சனி, 30 ஜனவரி, 2010

இந்திய அரசியலும் சட்டமும் - பகுதி 2


கருப்பு சிகப்பு இது திமுக கொடியில் மட்டும் அல்ல நம் இந்தியாவிலும் நெடு நாளாக உள்ள ஒரு நிறம். கருப்பு திராவிடன், சிகப்பு ஆரியன். திராவிடர்கள் தாங்களே இந்தியாவின் உண்மையான குடிமக்கள் என்றும் ஆரியர்கள் வடக்கில் இருந்து வந்த வேற்று நாட்டவன் எனும் கருத்தை நம்பி வந்தனர். இந்தஸ் பள்ளதாக்கு சான்றுகளும் அதையே வழிமொழிந்தது, மகாபாரதத்தில் கிருஸ்ணர் கருப்பு என்பதால் அவர் திராவிடர், திராவிடர்களே இந்தியாவின் மூத்த குடிமக்கள் என திண்ணமாக திராவிடர்கள் நம்பினர்.


ஆனால் உண்மையில் திராவிடர்களும், ஆரியர்களும் கவுகாசியன் எனும் ஒரே இனத்தை சேர்ந்தவர்களே இடத்திற்கேற்ப அவர்களை சுற்றி இருந்த சூழ்நிலைக்கேற்ப்ப அவர்களது நிறம் உருவம் வேறு பட்டு இருந்தது, மொழியும் அதை போலவே வேறுபட்டு இருந்தது.


ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் அத்துனை காலம் ஆட்சி புரிய முக்கிய காரணம் அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சி திறனே. எந்த சிற்றரசர்களையும் ஒன்று சேர விடாமல் கலகம் மூட்டி சுலபமாக ஆட்சி செய்தனர். அதனை விட ஒரு பலமான யுக்தி ஒன்றை கையாண்டனர் அது திராவிடர்கள், ஆரியர்கள் ஆகிய இருவரும் வெவ்வேறு இனமக்கள் என மிக தந்திரமாக இன பகையை வளர்த்து வடக்கிந்தியர்களையும், தெர்கிந்தியர்களையும் பிரித்தே வைத்திருந்தனர். 


1938 ஆம் ஆண்டு ஹிந்தி எல்லா மாநிலங்களிலும் கட்டாய கல்வி ஆக்க படும் என இந்தியாவை ஆண்ட பிரிட்டிஸ் அரசாங்கம் அறிவித்தது. அதை தொடர்ந்து மெட்ராஸ் மாகாணத்தை திரு. ராஜாஜி தலைமையில் ஆட்சி செய்த காங்கிரஸ் செயல்படுத்த முயன்றது. ஆனால் பெரியார் மற்றும் திராவிட கழகம் இதை எதிர்த்தனர். பார்பனர்கள்(பார்பனர்கள் ஆரியர்கள் என திராவிடர்கள் கருதினர்) அதிகம் உள்ள கட்சி ஆதலால் காங்கிரஸ் இச்சட்டத்தை செயல்படுத்த முயன்ற போது திராவிட கழகம் இதை கடுமையாக எதிர்த்ததில் வியப்பொன்றும் இல்லை. 1938-40 ஆம் ஆண்டு வரை நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டாத்தில் தள்ளமுத்து, நடராஜன் ஆகிய இரு போராளிகள் மரணம் அடைந்தனர் மற்றும் 1200க்கு மேற்பட்டவர் கைது செய்யப்பட்டனர்.


இப்போராட்டத்தால் அப்போது காங்கிரஸ் தனது முடிவை கை விட்டது. ஆனாலும் மறுபடி மறுபடி காங்கிரஸ் ஹிந்தியை கல்வி மொழி ஆக்க முயன்ற போதெல்லாம் பெரியாரும், திராவிட கழகமும் அதை தீவரமாக எதிர்த்தனர்.


இவ்வாறாக காட்சிகள் மாறி கொண்டிருந்த போது, 15 ஜூலை 1953 ஆம் வருடம் டால்மியாபுரம் கள்ளகுடி ஆக பெயர்மாற்றம் செய்யக்கோரி கருணாநிதி அவர்களின் தலைமையில் திமுகவினர் டால்மியாபுரத்தில் இருந்த ரயில் வண்டி நிலைய பெயர்பலகையில் இருந்த ஹிந்தி எழுத்தகளை அழித்து, ரயில் தண்டவாளத்தில் படுத்து போராட்டாத்தில் ஈடுபட்டனர். அதில் பல திமுகவினர் உயிரிழந்தனர், கருணாநிதி அவர்கள் கைது செய்யப்பட்டார்.


இந்த நிகழ்ச்சி தமிழக மக்களிடையே பெரிய அபிமானத்தை வளர்த்தது. 13 அக்ட்டோபர் 1957 ஹிந்தி எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த நேருவின் தலைமையில் மொழி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. அதில் முன்பு இருந்த ஹிந்தி எல்லா மாநிலங்களிலும் ஆட்சி மொழியாக இருக்கும் என்பதை ஆட்சி மொழி அந்த அந்த மாநில மொழியாக மாற்றபடலாம் என்பதை எதிர்த்து மாற்றபடும் எனும் வார்த்தை அதில் சேர்க்கபட வேண்டும் என திமுகவினர் போராடினர்.


1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் மாணவர்களின் துணையுடன் மிக தீவரமாக தமிழகத்தில் நடந்தது. இந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் காரணமாக திமுக மக்களின் மத்தியில் ஒரு மாபெரும் சக்தியாக வளர்ந்து நின்றது. அது 1967ஆம் தேர்தலில் ஊர்ஜிதம் ஆயிற்று.


விருதநகர் தொகுதியில் காமராஜருக்கு எதிராக மாணவர்கள் அணி தலைவர் சீனுவாசன் தேர்தலில் நின்றார், வெற்றியும் பெற்றார். 1967ஆம் ஆண்டு தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்றி அமைத்தது. திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்தது.


காங்கிரஸை எதிர்த்து 1967ல் வெற்றி பெற்ற திமுக இப்பொழுது அதனுடனே கூட்டாச்சி அமைத்துள்ளது அரசியல். தொடரும்......

கருத்துகள் இல்லை: