செவ்வாய், 26 ஜனவரி, 2010

குபூஸ், பச்ச ரொட்டி மற்றும் பேலன்ஸ்மத்திய கிழக்கு நாடுகள்ல இருக்குற எல்லாருக்கும் குபூஸ் பத்தி தெரிஞ்சி இருக்கும், ஒரு அருமையான் மெல்ல முடியாத பாக்கெட்ல விற்கபடும் தேசிய உணவு :-) ஒரு வகையான ரொட்டி. இந்த ரொட்டிய தயிர் சக்கர கூடவோ, இல்ல சிக்கன் பிராங்க் சாசேஜ் குருமா கூடவோ சாப்பிட்டாலும், கடைல 3 திர்ஹாமுக்கு கிடைக்கும் சவர்மா!!!!!!! என்னடா திட்றியானு கேக்காதிங்க சிக்கன் இறைச்சி துருவல், தக்காளி துண்டுகள், முட்டகோஸ் துண்டுகள், கடல சாஸ்னு நினைக்கிறேன் இத எல்லாத்தையும் குபூஸ்ல சுத்தி தரது தான் சவர்மா, உண்மைலே நல்லா இருக்கும்ங்க.

அடுத்து பச்ச ரொட்டி. ரொட்டி தெரியும் அது என்னடா பச்ச ரொட்டினு கேக்கறவங்களுக்கு, இப்ப பாத்திங்கனா பாக்கிஸ்தான் நாட்டு கொடில எந்த நிறம் அதிகம் இருக்கும் பச்ச தானே. அதனால பாக்கிஸ்தானியர்களுக்கு மலையாலிகளும், தமிழர்களும் வச்ச பேரு தான் பச்ச, அப்ப அவங்க சாப்பிடறது, செய்றது, விக்கறது எல்லாம் பச்ச ரொட்டி தான். உடலுக்கு நல்லதுனு சாப்பிட ஆரம்பிச்சது இப்ப வாரத்துல 4 நாள் சாப்பிட வேண்டியாதா போச்சி. கண்டிப்பா ஊருக்கு வாங்கிட்டு போய் எக்சிபிசன் போடணும் ஏன்னா அவ்வளவு பெரிசு. ஒரு பச்ச ரொட்டிய சாப்பிட்டாலே பெருசு இருந்தாலும் பசியின் காரணமாக அப்ப அப்ப 2 போகும் கண்டுக்க படாது. இந்த பச்ச ரொட்டியே 3 வகையா இருக்கு 1) பத்தலாவாலா-கொஞ்சம் மெலிசா இருக்கும் எண்ணெயே இல்லாம நெருப்புல சுட்டு கொடுப்பாங்க 2) மோட்டாவாலா - தடினமா இருக்கும் இதுவும் அதே மாதிரி தான் சுடுவாங்க 3) இது பேரு தெரியல - பெரிய சப்பாத்தி மாதிரி இருக்கும் எல்லாம் கோதும மாவல செயறது தான். எந்த வகையா இருந்தாலும் இதுக்கு ஒரே கண்டிசன் தான் சூடு ஆரறதுக்கு முன்னாடி சாப்பிட்டடணும் இல்லனா வாய மிக்சியாவோ, கிரைண்டராவோ மாத்தற நிலம வந்துடும்.

இப்ப பேலண்ஸ், எட்டிசலாட் பேலண்ஸ், டியூ பேலண்ஸ், பேலண்ஸ் இந்த வார்த்தய எங்க அதிகமா கேக்கலாம்னா ரோலா! ரோலா! சார்ஜா ரோலா பார்க்க சுத்தி தான். வங்காளிகலின் குரல்களால் நிறைந்தது தான் உலகமோ அப்படினு உங்களுக்கு சந்தேகம் வந்துடும். போனுக்கு ஒரே நேரத்துல 25 திர்காமுக்கு ரீசார்ஜ் பண்ண முடியாதவங்களுக்கு ஆபத்தாந்தவர்கள் இந்த பேலண்ஸ் விற்பனையானரகள். இவங்களுக்கு ரெகுலர் கஸ்டமரகள்லாம் உண்டு.

இந்த விசித்திர உலகத்துக்கு வந்து 1 வருடம் 10 நாள் ஆச்சி. நாம முதல்முறையா வந்தப்ப சார்ஜால மழ பேஞ்சிது. நல்லவன் வந்துடான்ல. ரோலாள வந்து இறங்கனவுடனே கேட்ட குரல் இந்த பேலண்ஸ் தான்.

முதல்ல பாக்கரப்ப எல்லாம் விசித்திரமா இருந்துச்சி, எங்க போனாலும் ரூமுக்கு கரக்ட்டா போய் சேரணும் அப்படிங்கரதில மட்டும் கவனாமா இருந்தேன்.எந்த ஹோட்டல்ல போய் நின்னாலும் மலையாளிகா இருந்தாங்க, ரோலா பார்க்க சுத்தி தெலுங்கரகளும், வங்காளிகளும் நிறஞ்சி இருந்தாங்க. நம்ப ஆளுகலும் அங்க ஒண்ணு இங்க ஒண்ணா இருந்தாங்க.

வேல நிமித்தமா துபாய், சார்ஜா, ராஸ் அல் கைமா, ஹம்ரியா, அபுதாபி, ஜபல் அலி, புஜைரானு எல்லா இடத்தையும் போய் பாத்தாச்சு, தைரியமும் அதிகம் ஆச்சி, சொந்த கார அண்ணன் புண்ணியத்தால ருவைஸையும் எட்டி பாத்தாச்சு, அல் ஐன் மட்டும் இன்னும் பாக்கல கூடிய விரைவுல பாக்கணும்.

ஊர்ல இருக்கவங்க பய துபாய்ல இருக்கான்னு நினைப்பாங்க அவனோட வாழ்க்க ம்ஹ்ம் கேம்ப் இந்த வார்த்தைய நானும் நிறைய கேள்வி பட்டேன். ஆனா ஒரு நாள் அத போய் பாத்தப்ப தான் அதோட நிலம தெரிஞ்சிது. மூணு அடுக்கு கட்டில், காலை நாலு மணிக்கு எழுந்து ராத்திரி 11 மணிக்கு அடுத்த நாளுக்கும் சேர்த்து சமைக்கிற நிலம, ஒரு ஒரு திர்ஹாமையும் கணக்கு போட்டு செலவு பண்ணறது (ஆனா ஊருக்கு பேசரதுக்கு கணக்கு வழக்கே பாக்கறது இல்ல, அத இங்க இருந்து பாத்தா தான் தெரியும்), சில சமயம் துயர செய்தி வரது, அதுக்கு கூட ஊருக்கு போக முடியாம இருக்கரது. டிக்கெட் காச கூட மிச்சம் பிடிச்சி, மிச்சம் பிடிச்சி ஊருக்கு அனுப்பறது. கவரால் (cover all) பேருக்கு ஏத்த மாதிரியே உடம்ப முழுக்க மறைக்கர உடைங்க, வெயில் காலத்துல இங்க சாதாரண உடைய போட்டுக்கிட்டே இருக்க முடியாது ஆனா இந்த சாக்கு துணிய போட்டுக்கிட்டு அவங்க வேல பாக்கறத பாத்தா ஒரு வேல நாம படற கஸ்டம்லா ஒண்ணுமே இல்லனு தோணும்.

இது வாழ்க்கையே இல்லங்க, காசுக்காக வாழ வேண்டியதா இருக்கு. எல்லாத்தையும் உதறிட்டு தனக்காக வாழுற மனோபாவம் என்னைக்கும் தமிழனுக்கு வராது.

தமிழ் காரங்க இங்க ரெண்டு வகைல தான் இருக்காங்க 1) technical kings பெருமைக்கு சொல்லலங்க என்ன தான் மலையாளிங்க அரபு நாடுகள்ல நிரஞ்சி கிடந்தாலும் டெக்னிக்கல்ல தமிழர்கள் தான் நிறஞ்சி இருக்காங்க 2) லேபர் வகையறா இவங்க ஊருல கடன்லா வாங்கி இங்க வந்து குடும்ப பாரத்த சுமக்கற மகத்தான ஜீவன்கள்.

ஊருக்கு போனா அங்க மாப்பிள எனக்கு என்ன வாங்கிட்டு வந்தங்கற வார்த்தைக்கு சிரிச்சிகிட்டே டே உனக்கு இல்லாமயானு ஏதாவது எடுத்து கொடுக்கறது. இன்னும் எழுதிகிட்டே இருக்கலாம்ங்க அவ(எ)ங்களுக்கு தேவை எல்லாம் பாசம் தான்.

எதயோ எழுத ஆரம்பிச்சி எங்கயோ வந்து நின்னுடிச்சி..... மனசுல இருந்தது எல்லாம் வருது போல.

9 கருத்துகள்:

புதியவன் சொன்னது…

vanakkam dubakkur nanum ruwaisil thaan erukkiren. neraiya eluthungal nantri.

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

வாங்க புதியவன் ருவைசா நல்லதுங்க நிச்சயமா நிறைய எழுதுறேன் உங்க ஆதரவுக்கு நன்றீஈஈஈஈஈஈஈஈஈஈஈ.....

jothi சொன்னது…

//இது வாழ்க்கையே இல்லங்க, காசுக்காக வாழ வேண்டியதா இருக்கு. எல்லாத்தையும் உதறிட்டு தனக்காக வாழுற மனோபாவம் என்னைக்கும் தமிழனுக்கு வராது.//

உண்மையில் தனக்காக வாழ வேண்டும் என நினைத்திருந்தால் எப்போதோ இந்த இனம் அழிந்திருக்கும்,..

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

சரியா சொன்னீங்க ஜோதி தமிழனோட தனித்துவமே அதாங்க மனசில் எப்போதும் ஈரம் இருக்கரது அடிக்கடி வந்துட்டு போங்க தல

MohamedBismillah சொன்னது…

வாழ்த்துக்கள் நல்ல பதிவு. நீங்கள் சொல்வது போல் தமிழன் எத்தனை காலம் தான் இந்த அடிமை வாழ்வினை மேற்கொள்வது. என்னை பொருத்த வரையில் தமிழன் என்பதால் நான் மிகவும் பெருமைபடுகிறேன். இஸ்லாம் உலகத்தார் அனைவருக்கும் பொதுவான அற்புதமான சமயம் ஆனால் இஸ்லாமியர்களாக இருக்கும் மக்கள் தான் மிகவும் மோசமாக உள்ளனர்.
யார் எந்த மதம் என்று பார்தது உதவி செய்வதை விட்டு விட்டு எல்லோரும் மனிதர்கள் என்ற நல்ல கோட்பாட்டில் அனைவருக்கும் உதவி செய்ய வேணடும். நான் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் மற்றும் மாற்று சமய சகோதரர்களுக்கும் சொல்வது என்ன வென்றால் நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றை சற்று உற்று பாருங்கள் அப்பொழுது அனைவருக்கும் கட்டாயம் புரியும் எப்படி வாழ்வது என்று.
அடுத்த வினாடி உயிருடன் இருப்போமா என்று தெரியாத இந்த விந்தையான உலகில் ஏன் பணம் பணம் என்று அதிகமாக சேர்த்து நாம் மட்டுமே வாழ நினைக்க வேண்டும். சற்றே சிந்தியுங்கள் உண்மை நன்றாக புரியும். என்னுடைய ஆசையெல்லாம் நம் நாட்டிற்கு அனைத்து வெளிநாட்டினர்களும் வந்து வேலை செல்ல வேண்டும். அந்த காலம் தான் பொற்காலம்.

MohamedBismillah சொன்னது…

வாழ்த்துக்கள் நல்ல பதிவு. நீங்கள் சொல்வது போல் தமிழன் எத்தனை காலம் தான் இந்த அடிமை வாழ்வினை மேற்கொள்வது. என்னை பொருத்த வரையில் தமிழன் என்பதால் நான் மிகவும் பெருமைபடுகிறேன். இஸ்லாம் உலகத்தார் அனைவருக்கும் பொதுவான அற்புதமான சமயம் ஆனால் இஸ்லாமியர்களாக இருக்கும் மக்கள் தான் மிகவும் மோசமாக உள்ளனர்.
யார் எந்த மதம் என்று பார்தது உதவி செய்வதை விட்டு விட்டு எல்லோரும் மனிதர்கள் என்ற நல்ல கோட்பாட்டில் அனைவருக்கும் உதவி செய்ய வேணடும். நான் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் மற்றும் மாற்று சமய சகோதரர்களுக்கும் சொல்வது என்ன வென்றால் நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றை சற்று உற்று பாருங்கள் அப்பொழுது அனைவருக்கும் கட்டாயம் புரியும் எப்படி வாழ்வது என்று.
அடுத்த வினாடி உயிருடன் இருப்போமா என்று தெரியாத இந்த விந்தையான உலகில் ஏன் பணம் பணம் என்று அதிகமாக சேர்த்து நாம் மட்டுமே வாழ நினைக்க வேண்டும். சற்றே சிந்தியுங்கள் உண்மை நன்றாக புரியும். என்னுடைய ஆசையெல்லாம் நம் நாட்டிற்கு அனைத்து வெளிநாட்டினர்களும் வந்து வேலை செய்ய வேண்டும். அந்த காலம் தான் பொற்காலம்.

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@mohammed:
"என்னுடைய ஆசையெல்லாம் நம் நாட்டிற்கு அனைத்து வெளிநாட்டினர்களும் வந்து வேலை செய்ய வேண்டும். அந்த காலம் தான் பொற்காலம்."

கண்டிப்பா உங்க ஆச நிறைவேரும் மொகமத் சில குடும்ப சூழ்நிலை, பொருளாதார நிலமை காரணமாக தான் இங்க இருக்கோம். இந்த நிலம இன்னும் சில வருடங்கள்ல மாறும்னு நம்புவோம்.

சென்ஷி சொன்னது…

நான் ஷார்ஜாவிலதான் இருக்கேன். நீங்களும் ஷார்ஜாதானா?

டுபாக்கூர்கந்தசாமி சொன்னது…

@சென்க்ஷி: ஹி ஹி ஆமாங்க தல கீழ படிச்சி பாருங்க.

”சென்ஷி கூறியது...
அருமையான பதிவு தலைவரே...

7 பிப்ரவரி, 2010 3:45 pm

டுபாக்கூர்கந்தசாமி கூறியது...
@சென்க்ஷி: வாங்க தல இந்த படத்த நிச்சயம் பாருங்க திரையில் இருந்து உங்க கண்கள அகற்ற முடியாது. அப்புறம் சார்ஜா பதிவுலக நண்பர்கள இந்த மாச முதல் நாள்னு நினைக்கிறேன் கான்கார்ட் திரையரங்கு வாசல்ல இரவு ஒரு 7 மணிக்கு பாத்தேன். பேசனும்னு நினைச்சேன் ஆனா எனக்கு யார் யாருனு சரியா அடையாளம் தெரியல எல்லாரயும் உங்க ஒரு பதிவுல உள்ள புகைப்படத்துல பாத்த நியாபகம்.

அடுத்து முறை பாத்தா நிச்சயம் ட்ரீட் கேக்குறேன் :)

7 பிப்ரவரி, 2010 5:20 pm”