வியாழன், 5 ஆகஸ்ட், 2010

எனதுருமை நண்பர்களுக்கு சமர்ப்பணம்



நண்பர்கள் தினத்தனிக்கி மச்சான்ளுக்கு என்னால முடிஞ்ச ஒரு சமர்ப்பணம் (சும்மா பிட்டு தான், பிட்டுக்கு பொய்னு ஒரு அர்த்தம் இருக்கு எல்லாரும் தயவு செய்து அத அர்த்தபடுத்திக்கோங்க நான் பிட்டுனு வேற எதையும் சொல்லனு பதிவுலகம் மேல சத்தியம் பண்ணிகிறேன்).

பெயர் குறிப்பிட்டு நான் எழுதி, எழுதனதுல நாங்க பண்ணின நல்லத படிச்சிட்டு பெயர் குறிப்பிட்டு திட்டி, எல்லாரும் டே நீங்க இவ்வளவு கேவலமானவன்களானு நினைக்கிற அபாயம் இருக்கரதால பெயருக்கு பதிலா ஒரு புதிர்(சும்மா டூமாங்கோலி தான்) மாதிரி அதன் மூலமா நீங்களே பெயர கண்டுபிடிச்சிகலாம்.... (பெயர கண்டுபிடிச்சா பின்னூட்டதல லிஸ்ட் போடுங்கோ)

வாழ்க்கைல என் கூட நண்பரகளா பயணம் செஞ்ச நல்லவங்களோட(எனக்கு நண்பர்களா இருந்தா நல்லவங்களா தானே இருப்பாங்க ஹி ஹி) நினைவுகளை இங்கே செதுக்குகிறேன்.

எனக்கு நினைவு தெரிஞ்சி எனக்கு முதல் நண்பனா இருந்தது
1)......... (இவன் பேருல முதல் பாதி  கோவிலயும், தேவாலயத்திலயும் இருக்கும் மிச்ச பாதி முருகனோட கைல இருக்கும்) ரெண்டு பேரும் எங்க ஊர நான் 2வது படிக்கிர வரைக்கும் சுத்தி வந்தோம் (பொறந்ததுல இருந்து 2வது படிக்கிற வரைக்கும் சுத்திக்கிட்டேவா இருந்தியான்லா டெரர்ரா கேள்வி கேக்க கூடாது ஏன்னா பல பயப்புள்ளைவ இருக்கு இப்படிலாம் கிராஸ் கொஸ்டீன் கேக்கறதுக்கு அதான் நான் முந்திக்கிட்டேன்) எங்க அம்மாக்கிட்ட அடில இருந்து தப்பிக்க இவங்க வீட்டு போய் தான் உட்காந்துக்குவேன். ஏன் அம்மா அடிப்பாங்கனு கேட்டா தினமும் பள்ளிகூடத்துல ஏதாவது ஒண்ண தொலச்சிட்டு வருவேன் (மூடி இல்லாத பல டிபன்கேரியர் இன்னுமும் எங்க வீட்ல தூங்குது..), இதுக்கு போயா அடிப்பாங்கனு கேக்குறீங்க புரியுது அதுக்கெல்லாம் அடிக்கில ஒரு நாள் மறந்தாப்புல என் தம்பியையும் ஸ்கூல்லையே விட்டுட்டு வந்தேன் அதான் அடி கொஞ்சம் பலம். அப்பலாம் எஸ் ஆகி இவன் கூட ஊருக்குள்ள ரவுண்ட்ஸ ஆரம்பிச்சிடுவோம். இப்ப பய சொந்தமா 2 ஆட்டோ வச்சி இருக்கான், லவ் பண்ணி கல்யாணதுக்கும் ரெடி ஆய்ட்டான், நடத்து மாப்பிள.

2)..............(வினோதத்துல இவன் பேரு ஒளிஞ்சி இருக்கு) இப்ப ஆளூ கடல் கடலா போறான் மச்சான் மெரைன் இஞ்சினீயரா இருக்கான் கிட்டத்தட்ட 14 வருசம் கழிச்சி பாத்தேன் போன மாசம். ஆனா அன்னைக்கு எப்படி பேசினேமோ அப்படி தான் இப்பவும் பேசினான், சீக்கரம் கல்யாணம் பண்ணிக்க மச்சி

 3)...........(இருக்க நாலு காலத்துல இவன் பேருல இருக்க காலம் தான் சொகமா இருக்கும்) இவன் 2ஓட தம்பி பயபுள்ள பாசக்காரன் 14 வருசம் கழிச்சி பாத்த சந்தோசத்த மலையடிவாரத்துல புல்லட்டோட(புல்லட்னா என்னனு கேக்கறவங்க நம்ப ஊரு டாஸ்மாக்ல போய் விசாரிச்சிக்கோங்க) கொண்டாட வச்ச நல்லவன், இப்ப ஊர்ல பேமலி பிஸிணஸ பாத்துக்கிட்டு இருக்க கொடுத்து வச்சவன்

 4)............. (ஒளிமயமானங்கர வார்த்தைக்கு இவன் பெயர் ஒரு மாற்றம் இவன் பெயர் ஆரம்பிக்கிர எழுத்து ‘பி’) இவன் அஞ்ஞாப்பு வரைக்கும் நல்ல குளோஸா இருந்தான் ஆனா இப்ப வரைக்கும் பேச வாய்ப்பு கிடைக்கல, மச்சான் ஹீரோ ஹோண்டா சோ ரூம் வச்சிட்டான், கல்யாணம் முடிஞ்சிடுச்சி லைஃப் செட்டில் ஆய்ட்டான், இப்ப போய் பேசினா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியல..

5)..............(கிருஸ்ணன கொஞ்சனவங்களோட பாதி பெயர கொண்டவன்) எல்லா கூட்டதலயும் எப்பவும் ஒரு கலகலப்பான எத பத்தியும் கவலப்படாத ஆள் இருப்பான்ல இந்த பயப்புள்ள தான் அது, பேசி 4 வருசம் ஆச்சி மச்சான் MBA முடிச்சிட்டு வேல தேடுறதா கேள்வி...... மச்சான சீக்கரம் பாக்கணும்

6)...................... (இவன் பேரோட முதல் பாதி ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தோட இசையமைப்பாளர் பெயரயும், இரண்டாம் பாதி முருகனோட கைலயும் இருக்கும்) இந்த நல்லவனும் நானும் கள்ளகுறிச்சிய சைக்கிள்ள நிறைய சுத்தி இருக்கோம், பய இப்ப ரேடியோஜிலாஜிஸ்ட்டா இருக்கான்.

 இந்த 2, 3, 4, 5, 6 இன்னும் சில நண்பர்களும் பெயர் குறிப்பிடாம போனா மன்னிக்கணும் 5வது வரைக்கும் ஒண்ணா படிச்சோம், எங்க படிச்சோம் ஒரு வாட்டி பீடி புடிக்க ட்ரை பண்ணினோம், எல்லார் மேலயும் இங்க் அடிச்சாம், நல்லா அடிச்சிக்கிட்டோம் இருந்தாலும் ஆச்சி 14 வருசம் பாத்து பேசி ஆனா பாத்தப்ப எந்த சங்கோஜமும் இல்லாம சரக்கடிக்க போனப்பவே தெரியணும் இன்னமும் நாங்களா எவ்வளவு குளோஸுனு ஹி ஹி..

 3 பால்ய கால சிநேகதிகளும் உண்டு

7)............... (இவ பேரு செல்வத்த கொடுக்குற பெண் தெய்வத்தோட பேரு) எங்க குடும்பமும் இவங்க குடும்பமும் நல்ல பழக்கம்கறதால நல்ல நண்பர்களா இருந்தோம் ஆனா இப்ப டச்சில இல்ல இப்ப சிடிஎஸ்ல வேல பாக்குறா

8)................(give me honey அப்படிங்கர தமிழ்ல மொழிபெயர்த்தா என்னா வருமோ அதான் பேரு honeyய தேன்னு மாத்த வேண்டாம்) எனக்கு ஒரு வகைல அக்கா முறை கொஞ்ச நாள் தான் பேசினோம், பழகினோம் ஆனா இன்னை வரைக்கும் தொடர்புல இருக்கா, கல்யாணம் முடிஞ்சி குழந்தையோட சந்தோசமா இருக்கா

9)..............(மன்னிச்சிக்கோங்க இவ பேரு எனக்கே மறந்து போச்சி அதால நோ புதிர்) இவள பத்தி கொஞ்சமா தான் நினைவுல இருக்கு. நாங்க ஒரு வாடகை வீட்ல குடி இருந்தப்ப பக்கத்து வீட்ல இருந்தா நான் இவ கூட நிறைய சண்ட போட்டும் என்கிட்ட எப்பவும் கோவபடாம இருந்த முஸ்லீம் தோழி.

5வது வரைக்கும் கள்ளகுறிச்சியில படிச்சிட்டு 6வது மெட்ராஸ்ல ஹாஸ்ட்டல தங்கி படிக்க ஆரம்பிச்சேன். அங்க உருவான நட்பு வட்டம் இன்னுமும் கூட கொஞ்சம் நெருக்கமானது, ஏன்னா எந்நேரமும் கூட இருந்ததால பிணைப்பு அதிகமாய்டிச்சினு நினைக்கிறேன்.


10)............. (நெத்தில இடுற குங்கமத்தோட வட இந்திய வார்த்தை இவன் பேரு) 7வது இருந்து 12 வரைக்கும் அப்புறம் இப்ப கூட மிலிட்ரி சரக்கு ஸ்பாண்சர் பண்ற நல்லவன், ரொம்ப நல்ல பிரண்ட், வார்டண்ட அடி வாங்கறதுல இருந்து பல விசயங்கள ஒண்ணா சேர் பண்ணி இருக்கோம், ஆனா இது வரைக்கும் ஒரு முறை கூட சண்ட போட்டது இல்ல, நேவல் இஞ்சினீயரா இந்திய கப்பற்ப்படைல சேவை செய்ற மச்சான்........

11)................. (இவனோட பெயர்ல முதல் பாதி அமைதிங்கற வார்த்தைக்கு மாற்று வார்த்தையும் இரண்டாம் பாதி குமார்) பயபுள்ள 7 வருசம் என் கூட படிச்சிது, 7 வருசத்தல எத்தண சண்ட, ஆனா என்ன தான் சண்ட போட்டாலும் நமக்கு கொடுக்காம எதுவும் செய்ய மாட்டான்ங்க, ஒரு வாட்டி ஸ்கூல்ல ஒரு கண்காட்சி நடந்துச்சி எனக்கு உடம்பு சரில்லனு நான் போகல, போன பயலுவ சும்மா இருந்தானுங்களா அங்க இருந்த கார் பொம்ப, அந்த பொம்ப, இந்த பொம்பனு இருந்ததெல்லாம் சுட்டுக்கிட்டு வந்துடானுங்க, டே இந்தாடா உனக்கு ஒரு கார்னு பாசமா பங்கு வேற தந்தானுங்க (என்ன ஒரு பாசம்), ஏமாந்து போன கண்காட்சி நடத்துற மிஸ் எங்க வார்டன் கிட்ட வந்து உங்க ஹாஸ்டல் பசங்க வந்துட்டு போனதுல இருந்து தான் எல்லாம் காணாம போய்டிச்சினு போட்டு கொடுத்துச்சி, எவன் கிட்டல பொம்ம இருந்துதோ அவனுங்களுக்குளாம் நடந்துது பாருங்க ஒரு ரெய்டு..... பய இப்ப TCS மும்பைல இருக்கான்.

12)........................(ராஜாவுக்கு அடுத்த வாரிசு என்னவோ அந்த பேரு தான் இவனுக்கு) முதல்ல ஹாஸ்டல்ல சேந்தப்ப பய கொஞ்சம் ஹாஸ்டல் பழக்க வழக்கம் தெரியாம சுயநலமா இருந்துட்டான், அப்புறம் நம் வழிக்கு வரவச்சாச்சு, ஒரு காலத்தல கொஞ்சம் கஞ்சூஸா இருந்தவன் இப்ப தாராள புரபு ஆய்ட்டான்..........புரடக்சன் முடிச்சிட்டு மொபைலுக்கு சாஃப்ட்வேர் பண்ணிகிட்டு இருக்கான்.

13)...................(இறப்பே இல்லாதவங்கவள இவனோட பெயர் சொல்லி தான் அழைப்பாங்க) 7வது இருந்து 12 வரைக்கும் என் கூட படிச்சவன், ஹாஸ்டல்ல சேர்ந்த ஆரம்பத்துல அவன் பெட்ல உட்காந்து அவனுக்கு படுக்க இடம் கொடுக்காம் நாங்க ரம்மி விளையாடுனத வார்டன்கிட்ட போட்டு கொடுத்ததால அடிப்பட்ட 16 பேரும் இவன ஒரு 2 மாசம் ஒதுக்கி வச்சிட்டோம், அப்புறம் இவனுக்கும் சீட்டு விளையாட சொல்லி கொடுத்து செட்ல சேத்துகிட்டோம் அது வேற கத, ரொம்ப பொறுமையானவன், பாசமானவன், எப்ப பாக்க கூப்பிட்டாலும் பிகு பண்ணாம நண்பர்களுக்கா வந்து நிப்பான், இப்ப பெங்களூர்ல வேல பாக்குறான்....

14).............. (சரண்டைந்தேன்ங்கற வார்த்தைல இவன் பேரு ஒளிஞ்சி இருக்கு) 9வதுல தான் பழக்கம் ஆனான் முதல்ல ஒட்டல, மச்சானுக்கு தலைல நிறைய வெள்ள முடி ஒரு முறை முடிய கருப்பாக்க ட்ரை பண்ணப்ப நாம உதவி செய்ய போயி, அப்புறம் கூட இருந்த அடுத்த நாளு வருசத்துக்கும் என்னையே கலர் அடிக்க வுட்டான் பாவி பைய, என்னா தான் ஓட்டுனாலும் சீரியசாவே ஆக மாட்டான், எப்ப மெட்ராஸ் போனாலும் கண்டிப்பா ஒரு மீட்டிங் இருக்கும், இப்ப புரடக்ஸ்ன் லைன்ல வேல பாக்குறான்..........

இன்னும் ஒரு பெரிய க்யு நிறைய பெயர்களும், பள்ளி காலத்து நினைவுகளும் என் மனசுல பசுமையா இருக்கு அத எழுதனா இன்னும் எழுதிகிட்டே இருக்கலாம் அதனால என் கல்லூரி (SKP) நண்பர்கள பத்தி எழுதுறேன், மச்சிகளா உங்க பெயர் இல்லனு என்ன பத்தி எழுதலனு தப்பா நினைக்க வேணாம்....

15)..................(அய்யப்பனோட இன்னொரு பேரு தான் இவனோடது) சிலர் வாழ்க்கைல வருவாங்க உங்க விருப்பங்கள் வேற வேறயா அப்படி இப்படினு ஆனா என்னைக்கும் ஒண்ணா இருக்க விரும்புவிங்க அப்படி எனக்கு ஒரு நண்பன் இவன், மச்சான ஒருத்தன் போட்டு கொடுத்தான்னு, போட்டு கொடுத்தவனுக்கு டார்க் ரூம் ட்ரீட்மண்ட் உடனே ஏற்பாடு செஞ்சோம், நானும் இவனும் கிட்டத்தட்ட ஒரு பெரிய சாதனையே செஞ்சோம், ஸ்டடி ஹாலிடேஸ்ல சுறுசுறுப்பா வீட்ல இருந்து கிளம்பி வந்து சும்மா ஒரு15 20 நாளைக்கு சாப்பாடு தூக்கம், சாப்பாடு தாக்கம்னே பொழுத ஓட்டுனோம்.... மச்சான் குவைத்ல வேல பாத்துட்டு வந்து இப்ப அடுத்த வேலைக்கு ரெடி ஆகுறான்....

16)...........................(சூரியனோட இன்னொரு பேரு மச்சானுக்கு ‘க’ ஆரம்பிச்சு ‘ன்’ல முடியும்) மச்சான் ஹாஸ்டன் வந்த புதுசுல ரொம்ப ரொம்ப அமைதியா இருந்தான், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பழக ஆரம்பிச்சோம், வாழ்க்கைல சிலரால தான் நண்பர்களுக்கு மனசு நிறைய இடம் கொடுக்க முடியும், ஆனா நண்பன் இருக்கிற அந்தஸ்துக்கு என்னைக்கும் அத பத்தி நினைக்காம எல்லாரும் வேணும்னு பாசத்தோட இருக்கிறவன் (இது ஒரு புகழ்ச்சியா இல்ல உண்மனு தான் நம்புறேன்), ஒரு வாட்டி யாருக்கும் தெரியாம 2 3 மூணு பேரு மட்டும் ஸ்நாக்ஸ் சாப்பிடறதுக்கு கவர பிரிச்சப்ப கவர் சவுண்ட கேட்டே அங்க போய் நின்ன என்னய நல்லா குளு குளுனு திட்டின நல்லவன், இப்ப மச்சான் என்ன பண்றானு சொல்ல முடியாது சீக்ரேட்.......

17)..............(காசில இருக்க சிவனோட பேரு இவனுக்கு) காலேஜ்ல சேர்ந்த முதல் நாளே ஆர்வகோளாறுல கைல பேஸ்கட் பாலோட கோர்டல போய் நின்னப்ப ஏதோ பெரிய பிளேயர் விளையாடுறார்னு நினச்சி நம்பளையும் வேடிக்க பாத்த நல்லவன், எவ்வளவு பாசம்னா பழகன ரெண்டாவது நாளே என்ன அவன் ரூமுக்கு, அவன் வீட்டுக்கும் கூட்டிட்டு போன நல்லவன், மச்சான் இப்ப மேனேஜர்...........

18)...............(இவனோட பேர்ல இருக்க முதல் பாதி புகழ்ங்கற வார்த்தைக்கு மாற்று வார்த்தை, மிச்ச பாதி ராஜராஜ சோழனோட இயற்பெயரின் கடைசி வார்த்தை) முதல்ல வந்தப்ப எதையோ பறிகொடுத்தவன் மாதிரி டியூப்லைட்டையே பாத்துகிட்டு கிடந்தான், கொய்யால அப்புறம் தானே சேட்ட அதிகம் ஆச்சி, ஒருத்தன நானும் இவனும் மச்சான் ஊருக்கு போக காசில்லனு சொல்லி காச ஆட்டைய போட்டு, காசு கொடுத்தவன் முன்னாடியே கேண்டீன்ல போய் தின்னுட்டு வந்து, பிரைட் ரைஸ் நல்லா இருந்ததுல்ல அப்படினு ஊருக்கு போக காசு முன்னாடியே சொன்னத வாழ்க்கைக்கும் மறக்க முடியாது, எரும இப்ப வாத்தியாரா இருக்கான்............

19)..................(உலகத்தோட மாற்று பெயரையும், சிவனோட மாற்று பெயரயும் இணச்சா இவன் பேரு வரும் ‘ஜெ’ல ஆரம்பிச்சி ‘ஸ்’ல முடியும்) வாழ்க்கைல நமக்கு சில பேரோட தான் அலைவரிசை ஒத்து போகும், எனக்கு இவனுக்கு நிறையவே ஒத்து போகும், காலேஜ்ல ஒண்ணா சேந்து பல பேர கலாய்ச்சி இருக்கோம்) எங்களையும் பல பேர் மானவாரியா ஓட்டி இருக்கானுங்க அது வேற மேட்டரு, கவுண்டர் நண்பன்கிட்ட இருந்து அவன் சாப்பிட வச்சி இருந்த இருமல் மாத்திரைய ஏமாத்தி சாப்பிட்டத இன்னும் மறக்க முடியாது, மச்சான் இப்ப hpல மென்பொருள் பொறியாளாரா இருக்கான்......

20).................(மச்சான் பேரு pearl handsomeங்கற ஆங்கில வார்த்தையோட தமிழாக்கம் தான்) அதாவது என்ன என்ன கேவலாமான போட்டிலா நடத்த முடியுமா அந்த போட்டியெல்லாம் ஹாஸ்டல் ஒண்ணா சேர்ந்து நடத்திய நல்லவங்க, எந்த ஹீரோயினுக்கு ஓட்டு அதிகம், எந்த ஸ்டாஃப் சூப்பரு அப்படி இப்படினு, ஆனா இவனுக்குக்கிட்ட இருந்து வாங்குன சட்டைக்கு காசு தரலனு இன்னும் என்ன ஓயாமா திட்டிக்கிட்டு இருக்கான்.....மச்சான் இப்ப தான் கம்பெனி மாறி இருக்கான் waiting to join....

21)................('ச’ல ஆரம்பிச்சி ‘ஸ்’ இவன் பேரு முடியும் நடுவுல ஒரே ஒரு எழுத்து தான் அது கூட நெருப்போட இன்னொரு பேரு) அதாவது சில பேர் தான் என்ன தான் நடந்தாலும் முகத்துல ரியாக்ஸன காட்டாமா காமெடி பண்ண முடியும், அதுவும் இவன் ரியாக்சனே இல்லாம் மொக்க பிராகாஸ பண்ணின விசயம் இருக்கே அத சென்ஸார் காரணாமா எழுத முடியல, ப்ராஜெக்ட டைம் ஃப்ல்லா மச்சான் வீட்ல தான் இருந்தேன்.... மச்சான் இப்ப infyல மென்பொருள் பொறியாளாரா இருக்கான்......

22)..............(உண்மையோட மாற்று வார்த்தையை பெயரோட முதல் பாதி இரண்டாவது பாதி வந்து ‘மூர்த்தி’) பேருக்கேத்த மாதிரியே ரொம்ப உண்மையா நாணயமா இருக்கவன், சிலபேரோட நம்மளால எப்பவும் சண்ட போட முடியாது அதுக்கு காரணம் கண்டுபிடிக்க முடியாது அப்படியான என்னோட ஒரு நண்பன், நான் பார்த்த மிக சில உண்மையான காதலுக்கு சொந்தகாரன். மச்சான் இப்ப வாத்தியாரா இருக்கான்....

23).................(கோபியர்களுக்கு யார ரொம்ப புடிக்குமோ அதான் இவனோட பேரு ‘கோ’ல ஆரம்பிச்சி ‘ன்’ல முடியும்) சில பேரு எவனாவது ஏமாந்தவன் கிடச்சா ஓட்டியே சாவடிச்சிடுவாங்கல அந்த லிஸ்ட சேந்தவன், முதல் வருசம் ஹாஸ்டல் இருந்தப்ப இவன் 2 பேருக்கு சண்டைய மூட்டி விடறத பாக்கருதுக்கே பல ரூம்ல இருந்து ஆடியண்ஸ் குமிவானுங்க, கேங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்லீடர், இப்ப நல்ல பொறுப்புல இருக்கான்........

24)........................(புஸ்பம் + கணவன் + மன்னன் இந்த மூணு வார்த்தையோட மாற்று வார்த்தை தான் இவன் பேரு starts from 'பூ’ ends with 'ஜா’) சில உறவுகள் மெலிதான புன்சிரிப்புல ஆரம்பிச்சி பலமா மாறிடும் அவ்வகைல ஒரு நட்பு தான் எங்களது, இப்ப தினமும் அளாவிக்கிற அளவுக்கு இருக்கோம், நான் துபாய்ல கொட்ற அதே குப்பயை அவன் சவுதில கொட்றான்......

அப்புறம் மச்சான்ங்க DTS வாயன், காங்கோ முத்து, எலும்பு ஜெயா, டிக்கி வினோத், படிப்ஸ் கோகுல், பீலா அவினாஸ், பேக்கு ஆசிப், மண்ட பாலா, பிரஸ் மண்டையன், ஆடு, தேனி, மொக்கமோகன், மொக்க பிரகாஸ், ட்ரம்மு, ஓச தம்பி, கட்டையன், நாகா, கரடி, அடுப்பு வாயன், லூசு கவுண்டர், மாமி, கப்ப, ஊவான், சீன் நித்தி, சுருட்ட, பாடூஸ், 420, ஜிப்பு வாயன், ஹாப் கிரவுண்ட் மண்டையன், கள்ள மார்வாடி, குள்ளன், குதுர, சாம்பார், நெல்ஸ், குண்டன் இன்னும் நிறைய மச்சாங்ன்க இருக்காங்க அவங்கள பத்தியும் நினைவுகளையும் பதிவு செய்ணும்னா பல blu-ray டிஸ்க் தேவபடும் அதனால இதோட நிறுத்திக்கிறேன்.

அப்புறம் பொறந்ததுல இருந்தே நண்பனா இருக்க அப்பா ஜெயமாறன், நண்பியா இருக்க அம்மா உமா, எனக்காக என்னவேனா செய்ற நான் ரொம்ப மிஸ் பண்ற என் அக்கா கலா, எனக்கு இங்க சோறு போடற அருணா அக்கா, என்  கூட தங்கி இருக்க நோஃப், காளி, பிரஜித்

இன்னும் yahoo msgrல கிடச்ச நண்பர், பதிவுலக கிடச்ச நண்பர்கள்னு லிஸ்ட் போய்கிட்டே இருக்கு, ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட மனிதனா உணருறேன் இத்தண நண்பர்கள் இருக்கப்ப நட்புங்கற உறவு தர உணர்வு மிக உன்னதமா உணருறேன், அவங்கள எல்லாரையும் நினைவு கூர ஒரு வாய்ப்பா எடுத்துகிட்டு இந்த பதிவ எழுதிட்டேன் கொஞ்சம் நீளமா...........

கடசியா ஒரு கவிதை

"சிகரட்டை பஞ்சு வரைக்கு இழுக்காதே என்றாய்,
ஏன் மச்சான் என் வாய் சுட்டுடும்னு பயப்பிடுறியானு கேட்டதிற்கு ‘சனியன் புடிச்சவனே இருக்கறது ஒரு சிகரட் இன்னும் ரெண்டு பேரு இழுக்கணும்டா என்றாய்’”

முக்கிய அறிவிப்பு: 24 பெயரையும் யாரு கரக்ட்டா கண்டுபிடிக்கிறாங்களோ அவங்களுக்கு சிறந்த வெகுமதி காத்திருக்கு, உடனே முந்துங்கள். : D

2 கருத்துகள்:

Ramesh சொன்னது…

நல்ல பதிவு....7 வது படிக்கும் போதே மிலிட்டரி சரக்கா..பயங்கரமான ஆளு போல...நண்பர்கள் பத்தின என்னோட..இந்தப் பதிவையும் கொஞ்சம் பாருங்க...

http://rameshspot.blogspot.com/2010/07/blog-post_31.html

மதன் சொன்னது…

@ரமேக்ஷ்: அய்யயோ பாஸ், என் கூட 7வது இருந்து கூட இருக்கான் இப்ப மிலிட்ரி சரக்கு ஸ்பான்சர் பண்றான், அத சொல்ல வந்தேன் நாங்க 11வதுல இருந்து தான் ஆரம்பிச்சோம் ஹிஹி... கண்டிப்பா படிக்கிறேன் நண்பரே..