வியாழன், 4 பிப்ரவரி, 2010

நானும் நீங்களும் செருப்பால அடி வாங்குறோம்


அட உண்ம தாங்க இந்தியாவுல இருக்குற எல்லாரும் ஏதாவது ஒரு வகைல எவன்கிட்டயாவது செருப்பால தான் அடி வாங்குறோம். முதல்ல பிரிட்டிஸ்காரன்ங்கிட்ட அடிமையா கிடந்தோம். அப்புறமா எத்தணையோ பேர் கஸ்ட பட்டு அவனுங்க கிட்ட இருந்து விடுதலை வாங்கி தந்தாங்க. ஆனா விட்டுட்டு போனவன்ங்க நாட்ட மட்டும் விட்டுட்டு போகல பசியையும் சேத்து விட்டுட்டு போனான்ங்க. அப்பத்த வடகிழக்கு மாகாணங்கள்ள கிட்டதட்ட 45,00,000 பேர் பசியால செத்து போனாங்களாம். என்ன பண்ணறதுனு யோசிச்ச நம்ம கவர்மெண்டு இடம் இல்லாததால தானே நிறைய பயிர் பண்ண முடியலனு காட்டலா அழிச்சி விவசாய நிலமாக்கி பண்ணயம் பாத்தாங்க.

அப்பவும் பாருங்க ஒண்ணும் கொட்டிடல அப்படி இப்படி ஏதோ நம்ப விவசாயிங்க வியர்வையால இழுத்து புடிச்சிகிட்டு நம்ப தேசம் சோறு தின்னுச்சி. அதே நேரத்துல மேற்ககத்திய நாடுகள்ள ஏதோ அவங்களா புதுசா ஏதோ வித கண்டுபுடிச்சி அத பயிரிட்டாங்களாம். அது வரைக்கு இருக்கோமா இல்லையானு தெரியாத இந்திய விவசாய ஆராய்ச்சி கூட்டமைப்பு மெக்சிகோல நார்மன் போர்லாக்ங்கரவர் பண்ணுன பசுமை புரட்சிய இந்தியாவுலயும் பண்ணனும்னு ஏதோ ஒரு அமெரிக்க கம்பெனிய கூட்டிட்டு வந்து பசும புரட்சி பண்ணுச்சாம். அது இன்னானா முதல்ல விவசாய நிலங்கள அதிகம் பண்ணரது அடுத்ததா ஒரு வருசத்துல ஒரு விளச்சல் நடந்த இடத்துல 2 விளச்சலா அதிகம் பண்ணறது, மூணாவதா அமெரிக்க காரன் ஒரு விதைய தந்தானாம் அது நிறைய மகசூல் கொடுக்குமுனு அத விதைகறது.

இப்படி தான் 1965ல் பசும புரட்சி ஆரம்பிச்சது அமெரிக்கனோட உதவியோட. நம்ம நாட்டுக்கு அது அந்த சமயத்துல மிகவும் தேவ பட்ட ஒரு விசயம் அதுல மாற்றுகருத்தே இல்ல ஆனா அமெரிக்க காரன நுழைய உட்டது தான் தப்பு. அவனுக்கு உட்கார இடம் கொடுத்தா பாய் போட்டு படுத்து விசிறி உட சொல்வான் அது தெரியாம போச்சி நம்ப ஆளுங்களுக்கு. வந்தவன் சும்மா இருப்பானா கொய்யால விதையையும் கொடுத்தான் அது கூட இந்தாங்கடா இந்த உரத்த போடுங்கடானு சொல்லி அவன் ஊரு உரத்த கொடுத்து காசு பாக்க ஆரம்பிச்சான். அப்புறமா பயிர்லா பூச்சியா இருக்கு இதுக்கு முன்னாடி இப்படி எங்க ஊர்ல இருந்த்தது இல்லனு நம்ப ஆளுங்க போய் நின்னதுக்கு எலேய் அதுக்கு ஏன் கவல படற இரு உனக்காக ஒங்க நாட்ல ஒரு பூச்சி கொள்ளி மருந்து பேக்ட்ரியே கட்றனு சொல்லி ஒரு பேக்டரியும் கட்னான்.


அதுல இருந்த வந்த பூச்சி கொள்ளி மருந்து பயிரல இருந்த பூச்சியையும் கொல்லிச்சி பேக்டரில இருந்து வந்த விசவாயு ஒரு 12000 பேரையும் போட்டு தள்ளிச்சி. அவன் சிம்பாலிக்கா சொல்லி இருக்கான் பாத்தியாடா என் பூச்சி கொல்லி மருந்தோட வீரியத்த ஒண்ணும் பயப்படாத எல்லா பூச்சியும் செத்துரும்னு. நாட்ல விவசாயம் வளந்தது ஆதே சமயம் அமெரிக்க காரன் கல்லாவும் நல்லா கலெக்சன் ஆச்சி ஆமாம் அவன் ஊட்டு உரத்தையும், பூச்சி கொல்லி மருந்தையும் ஓசியிலையா தருவான் அவன் என்ன இளிச்ச வாய் இந்தியா காரனா என்ன?

அவன் வெவரகாரங்க கொய்யால அவன் கொடுத்த விதைய போட்டு போட்டு பழக்க படுத்தி நம்ப நிலமும் இப்ப நம்மூரு விதைய போட்டா மகசூல் கொடுக்க மாட்டங்கது. அப்ப இன்னா பண்ணரது விதியேனு அவன் கொடுக்குற உரத்தையும், பூச்சி கொல்லி மருந்தையும் அடிக்க வேண்டியது தான்.
இப்ப அதுவும் இல்லாம ஏதோ புது வகையான கத்திரிக்காயாம் பேரு BT கத்திரிக்காயாம் அத விளைவிக்க போறாங்களாம் ஏண்டானு கேட்டா இதுல நிறைய பூச்சி எதிர்ப்பு சக்தி இருக்கு அப்படிங்கறாங்க GEAC(Genetic engineering approval committee of india). சரி யாருடா இந்த கத்திரிக்காய உருவாக்குறாங்கனு பாத்தா அட நம்ப FOOD INC. புகழ் MONSANTO நல்லா இருங்கடா. பல நாடுகள்ள இந்த GMO மரபணு மாற்ற பட்ட உயிரணு தடை செய்ய பட்டுகிட்டு இருக்கு ஆனா இத நம்ப விவசாய மந்திரி சரத் பவார்கிட்ட கேட்டா GEACயே முடிவு பண்ணிடிச்சி இதுக்கப்புறம் அரசால ஒண்ணும் பண்ண முடியாதுங்குறார். என்ன உள்குத்தோ யாருக்கு தெரியும்?

சரி பூச்சி கொல்லி மருந்த பூச்சி கொல்லி மருந்தா தான் தந்தானுங்கனா அதுவும் இல்லயே டேஸ்ட் பாருங்கடானு COCO COLAலயும், PEPSIலயும் கலந்து தானே கொடுத்தாங்க. அத நாம வாங்கனும்னு பல நடிக சிகாமணிகள் கோக் குடிங்கடானும், விளையாட்டு வீரர்கள் நாட்டுக்காக ரொம்ப கஸ்டபடறவங்க விளையாடற அப்ப லோகோவ போட்டுகிட்டும் யே தில் மாங்கே மோர்னு பாட்டு பாடுறாங்க அப்புறம் நம்ப ஊட்டு புள்ளைங்க இன்னா பண்ணும் நைனா எனக்கும் அது வேணும்னு கேக்கும் வாங்கி தராம இருக்க முடியுமா 1 ரூபா கூட உற்பத்தி செலவு ஆவாத அந்த தண்ட கருமத்த 15 20 ரூவான்னு வாங்கி கொடுப்போம். அட பின்ன அந்த நடிகருக்கு, விளையாட்டு மாவீரர்களாம் சும்மாவா நடிப்பாங்க அவங்களே பாவம் நடிக்கறதுக்கும், விளையாடுறதுக்கும் 5 10 தான் வாங்குறாங்க அப்புறம் இதுல தானே சம்பாரிக்க முடியும்.

இது மட்டுமா அவன் என்னத்த வித்தாலும் அது சூப்பர் தான். அவன் தரம் தான் உலகதரம் அவன் ஒரு செருப்ப 1000 ரூவானாலும் சூப்பர் செருப்புயானு வாங்கி மாட்டிக்குவோம், சட்ட 2000மா பரவாயில்ல கொடு, பீசா 200 பரவாயில்ல, நீ என்னத்த வித்தாலும் வாங்கறதுக்கு இந்தியா காரனுங்க நாங்க இருக்கோம். அவன் மார்க்கெட் அந்த பக்கம்லா முடிஞ்சி போச்சினு தான் மிச்சமீதி ஓட்ட சரக்க இங்க கட போடறான். நாமளும் கஸ்ட பட்டு சம்பாரிச்ச காசு பணத்த  அவன்கிட்ட கொடுத்து வழக்கம் போல ஆண்டியா போவோம்.

அட நமக்கு எதுக்குங்க இதெல்லாம் சச்சின் சிக்ஸ் அடிக்கிறாரா பாத்து கை தட்டுவோம், அவரால தான நாட்ல எல்லாரும் சுபிக்சமா வாழுறாங்க, இல்ல நம்ப தளபதி நடிச்ச படமா போய் பால் அபிசேகம் பண்ணுவோம் அத வுட்டுட்டு மரம் நடற மாதிரியான லூசுதனமான வேலலாமா செய்வோம். அட ஒண்ணூமே இல்லனா மானாட மயிலாட சீசன் 10 பாப்போம் அட இப்படியே நாம உடாம பாத்தா சீசன் 100 கூட வரும்ங்க பின்ன அத வுட்டுட்டு நாட்ட பத்தி இல்ல விலவாசிய பத்தி ஏன் அப்படி ஆகுதுங்கறதலா பத்தி எதுக்கு யோசிக்கணும்.

எந்த விவசாயி கஞ்சிக்கு வக்கத்து போனா என்ன நாம மட்டும் 80 ரூவா 100 ரூவா கொடுத்து பிரியாணி சாப்பிடுவோம். அவன் சட்டையே போடலனா என்ன இப்ப நாம முகத்துக்கு பேஸ் கிரீம் வாங்கி போட்டுக்குவோம். அட எத பத்தியும் கவல பட கூடாதுங்க நாம சந்தோசமா பீர் அடிச்சிட்டு இருப்போம்.

இந்த வருசமே நம்ப நாட்டுக்கு 5 மில்லியன் டண் உணவு தானியம் வெளிநாட்ல இருந்து தேவ பட்டுச்சாம் ஆனா எங்கயும் அவ்வளவு இல்லையாம் 3 மில்லியண் டண் தான் மத்த நாட்ல ஸ்டாக் இருக்குனு அவ்வளவு தான் கிடச்சிதாம். இப்படியே போச்சுனா ஒண்ணும் பண்ண முடியாது. இப்பவே விவசாயம் பண்ணறதுக்கு தண்ணி இல்ல இதுல நமக்கு பல மாநாடு, பல விளையாட்டு, ராஜா யாரு ராணி 6 இதல்லாம் ரொம்ப தேவ தான். சோத்துக்கு வழி இல்லனாலும் பரவாயில்ல முதல் நாள் முதல் சோவ 200ரூவாயோ 300 ரூவாயோ கொடுத்து தலைவர் படம் பாக்கணும் இல்லனா தலைவர் கோவிச்சி கிட்டு உங்க கூட பேச மாட்டார்.

அட போங்க என்னத்த பேசி என்ன ஆக போகுது நடக்கறது தான் நடக்கும். நாமலும் இப்படியே எவன்கிட்டயாவது அடிவாங்கிகிட்டு நாட்ட நாசமாக்கிட்டு செத்து போய்டலாம்.....

9 கருத்துகள்:

kailash,hyderabad சொன்னது…

எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த பெப்சி, கோகோ கோலா, பிடிக்காது.
ஒரு இளநிய வாங்கி குடிச்சா ஒரு விவசாயியாவது பிழைப்பார் என்ற எண்ணம்தான் காரணம். மேலும் தண்ணி இல்லாம பல பயிர்கள் கருகும் நேரத்தில இவங்க ராட்சஷ பைப்ப போட்டு ஏற்கனவே (மணல் கொள்ளையால ) பாதளத்தில இருக்கிற நிலத்தடி நீரை உறுஞ்சுராங்க .அந்த தண்ணிய கொஞ்சம் கலர் ,சுகர் சேத்து அநியாய விலைக்கு விக்கிறாங்க. இப்படியேபோனா இன்னும் கொஞ்ச வருஷத்தில அரிசி கிலோ 300 ரூபா விக்கும் பாருங்க.

மேலும் கிரிக்கெட் சுத்தமாக பிடிக்காது. அது மூளையை சுரண்டும் கரப்பான்பூச்சி. பெண்களை அடிமைப்படுத்த
சிரியலை கண்டுபிடிச்ச மாதிரி ஆண்களை அடிமைப்படுத்தஇவர்கள் கண்டுபிடிச்சது கிரிக்கெட்.நான் விளையாட்டுக்கு எதிரி அல்ல. அதில் உள்ள அரசியலைதான் வெறுக்கிறேன்.

ரொம்ப மனசு விட்டுடாதிங்க . தல.நம்பளால முடிஞ்சத நாலு பேத்துக்கு சொல்லுவோம்.கொஞ்சம் கொஞ்சமாக
ஆனா கண்டிப்பாக நல்லது நடக்கும்னு நம்புவோம்.

இந்த லிங்க கொஞ்சம் பாருங்க.

http://www.jeyamohan.in/?p=5212
http://www.jeyamohan.in/?p=5672

துளசி கோபால் சொன்னது…

எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோமே...
அதான்.......

மதன் சொன்னது…

@kailash: ஆமாங்க தல எப்ப இந்த முதலாளிதுவம் ஆரம்பிச்சதோஅப்பவே விவசாயிக்குலா சங்கு ஊத ஆரம்பிச்சிட்டாங்க. உண்ம தான் இப்ப யோசிச்சி பாப்போமே இந்த கிரிக்கெட் வீரர்களால நாட்டுக்கு இல்ல நாட்ட விடுவோம் ஒரு தனி மனுசனுக்குஎன்ன தான் பிரயோஜனம் இருக்கு ஒண்ணுமே இல்ல ஆனா கோடியா கோடியா சம்பளம் வாங்குறாங்க அது மட்டும் இல்லாம இந்த விளம்பர காசு வேற அது தப்பான விசயத்துக்கு விளம்பரம்.

அரசி விலலாம் ஏற்னா தான் நம்ப மக்கள் என்ன ஏன்னு கேள்வி கேப்போம் வில ஏறட்டும்.

லிங்க் படிச்சேங்க தல வெள்ளகாரன் வரி வரினே நல்லா சொரண்டி இருக்கான் போல, அவர் சொல்ர மாதிரி அவன் அவன் வீட்டு பிரச்சனை அவ்னுக்கு தான் நல்லா தெரியும் இது புரியாம நம்ப அரசாங்கமும் கிராம பஞ்சாயத்த மொடக்கம் பண்ணி இப்ப சிங்கள் கிளாஸ் தண்ணிக்கு அலைய உட போகுது.

நிச்சயமா நல்லது நடக்குங்க தல.

மதன் சொன்னது…

@துளசி: ஆமாங்க தல ஒண்ணுமே பண்ண முடியலங்கற ஆதங்கம் தாங்க எனக்கும்...

kailash,hyderabad சொன்னது…

தல.இங்க பாருங்க
நாளை என்ற நம்பிக்கையின் வெளிச்ச கீற்று.
கிரிக்கெட்டர்களோ சினிமாகாரர்களோ அல்ல ஹீரோ.
பெப்சிக்கு ஆப்பு வச்ச நிஜ ஹீரோ .

kailash,hyderabad சொன்னது…

link here.

http://rssairam.blogspot.com/2010/01/blog-post_8541.html

மதன் சொன்னது…

@kailash: ஆமாங்க தல நானும் திரு. சகாயம் அவர்கள பத்தி படிச்சேன். என்ன ஒரு மன உறுதி. இந்த மாதிரி உயர்ந்த மனிதரகள தான் முன்மாதிரி எடுத்து வாழ்க்கைய வாழணும் அத உட்டுட்டு இந்த வீணா போன நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் பின்னாடி மக்கள் போறது வருத்தம் அளிக்குது.

மிக்க நன்றிங்க தல இவர பத்தி என்னை தெரிஞ்சிக்க வச்சதுக்கு.

மரா சொன்னது…

நல்லா உறைக்குற மாதிரி சொல்லியிருக்கீங்க! இவிங்க திருந்தமாட்டாங்கெ. ஏமாற்றவன் இருக்கிறவரைக்கும் ஏமாத்தறவன் இருப்பான்.

மதன் சொன்னது…

@மயில்ராவணன்: ஆமாங்க தல சில சமயம் படிச்சிருந்தா கூட சில விசயங்கள மடத்தனமா பின்பற்றுவோம் அதுல நானும் அடக்கம் அந்த ஆதங்கத்துல வேகத்துல ஏதோ எழுதி இருக்கேங்க தல