வெள்ளி, 22 ஜனவரி, 2010

இந்திய அரசியலும் சட்டமும் -பகுதி 1


மனிதர்கள் முதலில் உணவுக்கு வேட்டையாடி பிறகு ஒரு இடத்தில் நிரந்தரமாக தங்கி விலங்குகளை மேய்த்து தானியங்களை வளர்த்து ஆடைகளை உடுத்தி என மெல்ல நாகரிகம் பெற ஆரம்பித்தனர்.

இப்படி மெல்ல நாகரிகம் பெற ஆரம்பித்தாலும் மனதில் மிருக குணம் அவ்வபோது எட்டி பார்த்து கொண்டே தான் இருந்தது இன்றளவும் அக்குணம் உண்டு.

ஒரு கூட்டமாக வாழ்ந்தவர்கள் மற்ற கூட்டத்தினரை பகைமை உணர்வோடே கருதி வந்தனர், தங்கள் கூட்டத்தினரை பாதுகாக்க தங்களுக்குள் ஒரு தலைவனை தேர்ந்தடுத்தனர் அல்லது உருவாக்கினர், இவ்வாறாக எல்லா கூட்டதினரும் தங்களுக்குள் தலைவனை தேர்ந்தெடுத்து கொண்டனர். பிற்காலத்தில் இவர்களையே பல கூட்டத்தினர் தெய்வமாக வழிபட தொடங்கினர் நாம் அதற்க்குள் நுழைய வேண்டாம்.

முன்னெச்செரிக்கை, பொருள் மீது ஆசை அல்லது பயத்தின் காரணமாக மற்ற கூட்டத்தை தாக்க துவங்கினர். இப்படியாக பலமும் யுக்தியும் கொண்ட கூட்டதினர் மற்ற கூட்டதிரை அடிமை படுத்தினர் அல்லது இணைத்து கொண்டனர். மற்ற கூட்ட மக்களும் தங்களை வெற்றி கொண்ட தலைவனை பாதுகாப்பு கருதி தலைவனாக ஏற்று கொண்டனர்.

இத்தலைவர்கள் பிற்பாடு மிக்க படைபலத்துடன் சிற்றரசர்களாகவும், அரசர்களாகவும், பேரசர்களாகவும், சக்கிரவர்த்திளாகவும் வளர்ந்தனர் அலக்சேண்டர், அசோகர், ராஜராஜ சோழன் போல. ஆனால் இவர்களது வம்சம் என்றும் வாழையாடி வாழையாக நிலைக்கவில்லை. கால மாற்றம் போல ஆட்சி மாற்றமும் நிகழ்ந்தது. மக்களும் அரசனின் ஆனைகளையும், அவனது பிள்ளைகளை அடுத்த அரசனாக ஏற்று கொண்டு வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறாக நாகரிகத்துடன் ஆதிக்க மனோபாவமும் உலகம் முழுவதும் வளர்ந்து வந்ததது. நீயும் நானும் எதிரி ஆனால் நம் இருவருக்கும் ஒருவன் எதிரி என்றால் நாம் இரண்டு பேரும் இனைந்து அவனை முதலில் ஒழிப்போம் எனும் சித்தாந்ததின்படி பல சிற்றசர்களாலும், குறுநில மன்னர்களாலும் பிளவுற்று இருந்த இந்தியா (இந்தியா என ஒரு தேசம் அதற்கு முன் முழுமையாக என்றும் இருந்ததில்லை) ஒருங்கினைந்தது ஒரு பொது எதிரி வெள்ளையனை வெளியேற்ற பாடுபட்டது.

இந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளும் தனி நபர்களும் ஈடுபட்டிருந்தாலும், காங்கரஸ் எனும் கூட்டமைப்பே பலரை ஒருங்கிணைத்து பலத்துட்டன் போராடியது(விடுதலை என்பதை விட அந்நியனை வெளியேற்றவே இப்போரட்டங்கள் நிகழ்ந்தது - போராட்டம் நிகழ்ந்தது என நான் மிக எளிதாக தட்டச்சு செய்துவிட்டேன் ஆனால் அது கடினமனது என ஒரு வேலை எனது சுயசுதந்திரம் அல்லது எனது சுற்றத்தாருடைய சுதந்திரத்திற்க்கு பாடுபடும் போது அனுபவிக்க நேரிடலாம் ஆதலால் போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற அமைப்பினர்னும் தனிநபர்களும் எந்த விதத்திலும் காங்கிரஸ் கூட்டமைப்புக்கு குறைந்தவர்கள் அல்ல ). இப்படி இருப்பினும் காங்ரஸின் புகழும் அதன் தலைவர்களின் உழைப்பும் நாட்டு மக்களடிம் வெகுவாக பரவி இருந்தது. ஆகையால் மக்கள் காங்கிரஸின் பின்னால் திரண்டு போராடி 15ஆம் தேதி ஆகஸ்டு மாதம் 1947 அந்நியனை வெளியேற்றினர்.

அதன் பின் ஆங்கிலேயர்களின் வெஸ்ட்மிணிஸ்டர் ஆட்சி முறையையே இந்திய அரசியலில் பின்பற்ற ஆரம்பித்தனர். பிரதம மந்திரியும், ஜனாதிபதியுமே நாட்டின் முக்கியமான ஆட்சியளார்களக உள்ளனர். ஏகமனதாக காங்ரஸே நேருவின் தலைமையில் முதல் ஆட்சியை ஆரம்பித்தது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பலர் காங்கிரஸின் பின்னால் திரண்டு இருந்ததால் 1978 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்தது. இடது சாரிகள், பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரு கட்சிகளும் காங்கிரஸ்ற்கு மாற்றாக அவ்வபோது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.

தமிழ் நாட்டிலும் அந்நிலையே நிலவியது, ஜஸ்டிஸ் கட்சியை பெயர் மாற்றம் செய்து திராவிட கட்சி என பெரியாரால் 1944 நிறுவபட்டது, ஆனால் அது ஒரு அரசியல் கட்சியாக இல்லாமால் தனி திராவிட நாடு வேணுமென போராடியது. ஆனாலும் பிற்பாடு அக்கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக சி.என். அண்ணாதுரை அவர்கள் தனியே பிரிந்து திராவிட முன்னேற்ற கழகம்(DMK) கட்சியை ஆரம்பித்தார். காங்கிரஸின் பெருவாரியான ஆதிக்கத்தால் அரசியலில் நுழையாமல் இருந்த திமுக 1956 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தது.

4 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

அடடே நெறய தகவல் இருக்கு!

மதன் சொன்னது…

நன்றிங்க தலைவரே உங்கள மாதிரிலா நிறைய தெரிஞ்சிகனும் எழுதுனும்னு ஒரு உத்வேகம் தான், அப்ப அப்ப வந்து எட்டி பாருங்கோ :).......

priyamudanprabu சொன்னது…

இந்தியா என ஒரு தேசம் அதற்கு முன் முழுமையாக என்றும் இருந்ததில்லை
//////////

அப்பா நான் பலரிடம் சொல்லிட்டேன் இதை
யாருமே ஏற்றுகொள்ளவில்லை

உங்களின் பதிவில் இதை பார்த்ததும் மகிழ்ச்சி

மதன் சொன்னது…

ஆமாங்க பிரபு சுதந்திர போராட்ட சமயத்தில் தான் ஒருங்கிணைந்ததுனு எனக்கும் படுது அதான் எழுதிட்டேன் என்னை தொடருதுக்கும் மிக்க நன்றி பிரபு... :))