திங்கள், 1 பிப்ரவரி, 2010

Zeitgeist.Addendum - பாகம் 1


Zeitgeist என்னும் ஜெர்மானிய வார்த்தை குறிக்கும் தகவல் காலத்தின் உயிர்
addendum என்னும் வார்த்தை இணைப்பை குறிக்கிறது.

முதலில் 2007ஆம் ஆண்டு Zeitgeist: The movie எனும் ஆவண படத்தை தொடர்ந்து 2008ல் Zeitgeist.Addendum வெளிவந்தது. இது மிக அதிகமாக ஒதுக்கபட்ட ஒரு படம். நம்பகதன்மையற்ற கருத்துகளை உள்ளடக்கியது என அதிகம் குற்றம் சாட்டப்பட்டது. பல முடிச்சிகளை அவிழ்ப்பது போல இருந்தாலும் பல முடிச்சிகளையும் இப்படம் போடுகிறது. ஒரு அறிதலுக்கு இப்படத்தை பார்க்க நான் பரிந்துரை செய்கிறேன் காரணம் இப்படம் முழுவதும் உருவாக்கபட்டது peter joseph எனும் ஒரு நபரால். நம்ப டி. ஆர் போல இயக்கம், தயாரிப்பு, படதொகுப்பு, இசை என எல்லாம் அவர் ஒருவரே ஆனால் மிக சிரத்தையுடன். காட்சியமைப்புகள் அனைத்தும் மிக வித்யாசமாக செய்யப்பட்டுள்ளது படத்தின் இசையை போலவே.


இருளான பிண்ணனி மெல்ல தோன்றும் சிறு வெளிச்சம், மெல்ல மெல்ல அதிகமாகும் இசை, ஒரு கண்ணின் கருவிழிக்கு பின்னால் ஒலிக்கிறது கூடவே சில காட்சிகளுடன் யுத்தம், வறுமை, அழுகை, தீவரவாதம். கண்கள் மூடி திறக்கும் போது ஒரு வாசகத்துடன் திறக்கிரது  நாம் என்னவாக  இருக்கிறோம் நல்லவனாக, கெட்டவனாக, குறிக்கோளுடன், குறிக்கோள் இல்லாமல் எல்லாம் தீர்மானிக்க பட்டது, அதை நாம் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம் எல்லாவற்றுக்கும் மாற்று உண்டு. ஆனால் இந்த விளையாட்டின் முடிவு என்ன என்பதை காண்போம். கண்ணிமை மூடி கொள்கிரது பின்னால் ஒரு தெருவின் காட்சியுடன் . அத்தெரு wall street ஆக இருக்களாம் என்பது எனது கணிப்பு.

திரும்பவும் ஒரு இருண்ட திரையில் இருந்து காட்சிகள் தோண்றுகிறது. ஒரு குரல் ஒலிக்கிறது “ நாம் என்ன சொல்கிரோம் என்றால் எவ்வளவு  மக்கள் மனதில் புரட்சியை தூண்ட, நிலையற்றதன்மை இந்த நிலையற்ற தன்மை இப்போது பழைய முறைகளை பின்பற்றவில்லை, மனிதன் அப்படியே தான் இருக்கிறான் வன்மம், போராட்டம், குரோதம் ஆகிய குணத்துடன். பிறகு மனிதன் ஒரு சமுதாயத்தை உருவாக்கினான் இத்தகைய மனோபான்மையுடன்”.

" It is no measure of health to be well adjusted to a profoundly sick society" எனும் வாசகத்துடன் முதல் பாகம் ஆரம்பிக்கிறது. இச்சமுதாயம் பல நிருவனங்களால் உருவாகப்பட்டது. அரசியல் நிறுவனம், சட்ட நிறுவனம், மத நிறுவனம் என பலவற்றால் உருவாகப்பட்டது என்றாலும் பண நிறுவனமே நம் வாழ்வை மிக சரியாக தீர்மானிக்கும் ஒரு அங்கம். ஆனால் இந்நிருவனத்தை பற்றி மக்கள் விழிபுணர்வுடன் இல்லை.

இதன் பிறகு ஒரு ஆப்பிரிக்க குழந்தையின் பசி கொண்ட கண்களுக்கு பின்னால் இவ்வாசகம் ஒலிக்கிறது “உலகில் உள்ள 1 சதவீத மக்கள் உலகின் 40 சதவீத வளத்தை கொண்டுள்ளனர், உலகில் தினமும் 34,000 குழந்தைகள் பசியாலும், தீர்க்ககூடிய நோயாலும் இறக்கின்றனர், 50% சதவீத மக்கள் ஒரு நாளை 2 டாலர் வருமானத்துடன் வாழ்கின்றனர், ஒன்றும் மட்டும் தெளிவாக புரிகிறது ஏதோ ஒன்று தவறாக நடக்கிறது, நாம் அறிகறோமோ இல்லையோ நம்மை சூழ்ந்திருக்கும் அனைத்து நிருவனதிற்க்கும் ஒன்றே பிரதானம் பணம்ம் இப்பணத்தை பற்றிய புரிதல் நமக்கு வெகு குழப்பமாகவே உள்ளது ஆதாலாள அதனிடம் இருந்து தள்ளி நிற்கிறோம், அது குழப்பமாக உருவாக்க பட்டதுக்கு காரணம் அது அவ்வாறாக இருக்க வேண்டும் என சிலரால் விரும்பப்பட்டது ”.

இதற்க்கு பிறகு பணம் எவ்வாறாக உருவாகிரது, அது அரசிடம் எவ்வாறு வந்து சேர்கிறது பின்பு அது மக்களிடம் எவ்வாறாக சென்றடைகிரது, சென்றடைந்த பணம் எவ்வாறாக புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பை குறைக்கிரது. அதனால் மக்கள் வாங்கும் திறன் பாதிக்கபடுவது, தேவைக்காக அதிக பொருள் ஈட்டுவதற்க்காக அதிகம் உழைக்கும் மக்களிடம் இருந்து எவ்வாறாக வட்டியுடன் வங்கிகள் தங்கள் கஜானாக்களை நிறப்பி கொள்கிறது என இப்பகுதி 1 விளக்குகிறது.

உதாரணம் modern money mechanics எனும் ஒரு கோப்பின் அடிப்படையிலே உலக வங்கி முதல் பல வங்கிகள் பணத்தை உருவாக்குகிறது. தற்போது அமெரிக்க அரசுக்கு 10 பில்லியன் டாலர்கள் தேவை படுகிறது உடனே அது தன்னுடைய ரிசர்வ் வங்கியிடம் அதன் கோரிக்கையை வெளியிடுகிறது, ரிசர்வ் வங்கி 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் பத்திரத்தை கோருகிரது. அரசும் சில அரசு பொறிகளிட்ட பத்திரத்தை இது 10 பில்லியன் டாலர் மதிப்புள்ளது என்று சொல்லி வங்கியிடம் வழங்குகிரது. வங்கியிம் டாலர்களை அச்சடித்து அரசிற்கு இதை திருப்பி செலுத்த வேண்டும் என அனுப்பி வைக்கிரது. பணத்தை பெற்ற அரசு அப்பணத்தை பல்வேறு வங்கிகளில் முதலீடு செய்கிறது. தற்போது இப்பணம் அனைத்தும் புழக்கத்தில் விடப்பட்ட பணமாகிரது. தற்போது உருவாக்கப்பட்ட பணம் அனைத்தும் கடனில் இருந்தே உருவாக்கப்பட்டது. கடனில் இருந்து உருவாக்கபட்ட பணம் எப்படி திருப்பி அடைக்கபடும். மேலும் ஒரு தகவல் அமெரிக்காவில் 3%மே பேப்பர் பணம் மற்றனைத்தும் எலக்ட்ரானிக் பணம்.

ஆக ஓன்றுமே இல்லாமல் பணம் உருவாகிறது. modern money mechanics கோப்பின்படி வங்கிகள் சேமிப்பின் 10%த்தை எப்போதும் கையிருப்பு வைத்திருக்க வேண்டும். 10 பில்லியன் டாலர்களில் 1 பில்லியன் டாலர்களை கையிருப்பாக வைத்து கொண்டு மீதி 9 பில்லியன் டாலர்களை கடனாக கொடுக்க வங்கி முடிவு செய்கிறது. எவ்வாறு என்றால் கடன் வாங்குபவரிடம் ஒரு ஒப்பந்தந்தத்தை(கடன் பத்திரம் என வைத்து கொள்வ்வோம்) உருவாக்கி இப்பணத்தை தருகிறது. இப்பணம் மறுபடி மற்றோரு வங்கியில் சேமிப்பாக வைக்கபடுகிறது. சேமிப்பில் 10%த்தை வைத்து கொண்டு மீதி 90%சதவீத்தை அவ்வங்கி கடனாக கொடுக்க முடிவு செய்கிறது. இவ்வாறாக வளர்ந்து கொண்டிருக்கும் பணம் சேமிப்பில் போடப்பட்டதை போல 9 மடங்காக வளர்ந்து நிற்கும் அதாவது 90 பில்லியன் டாலர்களாக.

இவ்வாறாக புதிதாக உருவாக்கபட்ட பணத்திற்க்கு எங்கிருந்து மதிப்பு சேர்கிறது. அது புழக்கத்தில் உள்ள பணத்திடம் இருந்து தான். இதனால் பணத்தின் நிகர மதிப்பு குறைந்து மக்களின் வாங்கும் திறனையும் குறைக்கிறது. இதற்க்கு பெயரே பணவீக்கம்.  அதிக பண உற்பத்தி செய்யும் அதே நேரத்தில் பணவீக்கத்தை எவ்வாறு கட்டுபடுத்த முடியும். விடை சாத்தியமில்லை

இலகுவாக நீங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னால் 1 பணம் கொண்டு வாங்கிய பொருளை தற்ப்போது 22 பணம் கொண்டே வாங்க இயலும் இதுவே பணவீக்கம். அதிக பணம் உருவானால் அதிக கடன் உருவாகும் அதிக கடன் உருவானால் அதிக பணம் உருவாகும். எல்லா பணமும் கடனில் இருந்து உருவாக்க பட்டது தான் சரி எல்லா கடனையும் அடைத்தால் என்னாகும் நாட்டில் ஒரு பணம் கூட புழக்கத்தில் இருக்காது. சரி 10 பணம் வாங்கினேன் அதை திருப்பி செலுத்துகிறேன் என சொன்னால் சிரிப்பார்கள் எங்கடா வட்டி அதே தான் வங்கியிடம் இருந்து கடன் வாங்கிய அரசு ஒரு குறிப்பிட்ட சதவீதம் வட்டியுடன் அதை திரும்ப செலுத்துகிறேன் என வாங்கி மக்களிடம் கொண்டு சேர்க்கிறது அதே நிபந்தனையுடன். பணத்தை பெற்ற மக்களும் பணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த பாடுபடுகின்றனர். ஆனால் யோசித்து பாருங்கள் 10 பணம் தான் வங்கியில் இருந்து வெளிவருகிரது ஆனால் நீங்கள் வங்கிக்கு உதாரணமாக 12 பணம் செலுத்த வேண்டும் மிச்ச 2 பணத்தை எவ்வாறு பெற முடியும் இல்லாத பணத்தை எப்படி அடைக்க முடியும் அது முடியவே முடியாது. இந்த வட்டியை அடைக்க புது பணம் வெளியிட படும் அது மேலும் கடனை அதிகரிக்கும் அதில் ஏமாந்த யாரு ஒருவரின் சொத்து பரிபோகும் வங்கியிடம். விசயம் என்னவென்றால் இல்லாத பணத்திற்க்கு வட்டி கட்டினால் நிச்சயம் மோசம் போவோம் அது தான் modern money mechanicsன் நோக்கம். ஆக நாம் அனைவரும் நாள் நெடுக வேலை செய்கிறோம் யாருக்காக வங்கிக்காக, வங்கியிலயே உருவான பணம் வங்கியிடமே போய் சேர்கிறது அதிகமாக மிக அதிகமாக. உண்மையில் வங்கியும், அதற்க்கு ஆதரவு தரும் நிருவனங்களும், அரசுமே நம்மை ஆளுபவர்கள்.

முன்பு அடிமைக்களுக்கு உண்ண உணவு, உறங்க இடம் கொடுத்து அடிமை படுத்தினர் ஆனால் தற்போது சம்பளம் என்ற பெயரில் அடிமை படுத்த படுகிறோம். கடனே நம்மை அடிமை படுத்துகிறது வட்டி எனும் சாட்டையால்.

மேலும் அமெரிக்காவில் நடந்த சில சம்பவங்களை முன் வைத்து செல்கிறது.

உலக வங்கி, IMF (international monetary fund) அகியவற்றையே சூசகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வங்கிகளே உலகம் மொத்ததையும் தன் கட்டுக்குள் கொண்டு வர முயலுகிறது எவ்வாறு அது பாகம் 2ல்....

மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை என தெரியாத பட்சத்திலும் மூளையில் ஏதோ நிமிண்டுகிறது.

10 கருத்துகள்:

பாலா சொன்னது…

ஸாரி.. மதன்..

காலைல இருந்து.. பின்னூட்டம் போடாததுக்கு காரணம்.., இந்த மேட்டரை நீங்க எப்படி புரிஞ்சிகிட்டீங்கன்னு... எனக்குப் புரியாம.. நான் புரிஞ்சதுன்னு நினைச்ச மேட்டரும்.. இந்தப் பதிவைப் பார்த்து புரியாம குழம்ப ஆரம்பிச்சி...

திரும்ப படத்தை பார்த்துட்டு... பின்னூட்டம் போடலாம்னு நினைச்சேன். இன்னைக்கு பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்.

மேட்டர் சரியாதான் இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா.. ‘நிகர லாபம்’ன்னு சொன்னா.. டக்குன்னு புரிஞ்சிக்கிற அளவுக்கு.. இப்போதைக்கு தமிழறிவு இல்லை. அதான் குழப்பம்.

அந்த கடனட்டை மேட்டர் கரெக்ட்தான். பணம் திரும்பத் திரும்ப வங்கிக்கே போகும். பணமேயில்லாமல்.. பணம் இருப்பது மாதிரி ஒரு மாயையை உருவாக்குவது. அத்தனையும் எலக்ட்ரானிக் நம்பர்கள்தான்.

நம்ம கணக்கில்.. 100 இருக்குங்கறதுக்காக... பேங்கில் அந்த 100 இருக்கனும்னு அவசியமில்லை. பேங்க் திவால் கூட ஆகியிருக்கும். நம்ம கணக்கில் 100 தெரிஞ்சிகிட்டே.....!!! :) :)

--

எனக்கு செலவு பண்ணத்தான் தெரியும். மத்தபடிக்கு.. அக்கவுண்டிங், எக்னாமிக்ஸ் எல்லாம்.. வேட்டைக்காரனை திரும்ப பார்க்கச் சொல்லி பயமுறுத்தினா கூட வராது.

அதனாலோ என்னவோ... இன்னும் எளிமையா இருந்திருந்திருக்கலாமோன்னு தோணுச்சி.

பாலா சொன்னது…

படத்தைப் பத்தி சொல்லுறதுக்கு முன்னாடி... modern money mechanics ன்னா.. என்னன்னு முழுசா சொல்லியிருந்தீங்கன்னா... இன்னும் பெட்டரா இருந்திருக்கும்(ன்னு நினைக்கிறேன்).

சத்தியமா criticism இல்லை!! :) :)

kailash,hyderabad சொன்னது…

வந்தாச்சு.ஓட்டு போட்டாச்சு.( தமிழ் மணம் ஓட்டு பட்டை இல்லியே.)
தமிழ் மணத்தில இணைந்து ஓட்டும் பட்டை நிறுவினிங்கன்னா பதிவு நிறைய பேரை சேரும்.
நிறைய விழிப்புணர்ச்சி கட்டுரைகள எழுதுறீங்க .அடுத்த வருஷம் அவார்ட் கிடைக்ககூட வாய்ப்பிருக்கு.
(ஏதும் உள் குத்து இல்லிங்கண்ணா. )
சாயந்தரம் வர்றேன் தல.

மதன் சொன்னது…

தல என்ன வச்சி காமெடி கீமடி பண்ணலயா நானே படத்த ஃப்ரேம் பை ஃப்ரேம் ஸ்டில் பண்ணி பாத்து தான் இந்த படத்த பாத்தே ஏன்னா அவ்வளவு கொழப்பமா இருந்தது.

“அந்த கடனட்டை மேட்டர் கரெக்ட்தான். பணம் திரும்பத் திரும்ப வங்கிக்கே போகும். பணமேயில்லாமல்.. பணம் இருப்பது மாதிரி ஒரு மாயையை உருவாக்குவது. அத்தனையும் எலக்ட்ரானிக் நம்பர்கள்தான். ”

உண்மை தல நம்ம தலைல நல்லா மொளகா அரைக்கிறான்ங்க.

”படத்தைப் பத்தி சொல்லுறதுக்கு முன்னாடி... modern money mechanics ன்னா.. என்னன்னு முழுசா சொல்லியிருந்தீங்கன்னா... இன்னும் பெட்டரா இருந்திருக்கும்(ன்னு நினைக்கிறேன்).

சத்தியமா criticism இல்லை!! :) :)


தல நீங்க criticize பண்ணாலும் பரவாயில்ல ஆனா எனக்கு அப்படினா என்னானு தெரியுல சரி அடுத்து எழுதறப்ப ஊன்றி படிச்சிட்டு எழுதுறேன். :)) :))

மதன் சொன்னது…

@ கைலாஸ் : ஆகா இப்படிலா கலாய்க்க கூடாது. நீங்க தான் இந்த படத்தையே பாக்க சொன்னீங்க நானும் தலகீழா நின்னு பாத்துலாம் ஒண்ணும் அவ்வளவு சீக்கரம் விளங்குல ஏதோ எனக்கு புரிஞ்ச மேட்டரலா போட்டு இதுல எழுதி இருக்கேன் அதுக்கு போய் அவார்டு அது இதுனு சொல்லி என்ன கலாய்க்கிறிங்க பாத்தீங்களா :).

மதன் சொன்னது…

தல அதே போல

“காலைல இருந்து.. பின்னூட்டம் போடாததுக்கு காரணம்.., இந்த மேட்டரை நீங்க எப்படி புரிஞ்சிகிட்டீங்கன்னு... எனக்குப் புரியாம.. நான் புரிஞ்சதுன்னு நினைச்ச மேட்டரும்.. இந்தப் பதிவைப் பார்த்து புரியாம குழம்ப ஆரம்பிச்சி...”

எனக்கும் புரியல தல இருந்தாலும் சும்மா எழுதுவோமேனு எழுதி இருக்கேன் நீங்க படம் பாத்துட்டு சொல்லுங்க தல என்ன தான் சொல்ல வராங்கனு அப்பவாவது எனக்கு புரியுதான்னு பாப்போம்.

geethappriyan சொன்னது…

நண்பா உங்க பேரில் டுபாக்கூர் இருந்தாலும் பதிவில் இல்லை,கீப் இட் அப்.நல்ல முயற்சி,ஓட்டு போட்டாச்சு

மதன் சொன்னது…

@கார்த்திகேயன்:ஹாஹாஹா தல பாத்திங்களா என்ன வச்சி காமெடிபண்ணிட்டிங்க. நன்றிங்க தல ஓட்டுக்கு .

நீங்க அப்ப அப்ப எட்டி பாத்தாலே எனக்கு மகிழ்ச்சி :)

kailash,hyderabad சொன்னது…

விமர்சனம் மிகவும் நன்றாக flow -ஆக உள்ளது தல.
படம் நேரில் பார்ப்பது போலவே feeling . வாழ்த்துக்கள்.

நம்மை சுற்றிலும் நடப்பதை பார்க்கும்போது இந்த படத்தில் குறிப்பிட்ட பல விஷயங்கள் நிஜம்தான் போலிருக்கிறது .
நம் நாட்டையே எடுத்து கொள்ளுங்கள்.கடனுக்கான வட்டியை விட நாட்டின் மக்களுக்கு முக்கியமான, கல்விக்கும் மருத்துவத்திற்கும் அரசு குறைவாகவே செலவழிக்கிறது . மேலும் தனது பொறுப்பை தட்டி கழித்துவிட்டு இதில் தனியார் சம்பாதிக்க வழி செய்து விட்டு குடிமக்களிடம் உனக்கு நல்ல கல்வி வேண்டுமென்றால் கடன் வாங்கி படிச்சுக்கோ, நல்ல சிகிச்சை வேணுமா ? கடன் வாங்கி வைத்தியம் பாத்துக்கோ என்று கை விரித்து விடுகிறது,

தனிநபரை எடுத்து கொண்டால் தாத்தா கடனாளி,அபப கடனாளி, நான் கடனாளி,பேரனும் கடனாளியகத்தான் இருப்பான் என்று தொடர்கிறது.நாட்டை எடுத்து கொண்டால் பிரிட்டிஷார் கடனை கொடுத்து( திருப்பி கொடுக்க முடியாமல் ) பல மன்னர்களிடம் இருந்து நாட்டை பெற்று கொண்டனர்.பிறகு நாடு சுதந்திரம் அடைந்தபோது கடன் இல்லாமல் பணம் கையிருப்பு இருந்ததாம்.
இப்போது உலக வங்கியிடமும் அமெரிக்காவிடமும் ஏகப்பட்ட கடன் வாங்கியுள்ளோம். இந்த கடன் 500 வருடமானாலும் தீர்வது போல் தெரியவில்லை. எப்படி இவ்வளவு கடன் ஏற்பட்டது ?
நமக்கு கடன் கொடுத்த அமெரிக்கா நம்மளை விட ( மற்ற நாடுகளுக்கு) பெரிய கடன்காரனாம்.
யார் யாருக்கு கடன்? . நினைச்சு பாத்தா தலை சுத்துது.
இந்த படம் ரொம்ப heavy -யான படம் ஒருதடவை பார்த்தல் முழுதுமாக புரியவில்லை.மறுபடி பார்க்க வேண்டும்.
இதில் குறிப்பிட விஷயங்களும் கருத்துக்களும் உண்மையாகவேஇருந்தாலும் கூட நம்மால் எதையும மாற்ற முடியாது என்பதுதான் வருத்தம்.
நீங்கள் தொடர்ந்து பார்த்து உங்கள் கோணத்தில் உணர்ந்ததை எழுதுங்கள்.
ஏதாவது சிறிய முயற்சியாவது செய்வோம்.

மதன் சொன்னது…

@kailash: ரொம்ப நன்றிங்க தல இப்படத்த பாத்தப்ப பல விசயங்கள் புரியல. ஒரு வேல இந்த படம் நிறைய உண்மைகளை சொன்னதாலோ இல்ல கடினமான விசயங்கள சொன்னதால கூட நிறைய பேர போய் சேரலனு நினைக்கிறேன்.

நீங்க சொல்ரது சரி தான் இந்தியாவிலும் இந்த கடன் தொல்ல தான் யோசிச்சி பாத்தா அவங்க அவங்க ரேஞ்சிக்கு அவங்களுக்கு கடன் இருக்கு கவர்மண்டும் ஒண்ணும் பண்ண போறது இல்ல.

ஆமாங்க தல நிச்சயம் நம்மால் எதையும் மாற்ற முடியாதது வருத்தம் தான்.

நீங்களே பதிவு எழுதி இருக்கலாமே தல பல மேட்டர் வச்சி இருக்கீங்க :)