ஒரு மெல்லிய இறகை போல மவுனமாக வாழ்வில் அங்கும் இங்கும் திரிந்த போது தவிழந்த இடங்களின் நினைவுகளையும் என் மனதின் எண்ணங்களையும் பதிவு செய்கிறேன்...
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
ஒரு வசந்த காலம்....2
நான் ஒரு லூசுங்க, அவ யாரு கூட போனா, எந்த பஸ்ல போனா எதயும் பாக்காம நான் பாட்டுக்கு ‘பே’னு கைல டீ கிளாஸோடு நின்னுக்கிட்டு இருந்தேன் என்னயே மறந்து போய்.....”எப்பா சிவா டீ கிளாஸ கொடு நீ பாட்டுக்கு அத கைல வச்சி இருந்தா வர கஸ்டமருக்கு நான் என்ன கொட்டாங்குச்சியிலயா டீ கொடுக்க முடியும்”னு மணி பின்னாடி இருந்து சவுண்டு கொடுத்த உடனே தான் நிகழ்காலத்துக்கு வந்தேன்(எவன பாத்தாலும் நம்மள அசிங்கபடுத்தறதயே வேலயா வச்சி இருக்கானுங்க).
“மணி இப்ப ஒரு 2 நிமசத்துக்கு முன்னாடி ஒரு பஸு போச்சே அது எந்த ஊரு பஸ் மணி”னு நான் கேக்க அவன் வியாபார டெண்ஸன்ல இருந்திருக்கணும் வேகமா டீ ஆத்திக்கிட்டே “ஏன் சிவா நிமசத்துக்கு இந்த பக்கம் நாலு பஸ்ஸு போது, நான் வியாபாரத்த கவனிப்பேனா இல்ல பஸ்ஸு போறத கவனிப்பேனா, நீ தான் பைக் வச்சி இருக்கியே பின்னாடியே போனா எந்த பஸ்ஸுனு பாக்கலாம்ல” அப்படினு எளக்காரமா சொன்னாலும் அதுலயும் ஒரு பாய்ண்ட் இருந்தது. உடனே ஆர்வத்துல கைல இருந்த கிளாஸ அப்படியே மணிக்கிட்ட தூக்கி போட்டுட்டு (லவ் பண்ண ஆரம்பிச்சாலே இப்படில பண்ணனும் - எத்தண தமிழ் படம் பாத்திருப்போம்) வண்டிய ஸ்டார்ட் பண்ண மணி கடைல இருந்து என்ன ஏக வசனத்துல திட்டனதெல்லாம் காதுல ஒண்ணும் விழல. சின்ன சேலம் போகுற பக்கம் தான் பஸ் போச்சி, பஸ்ஸூக்கும் எனக்கும் 2 நிமிச கேப் இருந்தாலும் புடிச்சிடலாம், புடிச்சாகணும் வாழ்க்கைல ஃப்ர்ஸ்ட் டைம் காத்தடிச்சிருக்கு இத மிஸ் பண்ண கூடாது..... ரத்தத்துல ஏதோ வேகமா என்ன முருக்கிச்சி.
எப்படியும் அண்ணாநகர் ஸ்டாப்புல எல்லாம் பஸ்ஸும் நின்னு தான் போகும், மனசுக்குள்ள ஒரு பட்சி சொல்லிக்கிட்டே இருந்தது என் வாழ்க்கைல ஏதோ முக்கியமானது நடக்கபோகுதுனு, 22 பைக்கு, 6 சைக்கிள், 9 லாரி, 3 பஸ்ஸு இதையெல்லாம் தாண்டி 600 மீட்டர்ல இருந்த அண்ணாநகர் பஸ் ஸ்டாப்புக்கு என்னால முடிஞ்ச வேகத்துல போய் சேர்ந்தேன். அவள பாத்தே ஆக வேண்டிய ஆர்வம் என்னய என்ன செய்றோம்ங்கறதயே மறக்க வச்சிடிச்சி, நின்னுக்கிட்டு இருந்த 2 பஸ்ஸையும் இடது பக்கமா போய் ஜன்னலோரமா அவ இருக்காளானு பாத்தேன். ‘ப்ச்’ இல்ல மனசுலஒரு சின்ன பயம் அவள இழந்துடுவேனோனு இன்னும் அவ பேர் தெரியாது, ஊர் தெரியாது ஆனாலும் அவ என் வாழ்க்கைல கூட வரணும்ங்கற எண்ணம் மட்டும் தீர்கமா இருந்தது.
சின்னசேலம் 15 கிமீ அதுக்கு முன்னாடி ரெண்டு வழி நடுவுல பிரியும் அதுக்குள்ள எதுலயாவது வண்டி போய் இருந்திச்சினா கஸ்டம், சரி நம்ப அதிர்ஸ்டம் எவ்வளவுனு பாக்கலாம்னு தீர்மானமா வண்டிய ஓட்டினேன். என் மனசுல இருந்த படபடப்பு என் கட்ட போட்ட சட்டையுலையும், நைஞ்சு போன நீல ஜீன்ஸ் பேண்டலையும் நல்லா தெரிஞ்சிது. மணி சாயந்தரம் நாலரைங்கறதால முன்னாடி போற பஸ்ஸையோ இல்ல அதில இருக்கறவங்களையோ பாக்குறதுல பெரிய கஸ்டம் இல்ல. திரும்பவும் முகத்துல ஜில்லுனு காத்து எதிர்த்தாப்புல பஸ் அப்படியே லெஃப்ட்ல ஓவர்டேக் பண்ண //பூங்காற்றே, பூங்காற்றே பூ போலே வந்தாள் இவள்//னு பஸ்ல இருந்து பாட்டு, முன் பக்க படிக்கட்ல இருந்து பின்னாடி இருக்க 2வது ஜன்னல இருந்து கரும்பச்சை துப்பட்டா வெளில தெரிஞ்சிது. திராட்டில்ல முருக்கி ஜன்னல பாத்துகிட்டே போனேன், அவளும் பாத்தா கண்ள ஒரு டண் ஆச்சிரியம் நிச்சயம் அவ என்னை எதிர் பாக்கலுனு அவ கண்கள் சொல்லிச்சி, அவ உதடும் சிரிச்சிச்சி ரொம்ப மகிழ்ச்சியா.
இன்னும் கொஞ்சம் முருக்கி பஸ்ஸ ஓவர் டேக் பண்ணினேன், அவ தல ஜன்னல விட்டு கொஞ்சம் வெளில வந்தத கண்ணாடில பாக்க முடிஞ்சிது. திரும்பவும் பஸ்ஸுக்கு வழி விட்டேன், நான் பின்னாடி போறப்ப அவ கண்ணும் சிரிச்சிக்கிட்டே பின்னாடியே வந்துது என்ன பாத்துக்கிட்டே, இதே மாதிரி ஒரு 3 தடவ பஸ்ஸுக்கு முன்னாடியும் பின்னாடியும் போனேன். டிரைவர் உட்பட பஸ்ல இருந்த பல பேர் “கிறுக்கு பய பாரு ரோட்ல எப்படி வித்த காட்டுதுனு” 100 % நிச்சயம் நினச்சி இருப்பாங்க, அத பத்திலா யாரு கவல பட்டா. நான் பஸ்ஸுக்கு இடது பக்கம் அவள பாத்துக்கிட்டே ஓட்னப்ப, எதிர்ல இருந்த மாற்று பாதையை உபயோகிக்கவும்ங்கற தடையை நான் பாக்காதத அவ பாத்து “பாத்து ஓட்டுங்க”னு சொல்றத கேட்டு வண்டிய கட்டுபடுத்தரதுக்கு முன்னாடி, 4 விநாடில வண்டி தடுப்பு கட்டைல மோதி என் கிழிஞ்சி போன இன்னும் கிழிஞ்சி என் முட்டி ரோட்டுல தேய்க்க, இடது தோள் பட்டைல இருந்து ஏதோ பிரிஞ்சி போன மாதிரி தோண, என் தலைல ஏதோ வேகமா மோத, தூரத்துல ”டிரைவர் வண்டிய நிறுத்துங்க”னு மாலினி கத்துனது என் காதுல சன்னமா ஒலிச்சி அடங்கியது, நான் ஒரு புன்னகையோடு மயங்கியிருந்தேன்.
வசந்த காலம் தொடர்ந்தது.....
தொடரும்.......
ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010
ஒரு வசந்த காலம்....
வாழ்க்கைல இந்த 25 26 வயசு நெருங்கறப்ப மனசுல ஒரு ஏக்கம் நம்ம யாராவது காதலிக்க மாட்டாங்களானு சரி கல்யாணம் பண்ணி அப்படியாவது காதலிக்கலாம்னா நம்ப சம்பளம் நமக்கே பத்தாம இந்தியாவோட பற்றாகுரை பட்ஜெட் மாதிரி டல்லடிக்குது இதுல ரெண்டு பேருக்கலா சரி படாது, யாராவது ஒரு தட போகுற போக்குல பாத்தா கூட அப்படியே மனசு வானத்துல பறக்குர மாதிரி இருக்கும் இன்னொரு தடவ திரும்பி பாப்பாங்கனு பாத்தா நமக்கு பன்னு தான் மிஞ்சும், மன்னிகவும் எனக்கு, சாப்பிட போனா கூட ரம்யவிலாஸ்னு பொண்ணுங்க பேரா இருக்க ஹோட்டலுக்கு, துணி எடுக்க போனா சாந்தி டெக்டைல்ஸ்னு பொண்ணுங்க பேரு இருக்க கடைக்குனு ஒரு மார்க்கமா இருந்தேன்.
யமாஹாவுல டர்ருனு வர சத்தத்த வச்சே பக்கத்து வீட்ல இருக்குற எல்லாம் நினச்சி இருப்பாங்க “தொர டுயூட்டிக்கு கிளம்பிட்டார்னு” டுயூட்டின உடனே ஏதோ கம்பேனி வேலைக்கு போறேனு நினச்சிடாதீங்க, கச்சேரி ரோட்ல இருக்க மணி டீ கடைக்கு போய் பஸ் ஸ்டாண்டுக்கு வர பொண்ணுங்கள சைட் அடிக்க தான் ஆமா நம்ப திறமைய!!!!!!!!!!!!! மதிச்சி எவன் வேல தந்தான் மெட்ராஸ்ல போய் வருசகணக்கா உட்காந்தது தான் மிச்சம். இப்படி இருக்கப்ப நமக்கும் ஒருத்தர் வேல தந்தார் துபாய்ல, அங்க ஒரு வருசம் வேல பாத்துட்டு ஊர்ல ஒரு மாச லீவ எப்படி ஓட்றது, அதான் நேரத்த இப்படி உபயோகமா பயன்படுத்திக்கிறேன்........
ஒண்ணு ரெண்டு புள்ளைங்க நாம பைக்குல உட்காந்து டீ குடிக்கிற ஸ்டைல பாத்து அப்படியே மையமா சிரிச்சிட்டு போகும் ம்ஹ்ம் என்ன தான் வீட்ல வக்கனையா சாப்பிட்டாலும், பசங்களோட லொக்கேசன் லொக்கேசன் போய் சினிமா பாத்துக்கிட்டு, சரக்கடிச்சிட்டு சுத்தினாலும், காசு பணத்துக்கு கஸ்டம் இல்லனாலும் மனசுல ஒரு ஏக்கம்
“இரு விழிகளை தேடுகிறேன், என்னை உனதாக்கி கொள்பவளே எங்கிருக்கிறாய், உனை நான் காண்பேனே இல்லை எனை நீ காண்பாயா, காலம் கசக்கிறதிடி எனை ஆட்கொண்டு விடு........”
”கை விரல்கள் பிணைந்திட, கால்கள் கடற்கரை மண்ணில் புதைந்திட, என் மனம் இணைந்திட, என் உயிரில் கலப்பவளே நீ எங்கேயடி......................."
இப்படி கவித கவிதயா எழுதி திரிஞ்சிக்கிட்டப்ப தான் மாலினிய பாத்தேன், அப்படியா முகத்துல மெல்லிசா ஃபேன் போட்டாப்புல காத்து அடிச்சிது, அப்பனு பாத்து மணி ஸ்பீக்கர்ல //கண்கள் இரண்டால்// பாட்ட போட அவ பக்கத்துல இருக்க பொண்ணுக்கிட்ட பேசிக்கிட்டே திரும்பரப்ப என்ன அப்படியே லைட்டா கண்ணுக்கு கண்ணா பாக்க எப்படி இருந்திருக்கும்னு உங்களுக்கே தெரியும், நானும் அவ பஸ் ஸ்டேண்டுக்குள்ள போற வரைக்கும் கைல டீயோட அப்படியே ஆவி அதுல இருந்து என் முகத்தல அறைய அவள பாத்துக்கிட்டு இருந்தேன், யாருமே என்ன செகண்டு டைம்ல திரும்பி பாத்ததில்லு ஆனா இந்த சுடிதார் போட்ட தேவத தன் முகத்துல இருந்த முடிய அப்படியே காதோரமா மெல்ல ஒதுக்கி விட்டுகிட்டு என்ன பாத்துட்டு தலைய குனிச்சிக்கிட்டு போய்டிச்சு, இன்னும் //கண்கள் இரண்டால்// பாட்டு நிக்கல, டீ ஆவி என் முகத்துல படறதும் நிக்கல, லைட்டா காத்து என் முகத்துல படறதும் நிக்கல, என்ன தான் பாக்குற பொண்ணுங்களயெல்லாம் ஒரு மாதிரி புடிச்சி இருந்தாலும் இது என்னமோ புதுசா இருந்தது, ஒரு வேல காதலா இருக்குமோ அய்யோ environmental symptoms லா அப்படி தானே சொல்லுது.
அவள பத்தி வர்ணிக்கணும்னா வேணாம் அப்புறம் கதய படிக்காம என் ஆள பத்தி கற்பன பண்ண ஆரம்பிச்சிடுவீங்க, சரி இருந்தாலும் சொல்றேன் எனக்கே ஆச்சிரியமா தான் இருக்கு சரியா ஒரு 40 செகண்ட் தான் அவள பாத்து இருப்பேன் ஆனா அவள பத்தி இவ்வளவு விசயத்த எப்படி கவனிச்சேன்.. தெரியல. கொஞ்சமும் சுருள்லில்லாத நீளமான முடி, திருத்தமான புருவம், அதுக்கு கீழ கூர்மையான கண்ணு, அந்த காதுக்குனே செஞ்ச மாதிரி தொங்கட்டான் தோடு, அளவான உதடு, தோளின் முன் பக்கமா விடப்பட்டு இருந்த மல்லிகை சரம் தொங்க கரும் பச்சை சுடிதார் போட்டுக்கிட்டு போனா..... நீங்களே சொல்லுங்க தேவத தானே.
இப்படியே அவள பத்தி கற்பன பண்ணிக்கிட்டு இருந்தப்ப, உள்ள போனவ இப்ப ஜன்னலோர சீட்ல உட்காந்துகிட்டு பஸ்ல வெளில வந்தா திரும்பவும் என்னய பாத்துக்கிட்டே என் முகத்துல மெல்லிய காத்து, //பூக்கள் பூக்கும் தருணம்// பாட்டு என் மனசு என்கிட்ட இல்ல 2 நிமசித்துக்கு முன்னாடி இது காதலானு யோசிச்சிக்கிட்டு இருந்தது இப்ப கன்ஃபார்ம் ஆய்டிச்சி, பஸ் போய்டிச்சி என் மனசும் தான்.....
பனி காலம் முடிந்து வசந்தகாலம் தொடங்கியது.
தொடரும்.....
ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010
திருவண்ணாமலை வந்துட்டேன்.....காலேஜ் சேந்துட்டேன்.....
(இது நிச்சயம் யாரையும் கலாய்க்கும் பதிவு அல்ல)
(டே தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லனு கேக்கரவங்க தயவு செஞ்சி பதிவ கடசி வரைக்கும் படிங்க பிளீஸ்..)
5வது வரைக்கும் ஊர்ல ஒழுங்கா படிச்சிக்கிட்டு இருந்தவன கொண்டு போய் மெட்ராஸ்ல இருக்க பள்ளிகூடத்துல (அதுவும் மெட்ராஸ்லயே பெரிய பள்ளிகூடமாம்) தள்ளுனா என்ன ஆகும் (டெண்சன் ஆகும் கொய்யால கதைய சொல்லுனு நீங்க சொல்றது கேக்குது). போய் பாத்தா எல்லாம் நம்ப ஊரு பள்ளிகூடம் மாதிரி தான் இருந்தது ஆனா பசங்க எல்லாரும் பக்காவா இங்கிலீஸ் பேசுறான்ங்க. நேரா ஹாஸ்ட்டல பாக்காம ஸ்கூலுக்கு போய்ட்டேன் அதான் பிராப்ளம், ஹாஸ்டலுக்கு போன உடனே தான் நிம்மதி ஆச்சி, எல்லாம் நம்ப கோக்ஷ்டி அப்பவே தெரிஞ்சி போச்சி இது உருப்பட்டாப்பல தான்னு, ஒரு மாசம் வீட்ட நினச்சி கொஞ்சம் துக்க பட்டேன், அப்புறம் அதுவும் போச்சி.
கருத்தா ஸ்கூலுக்கு போனோமா, கிளாஸ்ல தூங்குனோமா, டீச்சர்கிட்ட திட்டு வாங்குனோமா (கிளாஸ்ல இருக்க 56, 57 பேர்ல ஹாஸ்டல் பசங்க நாங்க ஒரு 2(அ)3 பேரு தான் அதனால டைம்பாஸ் ஆகலனா எங்கள திட்றதையே பல டீச்சர்ங்க வேலையா வச்சி இருந்தாங்க ஆனாலும் நாங்க அத கண்டுகிட்டதே இல்ல). திரும்ப ஹாஸ்டலுக்கு வந்தோமா சாப்பிட்டோமானு, விளையாடுனேமானு 12வது வரைக்கும் ஓட்டிட்டேன், பரிட்சைக்கு முன்னாடி நாள் மட்டும் படிச்சி பாஸாகி, எங்க வீட்ல நான் 12வது பாஸாவேனானு நம்பிக்கையே இல்ல ஏன்னா ஸ்கூல்ல நடந்த பரிட்சைகள்ல ஒரு தடவ கூட மேத்ஸ்ல பாஸ் ஆனதே இல்ல, நமக்கு நம்ப மார்க்க பத்தியே கவல இல்ல அப்புறம் எவன் எவ்வளவு எடுத்தா என்ன, ஒரு மாதிரி படிச்சி மார்க் வாங்குனதுகு இஞ்சினியரிங் கவுன்சிலிங்ல கவர்மெண்ட் கோட்டால ஒரு காலேஜ்ல மெக்கு ஸீட் கிடச்சிச்சி.
எனக்குலா ஒரே குறிக்கோள் தான் படிச்சா மெக்கானிக்கல் இஞ்சியனியரிங் தான் படிக்கனும்னு, (அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க) இருக்கிற எல்லா டிபார்ட்மண்டைலையும் மெக்கானிக்கல் டிப்ட் தான் ஜாலியான டிப்டுனு கேள்வி அதால தான் செலக்ட் பண்ணினோம்....
காலேஜ் திருவண்ணாமலை நம்ப ஊர்ல இருந்து ஒரு 1.5 மணி நேரம் தான் அதால காலேஜ் ஃபர்ஸ்ட் டேக்கு மொத நாள் சாய்ந்திரம் தான் கிளம்புனேன், அப்படியே பராக்கு பாத்துக்கிட்டே வந்ததுல திருவண்ணாமலைக்கு வந்துட்டேன் (ஆச்சா இப்ப திருவண்ணாமலைக்கு வந்தாச்சி), அங்க இருந்து காலேஜ் ஒரு 5 கி.மீ அதுக்கு ஒரு டவுன் பஸ் புடிச்சி போனேன். அங்கிட்டு போனா எனக்கு மெர்ஸல் ஆய்டிச்சி, கொஞ்சம் பேரு பீல் பண்ணிக்கிட்டு உட்காந்துருக்கானுங்க, அடங்க இந்த எஃபெக்டலாம் நான் 6வதுலயே போட்டச்சினு மனசுகுள்ளயே நினச்சிகிட்டு லக்கேஜலாம் எனக்கு ஒதுக்கப்பட்ட ரூம்ல போய் வச்சிட்டு, கைல பாஸ்கட் பால தூக்கிக்கிட்டு கிரவுண்டுக்கு போய்ட்டேன்.
அடுத்த நாள் காலைல அதாவது ஆகஸ்டு 4, 2003 காலைல நீங்களா இப்படி தான் படிக்கணும், நடந்துகணும், அப்படி இப்படினு மீட்டிங்குங்கற பேர்ல அறிவுற சொன்னாங்க, அப்பால ஒரு 11 மணி போல எல்லாரும் கிளாஸ் ரூம் போனோம்(ஆச்சா இப்ப காலேஜும் சேந்து கிளாஸ்லயும் உட்காந்தாச்சி..தலைப்புக்கு ஒரு பதிவ போட்டாச்சா)
இப்ப உங்களுக்கு கொஞ்சம் ரோசனைகள் சொல்றேன் கேட்டுக்கோங்க,
1. எப்பவும் பஸ்ல டிக்கெட் எடுக்காம போகணுமா?
அந்த பஸ்ல டிரைவராவோ இல்ல கண்டக்கராவோ சேர்ந்துடுங்க (பிளைட்ல பல பேர் இப்படி தான் டிக்கெட் எடுக்காம போறாங்களாம்).
2. நீங்க எடுக்கற போட்டோ எப்பவும் clearஆ இருக்கணுமா?
ஒரு பேப்பர்ல clear அப்படினு எழுதி அதயே போட்டோ எடுங்க, போட்டோ எப்பவும் clearஆ இருக்கும்.
3. நீங்க வாங்குற பல்பு எப்பவும் ஃப்யூஸ் போகாம இருக்கணுமா?
பல்ப வாங்கி யூஸ் பண்ணாதீங்க, அப்ப ஃப்யூஸ் போகாம அப்படியே இருக்கும்.
4. எவ்வளவு தான் எழுதனாலும் நீங்க வாங்குற பென்சில் சார்ப்பா இருக்கணுமா?
அப்ப sharpங்கற கம்பெனி பென்சில் வாங்கி எழுதுங்க, பென்சில் எப்பவும் சார்ப்பா இருக்கணும்.
5. நீங்க வாங்குற கைகடிகாரம் எப்பவும் நிக்காம ஓடணுமா?
வெய்டீஸ் பிளீஸ்பா அதுக்கு முதல்ல கால் முளைக்கட்டும், அப்புறம் தான் ஓடும்.
6. உங்க வண்டி டயர்ல் எப்பவும் காத்து வெளில போகாம இருக்கணுமா?
சிம்பிள் பாஸு, காத்தே அடிக்காதீங்க அப்புறம் எப்படி காத்து போகும்.
போதும் இப்ப கொஸ்டீன் கோய்ந்தனோட கேள்வி கம் பதில்,
1. ஏன் தமிழ் நாட்டு மாடும் சரி, இங்கிலாந்து மாடும் இல்ல எந்த நாட்டு மாடா இருந்தாலும் சரி “ம்மா, ம்மா”னு மட்டும் கத்துது? (ஏன் ஏன் யோசிங்க மக்களே, யோசிங்க)
ஏன்னா எல்லா ஊர் மாடும் நிறைய இலை, தழைய தான் சாப்பிடுது, அம்மா கட்சி சின்னம் என்ன இரட்டை இலை, அதுனால தான் விசுவாசமா “ம்மா, ம்மா”னு கத்துது, got it - wat a loyal animal....
கடசியா ஒரு உருப்பிடியான தகவல்
1. ஏன் எல்லா வாகன டயரும் கருப்பு நிறத்துல இருக்கு?
பொதுவா டயர்கள் ரப்பரால உருவாக்கப்படுது. சாலைல ஓடும் போது அதிக படியான உராய்வு ஏற்படும், அப்படி உராய்வு ஏற்பட்டுச்சினா ஒண்ணு சாஃப்டா இருக்க ரப்பர் சீக்கரம் தேய்மானம் அடையும், ரெண்டாவுது உராய்வுனால அதிக படியான வெப்பம் உருவாகும் அது வெளியேரலனா டயர் வெடிக்கற அபாயம் இருக்கு. இத தடுக்க டயர் உருவாக்கறப்ப ரப்பர்ல கார்பன் துகள்கல கலப்பாங்க (கார்பன் துகல்கள் ரப்பரோடு சேர்ந்து அதுக்கு நல்ல வலிமைய கொடுக்கும், அப்புறம் வெப்பத்த பெரும் அளவு வெளியேத்துற தன்மையும் இருக்கு), கார்பன் துகள்கலோட நிறம் கருப்பா இருக்குறதால டயரும் கருப்பா இருக்கு, அதுவும் இல்லாம இதோட உற்பத்தி செலவும் மட்டுபடுது......
வெய்ட்டீஸ் மீ லீவிங்.......நெக்ஸ்டு மீட் பண்றேன்........உங்க பின்னூடங்கள எதிர்பாக்குறேன் பாஸு......ஜருகண்டி ஜருகண்டி.....
(டே தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லனு கேக்கரவங்க தயவு செஞ்சி பதிவ கடசி வரைக்கும் படிங்க பிளீஸ்..)
5வது வரைக்கும் ஊர்ல ஒழுங்கா படிச்சிக்கிட்டு இருந்தவன கொண்டு போய் மெட்ராஸ்ல இருக்க பள்ளிகூடத்துல (அதுவும் மெட்ராஸ்லயே பெரிய பள்ளிகூடமாம்) தள்ளுனா என்ன ஆகும் (டெண்சன் ஆகும் கொய்யால கதைய சொல்லுனு நீங்க சொல்றது கேக்குது). போய் பாத்தா எல்லாம் நம்ப ஊரு பள்ளிகூடம் மாதிரி தான் இருந்தது ஆனா பசங்க எல்லாரும் பக்காவா இங்கிலீஸ் பேசுறான்ங்க. நேரா ஹாஸ்ட்டல பாக்காம ஸ்கூலுக்கு போய்ட்டேன் அதான் பிராப்ளம், ஹாஸ்டலுக்கு போன உடனே தான் நிம்மதி ஆச்சி, எல்லாம் நம்ப கோக்ஷ்டி அப்பவே தெரிஞ்சி போச்சி இது உருப்பட்டாப்பல தான்னு, ஒரு மாசம் வீட்ட நினச்சி கொஞ்சம் துக்க பட்டேன், அப்புறம் அதுவும் போச்சி.
கருத்தா ஸ்கூலுக்கு போனோமா, கிளாஸ்ல தூங்குனோமா, டீச்சர்கிட்ட திட்டு வாங்குனோமா (கிளாஸ்ல இருக்க 56, 57 பேர்ல ஹாஸ்டல் பசங்க நாங்க ஒரு 2(அ)3 பேரு தான் அதனால டைம்பாஸ் ஆகலனா எங்கள திட்றதையே பல டீச்சர்ங்க வேலையா வச்சி இருந்தாங்க ஆனாலும் நாங்க அத கண்டுகிட்டதே இல்ல). திரும்ப ஹாஸ்டலுக்கு வந்தோமா சாப்பிட்டோமானு, விளையாடுனேமானு 12வது வரைக்கும் ஓட்டிட்டேன், பரிட்சைக்கு முன்னாடி நாள் மட்டும் படிச்சி பாஸாகி, எங்க வீட்ல நான் 12வது பாஸாவேனானு நம்பிக்கையே இல்ல ஏன்னா ஸ்கூல்ல நடந்த பரிட்சைகள்ல ஒரு தடவ கூட மேத்ஸ்ல பாஸ் ஆனதே இல்ல, நமக்கு நம்ப மார்க்க பத்தியே கவல இல்ல அப்புறம் எவன் எவ்வளவு எடுத்தா என்ன, ஒரு மாதிரி படிச்சி மார்க் வாங்குனதுகு இஞ்சினியரிங் கவுன்சிலிங்ல கவர்மெண்ட் கோட்டால ஒரு காலேஜ்ல மெக்கு ஸீட் கிடச்சிச்சி.
எனக்குலா ஒரே குறிக்கோள் தான் படிச்சா மெக்கானிக்கல் இஞ்சியனியரிங் தான் படிக்கனும்னு, (அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க) இருக்கிற எல்லா டிபார்ட்மண்டைலையும் மெக்கானிக்கல் டிப்ட் தான் ஜாலியான டிப்டுனு கேள்வி அதால தான் செலக்ட் பண்ணினோம்....
காலேஜ் திருவண்ணாமலை நம்ப ஊர்ல இருந்து ஒரு 1.5 மணி நேரம் தான் அதால காலேஜ் ஃபர்ஸ்ட் டேக்கு மொத நாள் சாய்ந்திரம் தான் கிளம்புனேன், அப்படியே பராக்கு பாத்துக்கிட்டே வந்ததுல திருவண்ணாமலைக்கு வந்துட்டேன் (ஆச்சா இப்ப திருவண்ணாமலைக்கு வந்தாச்சி), அங்க இருந்து காலேஜ் ஒரு 5 கி.மீ அதுக்கு ஒரு டவுன் பஸ் புடிச்சி போனேன். அங்கிட்டு போனா எனக்கு மெர்ஸல் ஆய்டிச்சி, கொஞ்சம் பேரு பீல் பண்ணிக்கிட்டு உட்காந்துருக்கானுங்க, அடங்க இந்த எஃபெக்டலாம் நான் 6வதுலயே போட்டச்சினு மனசுகுள்ளயே நினச்சிகிட்டு லக்கேஜலாம் எனக்கு ஒதுக்கப்பட்ட ரூம்ல போய் வச்சிட்டு, கைல பாஸ்கட் பால தூக்கிக்கிட்டு கிரவுண்டுக்கு போய்ட்டேன்.
அடுத்த நாள் காலைல அதாவது ஆகஸ்டு 4, 2003 காலைல நீங்களா இப்படி தான் படிக்கணும், நடந்துகணும், அப்படி இப்படினு மீட்டிங்குங்கற பேர்ல அறிவுற சொன்னாங்க, அப்பால ஒரு 11 மணி போல எல்லாரும் கிளாஸ் ரூம் போனோம்(ஆச்சா இப்ப காலேஜும் சேந்து கிளாஸ்லயும் உட்காந்தாச்சி..தலைப்புக்கு ஒரு பதிவ போட்டாச்சா)
இப்ப உங்களுக்கு கொஞ்சம் ரோசனைகள் சொல்றேன் கேட்டுக்கோங்க,
1. எப்பவும் பஸ்ல டிக்கெட் எடுக்காம போகணுமா?
அந்த பஸ்ல டிரைவராவோ இல்ல கண்டக்கராவோ சேர்ந்துடுங்க (பிளைட்ல பல பேர் இப்படி தான் டிக்கெட் எடுக்காம போறாங்களாம்).
2. நீங்க எடுக்கற போட்டோ எப்பவும் clearஆ இருக்கணுமா?
ஒரு பேப்பர்ல clear அப்படினு எழுதி அதயே போட்டோ எடுங்க, போட்டோ எப்பவும் clearஆ இருக்கும்.
3. நீங்க வாங்குற பல்பு எப்பவும் ஃப்யூஸ் போகாம இருக்கணுமா?
பல்ப வாங்கி யூஸ் பண்ணாதீங்க, அப்ப ஃப்யூஸ் போகாம அப்படியே இருக்கும்.
4. எவ்வளவு தான் எழுதனாலும் நீங்க வாங்குற பென்சில் சார்ப்பா இருக்கணுமா?
அப்ப sharpங்கற கம்பெனி பென்சில் வாங்கி எழுதுங்க, பென்சில் எப்பவும் சார்ப்பா இருக்கணும்.
5. நீங்க வாங்குற கைகடிகாரம் எப்பவும் நிக்காம ஓடணுமா?
வெய்டீஸ் பிளீஸ்பா அதுக்கு முதல்ல கால் முளைக்கட்டும், அப்புறம் தான் ஓடும்.
6. உங்க வண்டி டயர்ல் எப்பவும் காத்து வெளில போகாம இருக்கணுமா?
சிம்பிள் பாஸு, காத்தே அடிக்காதீங்க அப்புறம் எப்படி காத்து போகும்.
போதும் இப்ப கொஸ்டீன் கோய்ந்தனோட கேள்வி கம் பதில்,
1. ஏன் தமிழ் நாட்டு மாடும் சரி, இங்கிலாந்து மாடும் இல்ல எந்த நாட்டு மாடா இருந்தாலும் சரி “ம்மா, ம்மா”னு மட்டும் கத்துது? (ஏன் ஏன் யோசிங்க மக்களே, யோசிங்க)
ஏன்னா எல்லா ஊர் மாடும் நிறைய இலை, தழைய தான் சாப்பிடுது, அம்மா கட்சி சின்னம் என்ன இரட்டை இலை, அதுனால தான் விசுவாசமா “ம்மா, ம்மா”னு கத்துது, got it - wat a loyal animal....
கடசியா ஒரு உருப்பிடியான தகவல்
1. ஏன் எல்லா வாகன டயரும் கருப்பு நிறத்துல இருக்கு?
பொதுவா டயர்கள் ரப்பரால உருவாக்கப்படுது. சாலைல ஓடும் போது அதிக படியான உராய்வு ஏற்படும், அப்படி உராய்வு ஏற்பட்டுச்சினா ஒண்ணு சாஃப்டா இருக்க ரப்பர் சீக்கரம் தேய்மானம் அடையும், ரெண்டாவுது உராய்வுனால அதிக படியான வெப்பம் உருவாகும் அது வெளியேரலனா டயர் வெடிக்கற அபாயம் இருக்கு. இத தடுக்க டயர் உருவாக்கறப்ப ரப்பர்ல கார்பன் துகள்கல கலப்பாங்க (கார்பன் துகல்கள் ரப்பரோடு சேர்ந்து அதுக்கு நல்ல வலிமைய கொடுக்கும், அப்புறம் வெப்பத்த பெரும் அளவு வெளியேத்துற தன்மையும் இருக்கு), கார்பன் துகள்கலோட நிறம் கருப்பா இருக்குறதால டயரும் கருப்பா இருக்கு, அதுவும் இல்லாம இதோட உற்பத்தி செலவும் மட்டுபடுது......
வெய்ட்டீஸ் மீ லீவிங்.......நெக்ஸ்டு மீட் பண்றேன்........உங்க பின்னூடங்கள எதிர்பாக்குறேன் பாஸு......ஜருகண்டி ஜருகண்டி.....
புதன், 18 ஆகஸ்ட், 2010
அவள்
அவள பாத்த உடனே அவள என் வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுனும்னு தோணிச்சி, வாழ்க்கைல சிலர தான் பாத்த உடனே எந்த காரணமும் இல்லாம பிடிச்சி போய்டும் இவள பிடிச்சி போன மாதிரி. அவகிட்ட எத குறிப்பா பிடிச்சி போனதுனு என்னால சொல்ல முடியல, அவங்க ஏரியாவுக்கு போனப்ப அவகூட இருந்த எல்லாரும் என்ன பாத்து முறச்சப்ப அவ மட்டும் அமைதியா என்ன பார்த்த பார்வையா? தெரியல.
எங்க வீட்ல நான் அவள வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வர போறேனு சொன்ன உடனேயே, “என்ன ஜாதி என்ன கருமம்னே தெரியல, வீட்டுக்கு கூட்டிட்டு வரானாம், காலேஜ்க்கு போனோமா படிச்சோமானு இல்லாம என்னாடா இது புது பழக்கம், கொஞ்சம் கூட சரி இல்ல பாத்துக்கோனு” ஒரே எதிர்ப்பு குரலா தான் இருந்திச்சி, ஆனா என்ன பண்ண என்னால அவள மறக்க முடியல.
காலேஜ் முடிஞ்சி அவ இருக்க தெரு பக்கமா தான் நான் வந்தாக வேண்டிய கட்டாயம், அவளும் எனக்காக காத்திருக்க மாதிரி இருந்திச்சி ஆனா எனக்கு ஒரே தயக்கம், பயம், இருந்தாலும் அவ பக்கத்துல போனேன். அவள பாத்தேன், அவளும் பாத்தா, எனக்கு என்ன பேசரதுனே தெரியல. சரினு விறுவிறுனு நடக்க ஆரம்பிச்சிட்டேன். அவளும் அமைதியா என் பின்னாடியே வந்தா. கன்ஃபோர்ம் ஆய்டிச்சி அவளுக்கு என் மேல ஒரு ஈர்ப்பு இருக்கரது.
தினமும் இது வழக்கம் ஆய்டிச்சி, நான் காலேஜ் முடிச்சிட்டு வந்தா அவ எனக்காக கரக்ட்டா அந்த தெரு முனைல நிப்பா, ரெண்டு பேரும் அந்த தெரு முனைக்கு பக்கத்துல இருக்க பார்க்ல ஒரு அரை மணி நேரம் காலார நடப்போம். பீச்சிகெல்லாம் கூட்டிட்டு போற அளவுக்கு உரிமை இல்லாத அந்த காலகட்டத்தில் ஒரு நாள் நாங்க பழகறத எங்க அப்பா பாத்துட்டார். அங்க ஒண்ணும் சொல்லல, நேரா எங்க வீட்டுக்கு போய் என் அம்மாகிட்ட போய் “உன் புள்ள பண்ற வேலைய பாத்திய தொர ஏன் தினமும் அரை மணி நேரம் லேட்டா வரார் தெரியுமா? நாம வீட்டுக்கு கூட்டிட்டு வர கூடாதுனு சொன்னோம்ல, அது கூட சாரு பார்க்ல சுத்திகிட்டு இருக்கார், அவர் வீட்டுக்கு வரட்டும் ரெண்டுல ஒண்ணு பேசி தீர்த்துடுணம்”னு சத்தம் போட்டுக்கிட்டு இருந்தார்.
இத ஒரு மாதிரி நான் எதிர் பார்த்துக்கிட்டே தான் வீட்டுக்கு போனேன். எங்க அம்மா வாசல்லேயே என்ன நிக்க வச்சி “நில்டா அங்க, நாங்க சொன்னதுக்கு அப்புறமும் இப்படி பண்ணா என்ன அர்த்தம், ஒண்ணு அவ கழுத்தல ஏதாவது ஒண்ண கட்டி வீட்டுக்கு கூட்டிட்டு வா, இல்ல இதோட அத தல முழுகு, அத விட்டு பார்க் அங்க இங்கனு கூட சுத்திகிட்டு இருக்காத”னு சொன்ன உடனே, “ஏம்மா நிஜமா தான் சொல்றியா, கழுத்தல கட்டி தான் கூட்டிட்டு வரணும்மா?, அப்படியே கூட்டிட்டு வந்தா என்னமா தப்புனு” நான் கேக்க, “டே வீதல போறவன் எவனாவது வந்து நாளைக்கு எதுவும் நாக்குல பல்லு படர மாதிரி பேச கூடாதுல, டே நாங்க பெரியவங்க எல்லாம் தெரிஞ்சி தான் சொல்றோம், அவ கழுத்துல கட்டி கூட்டிட்டு வந்தா என்னைக்கு நம்ப கூட தான் இருப்பா, போடா போய் சொன்னத செய்”னு சொன்ன அடுத்த நாளே கடைக்கு போய் கழுத்துல மாட்ட வாங்கிட்டேன்.
காலேஜ் முடிஞ்சி சாய்ந்தரம் போனா, எனக்காக தெருமுனைல காத்துக்கிட்டு இருந்தா, நான் பேக்ல இருந்து அத எடுத்து அவ கழுத்துல கட்டும் போது அவ என்ன எவ்வளவு பாசமா பார்த்தா தெரியுமா, என்ன யாருமே அவ்வளவு பாசமா பாத்ததுல்ல, நேரே வீட்டுக்கே கூட்டிட்டு போய்ட்டேன். அவ வந்ததுல இருந்தே வீட்ல எல்லாரும் சந்தோசம் ஆய்ட்டாங்க, எல்லார் மேலயும் ரொம்ப பாசமா இருக்கா, இப்ப எங்க அப்பா, அம்மாவுக்கு என்ன விட அவள ரொம்ப பிடிச்சி போச்சி.
அவளுக்கு பேர் கூட வச்சிட்டோம் “ரோஸி”, பேர் நல்லா இருக்குல, பொம்ள நாய்க்கு இத விட நல்ல பேர் இருந்தா நீங்களே சொல்லுங்களேன்.........
வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010
தேரையும் நானும்
விடுதியில் தங்கி படிப்பதில் பல செளகரியங்கள் உண்டு நினைத்த நேரத்திற்கு எழலாம், சாப்பிடலாம், சட்டை அழுக்கென்றால் நண்பன் சட்டையை அணிந்து கொள்ளலாம், யார் கட்டுபாட்டிலும் இல்லாமல் இருக்கலாம் இப்படியாக பல உள்ளது. ஆனாலும் சில அசெளகரியங்களும் இருக்க தான் செய்கிறது. அதிலும் குளிப்பதற்காக காத்திருக்க வேண்டியது மிக பெரிய கொடுமை. இருக்கும் 45 பேருக்கு 5 குளியல் அறை தான் இருக்கும், அதிலும் உள்ளே ஒருவன் குளித்து கொண்டிருப்பான். அவனுக்கு அடுத்ததாக குளிக்க இருவர் காத்திருப்பார்கள்.
அன்று தேர்வு நாள் தாமதாக குளிக்க சென்றது என் என்னுடைய தவறு தான். தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக குளிக்க சென்றேன். நான்கு பாத்ரூம் பூட்டியிருந்தது. ஒன்று மட்டும் எனக்காக காத்திருப்பது போன்று திறந்திருந்தது. என் அதிர்ஸ்டத்தை மெச்சி கொண்டே உள்ளே சென்றேன். எங்கள் விடுதி பாத்ரூமில் குழாய் சுவரிலிருந்து இரண்டடி வெளியே நீட்டி கொண்டிருக்கும். அதற்கு நேர் கீழே தண்ணீர் செல்வதர்கு சிறிய வழி (பள்ளம்) இருக்கும். அது எல்லா பாத்ரூமையும் கடந்து கடைசியாக பெரிய குழாய் வழியாக வெளியே செல்லும்.
அன்று என் போதாத காலம் போல என் நண்ப சிகாமணி ஒருவன் கதவை தட்டி என்னை சீக்கரம் வருமாறு அழைக்க, நான் கொஞ்சம் அதிகமாக சவுண்டு கொடுத்ததின் விளைவாக அந்த மகராசன் சத்திமில்லாமல் நான் இருந்த அறையின் கதவை பூட்டி விட்டு சென்று விட்டான். அது தெரியாமல் முதலில் நான் உடம்பில் தண்ணீர் ஊற்றி கொள்ளும் பொழுது என் பின்னால் ஏதோ அசைவு தெரிந்து பின்னால் திரும்ப “ ஆகா! என் பரம வைரியான தேரையார் சுவற்றில் ஒட்டி கொண்டிருந்தார்” எனக்கு எப்போதுமே தேரையின் மேல் அருவருப்பு கலந்த பயம் உண்டு. இவர் வெளிர் மஞ்சள் நிறத்துடன் என்னையே பார்த்து சிரிப்பது போன்று தோன்றியது.
மெதுவாக தாழ்ப்பாளை நீக்கி வெளியே போகலாம் என்றால் வெளியே இருக்கும் கிராதகன் கதவை பூட்டி இருந்தது தெரிந்தது. கெஞ்சலாக “மச்சான்! கதவ திறடா உள்ளே தேரை இருக்குதுடா” என்று சொல்ல அவன் குக்ஷியாகி இருக்க வேண்டும் பலத்த சிரிப்புடன் “ நல்லா விளையாடுடா மாப்ளே” என்று கொக்கரித்தான், வேறு வழி இல்லை இங்கேயே தான் குளித்தாக வேண்டும் இல்லையேல் தேர்வுக்கு தாமதமாக தான் சொல்ல நேரிடும் என்று உணர்ந்தவனாய் மெல்ல தண்ணீரை ஊற்ற ஆரம்பித்தேன். அது வரை அமைதியாக இருந்த தேரையார் மெல்ல அங்குமிங்கும் தாவ ஆரம்பித்தார். நான் அமைதியாக இருந்தால் அவரும் அமைதியாக இருப்பார், நான் அசைவு காட்டினால் அவரும் காண்பிப்பார்.
இவரை வெளியே அனுப்பினால் தான் நான் நிம்மதியாக குளிக்க முடியும். ஆனால் கதவும் பூட்டியிருக்கிறது, வெளியா இவரை தள்ள ஒரே வழி தண்ணீர் செல்லும் வழி தான். அவர் மேல் மக்கில் இருந்த தண்ணீரை ஊற்ற அவர் மிக வேகமாக அங்குமிங்கும் தாவ ஆரம்பித்தார். நான் பந்தடி விளையாட்டில் பந்தில் அடிபடுவதில் இருந்து லாவகமாக விலகும் திறமசாலியாக இருப்பதால் அவரிடம் இருந்து மூன்று முறை தப்பி விட்டேன். அதற்குள் அவரும் அமைதியாகி விட்டார். எனக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது. ஒரு முடிவுக்கு வந்தவனாய் மெல்ல குழாயை திறந்து விட்டேன். வாளி நிரம்ப ஆரம்பித்தது. இவ்வளவு நேரம் விடாப்பிடியாக சுவற்றில் ஒட்டி இருந்தவர் இப்போது கொஞ்சம் மனமிறங்கி தரையில் உட்காந்து இருந்தார். அதுவும் கடவுள் புண்ணியத்தில் தண்ணீர் ஊற்ற அவரும் மெல்ல மெல்ல தண்ணீர் போகும் வழியை நோக்கி சென்றார்.
கொஞ்சம் தண்ணீரை வைத்து எல்லாம் அவரை வெளியே தள்ள முடியாது என்று அறிந்திருந்த நான் மெதுவாக நிரம்பியிருந்த வாளியை எடுத்து தண்ணீரை அவர் மேலே வேகமாக ஊற்ற வேலை செவ்வென முடிந்தது. எனக்கு இது முடியும்வரை எவ்வாறு தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஓட்டு எண்ணிகையின் போது கவலையுடன் காத்திருப்பாரோ அதே நிலையிலர்ந்து மீண்டேன். போரில் வென்ற வீரனாய் “வென்றுட்டேன், வென்றுட்டேன்” என மனதுக்குள் குதுகாலத்தபடியே குளித்து முடித்து கதவை இழுக்க அது திறந்து கொண்டது. எவனோ புண்ணியவான் திறந்து கொண்டது. எவனோ புண்ணியவான் திறந்து விட்டிருந்தான். அதற்குள் தேரையார் தனது லீலையை ஆரம்பித்து இருக்க வேண்டும் ஏனென்ரால் பக்கத்து அறையில் ஆரவாரம் அப்படி.
இதே வெற்றி பெற்ற உற்சாகத்துடன் அன்றைய “தெர்மல் இஞ்சினீயரிங்” பேப்பர் எழுத அதிலும் வெற்றி தான். இந்த சம்பவம் ஐந்து நிமிடம் தான் நடந்திருக்கும் ஆனால் எனக்கு ஐந்து யுகமாய் தோன்றியது (ஐன்ஸ்டீனின் relativity விதிப்படி - “கரக்டாதேனே சொல்ரேன்”). உங்கள் குளியலரையில் தேரை இருந்தால் என் வழியை பின்பற்றுங்கள் ஆனால் கொஞ்சம் அதிர்க்ஷ்டம் வேண்டும்.
புதன், 11 ஆகஸ்ட், 2010
எனிதிங் ஃபார் விஜய்
நான் கொஞ்சம் விரும்பி பாக்குற சேனல்ல ஒண்ணு SS music ஏதோ நாலு நல்ல பாட்ட போடுவானுங்க, ஆனா எழவுஎடுத்தவனுங்களுக்கு என்ன ஆச்சினே தெரியல இப்ப ஒரு மானங்கெட்ட நிகழ்ச்சிய ஆரம்பிச்சி இருக்கானுங்க.
புரோகிராமு பேர் ANYTHING FOR VIJAYயாம். ஏனோ தெரியல எனக்கு விஜய புடிக்காது (புடிக்கும்னு சொல்ரதுக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கோ அதே அளவு எனக்கு புடிக்காதுனு சொல்ரதுக்கும் உரிமை இருக்கு பாஸ்), ஏன் புடிக்காதுங்கனு கேட்டா தெலுங்கு படங்கள ரீமேக் படங்கள நடிக்கிற அளவுக்கு தான் தன் மேலயே நம்பிக்கை வச்சி இருக்கார், இல்லனு சொல்ரவங்க ஏன் இல்லனு தயவு செய்து சொல்லவும். அப்படிப்பட்டவர தமிழ் சினிமாவோட அடையாளமா சொல்லரத எப்படி ஏத்துக்க முடியும், அதையும் தாண்டி இப்பவே தன் இப்படி நம்பிக்கை இல்லாதவர பிராதன படுத்தி அரசியல் நிகழ்வுகள் நடக்குது, அதுக்கு எண்ணை ஊத்தற மாதிரி இந்த வீணா போன SS music காரன்ங்க இந்த புரோக்கிராம ஆரம்பிச்சி இருக்கானுங்க....
எனிதிங் ஃபார் விஜய்னு என்கிட்ட கேட்டீங்கனா நிச்சயமா ஒண்ணு இருக்கு - “கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ”
புரோகிராமு பேர் ANYTHING FOR VIJAYயாம். ஏனோ தெரியல எனக்கு விஜய புடிக்காது (புடிக்கும்னு சொல்ரதுக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கோ அதே அளவு எனக்கு புடிக்காதுனு சொல்ரதுக்கும் உரிமை இருக்கு பாஸ்), ஏன் புடிக்காதுங்கனு கேட்டா தெலுங்கு படங்கள ரீமேக் படங்கள நடிக்கிற அளவுக்கு தான் தன் மேலயே நம்பிக்கை வச்சி இருக்கார், இல்லனு சொல்ரவங்க ஏன் இல்லனு தயவு செய்து சொல்லவும். அப்படிப்பட்டவர தமிழ் சினிமாவோட அடையாளமா சொல்லரத எப்படி ஏத்துக்க முடியும், அதையும் தாண்டி இப்பவே தன் இப்படி நம்பிக்கை இல்லாதவர பிராதன படுத்தி அரசியல் நிகழ்வுகள் நடக்குது, அதுக்கு எண்ணை ஊத்தற மாதிரி இந்த வீணா போன SS music காரன்ங்க இந்த புரோக்கிராம ஆரம்பிச்சி இருக்கானுங்க....
எனிதிங் ஃபார் விஜய்னு என்கிட்ட கேட்டீங்கனா நிச்சயமா ஒண்ணு இருக்கு - “கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ”
சனி, 7 ஆகஸ்ட், 2010
கவித கவித....
எதிர்மறை
அவளை கவர பல முறை
நல்லவனாக நடித்திருக்கிறேன்,
என் தந்தையின் ஆசைகளை ஒரு
போதும் மதித்ததில்லை,
அவளின் வருகைக்காக பல மணி நேரம்
கணக்கிழந்து போய் இருந்தது,
என் தாயின் தேவைக்கு என்னால்
சில நிமிடங்கள் தர இயலவில்லை,
நான் அவளை கவர்ந்ததாக பிதற்றினேன்
என் பெற்றோர் என்னை தேற்றினர்.
இயலாமை
இயலாதவர்கள் என்னிடம் யாசகம்
கேட்ட போது அருவருத்து திரும்பிய என் முகம்
அந்த ஆபாச சுவரொட்டியை
இமைக்காமல் நோக்கிற்று,
பசியை போக்க சில்லரையை யாசித்த அவர்கள்
முகம் என் விலையுயர்ந்த
பதார்த்தங்கள் முன்னே நிழலாடியது,
வியர்வை இல்லாத என் உழைப்பு
கூலியும் வியர்வை வழியும் அந்த வாயோதிகரின்
கூலியும் ஏனோ என்னுள் குருகுருத்தது,
இத்தணை அவலங்களையும் கண்டும்
செயலாற்றாத என் இயலாமையை
என் மனம் வெறுத்தது.
விடலை
அவள் வருகை
பாதையை ரசிக்க வைத்தது,
ஒரு கண பார்வை
என்னை நிலை குலைய வைத்தது,
பேசிய எண்ணிய போதெல்லாம்
மெளனமே பாக்ஷையாக அமைந்தது,
வாய் பேசாத கதைகள்
உன் கண்கள் பேசுதடி என்னவளே,
புரியாத சொல் புரியுதே உன் கண்ணிமைக்குள்,
செயலிழந்து போனேனே
உன் ஓர பார்வையால்,
புன்னகை புரியாதே மரமாவேன்,
ஆனால் என்னை பாராமல் போகாதே
என்னை இழப்பேன்.
அவளை கவர பல முறை
நல்லவனாக நடித்திருக்கிறேன்,
என் தந்தையின் ஆசைகளை ஒரு
போதும் மதித்ததில்லை,
அவளின் வருகைக்காக பல மணி நேரம்
கணக்கிழந்து போய் இருந்தது,
என் தாயின் தேவைக்கு என்னால்
சில நிமிடங்கள் தர இயலவில்லை,
நான் அவளை கவர்ந்ததாக பிதற்றினேன்
என் பெற்றோர் என்னை தேற்றினர்.
இயலாமை
இயலாதவர்கள் என்னிடம் யாசகம்
கேட்ட போது அருவருத்து திரும்பிய என் முகம்
அந்த ஆபாச சுவரொட்டியை
இமைக்காமல் நோக்கிற்று,
பசியை போக்க சில்லரையை யாசித்த அவர்கள்
முகம் என் விலையுயர்ந்த
பதார்த்தங்கள் முன்னே நிழலாடியது,
வியர்வை இல்லாத என் உழைப்பு
கூலியும் வியர்வை வழியும் அந்த வாயோதிகரின்
கூலியும் ஏனோ என்னுள் குருகுருத்தது,
இத்தணை அவலங்களையும் கண்டும்
செயலாற்றாத என் இயலாமையை
என் மனம் வெறுத்தது.
விடலை
அவள் வருகை
பாதையை ரசிக்க வைத்தது,
ஒரு கண பார்வை
என்னை நிலை குலைய வைத்தது,
பேசிய எண்ணிய போதெல்லாம்
மெளனமே பாக்ஷையாக அமைந்தது,
வாய் பேசாத கதைகள்
உன் கண்கள் பேசுதடி என்னவளே,
புரியாத சொல் புரியுதே உன் கண்ணிமைக்குள்,
செயலிழந்து போனேனே
உன் ஓர பார்வையால்,
புன்னகை புரியாதே மரமாவேன்,
ஆனால் என்னை பாராமல் போகாதே
என்னை இழப்பேன்.
வியாழன், 5 ஆகஸ்ட், 2010
எனதுருமை நண்பர்களுக்கு சமர்ப்பணம்
நண்பர்கள் தினத்தனிக்கி மச்சான்ளுக்கு என்னால முடிஞ்ச ஒரு சமர்ப்பணம் (சும்மா பிட்டு தான், பிட்டுக்கு பொய்னு ஒரு அர்த்தம் இருக்கு எல்லாரும் தயவு செய்து அத அர்த்தபடுத்திக்கோங்க நான் பிட்டுனு வேற எதையும் சொல்லனு பதிவுலகம் மேல சத்தியம் பண்ணிகிறேன்).
பெயர் குறிப்பிட்டு நான் எழுதி, எழுதனதுல நாங்க பண்ணின நல்லத படிச்சிட்டு பெயர் குறிப்பிட்டு திட்டி, எல்லாரும் டே நீங்க இவ்வளவு கேவலமானவன்களானு நினைக்கிற அபாயம் இருக்கரதால பெயருக்கு பதிலா ஒரு புதிர்(சும்மா டூமாங்கோலி தான்) மாதிரி அதன் மூலமா நீங்களே பெயர கண்டுபிடிச்சிகலாம்.... (பெயர கண்டுபிடிச்சா பின்னூட்டதல லிஸ்ட் போடுங்கோ)
வாழ்க்கைல என் கூட நண்பரகளா பயணம் செஞ்ச நல்லவங்களோட(எனக்கு நண்பர்களா இருந்தா நல்லவங்களா தானே இருப்பாங்க ஹி ஹி) நினைவுகளை இங்கே செதுக்குகிறேன்.
எனக்கு நினைவு தெரிஞ்சி எனக்கு முதல் நண்பனா இருந்தது
1)......... (இவன் பேருல முதல் பாதி கோவிலயும், தேவாலயத்திலயும் இருக்கும் மிச்ச பாதி முருகனோட கைல இருக்கும்) ரெண்டு பேரும் எங்க ஊர நான் 2வது படிக்கிர வரைக்கும் சுத்தி வந்தோம் (பொறந்ததுல இருந்து 2வது படிக்கிற வரைக்கும் சுத்திக்கிட்டேவா இருந்தியான்லா டெரர்ரா கேள்வி கேக்க கூடாது ஏன்னா பல பயப்புள்ளைவ இருக்கு இப்படிலாம் கிராஸ் கொஸ்டீன் கேக்கறதுக்கு அதான் நான் முந்திக்கிட்டேன்) எங்க அம்மாக்கிட்ட அடில இருந்து தப்பிக்க இவங்க வீட்டு போய் தான் உட்காந்துக்குவேன். ஏன் அம்மா அடிப்பாங்கனு கேட்டா தினமும் பள்ளிகூடத்துல ஏதாவது ஒண்ண தொலச்சிட்டு வருவேன் (மூடி இல்லாத பல டிபன்கேரியர் இன்னுமும் எங்க வீட்ல தூங்குது..), இதுக்கு போயா அடிப்பாங்கனு கேக்குறீங்க புரியுது அதுக்கெல்லாம் அடிக்கில ஒரு நாள் மறந்தாப்புல என் தம்பியையும் ஸ்கூல்லையே விட்டுட்டு வந்தேன் அதான் அடி கொஞ்சம் பலம். அப்பலாம் எஸ் ஆகி இவன் கூட ஊருக்குள்ள ரவுண்ட்ஸ ஆரம்பிச்சிடுவோம். இப்ப பய சொந்தமா 2 ஆட்டோ வச்சி இருக்கான், லவ் பண்ணி கல்யாணதுக்கும் ரெடி ஆய்ட்டான், நடத்து மாப்பிள.
2)..............(வினோதத்துல இவன் பேரு ஒளிஞ்சி இருக்கு) இப்ப ஆளூ கடல் கடலா போறான் மச்சான் மெரைன் இஞ்சினீயரா இருக்கான் கிட்டத்தட்ட 14 வருசம் கழிச்சி பாத்தேன் போன மாசம். ஆனா அன்னைக்கு எப்படி பேசினேமோ அப்படி தான் இப்பவும் பேசினான், சீக்கரம் கல்யாணம் பண்ணிக்க மச்சி
3)...........(இருக்க நாலு காலத்துல இவன் பேருல இருக்க காலம் தான் சொகமா இருக்கும்) இவன் 2ஓட தம்பி பயபுள்ள பாசக்காரன் 14 வருசம் கழிச்சி பாத்த சந்தோசத்த மலையடிவாரத்துல புல்லட்டோட(புல்லட்னா என்னனு கேக்கறவங்க நம்ப ஊரு டாஸ்மாக்ல போய் விசாரிச்சிக்கோங்க) கொண்டாட வச்ச நல்லவன், இப்ப ஊர்ல பேமலி பிஸிணஸ பாத்துக்கிட்டு இருக்க கொடுத்து வச்சவன்
4)............. (ஒளிமயமானங்கர வார்த்தைக்கு இவன் பெயர் ஒரு மாற்றம் இவன் பெயர் ஆரம்பிக்கிர எழுத்து ‘பி’) இவன் அஞ்ஞாப்பு வரைக்கும் நல்ல குளோஸா இருந்தான் ஆனா இப்ப வரைக்கும் பேச வாய்ப்பு கிடைக்கல, மச்சான் ஹீரோ ஹோண்டா சோ ரூம் வச்சிட்டான், கல்யாணம் முடிஞ்சிடுச்சி லைஃப் செட்டில் ஆய்ட்டான், இப்ப போய் பேசினா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியல..
5)..............(கிருஸ்ணன கொஞ்சனவங்களோட பாதி பெயர கொண்டவன்) எல்லா கூட்டதலயும் எப்பவும் ஒரு கலகலப்பான எத பத்தியும் கவலப்படாத ஆள் இருப்பான்ல இந்த பயப்புள்ள தான் அது, பேசி 4 வருசம் ஆச்சி மச்சான் MBA முடிச்சிட்டு வேல தேடுறதா கேள்வி...... மச்சான சீக்கரம் பாக்கணும்
6)...................... (இவன் பேரோட முதல் பாதி ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தோட இசையமைப்பாளர் பெயரயும், இரண்டாம் பாதி முருகனோட கைலயும் இருக்கும்) இந்த நல்லவனும் நானும் கள்ளகுறிச்சிய சைக்கிள்ள நிறைய சுத்தி இருக்கோம், பய இப்ப ரேடியோஜிலாஜிஸ்ட்டா இருக்கான்.
இந்த 2, 3, 4, 5, 6 இன்னும் சில நண்பர்களும் பெயர் குறிப்பிடாம போனா மன்னிக்கணும் 5வது வரைக்கும் ஒண்ணா படிச்சோம், எங்க படிச்சோம் ஒரு வாட்டி பீடி புடிக்க ட்ரை பண்ணினோம், எல்லார் மேலயும் இங்க் அடிச்சாம், நல்லா அடிச்சிக்கிட்டோம் இருந்தாலும் ஆச்சி 14 வருசம் பாத்து பேசி ஆனா பாத்தப்ப எந்த சங்கோஜமும் இல்லாம சரக்கடிக்க போனப்பவே தெரியணும் இன்னமும் நாங்களா எவ்வளவு குளோஸுனு ஹி ஹி..
3 பால்ய கால சிநேகதிகளும் உண்டு
7)............... (இவ பேரு செல்வத்த கொடுக்குற பெண் தெய்வத்தோட பேரு) எங்க குடும்பமும் இவங்க குடும்பமும் நல்ல பழக்கம்கறதால நல்ல நண்பர்களா இருந்தோம் ஆனா இப்ப டச்சில இல்ல இப்ப சிடிஎஸ்ல வேல பாக்குறா
8)................(give me honey அப்படிங்கர தமிழ்ல மொழிபெயர்த்தா என்னா வருமோ அதான் பேரு honeyய தேன்னு மாத்த வேண்டாம்) எனக்கு ஒரு வகைல அக்கா முறை கொஞ்ச நாள் தான் பேசினோம், பழகினோம் ஆனா இன்னை வரைக்கும் தொடர்புல இருக்கா, கல்யாணம் முடிஞ்சி குழந்தையோட சந்தோசமா இருக்கா
9)..............(மன்னிச்சிக்கோங்க இவ பேரு எனக்கே மறந்து போச்சி அதால நோ புதிர்) இவள பத்தி கொஞ்சமா தான் நினைவுல இருக்கு. நாங்க ஒரு வாடகை வீட்ல குடி இருந்தப்ப பக்கத்து வீட்ல இருந்தா நான் இவ கூட நிறைய சண்ட போட்டும் என்கிட்ட எப்பவும் கோவபடாம இருந்த முஸ்லீம் தோழி.
5வது வரைக்கும் கள்ளகுறிச்சியில படிச்சிட்டு 6வது மெட்ராஸ்ல ஹாஸ்ட்டல தங்கி படிக்க ஆரம்பிச்சேன். அங்க உருவான நட்பு வட்டம் இன்னுமும் கூட கொஞ்சம் நெருக்கமானது, ஏன்னா எந்நேரமும் கூட இருந்ததால பிணைப்பு அதிகமாய்டிச்சினு நினைக்கிறேன்.
10)............. (நெத்தில இடுற குங்கமத்தோட வட இந்திய வார்த்தை இவன் பேரு) 7வது இருந்து 12 வரைக்கும் அப்புறம் இப்ப கூட மிலிட்ரி சரக்கு ஸ்பாண்சர் பண்ற நல்லவன், ரொம்ப நல்ல பிரண்ட், வார்டண்ட அடி வாங்கறதுல இருந்து பல விசயங்கள ஒண்ணா சேர் பண்ணி இருக்கோம், ஆனா இது வரைக்கும் ஒரு முறை கூட சண்ட போட்டது இல்ல, நேவல் இஞ்சினீயரா இந்திய கப்பற்ப்படைல சேவை செய்ற மச்சான்........
11)................. (இவனோட பெயர்ல முதல் பாதி அமைதிங்கற வார்த்தைக்கு மாற்று வார்த்தையும் இரண்டாம் பாதி குமார்) பயபுள்ள 7 வருசம் என் கூட படிச்சிது, 7 வருசத்தல எத்தண சண்ட, ஆனா என்ன தான் சண்ட போட்டாலும் நமக்கு கொடுக்காம எதுவும் செய்ய மாட்டான்ங்க, ஒரு வாட்டி ஸ்கூல்ல ஒரு கண்காட்சி நடந்துச்சி எனக்கு உடம்பு சரில்லனு நான் போகல, போன பயலுவ சும்மா இருந்தானுங்களா அங்க இருந்த கார் பொம்ப, அந்த பொம்ப, இந்த பொம்பனு இருந்ததெல்லாம் சுட்டுக்கிட்டு வந்துடானுங்க, டே இந்தாடா உனக்கு ஒரு கார்னு பாசமா பங்கு வேற தந்தானுங்க (என்ன ஒரு பாசம்), ஏமாந்து போன கண்காட்சி நடத்துற மிஸ் எங்க வார்டன் கிட்ட வந்து உங்க ஹாஸ்டல் பசங்க வந்துட்டு போனதுல இருந்து தான் எல்லாம் காணாம போய்டிச்சினு போட்டு கொடுத்துச்சி, எவன் கிட்டல பொம்ம இருந்துதோ அவனுங்களுக்குளாம் நடந்துது பாருங்க ஒரு ரெய்டு..... பய இப்ப TCS மும்பைல இருக்கான்.
12)........................(ராஜாவுக்கு அடுத்த வாரிசு என்னவோ அந்த பேரு தான் இவனுக்கு) முதல்ல ஹாஸ்டல்ல சேந்தப்ப பய கொஞ்சம் ஹாஸ்டல் பழக்க வழக்கம் தெரியாம சுயநலமா இருந்துட்டான், அப்புறம் நம் வழிக்கு வரவச்சாச்சு, ஒரு காலத்தல கொஞ்சம் கஞ்சூஸா இருந்தவன் இப்ப தாராள புரபு ஆய்ட்டான்..........புரடக்சன் முடிச்சிட்டு மொபைலுக்கு சாஃப்ட்வேர் பண்ணிகிட்டு இருக்கான்.
13)...................(இறப்பே இல்லாதவங்கவள இவனோட பெயர் சொல்லி தான் அழைப்பாங்க) 7வது இருந்து 12 வரைக்கும் என் கூட படிச்சவன், ஹாஸ்டல்ல சேர்ந்த ஆரம்பத்துல அவன் பெட்ல உட்காந்து அவனுக்கு படுக்க இடம் கொடுக்காம் நாங்க ரம்மி விளையாடுனத வார்டன்கிட்ட போட்டு கொடுத்ததால அடிப்பட்ட 16 பேரும் இவன ஒரு 2 மாசம் ஒதுக்கி வச்சிட்டோம், அப்புறம் இவனுக்கும் சீட்டு விளையாட சொல்லி கொடுத்து செட்ல சேத்துகிட்டோம் அது வேற கத, ரொம்ப பொறுமையானவன், பாசமானவன், எப்ப பாக்க கூப்பிட்டாலும் பிகு பண்ணாம நண்பர்களுக்கா வந்து நிப்பான், இப்ப பெங்களூர்ல வேல பாக்குறான்....
14).............. (சரண்டைந்தேன்ங்கற வார்த்தைல இவன் பேரு ஒளிஞ்சி இருக்கு) 9வதுல தான் பழக்கம் ஆனான் முதல்ல ஒட்டல, மச்சானுக்கு தலைல நிறைய வெள்ள முடி ஒரு முறை முடிய கருப்பாக்க ட்ரை பண்ணப்ப நாம உதவி செய்ய போயி, அப்புறம் கூட இருந்த அடுத்த நாளு வருசத்துக்கும் என்னையே கலர் அடிக்க வுட்டான் பாவி பைய, என்னா தான் ஓட்டுனாலும் சீரியசாவே ஆக மாட்டான், எப்ப மெட்ராஸ் போனாலும் கண்டிப்பா ஒரு மீட்டிங் இருக்கும், இப்ப புரடக்ஸ்ன் லைன்ல வேல பாக்குறான்..........
இன்னும் ஒரு பெரிய க்யு நிறைய பெயர்களும், பள்ளி காலத்து நினைவுகளும் என் மனசுல பசுமையா இருக்கு அத எழுதனா இன்னும் எழுதிகிட்டே இருக்கலாம் அதனால என் கல்லூரி (SKP) நண்பர்கள பத்தி எழுதுறேன், மச்சிகளா உங்க பெயர் இல்லனு என்ன பத்தி எழுதலனு தப்பா நினைக்க வேணாம்....
15)..................(அய்யப்பனோட இன்னொரு பேரு தான் இவனோடது) சிலர் வாழ்க்கைல வருவாங்க உங்க விருப்பங்கள் வேற வேறயா அப்படி இப்படினு ஆனா என்னைக்கும் ஒண்ணா இருக்க விரும்புவிங்க அப்படி எனக்கு ஒரு நண்பன் இவன், மச்சான ஒருத்தன் போட்டு கொடுத்தான்னு, போட்டு கொடுத்தவனுக்கு டார்க் ரூம் ட்ரீட்மண்ட் உடனே ஏற்பாடு செஞ்சோம், நானும் இவனும் கிட்டத்தட்ட ஒரு பெரிய சாதனையே செஞ்சோம், ஸ்டடி ஹாலிடேஸ்ல சுறுசுறுப்பா வீட்ல இருந்து கிளம்பி வந்து சும்மா ஒரு15 20 நாளைக்கு சாப்பாடு தூக்கம், சாப்பாடு தாக்கம்னே பொழுத ஓட்டுனோம்.... மச்சான் குவைத்ல வேல பாத்துட்டு வந்து இப்ப அடுத்த வேலைக்கு ரெடி ஆகுறான்....
16)...........................(சூரியனோட இன்னொரு பேரு மச்சானுக்கு ‘க’ ஆரம்பிச்சு ‘ன்’ல முடியும்) மச்சான் ஹாஸ்டன் வந்த புதுசுல ரொம்ப ரொம்ப அமைதியா இருந்தான், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பழக ஆரம்பிச்சோம், வாழ்க்கைல சிலரால தான் நண்பர்களுக்கு மனசு நிறைய இடம் கொடுக்க முடியும், ஆனா நண்பன் இருக்கிற அந்தஸ்துக்கு என்னைக்கும் அத பத்தி நினைக்காம எல்லாரும் வேணும்னு பாசத்தோட இருக்கிறவன் (இது ஒரு புகழ்ச்சியா இல்ல உண்மனு தான் நம்புறேன்), ஒரு வாட்டி யாருக்கும் தெரியாம 2 3 மூணு பேரு மட்டும் ஸ்நாக்ஸ் சாப்பிடறதுக்கு கவர பிரிச்சப்ப கவர் சவுண்ட கேட்டே அங்க போய் நின்ன என்னய நல்லா குளு குளுனு திட்டின நல்லவன், இப்ப மச்சான் என்ன பண்றானு சொல்ல முடியாது சீக்ரேட்.......
17)..............(காசில இருக்க சிவனோட பேரு இவனுக்கு) காலேஜ்ல சேர்ந்த முதல் நாளே ஆர்வகோளாறுல கைல பேஸ்கட் பாலோட கோர்டல போய் நின்னப்ப ஏதோ பெரிய பிளேயர் விளையாடுறார்னு நினச்சி நம்பளையும் வேடிக்க பாத்த நல்லவன், எவ்வளவு பாசம்னா பழகன ரெண்டாவது நாளே என்ன அவன் ரூமுக்கு, அவன் வீட்டுக்கும் கூட்டிட்டு போன நல்லவன், மச்சான் இப்ப மேனேஜர்...........
18)...............(இவனோட பேர்ல இருக்க முதல் பாதி புகழ்ங்கற வார்த்தைக்கு மாற்று வார்த்தை, மிச்ச பாதி ராஜராஜ சோழனோட இயற்பெயரின் கடைசி வார்த்தை) முதல்ல வந்தப்ப எதையோ பறிகொடுத்தவன் மாதிரி டியூப்லைட்டையே பாத்துகிட்டு கிடந்தான், கொய்யால அப்புறம் தானே சேட்ட அதிகம் ஆச்சி, ஒருத்தன நானும் இவனும் மச்சான் ஊருக்கு போக காசில்லனு சொல்லி காச ஆட்டைய போட்டு, காசு கொடுத்தவன் முன்னாடியே கேண்டீன்ல போய் தின்னுட்டு வந்து, பிரைட் ரைஸ் நல்லா இருந்ததுல்ல அப்படினு ஊருக்கு போக காசு முன்னாடியே சொன்னத வாழ்க்கைக்கும் மறக்க முடியாது, எரும இப்ப வாத்தியாரா இருக்கான்............
19)..................(உலகத்தோட மாற்று பெயரையும், சிவனோட மாற்று பெயரயும் இணச்சா இவன் பேரு வரும் ‘ஜெ’ல ஆரம்பிச்சி ‘ஸ்’ல முடியும்) வாழ்க்கைல நமக்கு சில பேரோட தான் அலைவரிசை ஒத்து போகும், எனக்கு இவனுக்கு நிறையவே ஒத்து போகும், காலேஜ்ல ஒண்ணா சேந்து பல பேர கலாய்ச்சி இருக்கோம்) எங்களையும் பல பேர் மானவாரியா ஓட்டி இருக்கானுங்க அது வேற மேட்டரு, கவுண்டர் நண்பன்கிட்ட இருந்து அவன் சாப்பிட வச்சி இருந்த இருமல் மாத்திரைய ஏமாத்தி சாப்பிட்டத இன்னும் மறக்க முடியாது, மச்சான் இப்ப hpல மென்பொருள் பொறியாளாரா இருக்கான்......
20).................(மச்சான் பேரு pearl handsomeங்கற ஆங்கில வார்த்தையோட தமிழாக்கம் தான்) அதாவது என்ன என்ன கேவலாமான போட்டிலா நடத்த முடியுமா அந்த போட்டியெல்லாம் ஹாஸ்டல் ஒண்ணா சேர்ந்து நடத்திய நல்லவங்க, எந்த ஹீரோயினுக்கு ஓட்டு அதிகம், எந்த ஸ்டாஃப் சூப்பரு அப்படி இப்படினு, ஆனா இவனுக்குக்கிட்ட இருந்து வாங்குன சட்டைக்கு காசு தரலனு இன்னும் என்ன ஓயாமா திட்டிக்கிட்டு இருக்கான்.....மச்சான் இப்ப தான் கம்பெனி மாறி இருக்கான் waiting to join....
21)................('ச’ல ஆரம்பிச்சி ‘ஸ்’ இவன் பேரு முடியும் நடுவுல ஒரே ஒரு எழுத்து தான் அது கூட நெருப்போட இன்னொரு பேரு) அதாவது சில பேர் தான் என்ன தான் நடந்தாலும் முகத்துல ரியாக்ஸன காட்டாமா காமெடி பண்ண முடியும், அதுவும் இவன் ரியாக்சனே இல்லாம் மொக்க பிராகாஸ பண்ணின விசயம் இருக்கே அத சென்ஸார் காரணாமா எழுத முடியல, ப்ராஜெக்ட டைம் ஃப்ல்லா மச்சான் வீட்ல தான் இருந்தேன்.... மச்சான் இப்ப infyல மென்பொருள் பொறியாளாரா இருக்கான்......
22)..............(உண்மையோட மாற்று வார்த்தையை பெயரோட முதல் பாதி இரண்டாவது பாதி வந்து ‘மூர்த்தி’) பேருக்கேத்த மாதிரியே ரொம்ப உண்மையா நாணயமா இருக்கவன், சிலபேரோட நம்மளால எப்பவும் சண்ட போட முடியாது அதுக்கு காரணம் கண்டுபிடிக்க முடியாது அப்படியான என்னோட ஒரு நண்பன், நான் பார்த்த மிக சில உண்மையான காதலுக்கு சொந்தகாரன். மச்சான் இப்ப வாத்தியாரா இருக்கான்....
23).................(கோபியர்களுக்கு யார ரொம்ப புடிக்குமோ அதான் இவனோட பேரு ‘கோ’ல ஆரம்பிச்சி ‘ன்’ல முடியும்) சில பேரு எவனாவது ஏமாந்தவன் கிடச்சா ஓட்டியே சாவடிச்சிடுவாங்கல அந்த லிஸ்ட சேந்தவன், முதல் வருசம் ஹாஸ்டல் இருந்தப்ப இவன் 2 பேருக்கு சண்டைய மூட்டி விடறத பாக்கருதுக்கே பல ரூம்ல இருந்து ஆடியண்ஸ் குமிவானுங்க, கேங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்லீடர், இப்ப நல்ல பொறுப்புல இருக்கான்........
24)........................(புஸ்பம் + கணவன் + மன்னன் இந்த மூணு வார்த்தையோட மாற்று வார்த்தை தான் இவன் பேரு starts from 'பூ’ ends with 'ஜா’) சில உறவுகள் மெலிதான புன்சிரிப்புல ஆரம்பிச்சி பலமா மாறிடும் அவ்வகைல ஒரு நட்பு தான் எங்களது, இப்ப தினமும் அளாவிக்கிற அளவுக்கு இருக்கோம், நான் துபாய்ல கொட்ற அதே குப்பயை அவன் சவுதில கொட்றான்......
அப்புறம் மச்சான்ங்க DTS வாயன், காங்கோ முத்து, எலும்பு ஜெயா, டிக்கி வினோத், படிப்ஸ் கோகுல், பீலா அவினாஸ், பேக்கு ஆசிப், மண்ட பாலா, பிரஸ் மண்டையன், ஆடு, தேனி, மொக்கமோகன், மொக்க பிரகாஸ், ட்ரம்மு, ஓச தம்பி, கட்டையன், நாகா, கரடி, அடுப்பு வாயன், லூசு கவுண்டர், மாமி, கப்ப, ஊவான், சீன் நித்தி, சுருட்ட, பாடூஸ், 420, ஜிப்பு வாயன், ஹாப் கிரவுண்ட் மண்டையன், கள்ள மார்வாடி, குள்ளன், குதுர, சாம்பார், நெல்ஸ், குண்டன் இன்னும் நிறைய மச்சாங்ன்க இருக்காங்க அவங்கள பத்தியும் நினைவுகளையும் பதிவு செய்ணும்னா பல blu-ray டிஸ்க் தேவபடும் அதனால இதோட நிறுத்திக்கிறேன்.
அப்புறம் பொறந்ததுல இருந்தே நண்பனா இருக்க அப்பா ஜெயமாறன், நண்பியா இருக்க அம்மா உமா, எனக்காக என்னவேனா செய்ற நான் ரொம்ப மிஸ் பண்ற என் அக்கா கலா, எனக்கு இங்க சோறு போடற அருணா அக்கா, என் கூட தங்கி இருக்க நோஃப், காளி, பிரஜித்
இன்னும் yahoo msgrல கிடச்ச நண்பர், பதிவுலக கிடச்ச நண்பர்கள்னு லிஸ்ட் போய்கிட்டே இருக்கு, ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட மனிதனா உணருறேன் இத்தண நண்பர்கள் இருக்கப்ப நட்புங்கற உறவு தர உணர்வு மிக உன்னதமா உணருறேன், அவங்கள எல்லாரையும் நினைவு கூர ஒரு வாய்ப்பா எடுத்துகிட்டு இந்த பதிவ எழுதிட்டேன் கொஞ்சம் நீளமா...........
கடசியா ஒரு கவிதை
"சிகரட்டை பஞ்சு வரைக்கு இழுக்காதே என்றாய்,
ஏன் மச்சான் என் வாய் சுட்டுடும்னு பயப்பிடுறியானு கேட்டதிற்கு ‘சனியன் புடிச்சவனே இருக்கறது ஒரு சிகரட் இன்னும் ரெண்டு பேரு இழுக்கணும்டா என்றாய்’”
முக்கிய அறிவிப்பு: 24 பெயரையும் யாரு கரக்ட்டா கண்டுபிடிக்கிறாங்களோ அவங்களுக்கு சிறந்த வெகுமதி காத்திருக்கு, உடனே முந்துங்கள். : D
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)