொளி ஓர புன்னகை இந்த அரபி பெண்ணின் விழியின் மையின் கருமையை ஊருடுவிகிறது......
     உன் வீடு கடக்கும் பொழுதெல்லாம் (அது ரோட்ல இருந்து ஒரு 300 மீட்டர் தள்ளி இருக்கும்) என் கண்கள் எதை தேடிற்று நீ இருக்க மாட்டாய் என்றரிந்தும் உன் வாசல் கண்டு மகிழ்ந்தது (கிறுக்கு பய மவன்....)
    இன்னும் கொஞ்சம் நேரா, கொஞ்சம் முன்னாடி வாப்பா, நிமிர்ந்து நில்லுப்பா, அட கேமரவ பாருப்பா என்று போட்டோகிராஃபர் ஓராயிரம் முறை கூறிக்கொண்டிருந்தார், பாவம் அவருக்கு என்ன தெரியும் எங்கும் நிறைந்திருக்கும் உன்னை நான் ரசிக்கிறேன் என்று.......

இதுக்கு மேல எழுதினா நாடு தாங்காது வெட்டியா இருந்தா இதுலாதாங்க பண்ண தோணும்//

12 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

unga nermai enakku pidichirukku.

YOGA.S.Fr சொன்னது…

முடியல!!!!!!!!!!!!!!!!

kaattuvaasi சொன்னது…

Nee kalakku machi.....

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@பெயரில்லா: நன்றி நன்றி....

@யோகா: தமாசு...தமாசு....

@காட்டுவாசி: மிக்க நன்றி மச்சி..... :)

ப.செல்வக்குமார் சொன்னது…

//(மேல புகைபடத்துல இருக்கறவருக்கும் எனக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லங்கோ)//

அப்புறம் எதுக்கும் அவர் போட்டோ போட்டீங்கோ ..?

ப.செல்வக்குமார் சொன்னது…

//அட இது கூட பரவாயில்ல....அப்படியே பொறுமையா ஒரு ஒரு பொண்ணு பேரா போட்டு தேடுறது அதுல எதாவது கண்ணுக்கு லட்சணமா இருந்தா உடனே அதுக்கு ஒரு ஃப்ரிண்ட் ரிக்வஸ்ட் கொடுக்கறது,//

இதே வேலையா போச்சு உங்களுக்கு ..!!

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@செல்வா: வெட்டியா இருந்தா இண்ட மாதிரி வெட்டியா போட்டோலா போட தோணும்..... :-)

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@செல்வா: டைம் பாஸ்....டைம் பாஸ்.....

ப.செல்வக்குமார் சொன்னது…

//கொய்யால அதுக்குள்ள எப்படி 400 சொச்சம் பிரண்ட்ஸ ஆட் பண்ணாளோ/////கடசில இவளும் அவளா......//

ஹி ஹ ஹி ., இதுக்குத்தான் நான் எந்தப் பொண்ணுக்குமே REQUEST அனுப்பறதில்லை ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//அப்புறம் நாம பாக்களணா அவங்க வருத்த படமாட்டாங்க....இப்படிலா பாத்து நாம கொஞ்சம் கிளுகிளுப்பாயிடறது....../

ஹி ஹி ஹி .. நீங்க ரொம்ப நல்லவர் .!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//பாவம் அவருக்கு என்ன தெரியும் எங்கும் நிறைந்திருக்கும் உன்னை நான் ரசிக்கிறேன் என்று..///

லூசா அண்ணா நீங்க ..?!

மனோரஞ்சன் சொன்னது…

நீ வெட்டியா இருந்தா என்ன பண்ணுவேன்னு சொல்லுற ...ஆனா இங்க கொஞ்ச நேரம் பிரியா விடுவாங்களான்னு நான் கவலைபடுரேன் ...... நம்ம நேரம் .....ஹி ஹி ஹி ..