ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

திருவண்ணாமலை வந்துட்டேன்.....காலேஜ் சேந்துட்டேன்.....

(இது நிச்சயம் யாரையும் கலாய்க்கும் பதிவு அல்ல)


(டே தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லனு கேக்கரவங்க தயவு செஞ்சி பதிவ கடசி வரைக்கும் படிங்க பிளீஸ்..)


5வது வரைக்கும் ஊர்ல ஒழுங்கா படிச்சிக்கிட்டு இருந்தவன கொண்டு போய் மெட்ராஸ்ல இருக்க பள்ளிகூடத்துல (அதுவும் மெட்ராஸ்லயே பெரிய பள்ளிகூடமாம்) தள்ளுனா என்ன ஆகும் (டெண்சன் ஆகும் கொய்யால கதைய சொல்லுனு நீங்க சொல்றது கேக்குது). போய் பாத்தா எல்லாம் நம்ப ஊரு பள்ளிகூடம் மாதிரி தான் இருந்தது ஆனா பசங்க எல்லாரும் பக்காவா இங்கிலீஸ் பேசுறான்ங்க. நேரா ஹாஸ்ட்டல பாக்காம ஸ்கூலுக்கு போய்ட்டேன் அதான் பிராப்ளம், ஹாஸ்டலுக்கு போன உடனே தான் நிம்மதி ஆச்சி, எல்லாம் நம்ப கோக்ஷ்டி அப்பவே தெரிஞ்சி போச்சி இது உருப்பட்டாப்பல தான்னு, ஒரு மாசம் வீட்ட நினச்சி கொஞ்சம் துக்க பட்டேன், அப்புறம் அதுவும் போச்சி.

கருத்தா ஸ்கூலுக்கு போனோமா, கிளாஸ்ல தூங்குனோமா, டீச்சர்கிட்ட திட்டு வாங்குனோமா (கிளாஸ்ல இருக்க 56, 57 பேர்ல ஹாஸ்டல் பசங்க நாங்க ஒரு 2(அ)3 பேரு தான் அதனால டைம்பாஸ் ஆகலனா எங்கள திட்றதையே பல டீச்சர்ங்க வேலையா வச்சி இருந்தாங்க ஆனாலும் நாங்க அத கண்டுகிட்டதே இல்ல). திரும்ப ஹாஸ்டலுக்கு வந்தோமா சாப்பிட்டோமானு, விளையாடுனேமானு 12வது வரைக்கும் ஓட்டிட்டேன், பரிட்சைக்கு முன்னாடி நாள் மட்டும் படிச்சி பாஸாகி, எங்க வீட்ல நான் 12வது பாஸாவேனானு நம்பிக்கையே இல்ல ஏன்னா ஸ்கூல்ல நடந்த பரிட்சைகள்ல ஒரு தடவ கூட மேத்ஸ்ல பாஸ் ஆனதே இல்ல, நமக்கு நம்ப மார்க்க பத்தியே கவல இல்ல அப்புறம் எவன் எவ்வளவு எடுத்தா என்ன, ஒரு மாதிரி படிச்சி மார்க் வாங்குனதுகு இஞ்சினியரிங் கவுன்சிலிங்ல கவர்மெண்ட் கோட்டால ஒரு காலேஜ்ல மெக்கு ஸீட் கிடச்சிச்சி.

எனக்குலா ஒரே குறிக்கோள் தான் படிச்சா மெக்கானிக்கல் இஞ்சியனியரிங் தான் படிக்கனும்னு, (அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க) இருக்கிற எல்லா டிபார்ட்மண்டைலையும் மெக்கானிக்கல் டிப்ட் தான் ஜாலியான டிப்டுனு கேள்வி அதால தான் செலக்ட் பண்ணினோம்....

காலேஜ் திருவண்ணாமலை நம்ப ஊர்ல இருந்து ஒரு 1.5 மணி நேரம் தான் அதால காலேஜ் ஃபர்ஸ்ட் டேக்கு மொத நாள் சாய்ந்திரம் தான் கிளம்புனேன், அப்படியே பராக்கு பாத்துக்கிட்டே வந்ததுல திருவண்ணாமலைக்கு வந்துட்டேன் (ஆச்சா இப்ப திருவண்ணாமலைக்கு வந்தாச்சி), அங்க இருந்து காலேஜ் ஒரு 5 கி.மீ அதுக்கு ஒரு டவுன் பஸ் புடிச்சி போனேன். அங்கிட்டு போனா எனக்கு மெர்ஸல் ஆய்டிச்சி, கொஞ்சம் பேரு பீல் பண்ணிக்கிட்டு உட்காந்துருக்கானுங்க, அடங்க இந்த எஃபெக்டலாம் நான் 6வதுலயே போட்டச்சினு மனசுகுள்ளயே நினச்சிகிட்டு லக்கேஜலாம் எனக்கு ஒதுக்கப்பட்ட ரூம்ல போய் வச்சிட்டு, கைல பாஸ்கட் பால தூக்கிக்கிட்டு கிரவுண்டுக்கு போய்ட்டேன்.

அடுத்த நாள் காலைல அதாவது ஆகஸ்டு 4, 2003 காலைல நீங்களா இப்படி தான் படிக்கணும், நடந்துகணும், அப்படி இப்படினு மீட்டிங்குங்கற பேர்ல அறிவுற சொன்னாங்க, அப்பால ஒரு 11 மணி போல எல்லாரும் கிளாஸ் ரூம் போனோம்(ஆச்சா இப்ப காலேஜும் சேந்து கிளாஸ்லயும் உட்காந்தாச்சி..தலைப்புக்கு ஒரு பதிவ போட்டாச்சா)

இப்ப உங்களுக்கு கொஞ்சம் ரோசனைகள்  சொல்றேன் கேட்டுக்கோங்க,

1. எப்பவும் பஸ்ல டிக்கெட் எடுக்காம போகணுமா?
 அந்த பஸ்ல டிரைவராவோ இல்ல கண்டக்கராவோ சேர்ந்துடுங்க (பிளைட்ல பல பேர் இப்படி தான் டிக்கெட் எடுக்காம போறாங்களாம்).

2. நீங்க எடுக்கற போட்டோ எப்பவும் clearஆ இருக்கணுமா?
    ஒரு பேப்பர்ல clear அப்படினு எழுதி அதயே போட்டோ எடுங்க, போட்டோ எப்பவும் clearஆ இருக்கும்.

3. நீங்க வாங்குற பல்பு எப்பவும் ஃப்யூஸ் போகாம இருக்கணுமா?
    பல்ப வாங்கி யூஸ் பண்ணாதீங்க, அப்ப ஃப்யூஸ் போகாம அப்படியே இருக்கும்.

4. எவ்வளவு தான் எழுதனாலும் நீங்க வாங்குற பென்சில் சார்ப்பா இருக்கணுமா?
அப்ப sharpங்கற கம்பெனி பென்சில் வாங்கி எழுதுங்க, பென்சில் எப்பவும் சார்ப்பா இருக்கணும்.

5. நீங்க வாங்குற கைகடிகாரம் எப்பவும் நிக்காம ஓடணுமா?
வெய்டீஸ் பிளீஸ்பா அதுக்கு முதல்ல கால் முளைக்கட்டும், அப்புறம் தான் ஓடும்.

6. உங்க வண்டி டயர்ல் எப்பவும் காத்து வெளில போகாம இருக்கணுமா?
   சிம்பிள் பாஸு, காத்தே அடிக்காதீங்க அப்புறம் எப்படி காத்து போகும்.

போதும் இப்ப கொஸ்டீன் கோய்ந்தனோட கேள்வி கம் பதில்,

1. ஏன் தமிழ் நாட்டு மாடும் சரி, இங்கிலாந்து மாடும் இல்ல எந்த நாட்டு மாடா இருந்தாலும் சரி “ம்மா, ம்மா”னு மட்டும் கத்துது? (ஏன் ஏன் யோசிங்க மக்களே, யோசிங்க)
ஏன்னா எல்லா ஊர் மாடும் நிறைய இலை, தழைய தான் சாப்பிடுது, அம்மா கட்சி சின்னம் என்ன இரட்டை இலை, அதுனால தான் விசுவாசமா “ம்மா, ம்மா”னு கத்துது, got it - wat a loyal animal....

கடசியா ஒரு உருப்பிடியான தகவல்
1. ஏன் எல்லா வாகன டயரும் கருப்பு நிறத்துல இருக்கு?
பொதுவா டயர்கள் ரப்பரால உருவாக்கப்படுது. சாலைல ஓடும் போது அதிக படியான உராய்வு ஏற்படும், அப்படி உராய்வு ஏற்பட்டுச்சினா ஒண்ணு சாஃப்டா இருக்க ரப்பர் சீக்கரம் தேய்மானம் அடையும், ரெண்டாவுது உராய்வுனால அதிக படியான வெப்பம் உருவாகும் அது வெளியேரலனா டயர் வெடிக்கற அபாயம் இருக்கு. இத தடுக்க டயர் உருவாக்கறப்ப ரப்பர்ல கார்பன் துகள்கல கலப்பாங்க (கார்பன் துகல்கள் ரப்பரோடு சேர்ந்து அதுக்கு நல்ல வலிமைய கொடுக்கும், அப்புறம் வெப்பத்த பெரும் அளவு வெளியேத்துற தன்மையும் இருக்கு), கார்பன் துகள்கலோட நிறம் கருப்பா இருக்குறதால டயரும் கருப்பா இருக்கு, அதுவும் இல்லாம இதோட உற்பத்தி செலவும் மட்டுபடுது......

வெய்ட்டீஸ் மீ லீவிங்.......நெக்ஸ்டு மீட் பண்றேன்........உங்க பின்னூடங்கள எதிர்பாக்குறேன் பாஸு......ஜருகண்டி ஜருகண்டி.....

13 கருத்துகள்:

Mohamed Faaique சொன்னது…

முதல் வெட்டு.. ( யோவ் 10 நாள் கழிச்சு வந்தாலும் முதல் வெட்டு உன்னோடதுதான்யா..)

மரா சொன்னது…

ஏன் பாஸ்...நல்லாதான போயிக்கினு இருந்துச்சி....சுய சரிதை எழுதுற அளவுக்கு அப்பிடி இன்னா பெரிய பிரச்சினை... நாளைக்கு கலபகாஸ் தீவுக்கு வாங்க.பேசுவோம் :)

மதன் சொன்னது…

//
Mohamed Faaique கூறியது...
முதல் வெட்டு.. ( யோவ் 10 நாள் கழிச்சு வந்தாலும் முதல் வெட்டு உன்னோடதுதான்யா..)//

புரியலயே பாஸு என்ன வெட்டு என்ன 10 நாளு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க....

// மரா கூறியது...
ஏன் பாஸ்...நல்லாதான போயிக்கினு இருந்துச்சி....சுய சரிதை எழுதுற அளவுக்கு அப்பிடி இன்னா பெரிய பிரச்சினை... நாளைக்கு கலபகாஸ் தீவுக்கு வாங்க.பேசுவோம் :)//

ஹாஹா நமக்குலாம் என்ன பிரச்சன தல, சும்மா தான் எல்லாரும் மொக்க போடுறாங்க நாமளும் போடாம இருந்தா நல்லா இருக்காதுல்ல அதான்...

பெசொவி சொன்னது…

நம்ம பதிவு நல்லா இருக்குன்னு எல்லாரும் சொல்லணும், அதுக்கு என்ன பண்ணனும்?
பதிவோட பேரை "நல்லா இருக்கு"ன்னு வச்சிட வேண்டியதுதான்.

மதன் சொன்னது…

//நம்ம பதிவு நல்லா இருக்குன்னு எல்லாரும் சொல்லணும், அதுக்கு என்ன பண்ணனும்?
பதிவோட பேரை "நல்லா இருக்கு"ன்னு வச்சிட வேண்டியதுதான்.//

ஹாஹா பாஸ் உண்மைக்கு சொல்லணும்னா இதையும் யோசிச்சேன் கொஞ்சம் ஓவரா இருக்குமேணு விட்டுட்டேன்...

பாரதசாரி சொன்னது…

Super!!reminds me of august 19 1998..My first day in college...

எஸ்.கே சொன்னது…

பேச்சு நடையில் எழுதும் உங்கள் பதிவு நன்றாக உள்ளது!

மதன் சொன்னது…

// எஸ்.கே கூறியது...
பேச்சு நடையில் எழுதும் உங்கள் பதிவு நன்றாக உள்ளது!
//

மிக்க நன்றிங்க பாஸ் இப்படியே இனிமே எழுதுறேன்............

Unknown சொன்னது…

dey college la ennai mokka nu sollitu...ippa nee mattum enna panriyakum....dubakoooor....

மதன் சொன்னது…

@vasy: ஹிஹி விடுடா எல்லாம் ஜீன்லயே இருக்கு ஒண்ணும் பண்ண முடியாது....

செல்வா சொன்னது…

//எல்லாம் நம்ப கோக்ஷ்டி அப்பவே தெரிஞ்சி போச்சி இது உருப்பட்டாப்பல தான்னு, ஒரு மாசம் வீட்ட நினச்சி கொஞ்சம் துக்க பட்டேன், அப்புறம் அதுவும் போச்சி.//

அடடா எண்ணமா பீல் பண்ணிருக்கீங்க ..?!

செல்வா சொன்னது…

//நமக்கு நம்ப மார்க்க பத்தியே கவல இல்ல அப்புறம் எவன் எவ்வளவு எடுத்தா என்ன, ஒரு மாதிரி படிச்சி மார்க் வாங்குனதுகு இஞ்சினியரிங் கவுன்சிலிங்ல கவர்மெண்ட் கோட்டால ஒரு காலேஜ்ல மெக்கு ஸீட் கிடச்சிச்சி.//

இதுக்குப் பேருதான் கலிகாலமா ..? கொடுமை கொடுமை ..

செல்வா சொன்னது…

//நீங்க வாங்குற பல்பு எப்பவும் ஃப்யூஸ் போகாம இருக்கணுமா?
பல்ப வாங்கி யூஸ் பண்ணாதீங்க, அப்ப ஃப்யூஸ் போகாம அப்படியே இருக்கும்.///

இதவிட பியூஸ் போன பல்ப வாங்கிட்டா அது மறுபடியும் பியூஸ் போகாதுல்ல ..?! ஹி ஹி ஹி ..