புதன், 17 பிப்ரவரி, 2010

Friday Night Light's



1988 டெக்சாஸ் மாகணத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்த மையமா கொண்டு உருவாக்க பட்ட ஒரு திரைபடம், டெக்சாஸ்ல ஒடீஸாங்கர ஊர்ல இருக்குற  (permian)பெர்மியன்ங்கற ஹை ஸ்கூல் எப்படி டெக்சாஸ் புட்பால் சேம்பியன்ஸிப்ப ஜெய்க்க போரடிச்சிங்கறது தான் கதை.

அமெரிக்கன் புட்பால்ல பத்தி நம்ப தல ஹாலிவுட்பாலா the blind sideலயே எழுதிட்டார். அதனால நான் எதுவும் எழுதல. எக்கசக்க எதிர்பார்ப்புள்ள ஒருக்க ஒரு டீம் நம்ப பெர்மியன் பேந்தர் டீம், ஊருக்குள்ள பசங்க மேல செம எதிர்ப்பார்ப்பு. இவங்க எங்க போனாலும் என்ன கண்டிப்பா சேம்பியன்சிப் நமக்கு தானேங்கற கேள்வி. அதே மாதிரி பசங்களும் சூரபுலியா தான் இருக்காங்க.

பூபி மைல்ஸ் தான் டீமோட சூராவளி கொய்யால எவன் எதிர்ல நின்னாலும் ஆட்டம் காட்டி கோர்ட்ல பறக்கர ஆள், டீமோட மிக பெரிய பலம். புட்பால தவிர ஒண்ணும் தெரியாது. அதே போல டீம் கேப்டன் வின்ஞல் நல்ல பிளேயர், ஆரகனைசர். அவனுக்கு ஸ்காலர்சிப் தேவ படுது.

அடுத்து எப்ப பாத்தாலும் அப்பாக்கிட்ட திட்டு வாங்கற பிலிங்சிலி, அவங்க அப்பா முன்னாடி ஒரு பெரிய சாம்பியன்சிப்பா இருந்ததால இவன்கிட்ட ஓவரா எதிர்பாத்துகிட்டு இருக்கிறவர். ஒழுங்கா பந்த புடிக்காம ஓயாம திட்டு வாங்கறவன்.

டீம்ல ஒரு மாதிரி காமெடி பீஸா இருக்கிற கிரிஸ் கார்னர், எப்பவும் சீரியசா இருக்கிற கிரிஸ்டியன்.

அடுத்து நம்ப தல கோச் கேரி கெய்ண்ஸ் ஒரு நல்ல இன்ஸ்பிரேஸ்னல் ஆளு டீம நல்லா வழி நடத்துரவர், அவருக்கு ஏற்கனவே கடன் தொல்லை அடிக்கடி அதால ஊர் ஊரா மாறிக்கிட்டு இருக்கிறவர்.

இதே மாதிரி தான் மத்த பிளேயர்சும் எல்லாருக்கும் இந்த தொடர் தான் வாழ்க்கைல கடசியா ஒண்ணா விளையாட சாண்ஸ், இந்த தொடர்ல ஜெய்ச்சா வாழ்க்கைல எல்லாருக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கு.

தொடரோட ஆரம்பமே அசத்தலா இருக்கு எதிர் டீம போட்டு துவச்சி எடுக்குறாங்க உபயம் நம்ம பூபி மைல்ஸ். அடுத்த மேட்ச்லயும் அதே அதிரடி தொடறது ஆனா பூபிய எதிர் டீம்காரன்ங்க கரு வச்சி அடிச்ச முட்டிய பேத்துடுறாங்க. அப்ப இருந்து ஆரம்பிக்கறது டீமுக்கு அடி சரியான குவாட்டர்பேக் இல்லாம டீம் தள்ளாடுது. அப்பனு பாத்து கிரிஸ் கார்னருக்கு ஒரு சேன்ஸ் கொடுத்து விளையாட சொன்ன உடனே எல்லாரையும் ஆச்சிரியத்துல ஆழ்த்தி டீமோட இன்னொரு ஸ்டார் பிளேயர் ஆய்டுரான் நம்ப ஆளு.

அதே நேரத்துல கால சரி ஆக்க பூபி அங்கயும் இங்கயும் திரிஞ்சி பாத்தப்ப தன்னோட முட்டி சரியாகாது இனிமே விளையாட முடியாதுனு டாக்டர் சொல்லியும் இல்ல என்னால கண்டிப்பா விளையாட முடியும்னு Midlandக்கு எதிரான விளையாட்ல கிரவுண்டுக்கு போய் நிக்குறான். Midland தான் இவங்களுக்கு பரமஎதிரி.

மேட்ச் ஆரம்பிக்குது எல்லாரும் கிரிஸ எதிர்பாக்க Midland பசங்க எல்லாரையும் முட்டி தள்றாங்க டீம் பாய்ண்ட் கம்மி ஆய்க்கிட்டே போகுது. சரினு கடசி 7 நிமசித்துல பூபிய இறக்கி விடுறாங்க ஆனா திரும்பும் அடிப்பட்டு இனிமே எப்பவும் விளையாட முடியாத நிலமைக்கு ஆளாகுறான். கேம்லயும் தோத்துடுறாங்க.

ஏற்கனவே கொடூர பசங்க Dallas Carterங்கரவனுங்க ஃபைனல்ஸ் செலக்ட் ஆய்ட்டாங்க. நம்ப டீம் பசங்க அப்புறம் இன்னும் 2 டீம் எல்லாரும் ஒரே பாய்ண்ட் எடுத்து டைல இருக்காங்க. அதனால மூணு டீமும் காச சுண்டி பாத்து ஹெட்ஸ் விழுறவங்க 2 பேரும் மோதி ஃபைனல்ஸ் போகணும். எப்படியோ நம்ப டீமும் இன்னொரு டீமும் ஹெட்ஸ் போட்டு மேட்ச் விளையாடுறாங்க. நம்ப பசங்க நல்லா விளையாண்டு ஜெய்ச்சி ஃபனல்ஸ் போய்டுறாங்க.

அதுக்கப்புறம் ஃபைனல்ஸ் என்னாச்சிங்கறது தான் மீதி படம். ஜெய்ச்சாங்கலா இல்ல தோத்தாங்களானு பாத்து தெரிஞ்சிக்கோங்க.

அதாவது இந்த கதை எனக்கு என்ன சொல்ல வருதுனு எனக்கு தோணுதுனா டீம் ஒர்க். நீங்க ஒரு விளையாட்டு வீரரா இருந்தா கண்டிப்பா நீங்க விளையாடரப்ப டீம் ஸ்பிரிட் உணர்ந்து இருக்கணும். அப்படி ஒரு சிறந்த உணர்வ வேற எப்பவும் உங்களால உணர முடியாது. டீமா இருக்கறப்ப மத்த டீம் ஆட்கள எப்பவும் பாதுக்காக்கணும்ங்கற உணர்வு, மற்றவங்கள சரியா புரிஞ்சிகரது, ஒண்ணா வேல செய்றதுனு நம்மள நல்லா செதுக்கறது தான் இந்த குழு விளையாட்டுகள்.

நீங்க கொஞ்சம் கவனிச்ச பாத்தா தெரியும் சென்னை 28, வெண்ணிலா கபடி குழு மாதிரியான படங்கள் நம்மோட மனசுல இருக்க விளையாட்டு விரனால ஜெய்க்க வைக்கப்பட்ட படம். அதனால நம்ப மனசு எப்பவும் ஒற்றுமையுணர்வோட இருக்கணும் தான் விரும்புது அத தான் திரைல பாக்கறப்ப தான் மனசு அத உணருது.

நான் ஏன் இந்த படத்த பத்தி எழுதுறேன்னா நீங்க பாத்துக்கோங்க நம்ம ஊர்ல எல்லாதுக்கும் சேனல் இருக்கு பாட்டுக்கு, செய்திக்கு, படத்துக்கு, ஏன் பிட்டுக்கே ஆரம்பிக்கலாமானு யோசிச்சாங்களாம் ஆனா விளையாட்ட பத்தி செய்திகள்ச 2 நிமிசம் சொல்ரதோட சரி. அப்புறம் எப்படி விளையாடாம நம்ப உடல் ஆரோக்கியாமா இருக்கும், மத்தவங்கள புரிஞ்சிக்க முடியும்.

ஏதோ நான் அறிவுரை சொல்லரதுக்கு இத எழுதல நல்லா விளையாடி விளையாடுனப்ப கிடச்ச அந்த உற்சாகத்த இப்ப இழக்கற உணர்வு, நிறைய பேர் அந்த உணர்வையே உணாராம இருக்கிர ஆதாங்கம் தான்.

அதனால விளையாடுவோம் நண்பர்களே : )

7 கருத்துகள்:

மரா சொன்னது…

சூப்பரா எழுதியிருக்கிறீங்க தல....நிறையா எழுதுங்க..நான் வேணும்னா கைலாஷ மெயில் அனுப்பச் சொல்றேன்.அவ்வ்வ்வ்வ்வ்வ்!

kailash,hyderabad சொன்னது…

தல. ரொம்ப நல்லா எழுதிருக்கிங்க.நீங்க சொல்றது ரொம்ப சரி.
தினமும் கொஞ்ச நேரமாவது விளையாடததால்தான் மனுஷனுக்கு இன்னிக்கு பல வியாதிகள் வந்து சேருது.
படம் ரொம்ப நல்லாருக்கும் போலிருக்கே.
கண்டிப்பா பாத்துடறேன் தல. (ஓட்டுக்கள் முன்னாலேயே போட்டாச்சு )

மதன் சொன்னது…

@மயில்ராவணன்: வாங்க தல, ஏன் இப்படி அவரு மாட்டக்கும் நமக்கு ஆதரவு தரார் அது பொறுக்கலையா உங்களுக்கு :)) அது சரி நீங்களும் ரவுடி ஆய்ட்டீங்க போல அஞ்சளகுள்ள வண்டியா தான் சொல்றேன் நடத்துங்க :))

@kailash: வாங்க தல ஆமாம்ங்க தல அப்படியே விமர்சனம் கூட ஒரு மெசேஜ் சொல்லலாம்னு தான் விளையாட்டோட முக்கியதுவத்த பத்தி சொன்னேன். படம் ரொம்ப சூப்பர்ங்க தல என்னோட ஆல் டைம் ஃபேவைரைட் பாருங்க உங்களுக்கும் கண்டிப்பா புடிக்கும்

அண்ணாமலையான் சொன்னது…

உங்கள நம்பி பாத்துருவோம்...

பாலா சொன்னது…

என்ன பிரச்சனைன்னா... இந்த மாதிரி படத்தோட எல்லாக் கதையும் ஒரே டைப்பாதான் இருக்கும்.

அதிலும்.. அமெரிக்கன் ஃபுட்பால் படங்கள் எல்லாமே.. 99% க்வாட்டர் பேக் பேஸ்டாதான் இருக்கும்.

Blind Side மாதிரிப் படங்கள் ரொம்பக் கம்மின்னு நினைக்கிறேன். அல்லது இல்லாமலேயே இருக்கலாம்.

அப்புறம் முடிவும், வெண்ணிலா கபடிக் குழு மாதிரி.. ஜெயிக்கிற கதையாதான் இருக்கும்.

சென்னை - 28, மாதிரியான முடிவோ, அல்லது இந்தப் படம் & கோச் கார்ட்டர் படம் மாதிரியான முடிவோ இருக்கவேயிருக்காது. அதனாலயே இந்தப் படங்கள் பார்க்கும் போது.. ஒரு ஆயசம் இருக்கும்.

நம்மூரில்.. குழந்தைகள் படம் மாதிரியே.. விளையாடுப்படங்களும் வர்றதேயில்லை..!!

நீங்க என்ன நினைக்கறீங்க??

மதன் சொன்னது…

@ஹாலிவுட்பாலா: வாங்க தல, தல இந்த படம் நீங்க பாத்தீங்களான்னு தெரியல கடசியில பசங்க தோத்துடுவாங்க. அப்புறம் பெரிய ஹீரோயசம்லா இருக்காதுங்க தல.

தல உண்மையிலே எனக்கு வெண்ணிலா கபடி குழு, சென்னை 28லா ஏன் புடிக்கும்னா அது விளையாட்டு படங்களா இருக்கரதால தான், நம்ப ஊர்ல விளையாட்டுக்கே முக்கியதுவம் தரதுல்ல அப்புறம் எங்க இருந்து விளையாட்டு படங்களுக்கு முக்கியதுவம் கிடைக்க போகுது.

சரி அதெல்லாம் விடுங்க தல நீங்க சீக்கரம் வந்து ஒரு பதிவ போடுங்க :)

மதன் சொன்னது…

@அண்ணாமலையான்: கண்டிப்பா பாருங்க தல நிச்சயம் ஓர் அளவுக்காவுது வித்யாசமான படம் தான்.